இந்த நேரத்தில் மின்சார கட்டணத்தை உயர்த்துவது நியாயமற்றது -ரோஹித அபேகுணவர்தன

இலங்கை மின்சார சபை ஓகஸ்ட் 10ஆம் திகதி முதல் நவம்பர் 30ஆம் திகதி வரை 1 பில்லியன் ரூபா வருமானத்தைப் பெற்றுள்ள நிலையில், இந்த நேரத்தில் மின்சார கட்டணத்தை அதிகரிப்பது நியாயமற்றது என பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன ...

மேலும்..

பதவி பயத்தில் கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்திய ஜி ஜின்பிங்

சீனாவில் கொரோனா கடும் கட்டுப்பாடுகளுக்கு எதிராக மக்கள் பெருமளவில் போராட்டம் நடத்திய நிலையில் அதிபர் ஜி ஜின்பிங்கின் பதவி பறிபோய்விடுமோ என்ற பயத்தில் ஏற்பட்ட மனமாற்றத்தால் பல நகரங்களில் கொரோனா  கட்டுப்பாடுகளை தளர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 2019ல் ...

மேலும்..

உணவை பெற்றுக்கொள்ள முடியாததால் தவறான முடிவெடுத்த குடும்பப்பெண்!

கேகாலை அரநாயக்க பிரதேசதத்தில் பொருளாதார சிரமங்களால் உணவை பெற்றுக்கொள்ள முடியாத கஷ்டத்தால் பெண்மணி ஒருவர் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பதிவாகியுள்ளது. அரநாயக்க காவல்துறை பிரிவில் பொஸ்செல்ல, களுகல பிரதேசத்தை சேர்ந்த 74 வயதான முதிய பெண்ணே இவ்வாறு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். இந்த பெண் தனது ...

மேலும்..

தேர்தலை நடத்த அஞ்சும் அரசாங்கம் – சம்பிக்க ரணவக்க வெளியிட்ட தகவல்

இலங்கை மக்களின் ஆணையை சிறிலங்கா பொதுஜன பெரமுன இழந்துள்ளதை அறிந்தே அரசாங்கம் தேர்தலை நடத்த அஞ்சுவதாக 43 ஆம் படையணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். சிறிலங்கா பொதுஜன பெரமுனவுக்கு கடந்த காலங்களில் இருந்த மக்கள் ஆணை தற்போது இல்லாததால் நாட்டில் ...

மேலும்..

யாழ் தமிழர்களுக்கு கனடாவில் நடந்த அவலம்..! மகன், மகளைத் தொடர்ந்து தாயும் பலி (படங்கள்)

கனடா - மார்க்கம் நகரில் நடந்த வீதி விபத்தில் படுகாயமடைந்த யாழ்ப்பாணத்து பெண் சிகிச்சை பலனளிக்காத நிலையில் மரணமடைந்தார். இந்த விபத்து ஒக்டோபர் மாதம் 12ஆம் திகதி இடம்பெற்ற நிலையில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு யாழ்ப்பாணத்து சகோதரர்கள் உயிரிழந்ததுடன், தாயார் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ...

மேலும்..

பாடசாலை மாணவர்களுக்கு கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு…!

இடைநிலை வகுப்புகளுக்கான மாணவர்களை இணைப்பது தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. பாடசாலையின் மூன்றாம் தவணை டிசம்பர் 5 ஆம் திகதி ஆரம்பமாகின்றது. இருப்பினும் 2022 முதல் இடைநிலை வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை மேற்கொள்ளப்படாது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை 2023 ஆம் ஆண்டின் ...

மேலும்..

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் 3 நாள் அரசவை லண்டனில் ஆரம்பம்

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் 3ஆவது நாடாளுமன்றத்தின் எட்டாவது அமர்வு இன்று பகல் பிரித்தானிய தலைநகர் லண்டனில் ஆரம்பமாகியுள்ளது. இன்று முதல் எதிர்வரும் 4 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை இந்த அமர்வுகள் இடம்பெறவுள்ளன. 3 நாள் அரசவை   தமிழீழத்தின் உணவுப் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மற்றும் வெளியுறவுக் கொள்கை ...

மேலும்..

பல்கலைகழகங்களுக்கு தெரிவான மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு..!

