சிறப்புச் செய்திகள்

தமிழ் கட்சிகள் கடிதத்துக்கு இராஜதந்திர ரீதியில் பதில்! ஜனாதிபதி அளிப்பார் என்கிறார்; பந்துல

தமிழ்க் கட்சிகளின் கடிதம் தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு, இந்திய அரசாங்கம் அழுத்தம் விடுத்தால், அதற்கு இராஜதந்திர ரீதியான பதிலை ஜனாதிபதி வழங்குவார் என்று அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார். அமைச்சரவையின் வாராந்த முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு, அரச தகவல் திணைக்களத்தில் ...

மேலும்..

பாகிஸ்தானுக்கான உயர்ஸ்தானிகராக அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன நியமிப்பு!

பாகிஸ்தானுக்கான உயர்ஸ்தானிகராக அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் கடற்படைத் தளபதியாகவும் பாதுகாப்பு படைகளின் பிரதானியாகவும் இவர் செயற்பட்டுள்ளார். குறித்த பதவிகளில் இருந்து ஓய்வு பெற்றதன் பின்னர், அவர் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளராகவும் கடமையாற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும்..

பாணுக்குள் ஒழித்து விற்பனைசெய்யப்பட்ட உடல் எடை குறைப்பு போதை மாத்திரை!

  சகுவாரோ எனப்படும் உடல் எடையை குறைக்கும் போதைப்பொருள் அடங்கிய மாத்திரைகளை உணவுப் பொருள்களில் மறைத்து விற்பனை செய்யும் மருந்துக் கடையொன்று தொடர்பில் கிடைத்த தகவலையடுத்து, பதுளை விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகள் அதனைச் சுற்றிவளைத்து 1793 மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவரைக் கைதுசெய்துள்ளனர். பதுளை ...

மேலும்..

காத்தான்குடி ஹலாவுதீன் விடயத்தில் சட்டத்தின் சரத்துகள் மீறப்பட்டுள்ளன கல்வி நிர்வாக சேவை அதிகாரிகள் சங்க செயலாளர் கூறுகிறார்

  நூருல் ஹூதா உமர் காத்தான்குடி கோட்ட கல்வி அதிகாரியாக இலங்கை அதிபர் சேவையைச் சேர்ந்தவர் இருக்க முடியாது எனில் கிழக்கில் இலங்கை அதிபர் சேவை எவரும் கோட்ட கல்வி அதிகாரியாக இருக்க முடியாது எனவும், கிழக்கு மாகாணத்தில் 15 இற்கும் மேற்பட்ட இலங்கை ...

மேலும்..

மக்கள் பிரச்சினைக்காக நாங்கள் முன்செல்கின்றதால் செல்வாக்கிழக்கும் அரசியல்வாதிகள் சதிசெய்கிறார்கள்! அக்கரைப்பற்று பெரிய பள்ளிவாசல் தலைவர் காட்டம்

  நூருல் ஹூதா உமர் எங்களைக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று நலிவடைந்து வரும் அரசியல் சக்திகள் பல்வேறு முயற்சிகளை செய்து வருகின்றன. நாங்கள் போதைப்பொருள் கடத்தியோ வெளிநாட்டுக்கு அனுப்புவதாகக் கூறி மக்களை ஏமாற்றியோ பிழைப்பு நடத்துபவர்கள் அல்லர். பாடசாலை விடயமொன்றுக்காக ...

மேலும்..

அஸ்வெசும நலன் உதவி திட்டத்துடன் இணைந்த வகையில் சமுர்த்தி திட்டத்தை நடைமுறைப்படுத்தல் தொடர்பான பயிற்சி

  நூருல் ஹூதா உமர். 'அஸ்வெசும ' நலன் உதவி திட்டத்துடன் இணைந்த வகையில் சமுர்த்தி திட்டத்தை நடைமுறைப்படுத்தல், தொடர்பான பயிற்சி நெறி அம்பாரை மாவட்ட கரையோர பிரதேச செயலகங்களில் தமிழ் மொழியில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு திங்கட்கிழமை அக்கரைப்பற்று செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இப்பயிற்சி ...

மேலும்..

முன்னாள் எம்.பி. அலவியின் மறைவுக்கு ரிஷாத் அனுதாபம்!

  குருநாகல் மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சமூக சேவையாளருமான அல்ஹாஜ் ஏ.எச்.எம்.அலவியின் மறைவு தனக்கு மிகவும் வேதனை தருவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். அவர் தனது அனுதாபச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளவை வருமாறு ...

மேலும்..

அரச வைத்திய அதிகாரிகள் சம்மேளனம் கிழக்கு ஆளுநருடன் கைக்கோர்த்தது!

