சிறப்புச் செய்திகள்

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தை அவுஸ்ரேலியாவுக்கு வழங்க தீர்மானிக்கவில்லை – மின்சாரத்துறை மற்றும் வலுசக்தி அமைச்சு

இலங்கை மின்சார சபை இன்றளவில் அரச வங்கிகளுக்கு 516 பில்லியன் ரூபா கடனாளியாக உள்ளது. ஆகவே மின்சார சபையை மறுசீரமைப்பதை தவிர மாற்று வழியேதும் கிடையாது. நுரைச்சோலை அனல் மின் நிலையத்தை அவுஸ்ரேலிய நிறுவனத்தக்கு வழங்க தீர்மானித்துள்ளதாக தொழிற்சங்கங்கள் குறிப்பிடும் விடயம் அடிப்படையற்றது. நீர் ...

மேலும்..

50 ரூபா சம்பள அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த நவீன் ஆளுநராக நியமிக்கப்பட்டமை முறையற்றது – இராதாகிருஸ்ணன்

பெருந்தோட்ட மக்களுக்கு 50 ரூபா சம்பளத்தை அதிகரித்த இடமளிக்காத நவீன் திஸாநாயக்க சப்ரகமுவ மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளமை முறையற்றதாகும். 200 வருட கால வரலாற்று பின்னணியை மலையக மக்கள் பூர்த்தி செய்துள்ள போதும் துயரங்களில் இருந்து விமோசனம் கிடைக்கவில்லை என ஐக்கிய ...

மேலும்..

கோட்டாவின் ஆட்சியில் நாடு 9 ஆண்டுகள் பின்நோக்கிச் சென்றுள்ளது – ஹர்ஷ டி சில்வா

கோட்டாபய ராஜபக்ஷவின் இரண்டரை வருடகால ஆட்சியில் நாடு ஒன்பது ஆண்டுகள் பின்னோக்கி சென்றுள்ளது. பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தி நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளியவர்கள் இன்று பொறுப்பில் இருந்து விலகும் வகையில் கருத்துரைக்கிறார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி ...

மேலும்..

எந்த மதத்தையும் அவமதிக்கும் வகையில் செயற்பட எவருக்கும் இடமில்லை – எதிர்க்கட்சித் தலைவர் சஜித்

எந்தவொரு மதத்தையும் அவமதிக்கும் வகையில் நடந்துகொள்வதற்கு எவருக்கும் முடியாது. அதேநேரம் மத விடயங்களில் மதத் தலைவர்கள் நல்ல வசனங்களை பேசியும், நல்லிணக்கம், ஒழுக்கம் ஆகியவற்றை ஏற்படுத்தும் வகையிலும் நடந்துகொள்ள வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (22) ...

மேலும்..

அரசின் வரி அதிகரிப்புக் கொள்கைகள் வேறு விளைவுகளுக்கு வழிசமைக்கும்! ஹக்கீம் சுட்டிக்காட்டு

  ஊழியர்களிடமிருந்து ஒருலட்சம் ரூபா வரி அதிகரிப்பை அரசாங்கம் ஓர் எதிர்பார்ப்பை நோக்கி செயற்படுத்தினாலும் அது வேறுவிதமான விளைவுகளுக்கு வழிவகுக்கின்றன. அதனால் அரசாங்கம் அவர்களின் சம்பளத்தை அதிகரிக்க வேண்டும் அல்லது வரியைக் குறைக்க வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ...

மேலும்..

வடக்கு, கிழக்கில் பௌத்த மேலாதிக்கம் இனமுரண்பாட்டை தோற்றுவிக்கும் செயல்! விநோனோகராதலிங்கம் காட்டம்

  வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன முரண்பாட்டை ஏற்படுத்தும் வகையில் பௌத்த மேலாதிக்கம் தீவிரமடைந்துள்ளது. தென்னிலங்கையில் ஆதிக்கம் கொள்வதற்காக ஒரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இனவாதத்தை பேசி திரிகிறார். இவர்களை அடக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை.முல்லைத்தீவு குருந்தூர் மலை விவகாரத்தில் நீதிமன்றம் கட்டளை பிறப்பித்துள்ள ...

மேலும்..

தொல்பொருள்கள் மரபுரிமைகள்மீது கைவைப்பதை தவிர்த்துக்கொள்க! சரத் பொன்சேகா அறிவுறுத்து

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஹிட்லரை போல் செயற்பட முயற்சிப்பது கவலைக்குரியது. அரசியல் நோக்கத்துக்காக தொல்பொருள் மரபுரிமைகள் மீது கை வைப்பதை தவிர்த்துக்கொள்ள வேண்டும். இல்லாவிடின் பாரிய விளைவு ஏற்படும். நாட்டை சீரழித்தவர்களுடன் ஒன்றிணைந்து செயற்பட முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் ...

