சிறப்புச் செய்திகள்

போலி செய்திகளை வெளியிடுபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை!  மனுஷ நாணயக்கார எச்சரிக்கை

வீட்டுப்பணிப் பெண்கள், தூய்மைப்படுத்தல் தொழிலாளர்கள், கட்டட நிர்மானப் பணியாளர்கள் உள்ளிட்டவர்களையும் ஊழியர் சேமலாப நிதி மற்றும் நம்பிக்கை பொறுப்பு நிதிக்குள் உள்வாங்கும் வகையில் தொழிலாளர் சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. இந்த சட்ட திருத்தங்களின் போது தொழிலாளர்கள் உரிமைகள் , சலுகைகள் என்பன இரத்து ...

மேலும்..

கல்பிட்டியில் 630 கிலோ பீடி இலைகளுடன் வான் ஒன்றைக் கைப்பற்றினர் பொலிஸார்!

சட்ட விரோதமான முறையில் இந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட பீடி இலைகள் அடங்கிய பொதிகள் வானில் ஏற்றிச்செல்லப்பட்ட போது பொலிஸார் அவற்றை கைப்பற்றியுள்ளனர். இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், கல்பிட்டி உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சுஜீவ டி சொய்சா ...

மேலும்..

உடையார்கட்டு வெள்ளப்பள்ளம்குளம் தனியாரால் அடாத்தாக ஆக்கிரமிப்பு!  சம்பவ இடத்திற்கு சாள்ஸ் எம்.பி விஜயம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்துக்குட்பட்ட உடையார்கட்டு பகுதியில் வெள்ளப்பள்ளம் குளம் அடாத்தாகாக ஆக்கிரமிப்பு செய்வதை  நேற்று (சனிக்கிழமை) நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் நேரில் சென்று பார்வையிட்டார். வெள்ளப்பள்ளம் குளம் தனியார் ஒருவரால் ஆக்கிரமிக்கப்பட்டு எல்லையிடப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனுக்கு ...

மேலும்..

ஒழுக்காற்று விசாரணைகளிலிருந்து ஷாபி விடுவிப்பு மீண்டும் குருணாகல் வைத்தியசாலையில் நியமனம் சுகாதார அமைச்சு நடவடிக்கை

சிங்கள தாய்மாருக்கு சட்ட விரோதமாக கருத் தடை செய்ததாக பொய்யான குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாக்கப்பட்ட குருணாகல் போதனா வைத்தியசாலையின் முன்னாள் பிரசவ மற்றும் மகப்பேற்று வைத்தியர் ஷாபி சிஹாப்தீன் தொடர்பில் சுகாதார அமைச்சு முன்னெடுத்த ஒழுக்காற்று விசாரணைகளில் அவர் குற்றச் சாட்டுக்களில் இருந்து ...

மேலும்..

கிழக்கு கல்விக் கல்லூரி ஆசிரியர் நியமனத்தில் இழைக்கப்படும் அநீதியைத் தடுத்து நிறுத்துக! கிழக்கு ஆளுநரிடம் இம்ரான் எம்.பி. கோரிக்கை

விரைவில் வழங்கப்படவுள்ள கல்விக் கல்லூரி ஆசிரியர் நியமனத்தில் கிழக்கு மாகாண ஆசிரியர்களுக்கு பாரிய அநீதி இழைக்கப்படவுள்ளது. அதனை உடனே தலையிட்டு தடுத்து நிறுத்த வேண்டும் என கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானிடம் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் ...

மேலும்..

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பியதும் பொதுபயன்பாட்டு ஆணைக்குழுவுக்கு புதிய தலைவர்! நிதி இராஜாங்க அமைச்சர் ஷெகான் தெரிவிப்பு

ஜப்பானில் இருந்து ஜனாதிபதி நாடு திரும்பியதும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவிக்கு புதிய ஒருவரை நியமிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவியிலிருந்து நீக்குவது தொடர்பான கடிதத்தை ஜனக ...

மேலும்..

இராஜதந்திர நோக்கங்களுக்காக மேலும் 3 தூதரகங்கள் விரைவில்! என்கிறார் அமைச்சர் அலி சப்ரி

ஈராக், ருமேனியா மற்றும் ஊலிசரள ஆகிய நாடுகளில் இராஜதந்திர நோக்கங்களுக்காக இலங்கைத் தூதரகங்கள் விரைவில் நியமிக்கப்பட வேண்டும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். குறித்த நாடுகளில் அதிகளவான இலங்கையர்கள் இருப்பதால், அவர்களைக் கவனித்துக் கொள்ள தூதரகங்கள் அமைப்பது முக்கியம் என்றும் ...

