சிறப்புச் செய்திகள்

சர்வதேச கண்காணிப்புடன் கூடிய அகழ்வுப்பணி ஊடாகவே உண்மையை வெளிக்கொணரமுடியும்! அடித்துக்கூறுகின்றார் செல்வராசா கஜேந்திரன்

கொக்குத்தொடுவாய் பகுதியில் மேற்கொள்ளப்படவுள்ள அகழ்வுப்பணிகளை சர்வதேச கண்காணிப்புடன் முன்னெடுப்பதன் ஊடாக மாத்திரமே உண்மையை வெளிக்கொண்டுவரமுடியுமென தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன்  தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் தண்ணீர் குழாய்களைப் பொருத்துவதற்காகக் கடந்த மாதம் 29 ஆம் ...

மேலும்..

சக்சுரினை மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்போவதில்லையாம்! தாய்லாந்து அமைச்சர் கூறுகின்றார்

சக்சுரின் யானையை  மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்போவதில்லை என தாய்லாந்து தெரிவித்துள்ளது. சக்சுரினிற்கு தற்போது தாய்லாந்து மன்னர் ஆதரவளிப்பதால் அதனை இலங்கைக்கு மீண்டும் திருப்பிஅனுப்பப்போவதில்லை என தாய்லாந்தின் இயற்கை வள சூழல் விவகார அமைச்சர் பீபிஎஸ் ஊடகத்துக்குத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு திருப்பிஅனுப்புவது குறித்த கேள்விக்கே ...

மேலும்..

உள்ளகக் கடன் மறுசீரமைப்பு செயல் திட்டத்தின் முன்மொழிவுகள் சர்வதேச கடன்மறுசீரமைப்பில் எதிர்மறைதாக்கத்தை ஏற்படுத்தாது! மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் கருத்து

சர்வதேச கடன்மறுசீரமைப்பு செயன்முறையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தாத வகையிலேயே உள்ளகக் கடன்மறுசீரமைப்பு செயற்திட்டம் தயாரிக்கப்பட்டிருப்பதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். அரசாங்கத்தால் கடந்த வாரம் முன்மொழியப்பட்டுள்ள உள்ளகக் கடன்மறுசீரமைப்பு செயற்திட்டம் தொடர்பில் பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டுவரும் நிலையிலேயே ...

மேலும்..

தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்து மனிதப் படுகொலையில் அரசு ஈடுபடுகிறது! வைத்தியர் காவிந்த ஜயவர்தன விசனம்

தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்து மனித படுகொலை செயற்பாட்டில் அரசாங்கம் ஈடுபடுகிறது. நாட்டில் சுகாதாரத்துறை முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. சுகாதாரத்துறை அமைச்சரின் கருத்துக்கள் பொறுப்பற்றனவாக உள்ளன என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் காவிந்த ஜயவர்தன தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற 'நீதிமன்றங்களில் ...

மேலும்..

மேன்முறையீட்டு நீதிமன்றங்களை வடக்குக் கிழக்கில் அமைக்குக! சாள்ஸ் நிர்மலநாதன் வலியுறுத்து

வடக்கு மற்றும் கிழக்கு  மாகாணங்களில் இருந்து மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு வரும் குற்றவியல் வழக்குகளை  தமிழ் நீதியரசர்களிடம்  ஒப்படைக்க வேண்டும். அல்லது  வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மேன்முறையீட்டு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் ...

மேலும்..

நிந்தவூர் பொலிஸ் நிலையம் புதிய இடத்தில் திறந்து வைப்பு

  பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேசத்தில் இடமாற்றப்பட்ட புதிய பொலிஸ் நிலையம் இன்று (புதன்கிழமை) வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. கடந்த 2021.11.29 அன்று உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டிருந்த நிந்தவூர் பொலிஸ் நிலையம் தற்போது கல்முனை அக்கரைப்பற்று பிரதான வீதி அமைந்துள்ள ...

மேலும்..

இராகலை கீழ்பிரிவில் 20 வீடுகளைக்கொண்ட நெடுங்குடியிருப்பில் தீ; 75 பேர் வரை நிர்க்கதி!

  (க.கிஷாந்தன்) இராகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இராகலை கீழ்பிரிவில் 20 வீடுகளைக்கொண்ட நெடுங்குடியிருப்பில் இன்று (புதன்கிழமை) காலை 10.30 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 வீடுகள் முற்றாக எரிந்து தீக்கிரையாகின. இந்த வீடுகளில் குடியிருந்த 20 குடும்பங்களை சேர்ந்த 75 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறித்த ...

மேலும்..

