சிறப்புச் செய்திகள்

அடுக்கடுக்காக விருதுகளைப் பெறும் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை!

நூருல் ஹூதா உமர் சுகாதார அமைச்சின் ஒருங்கிணைப்புடன் நடைபெற்ற வைத்தியசாலைகளுக்கிடையிலான பொலித்தீன் பாவனையை இல்லாமல் செய்து, சுற்றுச்சூழலை அழகுற வைத்திருந்தமை, மற்றும் சுற்றுச்சூழல் பசுமை நடவடிக்கைகளை பராமரித்து வீண்விரயமாதலை குறைத்தமை போன்ற பல்வேறு நடவடிக்கைகளுக்காக 'ஜனாதிபதி சுற்றாடல் விருது' பெற்ற சம்மாந்துறை ஆதார ...

மேலும்..

சாய்ந்தமருதிலும் ஆபத்தான நிலையிலுள்ள ஒரு ஒடுக்கமான பாலம்;அச்சத்தில் மக்கள்

நூருல் ஹூதா உமர் சாய்ந்தமருது பழைய வைத்தியசாலை வீதியிலுள்ள ஒடுக்கமான பாலம் பல தசாப்தங்களாக புனரமைப்பு செய்யப்படாமல் சேதமடைந்து காணப்படுவதால் அந்த பாலத்தில் பயணிப்போர் அச்சத்துடனே பயணித்து வருகின்றனர். கல்முனை மாநகர சபைக்குட்பட்ட சாய்ந்தமருது பிரதேசத்தில் அமைந்துள்ள ஆயுர்வேத வைத்தியசாலை, உப தபாலகம், பாடசாலை, ...

மேலும்..

மட்டு. திக்கோடை பிரதேசத்தில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட ஆயுர்வேத மத்திய மருந்தகம் ஆளுநரினால் திறந்துவைப்பு!

  (அபு அலா) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வழிகாட்டலின் கீழ், மாகாண விசேட செயற்பாடுகளுக்காக குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்திக் கொடையில் ரூபா 13 மில்லியன் செலவில் கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள மேற்பார்வையோடு மட்டக்களப்பு - திக்கோடை பிரதேசத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஆயுர்வேத மத்திய ...

மேலும்..

53.03 மில்லியன் டொலர் பெறுமதியான மருத்துவப் பொருள்கள் இலங்கைக்கு!

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங், சிறு குழந்தைகளுக்குத் தேவையான புற்றுநோய்க்கான மருந்துகள் மற்றும் மருந்துப் பொருள்களை சுகாதார அமைச்சிடம் புதன்கிழமை கையளித்துள்ளார். 53.03 மில்லியன் டொலர் பெறுமதியான இந்த மருந்துப் பொருள்கள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டதாக சுகாதார ...

மேலும்..

டிரான் அலஸின் கருத்தானது புலிப்பூச்சாண்டி காட்டும் செயல்!  போராளிகள் நலன்புரி சங்கம் கிண்டல்

புனர்வாழ்வு வழங்கப்பட்ட போராளிகளிற்கு தொழில் வாய்ப்புக்களோ அல்லது வாழ்வாதாரங்களையோ அரசாங்கம் செய்ய தவறிவிட்டதன் காரணமே போராளிகள் நலன்புரி சங்கம் திறந்துவைக்கப்பட்டது என போராளிகள் நலன்புரி சங்கத்தின் வவுனியா மாவட்ட தலைவர் அரவிந்தன் தெரிவித்தார். குறித்த சங்கத்தில் இடம்பெற்ற ஊடகவியாலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட ...

மேலும்..

72 மில்லியன் ரூபா செலவில் மட்டக்களப்பில் வீதி புனரமைப்பு

மட்டக்களப்பு மாநகர சபைக்கு உட்பட்ட பிரதேசங்களில் உலக வங்கியின் நிதி உதவியுடன் 72 மில்லியன் ரூபா செலவில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தித் திணைக்களத்தால் புனரமைக்கப்பட்ட  கொக்குவில் சத்துருகொண்டான் தன்னாமுனை வீதிகளை புதன்கிழமை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மக்கள் ...

மேலும்..

மைத்திரி நஷ்டஈடு வழங்கும் விவகாரம் நீதிமன்றமே இறுதி முடிவை எடுக்குமாம்  அருட் தந்தை சிறில் காமினி கூறுகிறார்

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடு தொகையை  முன்னாள் ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேன செலுத்துவது குறித்த தீர்மானத்தை நீதிமன்றமே தீர்மானிக்கும். இவ்விடயம் தொடர்பாக எந்தக் கருத்தையும் எங்களால் கூற முடியாது என கொழும்பு பேராயர் இல்லத்தின் ஊடகப் பேச்சாளர் அருட் தந்தை ...

மேலும்..

ஐ.நாவும் உலக நாடுகளும் இனியாவது தாமதிக்காமல் மனித உரிமை விசாரணைகளை நடத்த முன்வரவேண்டும் புதைகுழிகள் குறித்து வேல்முருகன்

கொக்குதொடுவாயில் மனித புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் இனியாவது தாமதிக்காமல் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்த ஐ.நாவும்  உலக நாடுகளும் முன்வரவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள தமிழர் வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன்,  உலக நாடுகளை ஒன்றுதிரண்டு மத்திய அரசாங்கத்துக்கு ...

