சிறப்புச் செய்திகள்

ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்! எதிர்க்கட்சித் தலைவருக்கு அமைச்சர் சுசில் பதில்

நீதிமன்றத்தின் தடை யுத்தரவை நீக்கி பட்டதாரிகளுக்கான போட்டிப்பரீட்சையை நடத்துவதற்கு சட்ட மா அதிபரின்  ஊடாக நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, எழுப்பிய விசேட கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலேயே ...

மேலும்..

பொருளாதாரம் மீதான தாக்கங்களை தவிர்க்க கொள்கை மறுசீரமைப்பு செயன்முறை அவசியம்! மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் ‘அட்வைஸ்’

அனைத்துத்தரப்பினருக்கும் ஏற்புடைய சாதகமான பெரும்பாகப்பொருளாதார சூழ்நிலையைக் கட்டியெழுப்புவதில் ஏற்படக்கூடிய மிகமோசமான தாக்கங்களைத் தவிர்ப்பதற்கு 'கூட்டிணைந்த கொள்கை மறுசீரமைப்புக்கள்' என்ற கடினமான செயன்முறையை நடைமுறைப்படுத்துவது இன்றியமையாததாகும் என்று இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கை மத்திய வங்கி, வடமாகாண ...

மேலும்..

விடைத்தாள் மதிப்பீட்டு பணியிலிருந்து ஆசிரியர்கள் விலகி இருப்பதுக்கு உடன் நடவடிக்கை எடுக்குக! ரோஹினி குமாரி வலியுறுத்து

கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களுக்கான வருகை கொடுப்பனவு அளிக்கப்பட்ட வாக்குறுதிக்கமைய வழங்காதமையால் பொருளாதார விஞ்ஞாபன விடைத்தாள் மதிப்பிடும் நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆராய்ந்து பார்த்து விரைவாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என எதிர்க்கட்சி ...

மேலும்..

தினேஷ் ஷாஃப்டரின் சடலம் மீதான தடயவியல் பரிசோதனை முன்னெடுப்பு!

வர்த்தகர் தினேஷ் ஷாஃப்டரின் சடலம் மீதான தடயவியல் பிரேத பரிசோதனை கராபிட்டி போதனா வைத்தியசாலையில் இடம்பெறுகிறது. கொழும்பு பல்கலைக்கழகத்தின் தடயவியல் மருத்துவ பேராசிரியர் அசேல மெண்டிஸின் தலைமையில் இந்த பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. கடந்த வருடம் டிசெம்பர் மாதம் 15 ஆம் திகதி வர்த்தகர் தினேஷ் ...

மேலும்..

இறக்குமதி கட்டுப்பாடுகள் விரைவில் தளர்த்தப்படும்! மத்திய வங்கி ஆளுநர் தெரிவிப்பு

எதிர்காலத்தில் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட கருத்து தெரிவிக்கையிலே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதேவேளை 70 வீதம் ஆக இருந்த பணவீக்கம் இப்போது ...

மேலும்..

உள்ளூராட்சி விவகாரங்களுக்கான ஜனாதிபதி புதிய ஆலோசகர் நியமனம்

உள்ளூராட்சி விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் ஆலோசகராக முன்னாள் கொழும்பு மேயர் ரோசி சேனாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். அவரின் ஊடகச் செயலாளர் விராஜ் தாரக சிங்கள ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை உறுதிப்படுத்தியுள்ளார். ரோசி சேனாநாயக்க இன்னும் குறித்த பதவி ஏற்கவில்லை. பெரும்பாலும் அடுத்த வாரம் பதவியேற்பார் ...

மேலும்..

திஸ்ஸவிதாரணவின் அலுவலக திறப்பை யாரோ எடுத்துச் சென்று விட்டார்களாம்!

கொழும்பு யூனியன் பிளேஸில் உள்ள தனது அலுவலகத்தின் திறப்பை ஒருவர் எடுத்துச் சென்றதால் அந்த அலுவலகத்துக்குள் தன்னால்  செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக பேராசிரியர் திஸ்ஸ விதாரண நாடாளுமன்றத்தில் சிறப்புரிமை கேள்வி எழுப்பியபோது தெரிவித்தார். கொழும்பின் யூனியன் பிளேஸில் உள்ள அந்த அலுவலகத்திலிருந்து ...

மேலும்..

உருத்திரபுரம் சிவன் கோவிலின் அளவீட்டுப் பணிகள் நிறுத்தம் குருந்தூர்மலையில் மேலதிக காணிகள் கையகப்படுத்தப்படாது! அமைச்சர் விதுர உறுதி

உருத்திரபுரம் சிவன் கோவில் மீது தொல்லியல் திணைக்களத்தால் மேற்கொள்ளப்படவுள்ள அளவீட்டுப் பணிகளை இடைநிறுத்துவதாக தொல்லியல் துறை அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க உறுதி அளித்துள்ளார். வடக்கு, கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவுக்கும் இடையில் பத்தரமுல்லயில் அமைந்துள்ள அமைச்சின் தலைமையகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே ...

மேலும்..

ஒஸ்மானியாக் கல்லூரியின் மோதல் விவகாரம்: பொலீஸ் நடவடிக்கைக்குட்படுத்தி விசாரணை!

யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரியில் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற பயிற்சி ஆசிரியர் மற்றும் மாணவர்கள் இடையே இடம்பெற்ற மோதல் அசம்பாவிதம் தொடர்பாக பாடசாலை நிர்வாகத்துக்கும் - யாழ்ப்பாணம் வலயக் கல்வி பணிப்பாளர் முத்து இராதாகிருஸ்ணன் தலைமையிலான குழுவினருக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒஸ்மானியாக் ...

மேலும்..

ஆட்சி நிர்வாக வலுவாக்கம், ஊழல் மோசடி ஒழிப்பு ஆகியவற்றுக்கான மறுசீரமைப்புகள் நாட்டில் தேவை! அமெரிக்கத் தூதுவர் ஜூலி வலியுறுத்து

இலங்கையில் முதலீடுகளை ஊக்குவிப்பதற்கும், சாதகமான வணிகச்சூழலைக் கட்டியெழுப்புவதற்கும் ஏதுவான கொள்கை உருவாக்கத்துக்கான உத்வேகத்தை அமெரிக்க வர்த்தகப்பேரவை வழங்கியிருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங், சிறந்த ஆட்சி நிர்வாகத்தை வலுப்படுத்துவதற்கும் ஊழல் மோசடிகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் மேலும் பல்வேறு மறுசீரமைப்புக்களை மேற்கொள்ள ...

மேலும்..

முக்கிய பிரமுகர்கள்’ மேற்கொள்ளும் ஊழல் மோசடிகளின் ஓரங்கம் ரஹீம்! கரு ஜெயசூரிய அதிருப்தி

நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமின் செயற்பாடு, நாட்டின் முக்கிய பிரமுகர் என அழைக்கப்படும் சில தரப்பினரால் சட்டவிரோதமாக முன்னெடுக்கப்பட்டுவரும் ஊழல்மோசடிகளின் ஒரு பகுதியேயாகும் என்று சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவரும் முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ...

மேலும்..

நாடளாவிய ரீதியில் பிரசாரத்தில் மக்கள்புரட்சிக்காக ஈடுபடுவேன்!  பொன்சேகா சூளுரை

ஊழல் அரசியல்வாதிகள் மாத்திரமே போராட்டத்தை (அரகலய) கடுமையாகச் சாடுகிறார்கள். போராட்டத்தால் தான் ராஜபக்ஷர்களிடமிருந்து நாடு பாதுகாக்கப்பட்டு பாரிய மாற்றம் அரசமைப்பின் ஊடாக ஏற்பட்டது என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். ஊழல் அரசியல்வாதிகள் மீண்டும் தலைதூக்கியுள்ளமை கவலைக்குரியது. சிறந்த அரசியல் கலாசாரத்துக்காக மக்கள் ...

மேலும்..

தனிநபர் வங்கி கடன் விவகாரத்தில் அரசு தலையிடாது அரசியல்வாதிகள் பொறுப்பற்ற கருத்துகளைத் தவிர்க்குக!  ரஞ்சித் சியம்பலாபிட்டிய காட்டம்

அரசாங்கத்தின் பிரதான 10 நண்பர்கள் வங்கிகளில் பெற்றுக் கொண்ட கடன்களை தேசிய கடன் மறுசீரமைப்பு ஊடாக மறுசீரமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றமை அடிப்படையற்றது. தனிநபர் வங்கி கடன் விவகாரத்தில் அரசாங்கம் தலையிடாது. ஆகவே பொறுப்பற்ற வகையில் கருத்துரைப்பதை சிரேஷ்ட அரசியல்வாதிகள் தவிர்த்துக்கொள்ள வேண்டும் ...

மேலும்..

அரசாங்கத்தின் நிவாரண வேலைத் திட்டங்களில் மலையகம் உள்வாங்கப்படுவதை உறுதிப்படுத்துக!  வே.இராதாகிருஷ்ணன் வலியுறுத்து

அரசாங்கத்தின் நிவாரண வேலைத்திட்டத்தில் மலையக மக்கள் உள்வாகங்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். இது தொடர்பாக உலக வங்கி பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போதும் தெரிவித்திருக்கிறோம் என எதிர்க்கட்சி உறுப்பினர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற நிதி ஒழுங்குபடுத்தல் சட்டத்தின் கட்டளைகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ...

மேலும்..

தொழில் சட்ட மறுசீரமைப்புக்கான சட்டமூல வரைவு தயாரிக்கப்பட்டு மக்கள் கருத்துக்காக மீளசமர்ப்பிப்பு! மனுஷ நாணயக்கார தெரிவிப்பு

தற்போதுள்ள தொழில் சட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள மறுசீரமைப்புக்கான சட்ட மூல வரைவை எதிர்வரும் ஜூன் மாதம் மேற்கொள்ள எதிர்பார்த்திருக்கிறோம். என்றாலும் சட்டமூல வரைவு மேற்கொள்ளப்பட்டாலும் மீண்டும் மக்களின் கருத்துக்கு சமர்ப்பிக்கப்படும் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார். தற்போதுள்ள ...

மேலும்..