சிறப்புச் செய்திகள்

டிஜிற்றல் மயமாக்கப்படுகின்றன இலங்கையின் ரயில் சேவைகள்! அமைச்சர் பந்துல தகவல்

புகையிரத திணைக்களம் கடந்த ஆண்டு மாத்திரம் 10 பில்லியன் ரூபா நட்டத்தை எதிர்கொண்டுள்ளது. ஊழலற்ற வகையில் மக்களுக்கு சிறந்த சேவையை வழங்க வேண்டுமாயின் ரயில்வேத் திணைக்களம் அதிகார சபையாக மாற்றியமைக்கப்பட வேண்டும். எதிர்வரும் மூன்று மாத காலத்துக்குள் ரயில் சேவைகள் டிஜிற்றல் மயப்படுத்தப்படும் ...

மேலும்..

மின்சார அமைச்சும் சுயாதீன ஆணைக் குழுவும் இணக்கப்பாட்டுடன் செயற்படுகின்றமை அவசியம்! அமைச்சர் ஜீவன் வலியுறுத்து

நாடு நெருக்கடியான நிலைமையை எதிர்நோக்கும் போது சில இறுக்கமான தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டி நேரிடும். இப்போது மட்டுமின்றி நாடு சுதந்திரமடைந்த காலம் தொட்டு அவ்வாறான தீர்மானங்கள் எடுக்கப்பட்டு வந்துள்ளன. அதனால் மின்சாரம் தொடர்பான அமைச்சும் சுயாதீன ஆணைக்குழுவும் இணக்கப்பாட்டுடன் செயற்படுவது அவசியமாகும் ...

மேலும்..

கனடாவின் நிலைப்பாட்டை வெகுவிரைவில் முழு உலகும் பின்பற்றும் நிலைமை வரும்! சாள்ஸ் நிர்மலநாதன் எதிர்வுகூறல்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவம் பௌத்தமயமாக்கப்பட்டுள்ளது. மகாவலி வலயத்தில் உள்ள தமிழர்களுக்குச் சொந்தமான காணிகள் மகாவலி அதிகார சபையின் ஊடாக சிங்களக் குடியேற்றத்துக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. இதுவும் ஒருவகையான இன அழிப்பு செயற்பாடு என்பதை ஆட்சியாளர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். இலங்கை தொடர்பில் ...

மேலும்..

செக் குடியரசின் இலங்கைக்கான தூதுவர் இ.தொ.கா. குழுவினருடன் சந்திப்பு!

செக் குடியரசின் இலங்கைக்கான தூதுவர் ஹெலிஸ்கா ஷிகோவா இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உயர்மட்ட குழுவினருடன் நேற்று (புதன்கிழமை) சிநேகபூர்வ கலந்துரையாடலொன்றை நடத்தினார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமை காரியாலயமான சௌமியபவனில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், இ.தொ.கா. தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் ...

மேலும்..

தமிழ் மாணவன் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனப் போட்டியில் சாதனை!

சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை, இகல்வெல்லல் யார்க்கும் அரிது” என்ற திருக்குறளுக்கு இலக்கணமாக ஒரு ஈழத் தமிழ் மாணவன் சர்வதேச அரங்கில் கவனத்தை ஈர்த்துள்ளார். போருக்குள் பிறந்து, வளர்ந்து தாய் நிலத்தில் இருந்து அகதியாக தத்தளித்துச் சென்ற இந்த மாணவனின் சாதனை உலகம் ...

மேலும்..

மூலிகைத் தோட்டப் பராமரிப்புக்கு கிழக்கில் விண்ணப்பங்கள் கோரல்

கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் கீழுள்ள மூலிகைத் தோட்டங்களில் மூலிகைத் தாவரங்களை நாட்டி, சரியான முறையில் பராமரித்து அதன் பயன்பாட்டுப் பொருள்களை வழங்கக்கூடியவர்களிடமிருந்து விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. அதற்கமைவாக, திருகோணமலை கப்பல்துறையில் 4 ஏக்கர் கொண்ட மூலிகைத் தோட்டத்திலும், மட்டக்களப்பு வாகரையில் 1½ ...

மேலும்..

கல்முனை பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தராக ஏ.சி.எம் பழில்!

கல்முனை பிரதேச செயலகத்தின் நிர்வாக உத்தியோகத்தராக சாய்ந்தமருதைச் சேர்ந்த முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் அதி சிறப்பு ஏ.சி.எம் பழில் இன்று(புதன்கிழமை) தனது பதவியைப் பொறுப்பேற்றார். இந் நிகழ்வில் கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி,சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எம்.ஆஸீக்,சாய்ந்தமருது உதவி பிரதேச செயலாளர் ...

மேலும்..

திருகோணமலை முதியோர் இல்லத்துக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் விஜயம்!