மேலும்..

டெங்கு ஒழிப்பு அதிகாரிகளினது நியமனங்களை வழங்காவிட்டால் எமது ஆட்சியில் வழங்குவோம்!  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் சூழுரை

டெங்கு ஒழிப்பு அதிகாரிகளினது நியமனங்களை நிரந்தரமாக்காவிட்டால் எமது ஆட்சியில் நிறைவேற்றுவோம்  என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். டெங்கு ஒழிப்பு அதிகாரிகளின் பிரதிநிதிகளுடனான சந்திப்பின்  போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் - டெங்கு ஒழிப்பு பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளின் ...

மேலும்..

இரு ஊசிகள் செலுத்தியதால் வலியால் துடித்து வாந்தி எடுத்து உயிரிழந்தார் 21 வயது யுவதி! பேராதனை வைத்தியசாலையில் சம்பவம்

வயிற்றில் ஏற்பட்ட நோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக பேராதனை வைத்தியசாலைக்குச் சென்ற  21 வயதுடைய யுவதிக்கு இரண்டு ஊசிகள் போடப்பட்ட நிலையில் அவர்  உயிரிழந்துள்ளார் என பேராதனை வைத்தியசாலை பொலிஸார் தெரிவிக்கின்றனர். கடுகண்ணாவ பொத்தபிட்டிய பகுதியைச் சேர்ந்த  மதுஷிகா ஜயரத்ன என்ற யுவதியே உயிரிழந்துள்ளார். வயிற்றில் ...

மேலும்..

ஹஷிஸ் போதைப்பொருளுடன் கற்பிட்டியில் இளைஞன் கைது!

புத்தளம் கற்பிட்டி பகுதியில் ஹஷிஸ் போதைப்பொருளுடன் ஒருவர் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளார். கற்பிட்டி பொலிஸ் விஷேட புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைக்கெப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் போதைப்பொருள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபரிடமிருந்து 73 கிராம் 800 மில்லி கிராம் ஹஷிஸ் போதைப்பொருள் ...

மேலும்..

கல்முனை பிராந்திய டெங்கு தடுப்பு உதவியாளர்கள் நிரந்தர நியமனம் கோரிக் கவனவீர்ப்புப் போராட்டம்

  அனைத்து இலங்கை டெங்கு தடுப்பு உதவியாளர் சங்கத்தின் கல்முனை பிராந்திய டெங்கு தடுப்பு உதவியாளர்கள்இ கடந்த நான்கு வருடங்களுக்கு மேலாக ஒப்பந்த அடிப்படையில் கடமையாற்றிவரும் தங்களை நிரந்தர ஊழியர்களாக்குமாறு கோரி காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு முன்னால் கடந்த செவ்வாய்க்கிழமை ...

மேலும்..

உயர் கல்விக்காக கனடாவுக்குச் சென்ற இலங்கை இளைஞர் வாகன விபத்தில் பலி!

உயர் கல்வியைத் தொடருவதற்காக கனடா சென்ற இலங்கை  இளைஞர்  ஒருவர் வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார். கடந்த ஜூன் மாதம் 22 ஆம் திகதி மொரட்டுவை பல்கலைக்கழகத்தில் இலத்திரனியல் பொறியியலில் பட்டம் பெற்ற இவர், கலாநிதி பட்டம் பெறுவதற்காகச் சென்றபோதே இந்த அனர்த்தத்துக்கு முகங்கொடுத்துள்ளார். 28 ...

மேலும்..

‘அஸ்வெசும’ திட்ட இறுதி இலக்கு: வறுமை இல்லாத நாடு அல்லவாம் ; அபிவிருத்தி அடைந்த நாடாகுவதாம்! சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல்

நலன்புரி அரசிலிருந்து தொழில் முனைவோர் அரசை நோக்கி இலங்கையைக் கொண்டு செல்வதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நோக்கம் என்றும் 'அஸ்வெசும' வேலைத்திட்டத்தின் இறுதி இலக்கு வலுவான தொழில்முனைவோர் வலையமைப்பை உருவாக்குவதே என சமூக வலுவூட்டல் இராஜாங்க  அமைச்சர் அனுப பஸ்குவல் தெரிவித்துள்ளார். 'அஸ்வெசும' ...

மேலும்..

வைத்தியசாலைகளின் மரணங்களுக்கு மயக்க மருந்துகள் காரணம் அல்லவாம்! சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தகவல்

வைத்தியசாலைகளில் அண்மைக்காலமாக பதிவாகும் மரணங்கள் தொடர்பில் வௌ;வேறு தரப்பினராலும் , பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. இவ்வாறான மரணங்களுக்கு சத்திர சிகிச்சையின் போது பயன்படுத்தப்படும் மயக்க மருந்துகளே காரணம் எனக் கூறப்படுவது உண்மையல்ல என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன ...

மேலும்..