சிறப்புச் செய்திகள்

கிழக்கு மாகாண ஆளுநரின் செயல்பாடுகள் ஏனைய மாகாணங்களுக்கு முன்னுதாரணம்! ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு பிரதமர் பாராட்டு

  நூருல் ஹூதா உமர் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை, மட்டக்களப்பு, திருக்கோணமலை ஆகிய மாவட்டங்களின், உணவு பாதுகாப்பு கூட்டம் கடந்த இரண்டு நாள்களாக பிரதமர் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், அமைச்சர்கள், அந்தந்த மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ...

மேலும்..

பெரியநீலாவனை முஸ்லிம் பிரிவு மக்களுடன் பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராய்வு!

  நூருல் ஹூதா உமர் பெரியநீலாவனை முஸ்லிம் பிரிவு மக்களுடன் அந்தப் பிரதேசத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவில் வாக்காளர்களை புதிதாக பதிவு செய்வது தொடர்பிலானதும், மற்றும் அவசர நடவடிக்கைகள் தொடர்பிலானதுமான கலந்துரையாடல் கல்முனை பிரதேச செயலாளர் ஜே. லியாக்கத் அலி தலைமையில் ...

மேலும்..

ஈஸ்டன் ரி-10 பிளாஸ்ட் கடின பந்து கிரிக்கெட் சமர் சாய்ந்தமருது பிளைங் ஹோர்ஸ் வி.கழகம் சம்பியன்!

  நூருல் ஹூதா உமர் கல்குடா 'டோன் டச்' விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில், பொலன்னறுவை, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த 32 முன்னணிக் கழகங்கள் கலந்து கொண்ட ஈஸ்டன் ரி-10 பிளாஸ்ட் கடின பந்து கிரிக்கெட் சமர் சுற்றுப் போட்டியை மிகவும் ...

மேலும்..

நிந்தவூர் பாடசாலையில் பாலியல் துஷ்பிரயோகம்: ஆசிரியருக்கு விளக்க மறியல், அதிபருக்கு பிணை

! பாறுக் ஷிஹான் அரச பாடசாலை ஒன்றில் மாணவன் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸில் சரணடைந்த சந்தேக நபரான உடற்கல்வி ஆசிரியரை 14 நாள்கள் விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டார் . மேற்படி வழக்கு திங்கட்கிழமை சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் ரி. ...

மேலும்..

நாட்டில் தொடரும் கணவன் மனைவி கொலைக் கலாசாரம் – மனைவியை சுடடுக்கொன்று விட்டு தற்கொலை

நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் குடும்பத் தகராறுகள் காரணமாக இளம் குடும்பங்களைச் சேர்ந்த கணவன், மனைவி தற்கொலை செய்வதும், கொலை செய்யப்படுவதும் அதிகரித்த வண்ணம் உள்ளது. அந்தவகையில் நுவரெலியாவில் பதைபதைக்கும் சம்பவம் ஒன்று நேற்றிரவு பதிவாகியுள்ளது. கணவனுக்கும் மனைவிக்கும் ஏற்பட்ட முரண்பாடு கொலையில் முடிவடைந்துள்ளது. முரண்பாடு ...

மேலும்..

வயது கடந்த காதல் மோகம் – 19 வயது யுவதியை கூட்டிச்சென்ற 55 வயதானவர் – அடித்துக்கொன்ற உறவினர்கள்

சுன்னாகம் பகுதியில் 19 வயது யுவதியுடன் ஓட்டம் பிடித்த 55 வயதுடைய வயதானவர் ஊர் மக்களின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவம் ஒன்று நேற்று யாழ்ப்பாணத்தில் பதிவாகியுள்ளது. குறித்த கொலையுடன் தொடர்பட்ட 6 பேர் இதுவரை சுன்னாகம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் ...

மேலும்..

நாட்டில் நல்லிணக்கம் ஏற்படுவதற்கு 13 ஆவது திருத்தச்சட்டம் அவசியம் : அமைச்சர் சந்திரகாந்தன்!

13 ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்பட்டால், நாட்டில் நல்லிணக்கம் ஸ்தீரப்படுத்தப்படும் என்று அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டிருந்த அவர், 13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பான பிழையான கண்னோட்டத்திலிருந்து பெரும்பான்மையின மக்களும் ...

