சிறப்புச் செய்திகள்

டயகமவில் புதிய மதுபான சாலையை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குக! மாவட்ட செயலாளருக்கு இராதாகிருஸ்ணன் கடிதம்

மலையக பகுதிகளில் புதிய மதுபான சாலைகளை திறந்து தொடர்ந்தும் இந்த மக்களை மயக்கத்தில் வைத்திருப்பதே அரசாங்கத்தினதும் அவர்களுக்கு துணைபோகின்ற அரசியல்வாதிகளதும் திட்டமாக இருக்கின்றது. இந்த மக்களை பொருளாதார ரீதியாக வலுவிலக்கச் செய்வதன் மூலமாக அவர்களின் எதிர்கால சந்ததியை தொடர்ந்தும் அடிமைத்தனமாக வைத்திருக்கவே ...

மேலும்..

சிறப்புமிக்க கதிர்காமத்தில் ஜனாதிபதி ரணில் வழிபாடு!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க திங்கட்கிழமை பிற்பகல் வரலாற்று சிறப்புமிக்க கதிர்காமம் புண்ணிய தலத்துக்குச் சென்று சமய வழிபாடுகளில் ஈடுபட்டார். கிரிவெஹெர விகாராதிபதி வண. கொபவக்க தம்மிந்த நாயக்க தேரரைச் சந்தித்த ஜனாதிபதி, நலம் விசாரித்தன் பின்னர் சிறு உரையாடலிலும் ஈடுபட்டார். பின்னர் ஜனாதிபதி சமய ...

மேலும்..

கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய ‘பொத்துவில களுவா’ பொத்துவிலில் கைது!

பல வீடுகளில் இடம்பெற்ற  கொள்ளைச்  சம்பவங்களுடன் தொடர்புடைய 'பொத்துவில களுவா' களுத்துறை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால்  கைது செய்யப்பட்டுள்ளார். பொத்துவில களுவா என அழைக்கப்படும் நபர் பல வீடுகளில் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட 22 வயதுடையவர். வெசாக் வாரத்தில் சந்தேக நபர் பல ...

மேலும்..

யாழ். மானிப்பாயில் வெடிபொருள் மீட்பு!

யாழ்ப்பாணம், மானிப்பாய் பொலிஸ் பிரிவு உயரப்புலம், அடைக்கலநாயகி தெருவில் உள்ள காணியில் இருந்து செவ்வாய்க்கிழமை 12 மணி அளவில் வெடிபொருள்கள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த காணியின் உரிமையாளர் தனது காணியில் குழி வெட்டிய போது ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் இருந்ததை அவதானித்தார். இந்நிலையில் அவர் ...

மேலும்..

பலாமரம் முறிந்து பாடசாலை கட்டடத்தில் வீழ்ந்தது 8 மாணவர்கள் படு காயம் ; கேகாலையில் சம்பவம்!

கேகாலை எக்கிரியாகலை கனிஷ்ட கல்லூரியின் மைதானத்தில் உள்ள பலா மரமொன்று பலத்த காற்றுக் காரணமாக வகுப்பறைக்  கட்டடம் ஒன்றின் மீது வீழ்ந்ததில் 8  மாணவர்கள் காயமடைந்து கேகாலை பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் எனப் பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது. வகுப்பறைக் கட்டடத்தின் ...

மேலும்..

இலங்கைக்கான விமான சேவையை மீண்டும் ஆரம்பித்தது ‘ஏர் சைனா’!

உலகம் முழுவதும் பரவிய கொரோனா தொற்றுக்குப் பிறகு சீன விமான நிறுவனமான 'ஏர் சைனா' மீண்டும் இலங்கைக்கான விமான சேவையை ஆரம்பித்துள்ளது. குறித்த நிறுவனத்தின் முதல் விமானம் திங்கட்கிழமை இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை  வந்தடைந்தது. கொரோனா தொற்று காரணமாக சுமார் மூன்று வருடங்களுக்கு ...

மேலும்..

புத்தளத்தில் வீசிய பலத்த காற்றால் நகரசபை கடைத் தொகுதி சேதம்!

பலத்த காற்று வீசியதால் புத்தளம் நகரசபை கடைத் தொகுதியின் கூரைத் தகடுகள் அள்ளுண்டு சென்றுள்ளன. புத்தளம் மாவட்டத்தில் காற்றின் வேகம் அதிகரித்துக் காணப்படுவதால் பாதுகாப்பாக செயற்படுமாறு புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் பலத்த காற்று வீசியதால் புத்தளம் ...

மேலும்..

