சிறப்புச் செய்திகள்

மருந்துத் தட்டுப்பாடு ஏற்படாதிருக்க புதிய வேலைத்திட்டம் – சுகாதார அமைச்சர் கெஹெலிய

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அறிவுரைக்கமைய நாட்டிற்குள் மருத்துப் பொருட்களுக்கான தற்பாடு ஏற்படாமல் இருப்பதற்கு அவசியமான நடவடிக்கைகளை  சுகாதார அமைச்சு  தற்போது முன்னெடுத்து வருகின்றதென  சுகாதார  அமைச்சர்   கெஹெலிய  ரம்புக்வெல்ல  தெரிவித்தார். மருந்துப் பொருட்களின்  பெறுகை  செயற்பாடுகளை  செயல்திறன் மிக்கதாக  முன்னெடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும், ...

மேலும்..

பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – ஜீவன் தொண்டமான்

பெருந்தோட்ட தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டும் வகையிலும், அவர்களுக்கான தொழில் உரிமைகளை வழங்குவதற்கு மறுக்கும் வகையிலும் செயற்படும் பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் ...

மேலும்..

எனது மகனை என்னிடமிருந்து பிரிக்கவேண்டாம் – அவுஸ்திரேலியாவை உலுக்கும் முள்ளிவாய்க்காலில் கணவனை இழந்த தமிழ் பெண்ணின் கதறல்

இலங்கையை சேர்ந்த டிக்ஸ்டன் அருள்ரூபனை அவரது தயாரிடமிருந்து பிரிக்கவேண்டாம் என அவுஸ்திரேலியாவின் உள்துறை அமைச்சருக்கு அவுஸ்திரேலியாவின் தமிழ் ஏதிலிகள் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது. டிக்ஸ்டனின் 13 வயதில் அவரது தந்தை முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் கொல்லப்பட்டார். டிக்ஸ்டனும்  அவரது தாயார் பேத்தியார் ஆகியோர் இலங்கையின் மிகவும் ...

மேலும்..

அரசாங்கத்தின் செயற்பாடுகளால் நாட்டு மக்களுக்கு குப்பை மட்டுமே மிஞ்சும் : பேராயர் மெல்கம் ரஞ்சித்!

தற்போதைய ஆட்சியாளர்கள் நாட்டை வீழ்ச்சியடையச் செய்து வருவதாக கொழும்பு பேராயர் கார்த்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். இவ்வாறானதொரு நிலையில் 2048 ல் அபிவிருத்தி அடைவோம் என்ற பொய்யான கருத்தை வெளியிட கூடாது என்றும் கூறியுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “பொய்யான ...

மேலும்..

முத்துராஜாவுக்கு சிகிச்சைகள் ஆரம்பம்!

தாய்லாந்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட ‘முத்துராஜா’ யானைக்கு சிகிச்சையளிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) விசேட விமானத்தின் ஊடாக ‘முத்துராஜா’ தாய்லாந்துக்கு அழைத்து செல்லப்பட்டது. முத்துராஜாவின் காலில் ஏற்பட்டுள்ள காயத்துக்கு சிகிச்சையளிக்கும் நடவடிக்கைகளும் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பரிசோதனைகளுக்கு தேவையான இரத்த ...

மேலும்..

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீள தேசிய கட்டுமான விருது!

கட்டுமானத் துறையில் சிறந்து விளங்குபவர்களை அங்கீகரிக்கும் கட்டுமானத் துறையில் தேசிய விழாவான தேசிய கட்டுமான விருதுகள் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.  நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் அறிவுறுத்தலின் பேரில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது நகர அபிவிருத்தி ...

மேலும்..

அரசு என்ற ரீதியில் வெட்கமடைகிறோம் பந்துல குணவர்தன தெரிவிப்பு

மே 09 சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தரப்பினர்களுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை. விசாரணைகளை மேற்கொள்ள ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஒன்று அமைக்காமல் இருப்பதையிட்டு அரசாங்கம் என்ற ரீதியில் வெட்கமடைகிறோம் என போக்குவரத்து, ஊடகத்துறை மற்றும் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். கெஸ்பேவ ...

மேலும்..

சிவசேனையின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தனை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தித்தார்

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியும், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன சிவசேனையின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தனை சந்தித்து கலந்துரையாடினார். யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை நிறைவு செய்துவிட்டு திரும்பும்போது தென்மராட்சி மறவன்புலவுவில் உள்ள சிவசேனையின் தலைவரது இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணியளவில் குறித்த சந்திப்பு ...

