சிறப்புச் செய்திகள்

யாழில் 54 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது – இருவர் தப்பியோட்டம்

யாழில் 54கிலோ 300 கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இருவர் தப்பியோடியள்ளனர் எனத் பொலிஸார் தெரிவித்துள்ளனர். காங்கேசன்துறை கடற்படையினருக்குக் கிடைத்த ரகசிய தகவலையடுத்தே இக்கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கைதுசெய்யப்பட்டவர் கிளிநொச்சி தர்மபுரம் பகுதியை சேர்ந்த 26 வயதான இளைஞர் ...

மேலும்..

நீர்க் கட்டண அதிகரிப்புக்கு மக்களை திரட்டி போராட்டம்! அநுரகுமார அரசுக்கு எச்சரிக்கை

நீர் கட்டண அதிகரிப்புக்கு எதிராக விரைவாக மக்களை அணிதிரட்டி நாடுபூராகவும் போராட்டம் மேற்கொள்ள இருக்கிறோம் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். அரசாங்கம் நீர் கட்டணத்தை அதிகளவில் அதிகரிக்க எடுத்திருக்கும் நடவடிக்கை தொடர்பாக குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் ...

மேலும்..

தேர்தலை நடத்துமாறுகோரி அவசரப்படுவோரின் கோரிக்கைக்கு பின்னால் சர்வதேச தேவைப்பாடு வஜிர அபேவர்த்தன கூறுகிறார்

வீழ்ச்சியடைந்திருந்த நாட்டைக் கட்டியெழுப்ப முன்வந்திருக்கும் ரணில் விக்ரமசிங்க இந்த நாட்டின் தேசிய சொத்தாகும். தேசிய சொத்தைப் பாதுகாத்துக்கொள்ளத் தவறினால் நாங்கள் அனைவரும் கஷ்டத்தில் வீழ்ந்திடுவோம். அத்துடன் நாட்டின் தற்போதைய நிலைமையில் சிலர் தேர்தலை நடத்தக்கோரி அவசரப்படுகின்றனர். இவர்களின் இந்தக் கோரிக்கைக்குப் பின்னால் சர்வதேசத்தின் தேவைப்பாடுகளும் இருக்கலாம் ...

மேலும்..

மக்களுக்கு ராஜபக்ஷர்கள் மீது அதீத நம்பிக்கை உண்டு ஜனாதிபதி தேர்தலில் அரசியல் வரலாற்றில் மாற்றம் வரும்! ரோஹித அபேகுணவர்தன நம்பிக்கை

ஜனாதிபதி வேட்பாளர் விவகாரத்தில் பொதுஜன பெரமுனவுக்குள் எவ்வித முரண்பாடுகளும் இல்லை. நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ளும் வேட்பாளரை வெகுவிரைவில் அறிமுகப்படுத்துவோம். பொதுஜன பெரமுனவே ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார். பேருவளை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற அரசியல் பிரசாரக் கூட்டத்தில் ...

மேலும்..

பனங்காடு அக்னி விளையாட்டுக் கழகத்துக்கு இணைந்த கரங்கள் அமைப்பால் சீருடைகள்!

பனங்காடு அக்னி விளையாட்டுக் கழக உறுப்பினர்களுக்கு இணைந்த கரங்கள் அமைப்பால் விளையாட்டு சீருடைகள் வழங்கிவைக்கப்பட்டன. இந்த சீருடை வழங்கும் நிகழ்வு அக்னி விளையாட்டு கழகத்தின் உறுப்பினர் ரவிந்திரன் வினோஜன்  தலைமையில்  ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணியளவில் பனங்காடு விளையாட்டு மைதானக் கட்டடத்தில் இடம்பெற்றது. ஆலையடி ...

மேலும்..

திருகோணமலையில் விமானம் விபத்து

திருகோணமலை - சீனக்குடா விமானப்படைத் தளத்தில் விமானமொன்று விபத்திற்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விமானப்படையினரின் பயிற்சி நடவடிக்கைகளின்போதே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாகத் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த விபத்தில் விமானம் முற்றாக எரிந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மேலும்..

சுன்னாகம் லயன்ஸ் கழகத்தினால் வாழ்வகத்துக்கு சேவைத் திட்டம்!