வெட்டுப்புள்ளியின் அடிப்படையில் பல்கலைகழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் தெரிவு செய்யப்படவுள்ள பாடநெறி மற்றும் பல்கலைக்கழகம் தொடர்பான தகவல்கள் 2 வாரங்களுக்குள் அறிவிக்கப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர், சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். குறித்த தகவல்கள் குறுஞ்செய்தி மூலமாகவே அல்லது ...

மேலும்..

இனப் பிரச்சினைக்கு தீர்வு..! 12ம் திகதி பேச்சுவார்த்தை – ரணில் அதிரடி நடவடிக்கை

இனப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான பேச்சு எதிர் வரும் 12ஆம் திகதி நடைபெறும் என்று அதிபர் தரப்புக்கு மிக நெருக்கமான வட்டாரங்கள் மூலம் தகவல் அறிய வருகின்றது. இதனிடையே, வரவு - செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்புக்கு கிடைத்த ஆதரவு வாக்குகளான 137 ...

மேலும்..

கிராம சேவகர் என கூறி பெண்ணிடம் வழிப்பறி! யாழில் சம்பவம்

கிராம சேவகர் என தன்னை போலியாக அடையாளப்படுத்திய நபர் வயோதிப பெண் ஒருவர் அணிந்திருந்த இரண்டு பவுண் தங்க சங்கிலியை அபகரித்து சென்றுள்ளார். கோப்பாய் காவல்துறை பிரிவிற்குட்பட்ட கோண்டாவில் பகுதியில் நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தனியார் மருத்துவமனைக்குச் சென்றுவிட்டு கோண்டாவில் மேற்கிலுள்ள தனது ...

மேலும்..

நைஜீரியாவில் கப்பலில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கை பணியாளர்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

நைஜீரிய கடல் சூழலுக்குள் 2022 ஓகஸ்ட்டில் நுழைந்ததற்காக நைஜீரிய அதிகாரிகளால் நைஜீரியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கப்பலில் உள்ள இலங்கை பணியாளர்கள் தொடர்பில் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு இன்று தகவல் வெளியிட்டுள்ளது. குறித்த கப்பலில் உள்ள இலங்கை பணியாளர்கள் அனைவரும் நலமுடன் இருப்பதாக சிறிலங்கா ...

மேலும்..

சாரதியின் தூக்க கலக்கத்தால் 25 அடி பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கர வண்டி!

ஹட்டன் - நுவரெலியா வீதியில் குடாகம பகுதியில் 25 அடி பள்ளத்தில் பாய்ந்து முச்சக்கர வண்டியொன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக ஹட்டன் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நுகேகொடையில் இருந்த வெலிமடைக்கு செல்வதற்காக வந்த முச்சக்கரவண்டி இன்று அதிகாலை 3 மணியளவில் விபத்துக்குள்ளாகியுள்ளதாகத் தெரியவருகிறது. வேகக்கட்டுப்பாட்டை இழந்தமையே இவ்விபத்துக்கு காரணமென ...

மேலும்..

வெடித்து சிதறி ஒடும் நெருப்பாறு – அவசர அவசரமாக ஓடும் மக்கள்; ஹவாயில் அடுத்து நடக்கப்போவது என்ன!

அமெரிக்காவில் உள்ள உலகின் மிகப்பெரிய எரிமலையான மவுனா லோவா எரிமலை, வெடித்து சிதறி, நெருப்பு குழம்புகளாக ஓடிக் கொண்டிருக்கிறது என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்த அனல் ஆற்றை காண ஏராளமானோர், எச்சரிக்கைகளையும் மீறி அங்கு குவிந்து கொண்டிருக்கிறார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ...

மேலும்..

இலங்கையை மீட்க களமிறங்கும் அமெரிக்கா – வழங்கப்பட்ட உறுதிமொழி

சிறிலங்க எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு அமெரிக்கா உதவிகளையும் ஒத்துழைப்புக்களையும் வழங்கும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தில் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் பிளிங்கனுக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது. இந்த சந்திப்பின் பின்னர் செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் ...

மேலும்..

ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தூதரை குறிவைத்து துப்பாக்கி சூடு

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் மீது துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தூதரக வளாகம் அருகே உள்ள கட்டிடத்தில் இருந்து மர்ம நபர் மேட்கொண்ட துப்பாக்கி தாக்குதலால் பாதுகாப்பு வீரர் ஒருவர் மரணித்துள்ளார். இதனால் அங்கு பரபரப்பு நிலவியதோடு . இந்த தாக்குதல் தொடர்பாக ...

மேலும்..