முன்னாள் உலக சம்பியன் இங்கிலாந்தை 4ஆவது கால் இறுதியில் சந்திக்கிறது செனகல்

கத்தாரில் நடைபெற்றுவரும் 22ஆவது உலகக் கிண்ண கால்பந்தாட்ட அத்தியாயத்தில் 4ஆவது கால் இறுதிப் போட்டியில் முன்னாள் உலக சம்பியன் இங்கிலாந்தை ஆபிரிக்க நாடான செனகல் சந்திக்கவுள்ளது. இப் போட்டி அல் பெய்த் விளையாட்டரங்கில் இன்று நள்ளிரவுக்குப் பின்னர் 12.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இங்கிலாந்தும் செனகலும் ...

மேலும்..

நடப்புச் சம்பியன் பிரான்ஸ் கால் இறுதிக்குத் தகுதி!!

கத்தார் 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டியின் கால் இறுதிக்கு பிரான்ஸ் அணி தகுதிபெற்றுள்ளது. நடப்புச் சம்பியனான பிரான்ஸ், இன்று நடைபெற்ற 16 அணிகளின் சுற்றில் போலந்து அணியை 3:1 கோல்கள் விகிதத்தில் வென்றது. கத்தாரின்  நகரிலுள்ள அரங்கில் நடைபெற்ற இப்போட்டியின் 44 ஆவது ...

மேலும்..

ஊடகவியலாளர் நிலாந்தனுக்கு நீதிமன்றம் அழைப்பாணை!

மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர் நிலாந்தன் மீது தொடர்ச்சியான விசாரணைகள், காண்காணிப்புகள் என காவல்துறையினர், புலனாய்வு துறை அதிகாரிகள் அச்சுறுத்தல் விடுத்து வந்த நிலையில் தற்போது நீதிமன்றம் ஊடாகவும் அழுத்தங்களை பிரயோகிக்க தொடங்கி உள்ளனர். மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், மட்டு ஊடக ...

மேலும்..

கொட்டுகிறது டொலர் மழை!!

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி ஓரளவு ஸ்திரமான நிலைக்கு வரும் நிலையில், சுற்றுலா பயணிகளின் வருகை ஒவ்வொரு மாதமும் அதிகரித்த வண்ணம் உள்ளன. அந்த வகையில், கடந்த நவம்பர் மாதம் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்த நிலையில் சுற்றுலாத்துறை மூலம் 107.5 மில்லியன் அமெரிக்க டொலர் ...

மேலும்..

16 வயது பள்ளிச் சிறுமி மீது பாலியல் வன்புணர்வு! காணொளியாக பதிவு செய்த சக மாணவர்கள்

மட்டக்களப்பு கொக்குவில் காவல் பிரிவில் உள்ள பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் ஒரே தரத்தில் கல்வி கற்று வரும் 16 வயது சிறுமி ஒருவரை  காதலன் பாலியல் வன்புணர்வு மேற்கொண்டிருந்த போது அதனை அவனின் நண்பர்கள் ஒளிந்திருந்து காணொளியாக பதிவு செய்து ...

மேலும்..

சட்டவிரோத கடற்றொழிலை தடுக்க ஏன் கடற்படையால் முடியாதுள்ளது?

கடலட்டை பண்ணை விடயத்தில் மக்கள் பிரதிநிதிகள் தொடர்ந்தும் மௌனம் காத்தால் இனிவரும் காலங்களில் கடற்றொழில் சமூகத்தில் இருந்து பிரதிநிதிகளை பாராளுமன்றுக்கு அனுப்பவேண்டி வரும் என யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்கள், சமாசங்கள், சம்மேளனம் என்பன கூட்டாக வலியுறுத்தின. யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகசந்திப்பிலேயே கடற்றொழிலாளர் ...

மேலும்..

கிராஞ்சியில் இரவிரவாக கடலட்டை பண்ணைகள் அளக்கப்படுகிறது-உபதலைவர் நா.வர்ணகுலசிங்கம் தெரிவிப்பு

கடற்றொழில் அமைச்சர் சொல்லலாம் ஆனால் கடற்றொழில் அதிகாரிகளுக்கு எங்கு போனது மதி என கேள்வியெழுப்பிய யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச்சங்க சமாசங்களின் சம்மேளன உபதலைவர் நா.வர்ணகுலசிங்கம், நாரா நெக்டா நிறுவனம் வடக்கில் காலூன்றிய பின்னர் வடபகுதி பகுதி கட்ற்றொழிலாளர்கள் பாரிய நெருக்கடியை சந்திக்கின்றனர் என்றார். கிளிநொச்சி ...

மேலும்..

கால் இறுதிக்குள் நுழைந்த ஆர்ஜென்டினா – மெஸ்ஸி கடந்த 1000மாவது போட்டி!

