சிறப்புச் செய்திகள்

சர்வஜன வாக்கெடுப்பு நடத்துவதற்கு முதுகெலும்பு இருந்தால் செல்லுங்கள்! கஜேந்திரகுமார் சவால்

தமிழ் மக்கள் ஒற்றையாட்சியையா அல்லது சமஷ்டியையா விரும்புகிறார்கள் என்பது தொடர்பில் தெரிந்துகொள்வதற்கு முதுகெழும்பு இருந்தால் சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்லுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சவால் விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் - 'நாடாளுமன்ற உறுப்பினர் ...

மேலும்..

உணவக உரிமையாளர்களுடன் கல்முனையில் கலந்துரையாடல்!

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் சுற்றுச்சூழல் மற்றும் தொழில் சுகாதாரப் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி ஏ.எஸ்.எம் பௌசாத்தால், உணவகங்களை மேம்படுத்தி சுகாதாரமான உணவை வழங்கும் நோக்குடன் முன்னெடுக்கப்படும் செயற்றிட்டங்கள் தொடர்பில் விசேட கலந்துரையாடலொன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கல்முனை பிராந்திய சுகாதார ...

மேலும்..

‘பொய்மான்’ ஊடக சந்திப்பு

வைத்தியர் ஜெயமோகன் இயக்கிய 'பொய்மான்' திரைப்படத்தின் திரைத்துறை சார்ந்த விசேட பிரதிநிதிகளுக்கான திரையிடல் நிகழ்வு யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4.30 மணியளவில்  நடைபெறவுள்ளது. யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர்  சந்திப்பிலேயே  இயக்குநர் ஜே.ஜெயமோகன் இதனைத் தெரிவித்தார். நவீன ...

மேலும்..

சிரேஷ்ட உலமா அப்துல் மஜீத் அப்துல் ஜப்பார் அகில இலங்கை சமாதான நீதிவானாக நியமனம்

நூருல் ஹூதா உமர் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் சாய்ந்தமருது கிளை முன்னாள் பொருளாளரும், சிரேஷ்ட உலமாவுமான சாய்ந்தமருதை சேர்ந்த அப்துல் மஜீத் அப்துல் ஜப்பார் அகில இலங்கை சமாதான நீதிவானாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அண்மையில் அம்பாறை மாவட்ட நீதிமன்றத்தில் நீதிவான் முன்னிலையில் ...

மேலும்..

தென்னாசியாவில் முற்போக்கு இலக்கிய இயக்கங்களின் அறிவுசார் வரலாறு’ தொடர்பான விருந்தினர் விரிவுரை!

  மாளிகைக்காடு நிருபர் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞானங்கள் துறையின் வரலாற்றுப் பிரிவு தென்னாசியாவில் முற்போக்கு இலக்கிய இயக்கங்களின் அறிவுசார் வரலாறு தொடர்பான விருந்தினர் விரிவுரை கலை கலாசார பீடத்தின் கலை அரங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலை கலாசார பீடத்தின் அனைத்துத் துறை ...

மேலும்..

இறை நோக்கில் காலத்துக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது! இஸ்லாமிய புதுவருட நிகழ்வில் முப்தி சாஜித் அலி.

நூருல் ஹூதா உமர் இறைவன் தன்னுடைய புனித நூலான அல் குர்ஆனில் காலத்துக்கு முன்னுரிமை வழங்கும் விதத்தில், பல்வேறு இடங்களில் காலத்தின் மீது சத்தியமிட்டுள்ளான். இதனூடாக எங்களை விட்டுச் செல்லும் காலத்தின் அவசியத்தையும் அந்த அந்த நேரங்களில் நாங்கள் கடைபிடிக்க வேண்டிய விடயங்களையும் ...

மேலும்..

சமாதானத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில்தான் குருந்தூரில் சைவ வழிபாடுகள் தடுக்கப்பட்டன பொலிஸார் இப்படிக் கூறுகின்றனர்

  விஜயரத்தினம் சரவணன் சமாதானத்தை ஏற்படுத்தும் நோக்கிலேதான் குருந்தூர்மலையில் கடந்த 14 ஆம் திகதி சைவத் தமிழ் மக்களின் வழிபாடுகள் தடுக்கப்பட்டன என முல்லைத்தீவு பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்திருந்தனர். இந் நிலையில் தொல்லியல் திணைக்களத்தின் விளக்கத்தைப் பெறுவதற்காக குறித்த வழக்கு எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 08ஆம் ...

மேலும்..

ஜனாதிபதி தன்னுடைய விருப்பத்துக்கேற்ப மத்திய வங்கி ஆளுநரை நியமிக்கமுடியாது! இப்படிக் கூறுகிறார் அமைச்சர் ஷெகான்

  உத்தேச மத்திய வங்கி சட்டமூலத்துக்கு அமைய ஜனாதிபதியின் விருப்பத்துக்கு அமைய மத்திய வங்கியின் ஆளுநரை நியமிக்க முடியாது. மத்திய வங்கியின் சுயாதீனத்தை பாதுகாக்க விசேட ஏற்பாடுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. மத்திய வங்கியின் உயர் பதவிகள் தொடர்பில் நாடாளுமன்றமே தீர்மானிக்கும் என பதில் நிதியமைச்சர் ஷெஹான் ...