‘ஹரக்கட்டா’வின் ஆலோசனையிலேயே கல்கிஸை நீதிமன்றத்தில் ஒருவரைச் சுட்டுக்கொல்ல முயற்சி!  குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அறிவிப்பு

போதைப்பெருள் கடத்தல்காரரான 'ஹரக்கட்டா'வின் ஆலோசனையின் பேரிலேயே  அண்மையில்  கல்கிஸை  நீதிவான்  நீதிமன்றத்தில் நபர் ஒருவரை சுட்டுக் கொல்ல முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக தெரிய வந்துள்ளது. குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பொது முறைப்பாட்டு பிரிவு அதிகாரிகள் இதனைக் கண்டுபிடித்துள்ளனர். துப்பாக்கிச் சூடு நடத்தியவர் மற்றும் அவரை வழிநடத்தியவரும் கைது ...

மேலும்..

கந்தளாயில் தொலைபேசி கோபுரம் வீழ்ந்து தபாலகத்துக்குச் சேதம்!

திருகோணமலை கந்தளாய் பகுதியில் உள்ள தொலைபேசி கோபுரம் வீழ்ந்ததில் தபாலக கட்டடம் சேதமடைந்துள்ளது. இந்தச் சம்பவம் செவ்வாய்க்கிழமை இடம் பெற்றுள்ளது. பலத்த காற்று வீசியதன் காரணமாக தொலைபேசி கோபுரம் வீழ்ந்ததில் அருகில் உள்ள தபாலகக் கட்டடம் சேதமடைந்துள்ளது. தபாலகக் கட்டடத்துக்கு மேலால் இக் ...

மேலும்..

இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் தலைவராக துமிந்த ஹூலன்கமுவ: நாட்டின் மறுசீரமைப்புக்கு ஒத்துழைப்பு வழங்க ஜப்பான் உத்தரவாதம்!

இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் (சிலோன் சேம்பர் ஒஃப் கொமர்ஸ்) புதிய தலைவராக துமிந்த ஹூலன்கமுவ தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் 184 ஆவது வருடாந்தப் பொதுக்கூட்டம் கடந்த ஜுன் மாதம் 30 ஆம் திகதி நடைபெற்றது. இக்கூட்டத்திலேயே துமிந்த ஹூலன்கமுவ புதிய தலைவராகத் ...

மேலும்..

அஸ்வெசும நலன்புரி திட்ட முரண்பாடு: தீர்வின்றேல் நீதிமன்றத்தை நாடுவோம்! ஜகத் குமார சுமித்ராராச்சி எச்சரிக்கை

அஸ்வெசும நலன்புரி திட்ட விவகாரத்தில் தோற்றம் பெற்றுள்ள முரண்பாட்டுக்கு ஒருவார காலத்துக்குள் தீர்வு வழங்குவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வாக்குறுதி வழங்கியுள்ளார். தீர்வின்றேல் நீதிமன்றத்தை நாடுவோம் என ஆளும் தரப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார சுமித்ராராச்சி தெரிவித்தார். தலவத்துகொட பகுதியில் இடம்பெற்ற ...

மேலும்..

முன்னாள் போராளிகள் கௌரவத்துக்கு உரியவர்கள் : அருட்தந்தை மா.சக்திவேல்!

முன்னாள் போராளிகள், அரசியல் கைதிகள் கௌரவத்துக்கு உரியவர்கள் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன் இறுதி யுத்த ...

மேலும்..

மதுபானசாலைக்கு அனுமதி வழங்க வேண்டாம் : மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டம்!

மன்னார் மாவட்டத்தில் நகரப்பகுதிக்குள் எந்த ஒரு மதுபானசாலைக்கும் அனுமதி வழங்க வேண்டாம் என கோரிக்கை விடுத்து இன்று மன்னார் நகர் பகுதியில் அடையாள கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. பிரஜைகள் குழு, மகளீர் அமைப்புக்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள் இணைந்தே இந்தப் போராட்டத்தை ...

மேலும்..

குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனாருக்கு பொங்கல்விழா அனைவரையும் கலந்துகொள்ளுமாறு ரவிகரன் அழைப்பு

  விஜயரத்தினம் சரவணன் முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலை, ஆதிசிவன் ஐயனாருக்கு இம்மாதம் 14 ஆம் திகதி பொங்கல்வழிபாடுகள் மேற்கொள்ளவுள்ளதாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். இந்த பொங்கல் வழிபாடுகளில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறும் ரவிகரன் அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் ...

மேலும்..

ஆந்திரா மாநில முதல்வரை சந்தித்தார் கிழக்கு ஆளுநர்!

(அபு அலா) ஆந்திர மாநில முதலமைச்சர் ஜகன்மோகன் ரெட்டியை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் சந்தித்து இருநாடுகளுக்கும் இடையிலான நட்புறவை வலுப்படுத்துவது தொடர்பாகவும், கரும்பு மற்றும் மிளகாய் விவசாய, மருந்துகள் உற்பத்தி நிறுவனம் அமைப்பது குறித்தும் கலந்துரையாடலை மேற்கொண்டனர். பி.கியு.ஐ ஆடைகள் பூங்கா ...

மேலும்..