சிறப்புச் செய்திகள்

நியூஸிலாந்து முன்னாள் பிரதமர்களை சந்தித்த பெண் எம்.பிக்கள் குழாம்!

நியூஸிலாந்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கையின் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, அந்தநாட்டு முன்னாள் பிரதமர்களான ஜசிந்தா ஆடர்ன் மற்றும் ஹெலன் கிளார்க் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இந்தச் சந்திப்பில், அரசியலில் பெண்களின் தலைமைத்துவத்தை வலுப்படுத்துதல், பாலின சமத்துவத்தை மேம்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. குறித்த சந்திப்பில் ...

மேலும்..

பௌத்த மயமாகும் சுழிபுரம் முருகன்? அச்சத்தில் மக்கள்

யாழ்ப்பாணம் சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலயத்தில் உள்ள நூற்றாண்டு பழைமைவாய்ந்த அரச மரம் சங்கமித்தையுடன் தொடர்புடைய அரச மரம் என வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளமை அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த அரச மரம் தொல்பொருள் சின்னமாக அறிவித்து வர்த்தமானி அறிவித்தல் ...

மேலும்..

கட்டணமானி பொருத்தப்படாத ஓட்டோக்கள் யாழில் அகற்றம்!

யாழ்.நகர்ப் பகுதியில், ஓட்டோத் தரிப்பிடத்தில் இருந்து கட்டணமானி பொருத்தாத ஓட்டோக்களை அகற்றும் நடவடிக்கையில் போக்குவரத்துப் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர். யாழ் நகர் பகுதியில் வியாழக்கிழமை காலை முதல் பொலிஸார் குறித்த நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். யாழ் மாவட்டத்தில் பெரும்பாலான ஓட்டோக்களில்  கட்டணமானி பொருத்தப்படாமையால்  மக்களிடம் ...

மேலும்..

மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் சிரமதானப் பணிகள் முன்னெடுப்பு

கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் எதிர்வரும் 07 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில் வியாழக்கிழமை மட்டக்களப்பு மாநகரசபையால், மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் அனைத்து பகுதிகளிலும் மாபெரும் சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளர் என்.சிவலிங்கத்தின் ஆலோசனையின் கீழ் ...

மேலும்..

சுகாதாரசேவை மீதான நம்பிக்கையை ஜனாதிபதி மீள கட்டியெழுப்பவேண்டும் ஜே.சி.அலவத்துவல கோரிக்கை

இலவச சுகாதார சேவை மீது மக்களுக்கு இல்லாமல் போயுள்ள நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்ப ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவல தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகசந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் ...

மேலும்..

சீமெந்து தொழிற்சாலைக்கு எதிர்ப்பு பொன்னாவெளி மக்கள் போராட்டம்!

பொன்னாவெளி கிராமத்தில்  ஆரம்பிக்கப்படவுள்ள சீமெந்துத்  தொழிற்சாலைக்கு  எதிர்ப்புத்  தெரிவித்து மக்கள் பாரிய போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். கிளிநொச்சி – பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பொன்னாவெளி கிராமத்தில் பிரபல சீமெந்து  நிறுவனமொன்று சீமெந்து தொழிற்சாலையொன்றை  நிறுவும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது. இதற்காக அந்நிறுவனத்தினர்  அப்பகுதியில் ஓர் ...

மேலும்..

முட்கொம்பன் காட்டு பகுதியில் தீப் பரவல்!

கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முட்கொம்பன் கிராமத்தில் 65 ஏக்கர் வீட்டு திட்டத்தின் பின்பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் தீ பரவியுள்ளது. குறித்த பகுதியில் தீயானது தொடர்ச்சியாக மூன்று தினங்களாக எரிந்து வந்த நிலையில் நேற்றையதினம் பாரிய அளவில் தீ  பரவ ...

மேலும்..

அபிவிருத்திகளின் முன்னேற்ற அறிக்கையை வழங்குமாறு சாகல ரத்நாயக்க பணிப்புரை!

