சிறப்புச் செய்திகள்

பின் கதவு வாயில் ஊடாக வழங்கப்படுகின்ற அரசியல் நியமனங்கள் சட்டத்துக்கு முரண்! லக்ஷ்மன் கிரியெல்ல காட்டம்

கலைக்கப்பட்டுள்ள உள்ளூராட்சிமன்றங்களின்  முன்னாள் உறுப்பினர்களை பிரதேச ஒருங்கிணைப்பு குழுக்களுக்கு நியமித்து அவர்களுக்கான சிறப்புரிமைகளை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. பின் கதவின் ஊடாக வழங்கப்படும் இவ்வாறான அரசியல் நியமனங்கள் சட்டத்துக்கு முரணானவையாகும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் ...

மேலும்..

சட்டவிரோத மணல் அகழ்வினால் அழிந்துவரும் சுண்டிக்குளம் பிரதேச வளங்கள்

கிளிநொச்சி, தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுண்டிக்குளம் கல்லாற்றுப் பகுதியில் உள்ள பல ஏக்கர் வனப்பகுதியும், சுண்டிக்குளம் பறவைகள் சரணாலயமும் (தேசிய பூங்கா) சட்ட விரோத மணல் அகழ்வு காரணமாக அழிக்கப்பட்டு வருகிறது. இதனால் தமது பிரதேசம் வளம் குன்றி காணப்படுவதாக அப்பகுதி மக்கள் கவலையடைந்துள்ளனர். அவர்கள் மேலும் ...

மேலும்..

இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவளிக்க சீனா தயார்!

சீனாவின் வாங் யூபோ மாகாணத்துக்கும் இலங்கைக்கும் இடையில் நெருங்கிய ஒத்துழைப்பை ஏற்படுத்துவதற்கான வழிமுறைகளை ஆராயுமாறு யுன்னான் மாகாண ஆளுநர் வாங் யூபோ தெரிவித்துள்ளார். வாங் யூபோ மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்த்தனவிற்கும் இடையில் அலரி மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனைத் ...

மேலும்..

சுற்றுலா முகவர் சங்க மாநாடு இந்த முறை இலங்கையிலாம்! ஹரின் பெர்னாண்டோ கூறுகிறார்

இந்திய சுற்றுலா முகவர் சங்க மாநாட்டை இந்த வருடம் இலங்கையில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜூலை மாதத்தில் இந்த மாநாட்டை  நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். குறித்த மாநாட்டில்  450 உயர்மட்ட வர்த்தக பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த ...

மேலும்..

இந்தியாவில் இருந்து சட்ட விரோதமாக பொருள் கொண்டுவந்த இருவர் சிக்கினர்

இந்தியாவிலிருந்து அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக கடலட்டைகளைக் கொண்டுவருவதாக கற்பிட்டி விஜய கடற்படையினருக்குக் கிடைக்கெப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய சின்ன அறிச்சாறு கடற்கரைப் பகுதியில் படகொன்றை முற்றுகையிட்டுள்ளனர். இதன்போது 193 கிலோ கிராம் உலர்ந்த கடலட்டைகள், 33 ஆயிரத்து 600 ஷாம்போ பக்கற்றுகள், 198 பாம் போத்தல்கள் ...

மேலும்..

பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் நாடாளுமன்ற செயலாளர் நாயகத்துக்குக் கடிதம்

நாடாளுமன்ற விவாதத்தை நேரில் காண சந்தர்ப்பம் வழங்குமாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். மேற்படி கடிதம் கடந்த வியாழக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது, எதிர்வரும் 24 ஆம் திகதி இடம்பெறவுள்ள வாக்கெடுப்பை ...

மேலும்..

வடமாகாண பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளராக சத்தியமூர்த்தி நியமனம்!

வடக்கு மாகாணத்தின் பதில்  சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி பொறுப்பேற்றுக் கொண்டார். நேற்று (வெள்ளிக்கிழமை) இவர் தனது கடமைகளை பொறுப்பேற்றார், வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஒருவர் நியமிக்கப்படும் வரை பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளராக கடமையாற்றுவதோடு யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் ...

மேலும்..

போதகர்களுடன் எவ்வித தொடர்புகளும் இல்லை! மஹிந்த ராஜபக்ஷ மறுப்பு

ஜெரோம் பெர்னாண்டோ மற்றும் உபேர்ட் ஏஞ்சல் ஆகிய போதகர்களை ஒருமுறைதான் சந்தித்துள்ளதாகவும் அவர்களுடன் எவ்வித தொடர்பும் இல்லை எனவும் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். குறித்த போதகர்களுடன் தனக்கு தொடர்பு இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டுக்குப் பதிலளிக்கும் வகையில் மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு ...