சுன்னாகம் லயன்ஸ் கழகத்தின் புதிய நிர்வாக பதவியேற்பு ஞாயிற்றுக்கிழமை கழகத் தலைவர் லயன் க.டினேஷ் தலைமையில் நடைபெற்றது. கழகத்தின் புதிய தலைவராக வலி.வடக்கு பிரதேசசபை முன்னாள் உறுப்பினர் லயன் செ.விpஜயராஜ் பதவியேற்றார். நிகழ்வில் பிரதமவிருந்தினராக அனைத்து மாவட்ட லயன்ஸ் கழகங்களின் முன்னாள் தலைவரும் ...

மேலும்..

எமது இனம் கல்வியை கைவிடுவது ஆபத்தானது – ஆறு.திருமுருகன் ஆதங்கம்

"தற்போதைய காலத்தில் எமது இனம் கல்வியைக் கைவிடுவதானது துர்ப்பாக்கிய நிலை, அந் நிலையை மாற்றியமைக்க அனைவரும் சிந்தித்துச் செயலாற்ற வேண்டும்" என சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் கலாநிதி ஆறு.திருமுருகன் தெரிவித்தார். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இன்று (07) இடம்பெறும் நான்காவது அனைத்துலக தமிழியல் ஆய்வு ...

மேலும்..

மண்டபம் முகாமில் இருந்த இலங்கைப் பெண்ணைக் காணவில்லை

தமிழகம் – மண்டபம் அகதிகள் முகாமில் இருந்த 29 வயதுடைய இலங்கைப் பெண் ஒருவர் காணாமல் போயுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த பெண் கடந்த ஜீலை மாதம் 27ம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதொடர்பில் மண்டபம் பொலிஸ் நிலையத்தில், ...

மேலும்..

மாணவனை துஷ்பிரயோகப்படுத்திய ஆசிரியர் பொலிஸில் சரண்

பாடசாலை ஒன்றில் மாணவன் ஒருவரை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேக நபரான உடற்கல்வி ஆசிரியர் நிந்தவூர் பொலிஸில் சரணடைந்துள்ளார். தலைமறைவாகி இருந்த சந்தேக நபரான உடற்கல்வி ஆசிரியரை பொலிஸார் தேடி வந்த நிலையில் நேற்று மாலை தனது சட்டத்தரணி ...

மேலும்..

கிணற்றில் தவறி வீழ்ந்து சிறுவன் உயிரிழப்பு

மட்டக்களப்பு - போரதீவுப்பற்று பகுதியில் கிணற்றில் தவறி விழுந்து 6 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று (06) மாலை இடம்பெற்றுள்ளது. அருணாசலம் சிவரூபன் என்ற சிறுவனே உயிரிழந்துள்ளார். குறித்த சிறுவன் தாயாருடன் குளித்துக் கொண்டிருந்தபோதே கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும்..

யானை தாக்கி குடும்பஸ்தர் பலி

அனுராதபுரம் - மதவாச்சி பகுதியில் காட்டு யானை தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பதிவாகியுள்ளது. இச் சம்பவம் நேற்று (06) இரவு இடம்பெற்றுள்ளது. ஒரு பிள்ளையின் தந்தையான 26 வயதுடைய பி.சாரங்க என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த குடும்பஸ்தர் வயல் நிலத்தைப் பாதுகாக்க வயலுக்கு ...

மேலும்..

13ஐ நீக்குவதே சிறந்தவழி – விமல் வீரவன்ச

அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முற்றாக நீக்கி விடுவதே சிறந்த வழி என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, "13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தினால் நாடு பிளவுபடும் என்று நாம் தொடர்ச்சியாக ...

மேலும்..

சொக்லெட்டுக்குள் இருந்த விரல்

மஹியங்கனை வைத்தியசாலையில் பணிபுரியும் உத்தியோகத்தர் ஒருவர் உணவகம் ஒன்றில் இருந்து கொள்வனவு செய்த சொக்லேட் ஒன்றில் மனித விரலின் ஒரு பகுதியை கண்டெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் நேற்று (05) இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மஹியங்கனை வைத்தியசாலையில் பணிபுரியும் உத்தியோகத்தர் ஒருவர் உணவகம் ஒன்றில் ...

மேலும்..

அனலைதீவுக்கு கற்களுடன் சென்ற கப்பல் மூழ்கியது

ஊர்காவற்துறை கண்ணகை அம்மன் ஆலய துறைமுகத்தில் இருந்து அனலைதீவுக்கு கொங்கிரீட் கற்களை ஏற்றிச் சென்ற கப்பல் ஒன்று இன்றையதினம் கடலில் மூழ்கியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. குறித்த சம்பவத்தின் போது கப்பலில் வேலை செய்யும் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும்..