இலங்கையின் நிர்மாணத்துறைக்கு புத்துயிரளித்து தேசிய பொருளாதாரத்துக்கு பாரிய பங்களிப்பை வழங்குவதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நோக்கமாகும் என தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார். நிர்மாணக் கைத்தொழில் புத்துயிர் பெறுவதற்கான செயற்குழு ஜனாதிபதி ...

மேலும்..

நீர்க்கட்டணங்கள் அதிகரிப்பு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் விசனம்

ஆபத்தில் சிக்கிய நாட்டைக் கட்டியெழுப்புவதாகக்  கூறி  நீர்க் கட்டணத்தை அதிகரித்துள்ளதாக அரசாங்கம் மீது எதிர்க்கட்சித் தலைவர் சஜித்  பிரேமதாஸ குற்றம் சுமத்தியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் - இந்நாட்டு மக்களை சில தந்திரங்களால் ஏமாற்றி நீர்க்கட்டணத்தை 50 சதவீதத்தால் அதிகரிப்பது மக்களை ...

மேலும்..

யாழில் வர்த்தக நிலையத்தில் தீ விபத்து

யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் உள்ள கடையொன்றில் இன்று (03) மதியம் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, யாழ்.மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர் தீப்பரவலை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். தீ விபத்திற்கான காரணம் இதுவரை அறியப்படாத நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்க்கொண்டு வருகின்றனர்.

மேலும்..

கிளிநொச்சியில் தீ விபத்து – தென்னந்தோப்பு எரிந்து நாசம்

கிளிநொச்சி - கண்டாவளை - தர்மபுரம் பகுதியில் திடீரென ஏற்பட்ட தீயினால் தென்னந்தோப்பு எரிந்து நாசமாகியுள்ளது. தர்மபுரம் பகுதியில் அமைந்துள்ள தும்புத் தொழிற்சாலை ஒன்றில் திடீரென ஏற்பட்ட தீயினால் 50க்கும் மேற்பட்ட பயன் தரக்கூடிய நிலையில் இருந்த தென்னை மரங்கள் எரிந்து நாசமாகியுள்ளன. வீட்டின் ...

மேலும்..

மாணவன் பாலியல் துஷ்பிரயோகம் – ஆசிரியர் தலைமறைவு

மட்டக்களப்பு - நிந்தவூர் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான மாணவனொருவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் ஆசிரியர் தலைமறைவாகியுள்ளார். நிந்தவூர் பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில், கடந்த ஜூலை மாதம் 19 ஆம் திகதி உடற்கல்வி ஆசிரியரால் பாலியல் ...

மேலும்..

சுழிபுரம் பறாளாய் அம்மனுக்கு வந்த சோதனை

சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலயத்தில் உள்ள அரச மரத்தை சங்கமித்தை வந்து இறங்கிய பின்னர் அவருடன் தொடர்புபட்ட மரமாகச் சித்திரித்து வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. ஆலய வளாகத்தில் உள்ள சங்கமித்த போதியா எனப்படும் பழைய அரச மரம் உள்ளது. அதனையே தொல்லியல் சின்னமாக அறிவித்து ...

மேலும்..

பருத்தித்துறையில் மோட்டார் சைக்கிள் திருட்டு

பருத்தித்துறை பகுதியில் வீடொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று நேற்று (02) அதிகாலை திருடப்பட்டுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது. பருத்தித்துறை, துன்னாலை வடக்கு பகுதியில் உள்ள வீட்டில் மோட்டார் சைக்கிள் திருத்தும் தொழிலை மேற்கொண்டு வரும் ஒருவரின் வீட்டில் இருந்தே குறித்த மோட்டார் ...

மேலும்..

மனைவி வெளிநாடு சென்றதை தாங்கிக்கொள்ள முடியாத கணவன் உயிர்மாய்ப்பு

மனைவி வெளிநாடு சென்ற பிரிவைத் தாங்க முடியாத கணவன் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் நாட்டில் பதிவாகியுள்ளது. இச் சம்பவம் நேற்று பதிவாகியுள்ளது. சிறிசமன்புர கரந்தனையைச் சேர்ந்த முப்பத்தேழு வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். வறுமையிலும் ...

மேலும்..