மேலும்..

சமுர்த்தி வேலைத் திட்டத்தை எமது அரசாங்கம் பலவீனப்படுத்தவோ இடைநிறுத்தவோ மாட்டாது! அமைச்சர் பிரசன்ன திட்டவட்டக் கருத்து

  ஆய்வின் அடிப்படையில் திட்டமிடப்பட்ட சமுர்த்தி வேலைத் திட்டத்தை பலவீனப்படுத்தவும் இடைநிறுத்தவும் அரசாங்கம் செயற்படாது என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். சமுர்த்தி திட்டம் வெற்றிகரமாக நடைபெறுவதற்கு சமுர்த்தி அதிகாரிகளின் ஆதரவு பெருமளவில் கிடைத்து வருவதாக அமைச்சர் மேலும் ...

மேலும்..

பௌத்த ஆலயத்தை அழிக்க முயன்றவர்களைச் சந்தித்த கனடா தூதரை ஏற்கமுடியாத நபராக அறிவிக்கவேண்டும்! சரத்வீரசேகர காட்டம்

  குருந்தூர் மலை பௌத்த ஆலயத்தை அழிக்கமுயன்றவர்களை சந்தித்த கனடா உயர்ஸ்தானிகரை இலங்கையால் ஏற்றுக்கொள்ள முடியாத நபராக அறிவிக்கவேண்டும் என சரத்வீரசேகர வேண்டுகோள் விடுத்துள்ளார் தனது ருவிட்டர் பதிவில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கனடா உயர்ஸ்தானிகர் வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டு குருந்தூர் மலையில் இனமோதலை உருவாக்க ...

மேலும்..

நால்வர் தீர்மானங்களால் நாடு வங்குரோத்தானது! சம்பிக்க ரணவக்க சுட்டிக்காட்டு

2019 ஆம் ஆண்டுக்கு பின்னர் மத்திய வங்கி எடுத்த தீர்மானங்களின் விளைவை நாட்டு மக்கள் தற்போது எதிர்கொண்டுள்ளார்கள். பொருளாதாரப் பாதிப்புக்குப் பொறுப்புக் கூற வேண்டியவர்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாத நிலையில் எவ்வாறு முன்னேற்றமடைவது. மூன்று அல்லது நான்கு பேர் எடுத்த தவறான ...

மேலும்..

ஜனாதிபதி ரணிலின் செயற்பாடுகள் தமிழரை ஏமாற்றுவது போலுள்ளன இராதாகிருஷ்ணன் கூறுகிறார்

13 ஆவது திருத்தம் இந்த நாட்டில் இருக்கும் சட்டம். அதனை ஜனாதிபதி இந்தியாவுக்கு சொல்வதில் பயனில்லை. 13 பிளஸ் பற்றி பேசினால் அதனை வரவேற்போம். அதனால் ஜனாதிபதியின் செயற்பாடுகள் தமிழ் மக்களை ஏமாற்றுவது போன்றே உள்ளன என மலையக மக்கள் முன்னணி ...

மேலும்..

13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த ரணிலுக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை!  சாகர காரியவசம் இடித்துரைப்பு

13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதிக்கு எந்தவித தார்மீக உரிமையும் இல்லை என ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் பொதுச்செயலாளர் சாகரகாரியவசம் தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு மக்கள் வழங்கிய ஆணையின் அடிப்படையிலேயே தற்போதைய ஜனாதிபதி அதிகாரத்தில் உள்ளார் எனத் தெரிவித்துள்ள சாகர காரியவசம், ...

மேலும்..

நுண்கடன் திட்டம் புற்றுநோய் போல் பரவல்: மத்தியவங்கி பொறுப்பை நிறைவேற்றவில்லை! நீதியமைச்சர் குற்றச்சாட்டு

நாட்டில் நுண்கடன் நிதி திட்டம் புற்றுநோய் போல் பரவியுள்ளது. இதனால் கிராமப்புற மக்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள். நுண்கடன் நிதி திட்டத்தில் மத்திய வங்கி தனது பொறுப்பை நிறைவேற்றவில்லை என நீதி,சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ ...

மேலும்..

இல்லாத பிரச்சினையை தோற்றுவிப்பதை தமிழ்த் தலைமைகள் தவிர்க்கவேண்டும்! எச்சரிக்கிறார் சரத் வீரசேகர

அதிகாரப் பகிர்வு என்ற நோக்கத்துடன் ஜனாதிபதியை சந்தித்து இல்லாத பிரச்சினையை தோற்றுவிப்பதை தமிழ் அரசியல்வாதிகள் தவிர்த்துக் கொள்ள வேண்டும். பலர் உயிர் தியாகம் செய்து நாட்டின் ஒருமைப்பாட்டைப் பாதுகாத்துள்ளார்கள். ஆகவே, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நோக்கத்துக்காக நாட்டை பிளவுப்படுத்த நாங்கள் ஒருபோதும் இடமளிக்கப் ...

மேலும்..