சிறப்புச் செய்திகள்

உயர்ஸ்தானிகர்கள் மூவரும் தூதுவர்கள் ஏழு பேரும் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ்களைக் கையளித்தனர்!

புதிதாக நியமிக்கப்பட்ட உயர்ஸ்தானிகர்கள் மூவரும்  தூதுவர்களும்  ஏழு பேரும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தங்களது நற்சான்றுப் பத்திரங்களை கையளித்தனர். கண்டி ஜனாதிபதி மாளிகையில் இன்று (30) இந்த நிகழ்வு இடம்பெற்றது. புதிதாக நியமிக்கப்பட்ட உயர்ஸ்தானிகர்கள் திரினிடாட் மற்றும் டொபாகோ குடியரசு, உகண்டா குடியரசு ...

மேலும்..

கனடாவின் வாக்குவாங்கி அரசியல் – இந்தியாவின் கருத்திற்கு இலங்கை ஆதரவு

கனடா வாக்குவங்கி அரசியலை முன்னெடுக்கின்றது என்ற இந்தியாவின் கருத்தினை இலங்கை ஆதரித்துள்ளது. காலிஸ்தான் விவகாரத்தை கனடா வாக்குவாங்கி அரசியலை அடிப்படையாக வைத்து முன்னெடுக்கின்றது என இந்திய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். கனடாவில் சமீபத்தில் காலிஸ்தான் ஆதரவாளர்களின் செயற்பாடுகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் சமூக ஊடகமொன்றில் வெளியிட்டுள்ள ...

மேலும்..

அலுவலகத்திலிருந்து தனது உடைமைகளை அகற்றியுள்ள பொலிஸ்மா அதிபர் விக்ரமரட்ன

  சீ.டி.விக்ரமரட்ன ஓய்வு பெறுவதால் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் இருந்த அனைத்து உடைமைகளையும் அவர் அகற்றியுள்ளார் என பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 26 ஆம் திகதி தனது பதவிக்காலம் பூர்த்தியானதன் பின்னர் அவர் இவ்வாறு, அலுவலகத்தை காலி செய்துள்ளார் எனப் ...

மேலும்..

முச்சக்கரவண்டி விபத்தில் பாடசாலை மாணவர்கள் காயம்!

பண்டாரவளை – கொஸ்லந்த பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவர்கள் காயமடைந்துள்ளனர். குறித்த விபத்து இன்று (வெள்ளிக்கிழமை) காலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்தவகையில் கொஸ்லந்த பகுதியில் பயணித்த முச்சக்கரவண்டி 20 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 4 மாணவர்கள் காயமடைந்துள்ள நிலையில் கொஸ்லந்த ...

மேலும்..

மடு திருவிழாவுக்கு வருகை தரும் பக்தர்கள் பொழுதுபோக்குவதை தவிர்த்து வழிபாடுகளில் கலந்துகொள்ளுங்கள் – மன்னார் மறைமாவட்ட ஆயர் கோரிக்கை

மன்னார், மடு ஆலயத்தின் ஆடி திருவிழாவுக்கு வருகை தரும் பக்தர்கள், ஆலயத்தில் வழிபாடுகள் நடைபெறுகின்றபோது வீடுகள் அல்லது கூடாரங்களில் இருந்து பொழுதுபோக்குவதை தவிர்த்து, வழிபாடுகளில் கலந்துகொண்டு அன்னையின் ஆசியை பெற்றுக்கொள்ளும்படி மன்னார் ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை கோரிக்கை விடுத்துள்ளார். மன்னார், ...

மேலும்..

என் மீது முன்வைக்கப்படுகின்ற அனைத்து குற்றச்சாட்டுக்களும் அடிப்படையற்றைவை – தென்கிழக்கு பல்கலை உபவேந்தர் ரமீஸ் அபூபக்கர் விளக்கம்

என் மீது முன்வைக்கப்பட்டு வருகின்ற அனைத்துக் குற்றச் சாட்டுக்களும் அடிப்படையற்றவையும் அபாண்டமானவையும் ஆகும். இந்தப் பல்கலைக்கழகத்தின் மீதும் வளர்ச்சியின் மீதும் என்மீதும் காழ்ப்புணர்ச்சி கொண்ட ஒரு சிலரின் நடவடிக்கை இது என்பதை மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும் என்று தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் ...

மேலும்..

தேசிய கடன் மறுசீரமைப்பு விவகாரம் நந்தலாளின் கருத்து முரண்பாடானது  நாலக கொடஹேவா சுட்டிக்காட்டு

தேசிய கடன் மறுசீரமைப்பு விவகாரத்தில் மக்களிடம்  உண்மையை குறிப்பிடாமல்  தன்னிச்சையாக செயற்பட அரசாங்கம் முயற்சிக்கிறது. தேசிய கடன்களை மறுசீரமைத்தால் வங்கி கட்டமைப்பு பாதிக்கப்படும் என மத்திய வங்கியின் ஆளுநர் விசேட அமைச்சரவை கூட்டத்தில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் மக்களிடம் எவ்வித பாதிப்பும் ஏற்படாது ...

