சாய்ந்தமருது அல் – ஜலால் முன்பள்ளி பாடசாலையின் வருடாந்த பட்டமளிப்பு விழா !
சாய்ந்தமருது கமு/கமு/ அல் – ஜலால் முன்பள்ளி பாடசாலையின் வருடாந்த விழா இன்று (31) பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வின் பிரதம அதிதியாக யஹியாகான் பௌன்டேசன் தலைவரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதிப் பொருளாளருமான ஏ.சி.யஹியாகான் கலந்து கொண்டு மாணவர்கள் மற்றும் ஆசிரியைகளுக்கு பணப் பரிசில்களுடன் சிறப்பு பரிசில்களையும் வழங்கி வைத்தார். மேலும் சிறப்பு நடனம் வழங்கிய மாணவி ஒருவருக்கு பணப் பரிசிலையும் யஹியாகான் வழங்கிவைத்தார்.
இந்த நிகழ்வில் கமு/கமு/ அல் – ஜலால் வித்தியாலய அதிபர் எம்.ஐ.எம். ஸைபுதீன், பிரதியதிபர் ரீ.கே.எம். சிராஜ், பகுதித் தலைவர் எம். மாஹிர் மற்றும் ஆசிரியர்களான ஏ. ஷியாம், எம்.எம்.அமான், பாலர் பாடசாலை ஆசிரியைகள், பெற்றோர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
கருத்துக்களேதுமில்லை