சிறப்புச் செய்திகள்

யாழிலுள்ள மதுபானசாலைகள் பற்றிய விவரங்கள் தகவலறியும் சட்டமூலமூடாக கேட்டும் பதிலில்லை!  சிறிதரன் குற்றச்சாட்டு

யாழ்.மாவட்டத்தில்  எத்தனை மதுபான சாலைகள்  உள்ளன என தகவலறியும் சட்டமூலம் ஊடாக கேட்டும் பதில் இல்லை  என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் குற்றச்சாட்டியுள்ளார். யாழ்.மாவட்டத்தில் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றபோது மதுவரித் திணைக்களத்தின் செயற்பாடுகள் கலந்துரையாடப்பட்டவேளை  அவர் இதனைத் தெரிவித்தார் . மதுவரிதிணைக்களத்தின் ...

மேலும்..

பம்பலபிட்டி ரயில் நிலையத்துக்கு தற்காலிக நுழைவுப்பாதை அமைப்பு

இலங்கையில் சுமார் 30 வருடகால பழமையான பாலங்கள் இருக்கின்றன என வீதி அபிவிருத்தி அதிகாரசபை மதிப்பிட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். இந்நிலையில்,  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய கொழும்பு பம்பலப்பிட்டி ரயில் நிலையத்திற்கு 10 நாள்களுக்குள் ...

மேலும்..

‘டக் டிக் டோஸ்’ இசை வெளியீடு!

'டக் டிக் டோஸ் ' முழு நீள திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் யாழ்ப்பாண கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது. இலங்கையைச் சேர்ந்த பிரபல இயக்குநரான 'ராஜ் சிவராஜின் இயக்கத்தில், பூவன் மதீசனின் இசையமைப்பில் உருவாகியுள்ள இத் திரைப்படம் மிக விரைவில் திரைக்கு ...

மேலும்..

கட்சியின் மொத்தக் கட்டுப்பாட்டையும் தனது பிடிக்குள் கொண்டுவர சூழ்ச்சி! எம்.ஏ.சுமந்திரனை வைகிறார் தவராசா

அரசியல் ரீதியில் இரா.சம்பந்தனை ஓரங்கட்டிவிட்டு கட்சியின் மொத்தக் கட்டுப்பாட்டையும் தனது பிடிக்குள் கொண்டுவர நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சூழ்ச்சி செய்கிறார் என சட்டத்தரணி கே.வி.தவராசா குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு கடிதமொன்றை எழுதியுள்ள அவர், ...

மேலும்..

பாலஸ்தீனியர்களுக்காக கல்முனை மக்கள் ஆதரவு!

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையில் தீவிரமாகப் போர் இடம்பெற்று வரும் நிலையில், பாலஸ்தீன் மக்களுக்கு ஆதரவாக கல்முனையில் வெள்ளிக்கிழமை போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. கல்முனை முகையதீன் ஜும்மா பள்ளிவாசலுக்கு அருகேயே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது அப்பகுதி மக்களால் துஆ பிரார்த்தனையும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

மேலும்..

காட்டில் கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புகளால் பரபரப்பு!

மாதம்பே, பனிரெண்டாவ வனப்பகுதியில் மனித எலும்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வியாழக்கிழமை பிற்பகல் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலையடுத்தே குறித்த எலும்புத் துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த எலும்புகள் யாருடையது என்பது இதுவரை அடையாளம் காணப்படாமல் உள்ள நிலையில், ...

மேலும்..

காணாமலாக்கப்பட்ட உறவுகள் சங்கக் கூட்டத்தில் கைகலப்பு! வவுனியாவில் 7 பேர் கைது

வவுனியாவில் இடம்பெற்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க கூட்டத்தில் ஏற்பட்ட கைகலப்பு தொடர்பாக 7 பேர் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்திற்குள் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக அண்மையில் புதிய நிர்வாகத் தெரிவு ...

மேலும்..

வழிப்பறிக் கொள்ளையனை துரத்தி தாக்கிய இளம்தாய்! மோட்டார் சைக்கிளை விட்டுவிட்டு ஓட்டம்

தனது சங்கிலியை அறுத்த வழிப்பறி கொள்ளையர்களை இளம் தாய் ஒருவர் துரத்திய போது , கொள்ளையர்கள் தமது மோட்டார் சைக்கிளை கைவிட்டு தப்பி சென்றுள்ளனர். யாழ்ப்பாணம் – கொடிகாமம் பகுதியை சேர்ந்த இளம் தாய் ஒருவர்  வியாழக்கிழமை மதியம் தனது பிள்ளையை முன்பள்ளியில் ...

மேலும்..

முரணான கருத்து தெரிவித்தால் தேரரும் கைது செய்யப்படலாம்? ஆளுநர் செந்தில் எச்சரிக்கை

மட்டக்களப்பு, மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரைப் பண்ணையாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இவ்விடயம் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் - கிழக்கு ...

மேலும்..

சம்பந்தன் பதவிக்கு சுமந்திரன் இலக்கு! சாடுகிறார் ஈ.பி.டி.பி. ரங்கன்

நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தனின் பதவியை கையகப்படுத்த எம்.ஏ.சுமந்திரன் முனைகிறார் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஊடக பேச்சாளர் ஐ. ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இதனைத் தெரிவித்துள்ளார். மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் வயது முதிர்வு காரணமாக ...

மேலும்..

வரவு – செலவுத் திட்டத்திற்கு பொதுஜன பெரமுன எதிர்ப்பு? ரன்ஜித் பண்டார கூறுகிறார்

வரவு – செலவுத் திட்டத்திற்கு ஆதரவளிப்பது குறித்து கட்சி என்ற ரீதியில் தீர்மானிக்கப்படும் என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரன்ஜித் பண்டார தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் - வரவு ...

மேலும்..

கைத்தொழில்துறை முன்னேறவில்லை! அமைச்சர் ரமேஸ் பத்திரன வேதனை

கைத்தொழிற்துறை அபிவிருத்திக்கான தேசியக் கொள்கையொன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ரமேஸ் பத்திரன தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் - வரலாற்றில் அதிக ஏற்றுமதி வருமானமாக 13.1 பில்லியன் அமெரிக்க டொலர்களைப் ...

மேலும்..

நாட்டில் தேரர்களுக்கு மட்டும் தனிச் சட்டமா? – மனோ கணேசன்!

அம்பிட்டிய சுமனரத்தின தேரரை ஐ.சி.சி.பி ஆர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள விசேட கொணொலிப் பதிவிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் ...

மேலும்..

யாழ் போதனா வைத்தியசாலைக்கு உதவிக் கரம் நீட்டிய தொழிலதிபர்

புதிதாகப் பிறந்த  சிசுக்களிற்கான அதி திவிர சிகிச்சை பிரிவிற்கு (NICU) 12.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான Neonatal ventilator (High Frequency) Fabian HFOi இயந்திரத்தினை தொழிலதிபர் எஸ்.கே.நாதன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அன்பளிப்புச் செய்துள்ளார். குறித்த நிகழ்வில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் ...

மேலும்..

அதிக போதை பாவனையால் உடுவிலில் ஆண் உயிரிழப்பு!

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடுவில் பகுதியில் அதிக போதைவஸ்து பாவனையால் ஆணொருவர் உயிரிழந்துள்ளார். உடுவில் பகுதியைச் சேர்ந்த விஜயராசா நிரஞ்சன் (வயது 34) என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில் - குறித்த நபரின் சகோதரர்கள் வெளிநாட்டில் வசித்து ...

மேலும்..