மேலும்..

மலையக மக்கள் உரிமைகள் பெறும்வரை நாம் அஹிம்சை வழியினில் போராடுவோம்! மனோனணேசன் சபதம்

கடந்த 200 வடங்களுக்கு முன் இந்த நாட்டில் குடியேறிய எமது மக்கள் பல துன்ப துயரங்களை அனுபவித்து நாட்டை பொன் விளையும் பூமியாக மாற்றி காண்பித்துள்ளார்கள். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறினார் கடந்த 1948 ஆம் ஆண்டு வெள்ளையர்களிடமிருந்து நாம் சுதந்திரம் பெற்றுவிடோம் ...

மேலும்..

சுதந்திரம்பெற்ற போதிலும் அதன் உரிமைகளை அனுபவிக்க முடியாமல் தற்போதும் வாழ்கிறோம்!  வே.இராதாகிருஷ்ணன் ஆதங்கம்

இலங்கை கடந்த 1948 ஆம் ஆண்டு ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் பெற்ற போதிலும் அந்த சுதந்திரம் மூலம் கிடைக்கப்பெற்ற உரிமைகளை நாம் அனுபவிக்க முடியாமல் இன்றும் இந்த நாட்டில் இருக்கின்றோம். இந்த நாடு சுதந்திரம் பெற முன்னரும் சுதந்திரம் கிடைத்த பின்பும் எமது ...

மேலும்..

ஆளுநர்களை மக்கள் நியமிக்கும் காலம் உதயமாகுதல் வேண்டும்! அருட்தந்தை மா.சத்திவேல் கருத்து

ஆளுநர்களை மக்கள் நியமிக்கும் காலம் உதயமாக வேண்டும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். அவரால் நேற்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை ...

மேலும்..

ஜனாதிபதியுடனான பேச்சுகள் திருப்திகரமானவையாக இல்லை!  தவராசா கலையரசன் அதிருப்தி

ஜனாதிபதியுடனான பேச்சுகள் திருப்திகரமானவையாக அமையவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் குறிப்பிட்டார். மட்டக்களப்பு அம்பாறை இலங்கைத்  தமிழரசுக்கட்சி கிளை ஏற்பாடு செய்த வலிசுமந்த முள்ளிவாய்க்கால் மே 18 நிகழ்வின் 14 ஆவது நிறைவை அனுஷ்டிக்கும் முகமாக நாவிதன்வெளி 15 ஆம் கிராமம் ...

மேலும்..

பிரித்தானிய அமைப்புகளால் ஐக்கிய இராச்சியத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு பேரணி மே 18 நடந்தது!

உலகளாவிய ரீதியில்  வியாழக்கிழமை மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இறுதி நாள் நிகழ்வுகள் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. அந்த வகையில் பிரித்தானியாவின் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு மற்றும் தமிழ் இளையோர் அமைப்பு என்பன ஒன்றிணைந்து  ஐக்கிய இராச்சியம் ஊடாக இலங்கை அரசுக்கு அழுத்தம் ...

மேலும்..

கனடா பூநகரி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் விக்கேஸ்வராவுக்கு பல்நோக்கு மண்டபம்!

கனடா  பூநகரி ஒன்றியம்தைச் சேர்ந்த செல்வக்குமாரின் நிதி அனுசரணையில் பூநகரி விக்னேஸ்வரா வித்தியாலயத்துக்கு பொதுநோக்கு மண்டபம் அமைக்கப்பட்டு கடந்த வாரம் மாணவர்களின் பாவனைக்காகத் திறந்துவைக்கப்பட்டது. பாடசாலை முதல்வர் லயன் ஜி.லெனின்குமார் தலைமையில் நடைபெற்ற மேற்படி திறப்பு விழாவில் கிளிநொச்சி தெற்கு கல்வி வலய ...

மேலும்..

மலையகம் 200 நிகழ்வு நுவரெலியாவில் ஆரம்பம்

மலையகம் 200 வரலாற்றை சிறப்பிக்கும் வகையில் கண்டி சமூக அபிவிருத்தி நிறுவகம்,மலையக தமிழர் மரபு ஆகியவை நுவரெலியாவில் ஒழுங்கு செய்திருந்த மூன்று நாள் நிகழ்வின் ஆரம்ப நிகழ்வு  இன்று வெள்ளிக்கிழமை (19) ஆரம்பமானது. கண்டி சமூக அபிவிருத்தி நிறுவக  நிறைவேற்று பணிப்பாளர் பி.முத்துலிங்கம் ...

மேலும்..