சிறப்புச் செய்திகள்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் மட்டுமே நாட்டின் பிரச்சினைக்கு தீர்வுகாண முடியும்! அமைச்சர் டக்ளஸ் அபரிமித நம்பிக்கை பேச்சு

நாடு எதிர்கொள்ளுகின்ற அனைத்துப் பிரச்சினைகளுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் தீர்வினைக்காண முடியும் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, எதிர்காலத்தில் தேர்தல்கள் நடைபெறுகின்றபோது, மக்கள் தங்களின் நல்லெண்ணத்தை வெளிப்படுத்துவார்களாயின், தொடர்ந்து வருகின்ற ஐந்து வருடங்களில் நாடு சுபீட்சமான நிலையை அடையும் ...

மேலும்..

நல்லூர் கந்தனை வழிபட்டார் இந்திய நிதி அமைச்சர் நிர்மலா

மூன்று நாள்கள் விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்தியாவின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இதன்போது, இந்திய தூதுவர் கோபால் பாக்லே, இலங்கை வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய, யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவர் ...

மேலும்..

பொலிஸாருக்கு எதிரான முறைப்பாடுகள் 118 இற்கு உடன் அறிவிக்க உத்தரவு! மீண்டும் தெரிவிக்கிறார் பொலிஸ் ஊடக பேச்சாளர்

பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்பில் ஏதேனும் முறைப்பாடு செய்ய விரும்பினால் 118 என்ற இலக்கத்துக்கு  அறிவிக்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ மீண்டும் அறிவுறுத்தியுள்ளார். இந்த தொலைபேசி இலக்கம்  பொதுமக்கள்  பாதுகாப்பு அமைச்சால்  பராமரிக்கப்படுகிறது. இந்த எண்ணுக்கு பொதுமக்களிடம் இருந்து ...

மேலும்..

வான் மீது மரம் வீழ்ந்தமையால் மஹியங்கனையில் மூவர் காயம்!

கண்டி - மஹியங்கனை பிரதான வீதியில் பல்லேகல பிரதேசத்தில் வியாழக்கிழமை வான் மீது மரம் ஒன்று வீழ்ந்ததில் வானில் பயணித்த மூவர் காயமடைந்துள்ளனர் என பல்லேகல பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தால் வீதிக்கு அருகில் இருந்த பெட்டிக்கடை ஒன்று ...

மேலும்..

புத்தளம் – மதுரங்குளி பகுதியில் தனியார் சொகுசு பஸ் விபத்து!

புத்தளம் மதுரங்குளி பகுதியில் மன்னாரிலிருந்து கொழும்பு சென்ற  தனியார் சொகுசு பஸ் ஒன்று  விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த பஸ் புதன்கிழமை மதியம் 12 மணியளவில் மன்னார் பஸ் தரிப்பிடத்தில் இருந்து   புறப்பட்டு கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது மதுங்குளி பகுதியில் பட்டாரக ...

மேலும்..

மன்னிப்பு கோரினார் சுமண ரத்ன தேரர்!

தென்னிலங்கையிலுள்ள தமிழர்களை வெட்டுவேன் என சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் மன்னிப்பு கோரியுள்ளார். இந்த விடயம் தொடர்பாக காணொளி ஒன்றை வெளியிட்டு தனது கருத்தை அவர் பதிவு செய்துள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு - மட்டக்களப்பு, ஜயந்தபுரம் பகுதியில் ...

மேலும்..

முதலீட்டாளர்கள் விரும்பாத இடமாக இலங்கை மின்கட்டண வரி அதிகரிப்பினால் மாறுகின்றது! திலும் அமுனுகம சாட்டை

அதிகரித்த மின்கட்டணங்கள்  வரிகள் முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்வதற்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன என முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். இலங்கையில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான செலவுகள் மிகவும் அதிகரித்து  செல்வதால் இலங்கை முதலீட்டாளர்கள் விரும்பாத இடமாக மாறிவருகின்றது என ...

மேலும்..

