சிறப்புச் செய்திகள்

அரசாங்கத்தை அசௌகரியப்படுத்தும் வகையில் செயற்படும் அதிகாரிகளுக்கு சட்ட நடவடிக்கை! மஹிந்த அமரவீர புதுத் திட்டம் வகுப்பு

  நாட்டில் தேவையான அளவு உரம் கையிருப்பில் இருக்கின்றன. விவசாயிகளுக்குத் தேவையான உரத்தைப் பெற்றுக் கொடுக்கத் தவறும் அதிகாரிகளுக்கு எதிராக எந்தவித தராதரமும் பார்க்காமல் சட்ட நடவடிக்கை எடுப்போம் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ ...

மேலும்..

டெங்கு நுளம்பு ஒழிப்புக்கு பங்காற்றிய ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்க! பிரசன்ன ரணதுங்க அரசிடம் வலியுறுத்து

  டெங்கு நுளம்பு ஒழிப்புக்கு பெரிதும் பங்காற்றும் உள்ளூராட்சி மன்ற நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களை நிரந்தரம் செய்யுமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சரும் ஆளுங்கட்சியின் பிரதம அமைப்பாளருமான பிரசன்ன ரணதுங்க அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார். ஜனாதிபதியின் செயலணியின் ஊடாகவும் ஆளுநர்களின் தலைமையிலும் மாகாண ...

மேலும்..

வர்த்தகர்களின் 1300 பில்லியன் ரூபா வங்கிக் கடனை மீள அறவிடுங்கள்! சம்பிக்க நிதி அமைச்சிடம் கோரிக்கை

  தேசிய கடன் மறுசீரமைப்பால் பெருந்தோட்ட தொழிலாளர்கள், ஆடைத்தொழிலாளர்கள் உட்பட உழைக்கும் மக்கள் பாதிக்கப்படுவார்கள். ஆகவே நடுத்தர மக்களைப் பாதுகாப்பதற்காக கடன் மறுசீரமைப்புக்கு முன்னர் பிரதான நிலை வர்த்தகர்கள், செல்வந்தர்கள் அரச வங்கிகளிடமிருந்து பெற்றுக்கொண்டுள்ள 1300 பில்லியன் ரூபா கடன்களை மீள பெற்றுக்கொள்ள நிதி ...

மேலும்..

பாலியல் இலஞ்சம் வழங்கும் நபருக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பதை தடுக்க விதிவிலக்கொன்று உள்வாங்குக! நாடாளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் கோரிக்கை

  நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்படவுள்ள ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்துக்கு நாடாளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தினால் திருத்தங்கள் முன்மொழியப்பட்டுள்ளன. நாடாளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் மற்றும் பாலினம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு சார்பில் பாலியல் இலஞ்சம் தொடர்பான எண்ணக்கரு ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தில் ...

மேலும்..

அரசின் நிவாரணக் கொடுப்பனவுகள் தடையின்றி வழங்கப்பட்டுவருகின்றன செஹான் சேமசிங்க தகவல்

ரசாங்கம் வழங்கும் நிவாரண கொடுப்பனவுகள் முறையாக வழங்கப்பட்டு வருகின்றன. ஏதாவது பிரதேசங்களில் அதில் குறைபாடுகள் காணப்பட்டால் அதனை நிவர்த்திக்க விரைவான நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் நிதி அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர் சந்திம வீரக்கொடி எம்.பி. எழுப்பிய ...

மேலும்..

ஏழை விவசாயிகளது வாழ்வாதாரத்தையே அரசு கூடுதல் கவனத்திலெடுக்கவேண்டும்! கோவிந்தன் கருணாகரம் வலியுறுத்து

  நெல் விலை நிர்ணயத்தில், அரிசி ஆலை உரிமையாளர்கள் அழுத்தம் ஆலோசனைகளைக் கருத்தில் கொள்ளாது ஏழை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அரசாங்கம் கவனத்திலெடுக்க வேண்டும் என்று மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) வேண்டுகோள் விடுத்தார். நாடாளுமன்ற வரவு - செலவுத் திட்ட ...

மேலும்..

நாட்டின் அரசியல் கட்சிகள் எதிர்காலத்தில் பொய் வாக்குறுதி வழங்கித் தப்பமுடியாது! எரான் விக்கிரமரத்ன எச்சரிக்கை

  வரவு - செலவுத் திட்டத்தில் தெரிவிக்கப்படும் பிரேரணைகள் முறையாக செயற்படுத்தப்படுகிறளவா என ஆராயும் பொறுப்பு நாடாளுமன்ற வரவு - செலவு திட்ட அலுவலகத்துக்கு இருக்கிறது. அதனால் இந்த சட்டம் வந்த பின்னர் எதிர்காலத்தில் அரசியல் கட்சிகளுக்கு பொய் வாக்குறுதிகளை வழங்கி தப்பிக்க முடியாது ...

மேலும்..

வரவு – செலவுத் திட்டக் காரியாலயம் அமைக்கும் தீர்மானம் சிறந்த ஒன்று! கபீர் ஹாசிம் வரவேற்பு

  பொருளாதாரர் பாதிப்புக்கு மத்தியில் நாடாளுமன்ற வரவு - செலவுத் திட்டக் காரியாலயத்தை அமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளமை வரவேற்கத்தக்கது. பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைந்துள்ள நாடுகளில் இவ்வாறான தன்மை காணப்படுகிறது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற பாராளுமன்ற ...