மேலும்..

மீண்டும் மன்னிப்பு கேட்கிறார் ஜெரோம்!

மத நல்லிணக்கத்தை பாதிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட போதகர் ஜெரோம் பெர்னாண்டோ, இந்து, பௌத்த, இஸ்லாமிய மக்களிடம் மீண்டும் மன்னிப்பு கோரியுள்ளார். மிரிஹான பிரதேசத்தில் அமைந்துள்ள விழா மண்டபம் ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சமய விரிவுரையில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மன்னிப்பு ...

மேலும்..

வீதி அபிவிருத்தி திட்டங்கள் மீண்டும் ஆரம்பமாகின்றன! அமைச்சர் பந்துல தெரிவிப்பு

ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் தற்போது நிறுத்தப்பட்டுள்ள வீதி அபிவிருத்தி திட்டங்கள் மீள ஆரம்பிக்கப்படும் என நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட போதே அவர் ...

மேலும்..

அணு மின் உற்பத்தி நிலையம் நிர்மாணிப்பதற்கு ரஷ்யா தயார்

இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கால், நாட்டில் அணு மின் உற்பத்தி நிலையத்தை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தை மேற்கொள்ள தமது நாடு தயாராகவுள்ளதாக இலங்கைக்கான ரஷ்ய தூதுவர தெரிவித்துள்ளார். இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் தனது உத்தியோகபூர்வ ருவிட்டர் பக்கத்தில் அவர் இந்த விடயத்தை பதிவிட்டுள்ளார். இந்த விடயம் ...

மேலும்..

மீண்டும் டுபாய் பறந்தார் அலி சப்ரி ரஹீம் எம்.பி

புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் வெள்ளிக்கிழமை இரவு டுபாய்க்குப் புறப்பட்டுச் சென்றார் எனக் கட்டுநாயக்க விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்ற உறுப்பினர் வெள்ளிக்கிழமை இரவு 8.50 மணியளவில் டுபாய் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் டுபாய்க்கு புறப்பட்டதாக ...

மேலும்..

கோட்டாபய கடற்படைத் தளத்தில் நடந்த பேச்சு நம்பிக்கை தருகிறது கடத்தொழிலாளர் சம்மேளனம் தெரிவிப்பு

முல்லைத்தீவு கோட்டாபய கடற்படை தளத்தில் கிழக்கு பிராந்திய கடப்படை தளபதி உடன் கடந்த 25 ஆம் திகதி பேச்சு இடம்பெற்றதாக மாவட்ட கடத்தொழிலாளர் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது. குறித்த சந்திப்பின் போது சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றை கட்டுப்படுத்துவதற்காக எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் தொடர்பாகப் ...

மேலும்..

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தொற்றாநோய் குறித்த பரிசோதனை!

தென்கிழக்குப் பல்கலைக்கழகம் மற்றும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையால்  செய்யப்பட்ட இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கமைவாகவும் தொற்றா நோய்த்தடுப்பு வாரத்தை முன்னிட்டும் நேற்று (வெள்ளிக்கிழமை) கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம் றிபாஸின் ஆலோசனைக்கு அமைவாக ...

மேலும்..

தமிழர் ஆசிரியர் சங்க பொதுசெயலர் சரா.புவனேஸ்வரன் ஓய்வுபெறுகிறார்!

இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் கௌரவ பொதுச் செயலாளராக பன்னிரெண்டு ஆண்டுகள் அரும்பணியாற்றிய சரா.புவனேஸ்வரன் வரும் 31.05.2023 உடன் ஓய்வு பெறுகின்றார். கடந்த 21.05.2023 அன்று திருகோணமலையில் உள்ள மூதூர் பிரதேசத்தின் ஈச்சிலம்பற்று சண்பக மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் ...

மேலும்..

காதலித்த பெண்ணையே நான் கரம்பிடித்துள்ளேன்! நாடாளுமன்றில் சமிந்த விஜேசிறி பெருமிதம்

காதலித்த பெண்ணையே கரம் பிடித்தேன். அதனை விடுத்து பெண்களை காதலித்து ஏமாற்றவில்லை. ஊழலற்ற வகையில் அரசியலில் ஈடுபடுகிறேன். என் மீது ஏதேனும் குற்றச்சாட்டுக்கள்  ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டால் நாடாளுமன்ற உறுப்புரிமையை துறப்பேன் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் ...

மேலும்..