அபு அலா - கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும் அரச வைத்திய அதிகாரிகள் சம்மேளன தலைவர் வைத்தியர் தர்ஷன சிறிசேன மற்றும் செயலாளர் வைத்தியர் ஹரித்த அலுத்கேக்குமிடையிலான கலந்துரையாடலொன்று இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றது. இந்தக் கலந்துரையாடலில், கிழக்கு மாகாணத்தில் ஆளுநரால் முன்னெடுக்கப்படும் சேவைகளுக்கு ...

மேலும்..

கோட்டாபயவின் வழியில் ரணிலாலும் கிழக்கு முஸ்லிம்கள் புறக்கணிப்பு! இம்ரான் எம்.பி. குற்றச்சாட்டு

  ஹூஸ்பர் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வழியில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் கிழக்கு மாகாண முஸ்லிம்களைப் புறக்கணித்து வருகின்றார். என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறியுள்ளவை வருமாறு - இலங்கையில் கிழக்கு ...

மேலும்..

நாட்டில் ஊடக அடக்குமுறைகள் இன்னமும் தொடர்கின்றன ஜனநாயக சீர்குலைவுக்கு அரச இயந்திரங்களும் பங்காளிகள் ஊடகவியலாளர் சரவணன் வேதளை

  இந்த நாட்டில் ஊடகஅடக்குமுறைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு, இங்கு ஜனநாயகச் சீர்குலைவு தொடர்ந்தும் இடம்பெறுவதாக ஊடகவியலாளர் விஜயரத்தினம் சரவணன் தெரிவித்துள்ளார். அதேவேளை இந்த நாட்டின் ஜனநாயகத்தைப் பேணிப் பாதுகாக்கவேண்டிய அரச இயந்திரங்களான பொலிஸ், இராணுவத்தினர்கூட, ஊடக அடக்குமுறைச் செயற்பாட்டில் ஈடுபட்டு இந்த நாட்டின் ஜனநாயக ...

மேலும்..

சாய்ந்தமருது முன்பள்ளிகளுக்கு தளவாடங்கள் வழங்கப்பட்டன

  நூருல் ஹூதா உமர் உலகவங்கியின் நிதியுதவியில் மகளிர் சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூகவலுப்படுத்துகை அமைச்சால் சாய்ந்தமருது பிரதேச செயலக பிரிவில் தெரிவு செய்யப்பட்ட 04 முன்பள்ளி பாடசாலைகளுக்கு தளவாடங்கள் பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக் தலைமையில் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் எம்.ஐ.முவஃபிகா, ...

மேலும்..

காத்தான்குடி பெண்கள் காப்பகத்துக்கு முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் விஜயம்!

  நூருல் ஹூதா உமர் காத்தான்குடி பெண்கள் காப்பகத்தின் தலைவரும் முன்னாள் காத்தானக்குடி நகர சபை உறுப்பினருமான சல்மா அமீர் ஹம்சாவின் அழைப்பின் பேரில் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் கலாநிதி எம். எல். எம். ஏ. ஹிஸ்புல்லாஹ் விஜயம் செய்தார். இந்தப் பெண்கள் காப்பகம் ...

மேலும்..

உத்தியோகத்தர்கள் பாராட்டி கௌரவிப்பு

  நூருல் ஹூதா உமர் இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் 2022 ஆம் ஆண்டுக்கான தேசிய மட்ட அடைவைப் பெற்றுக் கொண்டமைக்காக சாய்ந்தமருது பிரதேச செயலக பிரிவுகளில் வழிநடத்திய கிளைகளின் தலைவர்கள் மற்றும் கிராம மட்டத்தில் அதிகளவான பங்களிப்பு செய்த ...

மேலும்..

துருக்கியில் தடையான பயங்கரவாத அமைப்பு இலங்கையில் இருந்தும் அகற்றப்பட்டுள்ளதாம்! துருக்கி தூதுவர் கூறுகின்றார்

துருக்கியில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பு இலங்கையிலிருந்து அகற்றப்பட்டுள்ளது என இலங்கைக்கான துருக்கி தூதுவர் டெமெட் செகெர்சியோ குளு தெரிவித்துள்ளார். 2016 சதிப்புரட்சிக்கு காரணமான ஃபெத்துல்லாஹிஸ்ட் என்ற அமைப்பே இலங்கையிலிருந்து அகற்றப்பட்டுள்ளது என துருக்கி தூதுவர் தெரிவித்துள்ளார். இலங்கையும் துருக்கியும் இணைந்து முன்னெடுத்த பயங்கரவாத ...

மேலும்..

பிரதமர் தினேஷை சந்தித்தார் புதிய விமானப்படைத் தளபதி!

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ, திங்கட்கிழமை அலரி மாளிகையில் பிரதமர் தினேஷ் குணவர்தனவை மரியாதை நிமித்தம் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது சம்பிரதாயப்படி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ, பிரதமருக்கு நினைவுப் பரிசொன்றை வழங்கினார். எயார் மார்ஷல் உதேனி ...

மேலும்..