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மறைந்த தலைவர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் 3 ஆவது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு திருகோணமலை மாவட்டத்தில் உள்ள தெரேசா முதியோர் இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கலந்து கொண்டார். குறித்த நிகழ்வு ...

மேலும்..

நெடுந்தீவு படகின் சுக்கான் உடைப்;பு பயணிகள் நடுக்கடலில் தத்தளித்தனர்!

நெடுந்தீவில் இருந்து குறிகாட்டுவான் நோக்கி வந்துகொண்டிருந்த சமுத்திரதேவா படகின் சுக்கான் உடைந்து, பயணிகள் நடுக்கடலில் தத்தளித்த நிலையில், மீனவர்களின் உதவியுடன் அந்தப் பயணிகள் மீட்கப்பட்டு படகுக் கரைக்கு அழைத்துவரப்பட்டனர். நெடுந்தீவில் இருந்து இன்றைய தினம் நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை குறிகாட்டுவான் நோக்கி பயணித்த ...

மேலும்..

பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் தொடர்பான பிரேரணைக்கு ஆதரவாக வாக்குகளைப் பயன்படுத்துவோம்!  அமைச்சரவை பேச்சாளர்

தனிப்பட்ட அரசியல் நிகழ்ச்சி நிரலை செயற்படுத்துவதற்காக பொறுப்புக் கூற வேண்டிய அரச நிறுவனங்களை பயன்படுத்திக்கொள்ள இடமளிக்க முடியாது. எனவே, மனசாட்சிக்கமையவே பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தொடர்பான பிரேரணைக்கு எமது வாக்குகளைப் பயன்படுத்துவோம் என அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ...

மேலும்..

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் 22 அரசியல் கைதிகளே தடுத்துவைப்பு!  நீதி இராஜாங்க அமைச்சர் தகவல்

யுத்த காலத்தில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களில் 22 தமிழ் அரசியல் கைதிகள் மட்டுமே  தற்போது சிறைகளில் உள்ளனர். அவர்களையும் விடுதலை செய்வது தொடர்பான சட்ட நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளது என நீதி இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன தெரிவித்தார். நாடாளுமன்றம் சபாநாயகர் ...

மேலும்..

இலங்கைத் தூதரகத்தின் எதிர்ப்புக்களையும் மீறி கனடாவில் தமிழர் இனப்படுகொலை நினைவுதூபி!

கனடாவில் தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபியை அமைக்கும் முயற்சிகளுக்கு கனடாவிற்கான இலங்கை தூதரகம் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. இலங்கை யுத்தத்தின் போது கொல்லப்பட்ட தமிழர்களை நினைவுகூறுவதற்காக கனடாவில் உள்ள  இலங்கைத் தமிழ் சமூகத்தினர் நினைவுத்தூபியை அமைப்பதற்கு மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்கே இலங்கைத் தூதரகம் தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. இலங்கையின் ...

மேலும்..

பொலிஸாரின் தாக்குதலில் பெண் மரணம் குறித்து விசாரணை நடத்தப்படவேண்டும்! வடிவேல் சுரேஷ் வலியுறுத்து

கொழும்பு கொட்டா வீதியில் வீடொன்றில் பணிபுரிந்துவந்த பெண் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு, அவருக்கு மேற்கொண்ட தாக்குதலில் உயிரிழந்துள்ளார். அத்துடன் எந்த விசாரணையும் மேற்கொள்ளாமல் தற்போது அவரின் சடலம் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொலிஸுக்கு பொறுப்பான அமைச்சர் உரிய விசாரணை மேற்கொண்டு சட்டத்தை நிலைநாட்ட வேண்டும் ...

மேலும்..

அலி சப்ரி ரஹீமுக்கு எதிராக சட்ட நடவடிக்கை அவசியம்! சிறப்புரிமை வழங்க கூடாது என்கின்றன எதிர்க்கட்சிகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 3 கிலோ கிராம் தங்கத்துடன் கைது செய்யப்பட்டுள்ள முஸ்லிம் தேசிய கூட்டமைப்பின்  நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஸ்ரீலங்கா ...

மேலும்..

புத்தசாசனத்தை பாதுகாக்கவும் வளர்ச்சி பெற செய்யவும் அரசாங்கம் பொறுப்புடன் செயற்படும்!  பிரதமர் தினேஷ் குணவர்தன  உத்தரவாதம்

புத்தசாசனத்தை பாதுகாக்கவும் வளர்ச்சி பெற செய்யவும் அரசாங்கம் பொறுப்புடன் செயற்படும். மிகிந்தலை முதல் அநுராதபுரம் வரையான பொசன் உற்சவ வலயத்துக்கு தேவையான நிதி மற்றும் மனித வள ஒத்துழைப்புக்கள் முழுமையாக வழங்கப்படும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் விசேட கூற்றை ...

மேலும்..