குவியலாக வீழ்ந்துகிடந்த பணத்தை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார் நபர்! மாத்தறை இலங்கை வங்கியில் சம்பவம்

மாத்தறை இலங்கை வங்கியின் வாகன தரிப்பிடத்துக்கு அருகில் வியாழக்கிழமை மாலை வீழ்ந்து கிடந்த 50 லட்சம் ரூபா பணத்தை மாத்தறை நகரிலுள்ள கூரியர் சேவை நிறுவனம் ஒன்றின் உதவி முகாமையாளரான சந்தன உதயங்க (வயது - 38) என்பவர் கண்டெடுத்து அதனை ...

மேலும்..

வடக்கு, கிழக்கில் மக்களைத் திரட்டி அரசாங்கத்திற்குப் பதில் சொல்வோம்! சிறிதரன் எம்.பி. எச்சரிக்கை

வடக்கு, கிழக்கில் இடம்பெற்றுவரும் காணி அபகரிப்புகளை நிறுத்தாவிட்டால் வெகு விரைவில் பாரிய அளவில் மக்களைத் திரட்டி அரசாங்கத்திற்கு பதில் சொல்வோம் என யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்தார். மட்டக்களப்பு கால்நடைப்பண்ணையாளர்களால் சித்தாண்டி மகா வித்தியாலயத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தில் கலந்துகொண்டு ...

மேலும்..

திருகோணமலை IOC க்கு நிர்மலா சீதாராமன் விஜயம்

திருகோணமலைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை, இந்திய எண்ணெய் நிறுவனத்தினால் (IOC) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டிருந்தார். குறித்த நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் ...

மேலும்..

விவசாயிகளுக்கு நட்ட ஈடு!

திருகோணமலை மாவட்டத்தில்  வெள்ளம், வறட்சி உள்ளிட்ட காரணங்களினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு  நட்ட ஈடு வழங்கும் நிகழ்வு இன்று(02) திருகோணமலை மாவட்ட செயலக உப ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது. மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் புதிதாக விவசாய ஓய்வூதிய ...

மேலும்..

மலையக மக்களுடன் இந்திய அரசாங்கம் எந்நேரமும் இருக்கும்-நிர்மலா சீதாராமன்!

இந்திய அரசாங்கம் எந்நேரமும் மலையக மக்களுடன் இருக்கும் என இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவிக்கின்றார். இன்று (வியாழக்கிழமை) சுகததாஸ உள்ளக அரங்கில் தற்போது நடைபெற்றுவரும் ”நாம்-200″ நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார் இதேவேளை மலையக மக்களுக்கான இந்திய ...

மேலும்..

வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதித்த யாழ்பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள்!

யாழ் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களினால் வேலைநிறுத்தப் போராட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தே  இன்று பி.ப பல்கலைக்கழக முன்றலில் குறித்த கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மேலும்..

சம்பந்தன் குறித்து பெரிதாக அலட்டத் தேவையில்லையாம்! அமைச்சர் டக்ளஸ் ‘அற்வைஸ்’

நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனின் பதவி நீக்க விவகாரம் தொடர்பாக பெரிதாக அலட்டிக் கொள்ளத் தேவையில்லை என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரித்துள்ளார். இரா.சம்பந்தன் பதவி விலக வேண்டும் என்ற கருத்து தொடர்பில், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கையிலேயே கடற்றொழில் அமைச்சர் மேற்கண்டவாறு ...

மேலும்..

யாழ். பல்கலை மாவீரர் நினைவு தூபியில் சுடர் ஏற்றப்பட்டுள்ளது!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள மாவீரர் நினைவுத்தூபி துப்புரவு செய்யப்பட்டு ஈகை சுடர் ஏற்றப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள மாவீரர் நினைவுத்தூபியை துப்புரவு செய்யும் பணிகளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் புதன்கிழமை ஈடுபட்டனர். அதன்பின் தூபியில் ஈகைச்சுடர் ஏற்றி மாணவர்கள் மரியாதை செலுத்தினர்.

மேலும்..