மேலும்..

இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்தார் செந்தில் தொண்டமான்

கிழக்கு மாகாணஆளுநர் செந்தில்தொண்டமான் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேச்சுகளை மேற்கொண்டுள்ளார். இலங்கையின் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானை சந்தித்தமை சிறப்பான விடயம் எங்களின் அபிவிருத்தி கூட்டாண்மை குறித்து ஆராய்ந்தோம்,எதிர்கால ஒத்துழைப்பிற்கான வழிவகைகள் தொடர்பில் ஆராய்ந்தோம் என இந்திய வெளிவிவகார ...

மேலும்..

கலைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களை மீள கூட்டுவது மக்களின் இறையாண்மைக்குப் பாதிப்புக்களை ஏற்படுத்தும்! தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆலோசனை

கலைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களை மீள கூட்டுகின்ற அதிகாரம், மக்களின் இறையாண்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்றங்களை மீள கூட்டும் அதிகாரத்தை விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சருக்கு வழங்கும் சட்டமூலம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே ...

மேலும்..

மக்கள் எவரையும் கைவிடாத வகையில் அஸ்வெசுமவை நடைமுறைப்படுத்துக!  ஜனாதிபதி ஆலோசனை

அஸ்வெசும சமூக நலன்புரி திட்டத்தை எவரையும் கைவிடாத வகையில் நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார். அதற்கமைய தற்போது பதிவுசெய்ய முடியாதவர்களுக்கு ஓகஸ்ட் மாதத்தில் மீண்டும் வாய்ப்பளிப்பதற்கும், எழுத்துமூல மேன்முறையீடு மற்றும் முறைப்பாடுகளை சமர்ப்பிக்க ஜூலை 10ஆம் திகதி வரை கால ...

மேலும்..

13 ஐ முழுமையாக அமுல்படுத்தினால் தமிழர் பிரச்சினைக்கு தீர்வுகாணலாம்! சில தமிழ் தலைவர்களே முட்டுக்கட்டை என்கிறார் டக்ளஸ்

தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வுகள் அரசியல் யாப்பில் உள்ளன. 13 ஆம் அரசமைப்பு திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதன் ஊடாக அதனை பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண முடியும் எனத் தெரிவித்த கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,  இதற்கான நடவடிக்கைகளை ஜனாதிபதி ரணில் ...

மேலும்..

அரசாங்கத்தின் நலன்புரி உதவித் திட்ட பதிவுகளில் முறைகேடு : கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்துக்கு முன்பாக மக்கள் ஆர்ப்பாட்டம்

அரசாங்கத்தின் நலன்புரித் உதவித் திட்ட பதிவுகளில் முறைகேடு எனவும், தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளில் முறைகேடுகள் எனவும் தெரிவித்து  கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகம் முன் மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்று  இன்று வியாழக்கிழமை காலை முன்னெடுக்கப்பட்டது. இன்றைய தினம் காலை ஓட்டமாவடி கொழும்பு வீதியில் ...

மேலும்..

வீட்டுக்கு அருகில் குப்பை கொட்டுபவர்களுக்கு சூனியம் வைத்த நபரால் பரபரப்பு

தனது வீட்டுக்கு அருகில் குப்பை கொட்டுபவர்கள் விபத்தில் சிக்க கூடியவாறு தான் சூனியம் வைத்துள்ளதாக அறிவிப்பை தனது வீட்டின் முன்னால் காட்சிப்படுத்தி உள்ளார். யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடியைச் சேர்ந்த நபர் ஒருவரே அவ்வாறு காட்சிப்படுத்தி உள்ளார். குறித்த நபரின் வீட்டு வீதியோரமாக பலரும் குப்பைகளை ...

மேலும்..

கிளிநொச்சியில் துப்பாக்கிச் சூடு ; சந்தேக நபர்கள் இருவர் கைது

கிளிநொச்சியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்ட குற்ற புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து இரண்டு சந்தேக நபர்களுடன் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துக்கு பாவிக்கப்பட்ட இடியன் துப்பாக்கியும், மோட்டார் சைக்கிளும் ...

மேலும்..

வரி செலுத்த வேண்டிய நபர்களை உள்ளடக்கி வருமானத்தை அதிகரிக்க அரசாங்கம் திட்டம்

புதிய வரிகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் மக்கள் மீது சுமை சுமத்தப்பட மாட்டாது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். வரி வலையமைப்பை விஸ்தரித்து, வரி செலுத்த வேண்டிய நபர்களை உள்ளடக்கி வருமானத்தை அதிகரிப்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். ஜனாதிபதி ...

மேலும்..