சிறப்புச் செய்திகள்

புதிய மருத்துவ சட்டமூலத்தை தயாரிக்குமாறு ஜனாதிபதி வேண்டுகோள்

மக்களின் நல்வாழ்வை பாதுகாக்கும் வகையில் புதிய மருத்துவ சட்டமூலத்தை ஆறு மாதங்களுக்குள் தயாரித்து சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.   தற்போதுள்ள மருத்துவக் கட்டளைச் சட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய காலத்திற்கேற்ற மாற்றங்களை ஆராய்ந்து புதிய மருத்துவச் சட்டமொன்றைக் கொண்டு வருவதற்காக சுகாதார ...

மேலும்..

நீர்க்கட்டணம் அதிகரிப்பு – வெளியானது வர்த்தமானி

நீர்க்கட்டணம் அதிகரிப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த நடைமுறையானது நேற்று முதல் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளதாக நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, வைத்தியசாலைகள், பாடசாலைகள், மதஸ்தலங்கள், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்கள் சமுர்த்தி பயனாளிகள், அஸ்வெசும பயனாளிகள் மற்றும் குறைந்த வருமானம் பெறும் ...

மேலும்..

வவுனியாவில் தங்கச்சங்கிலியை அறுத்த திருடர்கள்

வவுனியா - குருமன்காடு பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்களால் பெண் ஒருவர் அணிந்திருந்த தங்கச்சங்கிலியை அபகரிக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. நேற்று (02) இரவு 7.30 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. வவுனியா, குருமன்காடு காளிகோவிலுக்கு அருகாமையில் பெண் ஒருவர் சென்றுள்ளார். இதன்போது பல்சர் ரக மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அந்தப்பெண் அணிந்திருந்த தங்கச்சங்கிலியை ...

மேலும்..

கனடாவில் தமிழ் சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளார் – தேடுதல் முயற்சியில் பொலிஸார் தீவிரம்

கனடாவின் டொரண்டோவில் தமிழ் சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. 12 வயதுடைய தமிழ் என்ற பெயருடைய சிறுமியே காணாமல்போயுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 31ஆம் திகதி பிற்பகல் 2.30 மணியளவில், லோரன்ஸ் அவென்யூ கிழக்கு மற்றும் ஓர்டன் பார்க் வீதி பகுதியில் ...

மேலும்..

யாழில் முதியவரின் சடலம் மீட்பு

யாழ்ப்பாணம் - கொக்குவில் பகுதியில் தனிமையில் வாழ்ந்து வந்ந முதியவர் ஒருவர் சடலமாக நேற்றிரவு (01) மீட்கப்பட்டுள்ளார். கொக்குவில் கிருபாகர சிவசுப்பிரமணிய ஆலயத்திற்கு அருகில் அமைந்துள்ள சனசமூக நிலையத்திற்கு அருகில் உள்ள அறையில் குறித்த வயோதிபர் தனிமையில் தங்கியிருந்துள்ளார். அவர் குறித்த ஆலயத்தில் ...

மேலும்..

விஞ்ஞானப் பாட ஆசிரியைக்கு சேவை நலன் பாராட்டு விழா!

  நூருல் ஹூதா உமர் கல்முனை கல்வி வலய மாளிகைக்காடு கமுஃகமுஃசபீனா முஸ்லிம் வித்தியாலயத்தில் பயிற்றப்பட்ட விஞ்ஞான பாட ஆசிரியையாக கடமையாற்றி வந்த திருமதி ஜெமீலா இஸ்மாலெவ்வை தனது 60 வயதைப் பூர்த்தி செய்ததன் காரணமாக ஆசிரியர் சேவையிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். இவர் தனது முதல் ...

மேலும்..

கல்முனை பிரதேச செயலக ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

  (சர்ஜுன் லாபீர்) கல்முனை பிரதேச செயலக அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கடந்த வியாழக்கிழமை ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவரும், திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.எம்.எம்.முஷாரப் தலைமையில் கல்முனை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலியின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற ...

மேலும்..

அல்- ஹிதாயா மகா வித்தியாலயத்திற்கு திறந்த ஆராதனை வெளியரங்கு திறப்பு!

  பாறுக் ஷிஹான் சம்மாந்துறை கல்வி வலயத்துக்குட்பட்ட நாவிதன்வெளி கோட்டக்கல்வி அலுவலகத்தின் கீழுள்ள சவளக்கடை வீரத்திடல் கமுஃ சதுஃ அல்- ஹிதாயா மகா வித்தியாலயத்துக்கு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட திறந்த ஆராதனை வெளியரங்கு கடந்த வியாழக்கிழமை உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வு பாடசாலை அதிபர் திருமதி ...

