சிறப்புச் செய்திகள்

நாட்டில் மீண்டும் இன, மத வாதம் தலைதூக்க இடமளிக்கவேண்டாம்! இஷாக் ரஹ்மான் ஜனாதிபதியிடம் கோரிக்கை

நாட்டில் இனவாதத்தையும் மதவாதத்தையும் மீண்டும் உருவாக்க ஜெரொம் பெர்னாண்டோ என்ற மத போதகர் முயற்சிக்கின்றார். இதற்கு இடமளித்துவிட வேண்டாம் என்று ஜனாதிபதியை கேட்டுக்கொள்கிறோம் என  ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் இஷாக் ரஹ்மான் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற உற்பத்திவரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் ...

மேலும்..

இரத்தினபுரி அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணம் நிதிநெருக்கடி காரணமாகவே இடைநிறுத்தமாம்! கூறுகிறார் பந்துல

நிதி நெருக்கடி காரணமாகவே இரத்தினபுரிக்கான அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப் பணிகளை தற்காலிகமாக  நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது என  ஊடகத்துறை மற்றும் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன  தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது எதிர்க்கட்சி உறுப்பினர் அஜித் மான்னப்பெரும எழுப்பிய ...

மேலும்..

மூழ்கிய சீன கப்பலில் ஆபத்தான சூழ்நிலைகளில் இலங்கை சுழியோடிகளால் 14 உடல்கள் மீட்பு!  இலங்கை கடற்படை தகவல்

இந்து சமுத்திரபகுதியில் மூழ்கிய சீன மீன்பிடிக்கப்பலில் இருந்து இதுவரை இலங்கை சுழியோடிகள் 14 உடல்களை மீட்டுள்ளனர். இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள இலங்கை கடற்படை இலங்கைக்கு தெற்கே ஆஸ்திரேலிய தேடுதல் மீட்பு பகுதியில் மீட்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகத் தெரிவித்துள்ளது. கடலில் மூழ்கிய ...

மேலும்..

போதைப்பொருள் கட்டுப்பாடு தொடர்பில் கடுமையான நடவடிக்கைகள் அவசியம்!  மைத்திரி வலியுறுத்தல்

நாட்டில் போதைப்பொருள் பாவனையால் மாணவர்கள் சீரழியும் நிலை ஏற்பட்டுள்ளது. உயர்தர வகுப்பில் படிக்கும் பெண் பிள்ளைகள் கூட இந்த நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். போதைப்பொருள் தொடர்பில் அரசாங்கம் கடுமையான தீர்மானங்களை எடுக்க வேண்டியது அத்தியாவசியமானது என  நாடாளுமன்ற உறுப்பினர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் ...

மேலும்..

படையினருடன் புலிகளை ஒன்றிணைப்பது கோழைத்தனம்; நினைவுத்தூபி அமைக்கும் முடிவு கைவிடப்பட வேண்டும்!  சரத் வீரசேகர ஆவேசம்

நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்த படையினரையும், விடுதலைப் புலிகளையும் ஒன்றிணைத்து  நினைவுகூரும் வகையில் தூபி அமைக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை கோழைத்தனமானது. அரசாங்கத்தின் தீர்மானத்தையிட்டு வெட்கமடைகிறேன். தீர்மானம் திருத்திக் கொள்ளப்பட வேண்டும் என ஆளும் தரப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அட்மிரல் சரத் வீரசேகர ...

மேலும்..

வீதியில் கிடந்த 4 லட்சம் ரூபா உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது! காத்தான்குடியில் சம்பவம்

காத்தான்குடியில் 4 லட்சம் ரூபா பணத்தை வீதியில் கண்டெடுத்த தமிழ்,முஸ்லிம் சகோதரர்கள் காத்தான்குடி பொலிஸார் முன்னிலையில் உரியவரிடம் ஒப்படைத்துள்ளனர். காத்தான்குடியைச் சேர்ந்த றிஸ்வி என்பவரின் 4 லட்சம் ரூபா பணம் நேற்று (திங்கட்கிழமை) காத்தான்குடி ஆறாம் குறிச்சி இரும்புத்தைக்கா பள்ளிவாயல் வீதியில் வைத்து ...

மேலும்..

கனேடிய பிரதமர் கருத்துக்கு அரச எதிர்ப்புக்குக் கண்டனம்! தெரிவித்தார் சுமந்திரன் எம்.பி.

இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலை தொடர்பாக கனேடியப் பிரதமர் ஜெஸ்ரின் ட்ரூடோ வெளியிட்ட அறிக்கைக்கு கனேடிய உயர்ஸ்தானிகரை அழைத்து இலங்கை அரசாங்கம் தமது ஆட்சேபனைகளை தெரிவித்துள்ளமைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டனம் வெளியிட்டுள்ளது. இலங்கையின் இறுதிக் கட்ட யுத்த காலப் பகுதியில் இடம்பெற்ற யுத்தக் ...

மேலும்..

தமக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை சவாலுக்கு உட்படுத்தி மஹிந்த சிறிவர்த்தன மனு!