ஆர்ஜென்டினா அணியின் தலைசிறந்த கால்பந்து வீரரான லியோனல் மெஸ்சி நேற்று தனது கால்பந்து வாழ்க்கையில் ஆயிரமாவது போட்டியை எதிர்கொண்டார். அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக இடம்பெற்ற போட்டியிலேயே அவர் இந்த சாதனையை படைத்தார். இந்த ஆட்டத்தில் ஆர்ஜென்டினா 1 க்கு 2 என்ற கணக்கில் கோல்களை ...

மேலும்..

அமெரிக்காவில் இருந்து அம்பாந்தோட்டைக்கு பயணிகள் கப்பல்

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த “Azamara Quest” என்ற சொகுசு பயணிகள் கப்பல் இன்று (04) பிற்பகல் வரை கொழும்பு துறைமுகத்தில் இருக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று (03) பிற்பகல் அமெரிக்காவிலிருந்து வருகை தந்த கப்பலில் 600க்கும் மேற்பட்ட பயணிகள் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இக்குழுவினர் நாளை ...

மேலும்..

ராஜிதவுக்கு மீண்டும் அமைச்சுப்பதவி?

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன மீண்டும் சுகாதார அமைச்சராக பதவியேற்கவுள்ளதாக கண்டியில் நடைபெற்ற மாநாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய மருந்தக வியாபாரிகள் சங்கத்தின் கண்டி மாவட்ட மாநாட்டில் சங்கத்தின் தலைவர் நந்திக கங்கந்த இதனைத் தெரிவித்தார். மீண்டும் சுகாதார அமைச்சர் பதவியை ராஜித சேனாரத்ன பொறுப்பேற்கவுள்ளதாக ...

மேலும்..

குடிக்க மருந்து இல்லை! இலங்கைக்கு செல்வதாக இருந்தால், உங்களுக்கான மருந்தை உடன் எடுத்துச் செல்லுங்கள்! அமெரிக்கா அறிவுரை

இலங்கையில் ஏற்பட்டுள்ள மருந்து தட்டுப்பாட்டைக் கருத்தில் கொண்டு இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் தனது பிரஜைகளுக்கு எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி இலங்கைக்கு விஜயம் செய்தால் தேவையான மருந்துகளை கொண்டு வருமாறு அறிவித்துள்ளனர். கொழும்பிற்கு வெளியே மருத்துவ வசதிகள் குறைவாக இருப்பதாக கூறியுள்ள ...

மேலும்..

ஹப்புத்தளையில் சுற்றுலாச் சென்ற 20 பேர் மீது குளவி கொட்டு

ஹப்புதளை – தம்பேத்தன்ன – லிப்டன்ஸ் சீட் பகுதிக்கு சுற்றுலா சென்றிருந்த சுமார் 20 பேர் இன்று முற்பகல் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். அவர்கள் ஹப்புத்தளை – பங்கெட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்த 17 பேரும் இரத்தினபுரி ...

மேலும்..

வடையில் கரப்பான் பூச்சி – மூடப்பட்ட கடை!

யாழ் நகரில் பிரபல சைவ உணவகம் ஒன்றில் விற்கப்பட்ட வடையில் கரப்பான்பூச்சி காணப்பட்டமையினால் குறித்த சைவ உணவகத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் சிவன் கோவிலடி பகுதியில் உள்ள சைவ உணவகம் ஒன்றில் உள்ளுரைச் சேர்ந்த ஒருவர் வடைகளை கொள்வனவு செய்த ...

மேலும்..

யாழ். பல்கலைக்கழகத்தில் புதிதாக இரு டிப்ளோமா கற்கைநெறிகள் ஆரம்பம்

வங்கியலும், நிதியும் டிப்ளோமா மற்றும் தொழில்சார் ஆங்கில டிப்ளோமா ஆகிய இரு டிப்ளோமா கற்கைநெறிகள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக திறந்த மற்றும் தொலைக் கல்வி நிலையத்தின் கீழ் நடாத்தப்படவுள்ள இரு கற்கைநெறிகளினதும் அறிமுக நிகழ்வு இன்று காலை 9 மணியளவில் ...

மேலும்..

நீதிமன்றில் வழக்குக்காக வைக்கப்படிருந்த 44 பவுண் தங்கநகை மாயம்

வழக்குக்காக நீதிமன்ற களஞ்சியசாலையில் வைக்கப்படிருந்த 44 பவுணுக்கும் அதிகமான தங்கப்பவுண் மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்தின் வழக்குக் களஞ்சியசாலையில் வைக்கப்பட்டிருந்த இரண்டு வழக்குகளுடன் தொடர்புடைய 44 பவுணுக்கும் அதிகமான தங்க ஆபரணங்களே திருடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.   வழக்குப் பொருட்களாக வைக்கப்பட்டிருந்த நகைகள் இது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக வாழைத்தோட்டம் ...

மேலும்..