மேலும்..

பாடசாலை சமூகத்துக்கான மதிப்புகல்வி நிகழ்ச்சித்திட்டம்

  நூருல் ஹூதா உமர் முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணி மற்றும் டைகோனியா அமைப்பு ஆகியவற்றின் அனுசரணையுடன் மதிப்பு கல்வி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் மூன்றாம் கட்ட நிகழ்வு கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது கமுஃகமுஃஅல்-ஜலால் வித்தியாலயத்தை மையப்படுத்தி தெரிவு செய்யப்பட்ட பாடசாலைக் குழாம், ...

மேலும்..

திருமலை வெருகல் ஆற்றின் குறுக்கே அமைக்கப்படும் பாலத்தின் நிர்மாண பணிகளை உடன் நிறைவு செய்க! அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் ஏற்பாடு

  திருகோணமலை மாவட்டத்தில் வெருகல் ஆற்றின் குறுக்கே அமைக்கப்படும் கட்டையார் பாலத்தின் நிர்மாணப் பணிகளின் முன்னேற்றத்தைக் கண்டறியும் விஜயத்தை கிராம வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மேற்கொண்டார். வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பூரண மேற்பார்வையின் கீழ் உள்ளூர் ஒப்பந்த நிறுவனம் ...

மேலும்..

அரச குடிசார் தொழில்நுட்ப உத்தியோகத்தர்; சங்க கிழக்கின் வருடாந்த பொதுக் கூட்டம்!

கிழக்கு மாகாண அரச குடிசார் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் சங்கத்தின் வருடாந்த பொதுக் கூட்டம் மட்டக்களப்பு, கல்லடியில் அமைந்துள்ள தனியார் விடுதியோன்றில் பிரம்மாண்டமான முறையில் இடம்பெற்றது. அச் சங்கத்தின் தலைவர் எஸ்.வரதராஜன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், அனுசரணையாளர்கள் என பலரும் ...

மேலும்..

நவீன நூலக நடைமுறை மூன்று நாள் பயிற்சிநெறி!

நூருல் ஹூதா உமர் தென்கிழக்குப் பல்கலைக்கழக நூலகத்தில் கடமையாற்றும் கல்விசார் மற்றும் கல்வி சாரா ஊழியர்களுக்கான மூன்று நாள் பயிற்சிநெறி கிழக்குப் பல்கலைக்கழகம், கொழும்பு பல்கலைக்கழகம், கொழும்பு தேசிய நூலகம் , தேசிய ஆவணவாக்கள் சபை மற்றும் பேராதனை பல்கலைக்கழகம் போன்றவற்றில் பல்கலைக்கழக ...

மேலும்..

கடைகள், உணவுப் பண்டங்களின் தரங்கள் மடு ஆலய விழாவில் சோதனைக்கு உட்படும்! மன்னார் சுகாதார சேவைகள் பணிப்பாளர் விநோதன் நடவடிக்கை

மடு ஆலய விழாவுக்காக கடைகள் மற்றும் விற்பனை நிலையங்கள் அமைத்து வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடும் சகலரும் சுகாதார பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர். அத்துடன் இவர்கள் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களின் தரமும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் என மன்னார் சுகாதார சேவைகள் பணிப்பாளர் த.வினோதன் இவ்வாறு ...

மேலும்..

மன்னாரில் சமஷ்டியை வலியுறுத்தி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வட கிழக்கு மாகாணத்திற்கு மீளப் பெற முடியாத சமஷ்டி முறையிலான அதிகார பகிர்வை வலியுறுத்தி முன்னெடுத்து வந்த செயலமர்வின் ஒரு வருட நிறைவை நினைவு கூரும் வகையில் திங்கட்கிழமை (31) காலை 10.30 மணியளவில் மன்னார் பஜார் ...

மேலும்..

97 உயர்தரக் கலைப்பிரிவு மாணவர்களால் ஸ்கந்தவரோதயவுக்கு சைக்கிள் தரிப்பிடம்!

சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரியில் 1997 ஆம் ஆண்டில் உயர்தரம் கல்விகற்ற கலைப்பிரிவு மாணவர்களால் தமது அணியினரின் ஞாபகார்த்தமாக சைக்கிள் தரிப்பிடம் ஒன்று அமைக்கப்பட்டு இன்று (திங்கட்கிழமை) காலை அவர்களின் வகுப்பாசிரியர் கலாநிதி ஆறு.திருமுருகனால் திறந்துவைக்கப்பட்டது. ஸ்கந்தவரோதயக் கல்லூரியின் முதல்வர் லயன் மு.செல்வஸ்தானின் கோரிக்கைக்கு அமைவாக 1997 ...

மேலும்..