மேலும்..

புத்தகத்தில் இல்லாத பல நீதிமன்றில் வெளிப்படும் வழக்குதாக்கல் செய்யுமாறு சவேந்திரவுக்கு சவால்!

அரகலய – அமெரிக்கா தொடர்பில் நான் குறிப்பிட்ட கருத்துக்கு எதிராக சவேந்திர சில்வா  நீதிமன்றம் சென்றால் புத்தகத்தில் இல்லாத பல விடயங்களை ஆதாரத்துடன் நீதிமன்றத்தில் வெளிப்படுத்துவேன். முடிந்தால் அவர் வழக்கு தாக்கல் செய்யட்டும் என என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற ...

மேலும்..

கடன் மறுசீரமைப்புக் குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்துக ; இல்லையேல் நிதிஸ்திரத்தன்மையற்ற நிலைமை உருவாகும்!  கலாநிதி எம்.கணேசமூர்த்தி தெரிவிப்பு

தேசிய கடன் மறுசீரமைப்பு தொடர்பில் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும். இல்லையேல் கடன் மறுசீரமைப்பு மக்களிடையே வீண் குழப்பத்தை தோற்றுவித்து அது நாட்டின் நிதி ஸ்திரத்தன்மையற்ற நிலைமையை ஏற்படுத்தும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை  விரிவுரையாளர் கலாநிதி ...

மேலும்..

மாலி நோக்கி புறப்பட்ட இலங்கை இராணுவ வீரர்கள்

ஐக்கியநாடுகள் அமைதிப்படையுடன் இணைந்துகொள்வதற்காக  நன்கு பயிற்றவிக்கப்பட்ட இலங்கை இராணுவ வீரர்கள் நேற்று (ஜூலை 01) மாலை மாலி நோக்கி புறப்பட்டனர் . 20 அதிகாரிகள் மற்றும் 150 இதர அணிகள் அடங்கிய இலங்கை இராணுவத்தினர் மாலிக்கு சென்றுள்ளனர்.   5 வது இலங்கை சின்ஹா ரெஜிமென்ட் (SLSR), ...

மேலும்..

டயகம நகரில் புதிதாக முளைக்கும் மதுபானசாலை ; பொங்கியெழுந்த பொதுமக்கள்!

டயகம நகரில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் மதுபானசாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து 16 தோட்டங்களை சேர்ந்த 500க்கும் அதிகமானோர் வீதிக்கிறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். டயகம நகரில் மூன்று மதுபானசாலைகள் இயங்கிக்கொண்டிருக்கும் இந்த வேளையில் நான்காவதாக ஒரு மதுபானசாலை ஆரம்பிக்கப்படுவது அநாவசியமான ஒன்று என்றும் இது, பிரதேச ...

மேலும்..

கூட்டமைப்பு விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் அம்பு – சரத் வீரசேகர

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் நோக்கத்திற்கேற்பவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்றும் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர மீண்டும் குற்றச்சாட்டு ஒன்றினை முன்வைத்துள்ளார். கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் முன்னிலையிலேயே பதவிப்பிரமாணம் செய்தனர் ...

மேலும்..

தமிழர்களின் பூர்வீகக் கிராமத்தில் முளைத்த புதிய விகாரை இன்று திறந்துவைப்பு !

வவுனியா வடக்கில் தமிழர்களின் பூர்வீகக் கிராமமான கச்சல் சமளங்குளத்தில் நிர்மாணிக்கப்பட்ட புதிய விகாரை இன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது. தொல்பொருள் பகுதி என்ற பெயரில் தொல்பொருள் திணைக்களத்தினால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் இந்த விகாரையின் நிர்மாணப்பணிகள் இடம்பெற்றது. 1980 ஆம் ஆண்டுவரை வாழ்ந்து போரின் காரணமாக தமிழர்கள் இடம்பெயர்ந்த ...

மேலும்..

பள்ளமடு பகுதியில் ஒரு கோடி ரூபாயிக்கும் அதிகமான பெறுமதியுடைய கேரள கஞ்சாவுடன் இருவர் கைது.

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பள்ளமடு வீதியில் வைத்து நேற்று சனிக்கிழமை மாலை 85 கிலோ கேரள கஞ்சா பொதிகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலைத் தொடர்ந்து அப்பகுதிக்குச் சென்ற போது ஒரு கோடி ரூபாவுக்கும் ...

மேலும்..