மேலும்..

மன்னாரில் இலத்திரனியல் கழிவுகளை சேகரிக்கும் நிகழ்ச்சித் திட்டம் முன்னெடுப்பு

மன்னாரில், இலத்திரனியல் கழிவுகளை சேகரிக்கும் நிகழ்ச்சித் திட்டம் இன்று மாவட்ட செயலகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. மன்னார் மாவட்டத்தில் இலத்திரனியல் கழிவுகளை சேகரிக்கும் நிகழ்ச்சித்திட்டம் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் மன்னார் மாவட்ட அலுவலகத்தினால் இன்று மன்னார் மாவட்டச் செயலகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. மத்திய சுற்றாடல் ...

மேலும்..

தென்னிந்திய திருச்சபையின் யாழ்.ஆதீனத்தின் முன்னாள் செயலாளர் காலமானார்!

தென்னிந்திய திருச்சபையின் யாழ்.ஆதீனத்தின் முன்னாள் செயலாளரும் , வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரியின் முன்னாள் அதிபருமான வண. கலாநிதி டேவிட் சதானந்தன் சொலமன் (வயது 61) நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலமானார். திடீர் சுகவீனமுற்ற நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்ததாகத் ...

மேலும்..

ராஜபக்ச தரப்பினர் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் : சஜித் பிரேமதாஸ!

கொள்ளை, ஊழல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களில் இருந்து ராஜபக்ச தரப்பினரை பாதுகாத்து வருகின்றமைக்காக ஜனாதிபதிக்கு அவர்களே நன்றி தெரிவிக்க வேண்டுமெனை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டுள்ளார். மஹரகமயில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர், அரசாங்கத்தின் பூரண அணுசரனையுடன்தான் ...

மேலும்..

ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் ஆரம்பம்!

வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இம்மஹோற்சவத்தினை முன்னிட்டு நேற்று மாலை மட்டக்களப்பு வீரகத்திப்பிள்ளையார் ஆலயத்திலிருந்து கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வும்  நடைபெற்றது. இதனையடுத்து ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ ஆதிசௌந்தரராஜ குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியர்களினால் இன்று ...

மேலும்..

பயிற்சி விமானம் விபத்திற்குள்ளானமை தொடர்பில் ஆராய விசேட குழு நியமிப்பு! (UPDATE)

பயிற்சி விமானம் விபத்திற்குள்ளானமை தொடர்பில் ஆராய்வதற்காக விசேட குழுவொன்று விமானப்படை தளபதி ஏயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளதாக விமானப்படை அறிவித்துள்ளது. இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான பயிற்சி விமானமொன்று சீனன்குடாவில் விழுந்து விபத்துக்கு உள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். விமானப்படைக்குச் சொந்தமான பயிற்சி விமானம் ...

மேலும்..

யாழில் வறட்சியால் சுமார் 70,000 பேர் பாதிப்பு!

வறட்சியுடன் கூடிய காலநிலை காரணமாக யாழ் மாவட்டத்தில் 69,113 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது யாழ் மாவட்டத்தில் நிலவுகின்ற வறட்சியுடன் கூடிய காலநிலை காரணமாக ...

மேலும்..

திருகோணமலையில் விமான விபத்து : இருவர் உயிரிழப்பு!

திருகோணமலை, சீனக்குடா விமானப்படைத் தளத்தில் விமானமொன்று விபத்திற்குள்ளாகியுள்ளது. விமானப்படையினரின் பயிற்சி நடவடிக்கைகளின்போதே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த விபத்தில் விமானம் முற்றாகத் தீப்பிடித்து எரிந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்..

சர்ச்சைக்குரிய லேடி ரிஜ்வே சிறுநீரக சிகிச்சை விவகாரம்; ஜனாதிபதிக்கு அசாத் சாலி கடிதம்!

பொரளை லேடி ரிஜ்வே வைத்தியசாலையில் நடந்த முறைகேடான சிறுநீரக அறுவைச் சிகிச்சை குறித்து சுதந்திரமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் முன்னாள் ஆளுநருமான அசாத் சாலி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அவர் கடிதமொன்றையும் ...

மேலும்..