தமக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட இரண்டு நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை சவாலுக்கு உட்படுத்தி, திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன தனது சட்டத்தரணி ஊடாக ஆரம்ப ஆட்சேபனைகளை முன்வைத்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் தேசிய மக்கள் ...

மேலும்..

ஹப்புத்தளை ஆலயத்துக்கு சந்நிதியான் ஆச்சிரம் உதவி

ஹப்புத்தளை - தொட்டுலாகலை பிரதேசத்தில் அமைந்துள்ள ஸ்ரீகதிர்வேலாயுத சுவாமி கோவில் கட்டட பணிக்காக 100,000 ரூபா நிதி நேற்று (திங்கட்கிழமை) வழங்கப்பட்டுள்ளது. நிதியை சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் தனது தொண்டர்களுடன் நேரடியாகச் சென்று ஆலய நிர்வாகிகளிடம் வழங்கி வைத்தார்

மேலும்..

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வீழ்ச்சிக்கு கோட்டா, மஹிந்த பொறுப்புக்கூறவேண்டுமாம்! சாடுகின்றார் எஸ்.பி.திஸாநாயக்க

நாட்டு மக்கள் பொதுஜன பெரமுனவுக்கு வழங்கிய ஆணை குறுகிய காலத்துக்குள் முழுமையாக இல்லாதொழிந்து பாரிய நெருக்கடிகள் தோற்றம் பெற்றதற்கு பொதுஜன பெரமுனவின் அரச தலைவர்களான கோட்டாபய ராஜபக்ஷ, மஹிந்த ராஜபக்ஷ உட்பட முழு அமைச்சரவையும் பொறுப்புக்கூற வேண்டும் என ஆளும் தரப்பின் ...

மேலும்..

நிந்தவூரில் உள்ள பழக்கடைகள் அனைத்திலும் திடீர் சோதனைகள்!

நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் கே.எல்.எம். றயீஸின் வழிகாட்டலில் பழக்கடைகளின் தரத்தைப் பேணும் வகையில் நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தால் அனைத்து பழக்கடைகளிலும் பரிசோதனை நடவடிக்கை நேற்று (திங்கட்கிழமை) மேற்கொள்ளப்பட்டது. இதில் மக்களின் நுகர்வுக்குப் பொருத்தமற்ற பழங்கள் மற்றும் செயற்கையாக ...

மேலும்..

பத்தனை ஸ்ரீபாத கல்வியியற் கல்லூரியில் பயிற்சி மாணவர்கள் 92 பேருக்கு சுகவீனம்!  வைத்தியசாலையில் சேர்ப்பு

பத்தனை ஸ்ரீபாத கல்வியியற் கல்லூரியில் பயிற்சி பெறும் சுமார் 92 மாணவர்கள் திடீர் சுகவீனத்துக்குள்ளாகி கொட்டகலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளனர். சளி, இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற நோய் அறிகுறிகள் தென்பட்டதையடுத்து அங்கு பயிற்சி பெறும் மாணவர்கள் வைத்தியசாலைக்கு சென்றுள்ளனர். வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக சென்றவர்களில் ...

மேலும்..

சாய்ந்தமருது சமுர்த்தி வங்கிசங்க முகாமையாளராக றியாத் ஏ. மஜீத்!

சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளராக அண்மையில் பதவியுயர்வு பெற்று கடமையாற்றிய றியாத் ஏ. மஜீத் சமுர்த்தி வங்கிச் சங்க முகாமையாளராக நியமனம் பெற்று கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வு நேற்று (திங்கட்கிழமை) சமுர்த்தி வங்கிச் சங்க காரியாலயத்தில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் முன்னாள் முகாமைத்துவ பணிப்பாளர் ...

மேலும்..

மன்னாரில் இராணுவத்தினால் பௌத்த விகாரை அமைக்க நடவடிக்கை : சாள்ஸ் நிர்மலநாதன்

மன்னார், உயிலங்குளம் பிரதேசத்தில் இராணுவத்தின் 542ஆவது படைப் பிரிவினால் அப்பகுதியில் புதிதாக பௌத்த விகாரை அமைக்க இராணுவத்தினால் வேலைகள் இடம்பெற்று வருகின்றன. இந்த பெளத்த விகாரை அமைக்கும் நடவடிக்கையினை வன்மையாக கண்டிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார். மன்னார், உயிலங்குளம் பிரதேசத்தில் புதிதாக ...

மேலும்..

கனடாவின் கருத்துக்கு ஜனாதிபதி மௌனம் காப்பது ஏன் ? – மக்கள் அமைப்பு ஆர்ப்பாட்டம்

முப்படையினரும் , பொலிஸாரும் இலங்கையில் தமிழினப்படுகொலையை மேற்கொண்டதாக தெரிவித்துள்ள கருத்தை கனேடியப் பிரதமர் மீளப் பெற வேண்டும். இவ்விடயத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏன் மௌம் காக்கின்றார்? என காலி முகத்திடல் மக்கள் அமைப்பு கேள்வியெழுப்பியுள்ளது. கனேடிய பிரதமரின் கருத்துக்கு எதிர்ப்பினை வெளியிட்டு ...

மேலும்..