மேலும்..

வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள தொல்பொருள் மரபுரிமைகள் யுனெஸ்கோ கண்காணிப்பில் ஆராய்ச்சி செய்யப்படவேண்டும்! செல்வராசா கஜேந்திரன் வலியுறுத்து

  குருந்தூர் மலை பகுதியில் தமிழர்கள் வாழவில்லை என்று தொல்பொருள் சக்கரவர்த்தி என்று குறிப்பிட்டுக் கொள்ளும் எல்லாவெல மேதானந்த தேரரின் கருத்து இனவாதம் மற்றும் மதவாதத்தை அடிப்படையாகக் கொண்டது. சிங்கள பேரினவாதம் தயாரித்த வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தொல்பொருள் மரபுரிமை அறிக்கைகளை ஏற்க ...

மேலும்..

பயங்கரவாத தடைச்சட்டம் இலங்கையில் நடைமுறை தொடர்பாக ஜெனீவாவில் பிரிட்டன் கவலை தெரிவிப்பு! கருத்துசுதந்திரத்தையும் வலியுறுத்தியது

  பயங்கரவாதத் தடைச்சட்டம் தொடர்ந்தும் இலங்கையில் பயன்படுத்துவது தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானத்தை முன்மொழிந்த நாடுகள் கவலை வெளியிட்டுள்ளன. கருத்துசுதந்திரம் ஓன்றுகூடுவதற்கான சுதந்திரம் ஆகியவற்றை அவை வலியுறுத்தியுள்ளன. பிரிட்டனின் மனித உரிமைக்கான இராஜதந்திரி ரிட்டா பிரென்ஞ் இதனைத் தெரிவித்துள்ளார் அவர் ...

மேலும்..

சட்டத்தரணி ஹிஜாஸ் விவகாரத்தில் நியாயமான வழக்கு விசாரணைகளை உறுதிப்படுத்துங்கள்! 8 சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகள் அரசிடம் வலியுறுத்து

  சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா விவகாரத்தில் சர்வதேச சட்டத்தின் பிரகாரம் நியாயமான வழக்கு விசாரணைக்கு உள்ளாவதற்கான உரிமை உறுதிப்படுத்தப்படவேண்டும் என்றும், பயங்கரவாதத்தடைச்சட்டம் சர்வதேச மனித உரிமைகள் கடப்பாடுகளுக்கு அமைவாகத் திருத்தியமைக்கப்படவேண்டும் என்றும் 8 சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்கள் இலங்கையிடம் கூட்டாக வலியுறுத்தியுள்ளன. இது ...

மேலும்..

மத நல்லிணக்கத்தை உருவாக்கும் வகையில் நடைபவனி முன்னெடுப்பு!

யாழ் மாவட்ட சர்வமதக் செயற்குழுவானது மத நல்லிணக்கத்தை உருவாக்கும் வகையில் நடைபவனியொன்றை இன்று முன்னெடுத்தது. அபிவிருத்திக்கான சமூக அமைப்புகளின் வலையமைப்பின் ஏற்பாட்டிலேயே இந்த நடைபவனி முன்னெடுக்கப்பட்டது. யாழ்., பொது நூலகத்தில் இருந்து ஆரம்பமான இந்த நடைபவனி, யாழ், போதனா வைத்தியசாலை வீதியூடாக சென்று மீண்டும் ...

மேலும்..

உயர் இராணுவ அதிகாரியின் பாதுகாப்பிற்கு 7 வாகனங்கள் – நாடாளுமன்றில் சந்திம வீரக்கொடி கேள்வி

உயர் இராணுவ அதிகாரி ஒருவரின் வாகனத்துடன் ஏழு வாகனங்கள் பாதுகாப்பிற்காக சென்றமை குறித்து காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி கேள்வியெழுப்பியுள்ளார். உணவு கிடைக்காமல் மக்கள் அவதிப்படும் இந்த சந்தர்ப்பத்தில் இதுபோன்ற உயர் அதிகாரிகளுக்கு அதிகளவு பணத்தை செலவழிப்பது சரியா என்றும் ...

மேலும்..

விதிகளை அமுல்படுத்துவதோடு நிறுத்தாமல் அதனை உடன் நடைமுறைப்படுத்தவேண்டும் நிரோஷன் பெரேரா வலியுறுத்து

  விதிகளை அமுல்படுத்துவதோடு நிறுத்தாமல் அதனை நடைமுறைப்படுத்துவது அவசியம் என புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பெரேரா தெரிவித்தார். நாடாளுமன்ற வரவு செலவுத் திட்ட அலுவலக சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இலங்கையில் ...

மேலும்..

அரசின் நடவடிக்கைகளால் விவசாயிகளுக்கே பாதிப்பு! சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டு

  நெல்லுக்கான நிர்ணய விலையை அரசாங்கம் தீர்மானிக்காத காரணத்தால், விவசாயிகள் கடுமையான நஷ்டத்திற்கு முகம் கொடுக்கின்றனர் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். நாடாளுமன்றில் ஆற்றிய உரையின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் - விவசாயிகளுக்கு இன்னமும் ...

மேலும்..