மேலும்..

புத்தளத்தில் மின்சார வேலியில் சிக்குண்ட யானை சடலமாக மீட்பு

புத்தளம் மஹாகும்புக்கடவல பிரதேசத்தின் கவயாங்குளம் பகுதியில் காட்டு யானையொன்று உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு யானை உயிரிழந்துள்ளதாக பிரதேச மக்கள் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்குத் தகவல் வழங்கியுள்ளனர். இதனையடுத்து குறித்த இடத்திற்கு அதிகாரிகள் சென்று யானையைப் பார்வையிட்டுள்ளனர். குறித்த யானை மின்சாரவேலியில் சிக்குண்டு ...

மேலும்..

முல்லைத்தீவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி ! மக்களுக்கு கிடைக்க போகும் நன்மைகள் – அரச அதிபர்

எதிர்வரும் ஜூலை மாதம் முதல் வாரத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முல்லைத்தீவு மாவட்டத்திற்கு வருகை தரவுள்ளதாகவும் முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் அமைக்கப்பட்டிருக்கின்ற வட மாகாணத்துக்கான விசேட தேவை உடையவர்களுக்கான வைத்தியசாலையை திறந்து வைக்க உள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தில் விசேட நடமாடும் சேவை ஒன்றும் ...

மேலும்..

இவ்வாண்டில் நிறைவடைந்த காலப்பகுதியில் மாத்திரம் பேராதனை பல்கலைகழக மாணவர்களில் ஐவர் தற்கொலை – இம்தியாஸ் பாக்கீர் மாக்கார்

நிறைவடைந்த ஐந்தரை மாத காலப்பகுதியில் மாத்திரம் பேராதனை பல்கலைக்கழக மாணவர்களில் ஐவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்கள். மாணவர்கள் உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஆகவே இப்பிரச்சினைக்கு தீர்வு காண கல்வி அமைச்சு விசேட கவனம் செலுத்த வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் ...

மேலும்..

மலையக மக்களின் 200 ஆவது ஆண்டு நிறைவை ஒட்டி யாழில் விசேட நிகழ்வுகள்

மலையக மக்கள் இலங்கைக்கு வந்து 200 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றத்தின் ஏற்பாட்டில் விசேட நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது. யாழ் ஊடக அமையத்தில் இன்று வியாழக்கிழமை (22) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றத்தின் பிரதிநிதிகளால் ...

மேலும்..

குருந்தூர் மலையில் அப்பட்டமான அரச சர்வாதிகாரம் – சபா குகதாஸ்

தமிழர்களின் தொல்லியல்களை சிங்கள பௌத்தமாக மாற்றியமைப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் தனது அரச இயந்திரத்தை சர்வாதிகாரமாக வழி நடாத்தி தமிழர்களின் இருப்பை அழிக்க பல முனைகளிலும் கங்கணம் கட்டி நிற்கின்றனர் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார். அவர் ...

மேலும்..

தமிழர்கள் வசிக்கும் பிரதேசங்களில் விகாரைகள் கட்டுவதையே தமிழர்கள் எதிர்க்கின்றனர் – அருட்தந்தை சக்திவேல்

தமிழர்கள் மட்டும் வசிக்கும் பிரதேசங்களில் விகாரைகளையும், தூபிகளையும் கட்டுவதையே தமிழர்கள் எதிர்க்கின்றனர் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்துள்ளார். அவர் வியாழக்கிழமை (22) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். ...

மேலும்..

முன்னாள் சட்ட மா அதிபர் தப்புல டி லிவேராவை கைதுசெய்யப் போவதில்லை என நீதிமன்றுக்கு அறிவிப்பு !

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் முன்னாள் சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா தெரிவித்த கருத்துக்காக அவரைக் கைது செய்யப் போவதில்லை என சட்ட மா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளார். தம்மைக் கைது செய்வதை தடுக்குமாறு கோரி முன்னாள் ...

மேலும்..

இராணுவத்தினர் பயணித்த பஸ் மோட்டார் சைக்கிளை மோதியதில் 3 வயதான சிறுமி பலி : தாய் காயம்!

இராணுவத்தினர் பயணித்த பஸ் ஒன்று மோதியதில் மூன்று வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பஸ் மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் ஸ்தலத்திலேயே சிறுமி உயிரிழந்துள்ளதாக பண்டாரகம பொலிஸார் தெரிவிக்கின்றனர். பண்டாரகம கூட்டுறவுச் சங்கத்தின் பிரதான காரியாலயத்தின் கணக்காளரான உயிரிழந்த சிறுமியின் தாயார், ...

மேலும்..