கேப்பாப்பிலவில் இராணுவத்தினர் கையகப்படுத்தியுள்ள காணிகளை விடுவிக்க வலியுறுத்தி மக்கள் ஆர்ப்பாட்டம்!

  விஜயரத்தினம் சரவணன் முல்லைத்தீவு - கேப்பாப்பிலவில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை விடுவிக்க வலியுறுத்தி காணிகளுக்குரிய பொதுமக்கள் இன்று (புதன்கிழமை) ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டம் கேப்பாப்பிலவு இராணுவ முகாமின் ஆரம்ப இடத்திலிருந்து ஆரம்பமாகி, பேரணியாக கேப்பாப்பிலவு இராணுவ முகாமின் பிரதான நுழைவாயிலை வந்தடைந்தது. தொடர்ந்து ...

மேலும்..

தரமற்ற மருந்துப்பொருட்களின் இறக்குமதி குறித்து அவதானம் செலுத்த வேண்டும் : எதிர்க்கட்சித் தலைவர்!

நாட்டில் விற்பனைக்காக இருக்கும் மருந்துப் பொருட்களின் உற்பத்திப் பாதுகாப்பு மற்றும் தரம் தொடர்புடைய தரநிலைகளை பூர்த்தி செய்வதை உறுதி செய்ய வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ...

மேலும்..

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு endoscopy கருவி. ஒன்று அவசரமாகத் தேவை! வடக்கு சுகாதார மறுமலர்ச்சிக்கு இது பேருதவியாகும்

  தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு உணவு செமிபாடு தொடர்பான சிக்கல்களைக் கண்டறிவதற்கு வாய்மூலம் குழாய் விட்டுப் பரிசோதித்தல் (endoscopy ) கருவி அவசரமாகத் தேவைப்படுகின்றது. சமூக அமைப்புக்கள்> சேவை நோக்குக் கொண்ட கொடையாளர்கள், புலம்பெயர் உறவுகள், புலம்பெயர் அமைப்புக்கள் போன்றவர்களிடம் இருந்து தெல்லிப்பழை ஆதாரவைத்தியசாலை ...

மேலும்..

புனித மக்காவிற்கு சென்ற இருவர் உயிரிழப்பு!

மக்கா யாத்திரைக்குச் சென்ற இரு இலங்கையர்கள் உயிரிழந்ததாக முஸ்லிம் சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி ஒருவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதோடு, மற்றையவர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும்..

இடைநிறுத்தப்பட்ட திட்டங்களை மீண்டும் செப்டம்பரில் தொடங்கும் – பந்துல நம்பிக்கை

தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ள பெருமளவிலான வேலைத்திட்டங்கள் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என நம்புவதாக அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று காலை இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். கடந்த ...

மேலும்..

ருவிட்டருக்கு போட்டியாக புதிய செயலி: மெட்டா நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு

முகப்புத்தகம் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றின் தாய் நிறுவனமாக மெட்டா என்ற புதிய மைக்ரோ பிளாக்கிங் செயலியை அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த செயலி இன்று(வியாழக்கிழமை) பயனர்களின் பாவனைக்கு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்ஸ்டாகிராம் பயனர்கள், இந்தச் செயலியிலும் தங்களுக்குப் தேவையான கணக்குகளை பின் தொடரலாம் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, ...

மேலும்..

ரணில் முன்பு போன்று இல்லையாம் பகிரங்கமாகச் சாடிய பொன்சேகா!

அரசாங்கத்துடன் கைகோர்க்கப் போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மீண்டும் வலியுறுத்தியுள்ளார். மேலும் கூறுகையில்,இலங்கை குழப்பமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. திருடர்கள் நடத்தும் எந்த முயற்சிக்கும் உதவப் போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார். ரணில் விக்ரமசிங்க, தங்களுடன் இணைந்து பணியாற்றிய போது ...

மேலும்..

தரிந்து உடுவரகெதரவை குற்றப்புலனாய்வுக்கு அழைத்தமை ஊடகங்களை அடக்கும் மற்றுமொரு நடவடிக்கையாகுமாம்!  ஊடக சேவை தொழிற்சங்க சம்மேளனம் அறிக்கை

ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதரவை குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு அழைத்து விசாரணை மேற்கொண்டிருக்கின்றமை ஊடகங்களை அடக்கும் மற்றுமொரு நடடிக்கையாகும் என ஊடக சேவை தொழிற்சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது. ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதர செவ்வாய்க்கிழமை கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்தமை தொடர்பாக  ஊடக சேவை தொழிற்சங்க சம்மேளனம் ...

மேலும்..