சிறப்புச் செய்திகள்

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கஞ்சாகடத்த முயன்ற அறுவர் கைது! 

இந்தியா- தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக தயார்படுத்தப்பட்டிருந்த 2090 கிலோ கஞ்சாவுடன் 6 பேர் தூத்துக்குடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் ஆந்திரா மாநிலத்தில் இருந்து தொடர்ச்சியாக கும்பல் ஒன்று திட்டமிட்டு தமிழகம், கேரளா மற்றும் தூத்துக்குடிக்கு ...

மேலும்..

சகலரும் ஒன்றிணைந்து அரசமைப்பதன் மூலமே நாட்டை முன்னோக்கிக் கொண்டுசெல்ல முடியும்!  மைத்திரி ஆலோசனை

சமுர்த்திக் கொடுப்பனவுகள் உள்ளிட்ட நலன்புரி உதவிகளை வழங்கும் போது தகுதியில்லாதவர்களுக்கும் அவை வழங்கப்படுகின்றன. இந்த பிழையான வழியில் இருந்து மீண்டு நாட்டை  முன்னுக்கு கொண்டு செல்ல அனைவரும் ஒன்றிணைந்து தேசிய அரசாங்கம் அமைக்கப்படவேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற ...

மேலும்..

கண் சத்திரசிகிச்சைகளினால் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு!   அமைச்சரவையில் பிரஸ்தாபிப்பேன் என்கிறார் ஜீவன்

நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட கண் சத்திரசிகிச்சையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.இது தொடர்பில் அமைச்சரவையிலும் வலியுறுத்தவுள்ளேன்  என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ...

மேலும்..

உணவகம் ஒன்றுக்கு யாழ்ப்பாணத்தில் ‘சீல்’!

யாழ்ப்பாணம் ஆனைப்பந்தி சந்திக்கு அண்மையில் உள்ள உணவகம் ஒன்றிற்கு நீதிமன்ற உத்தரவுக்கு அமைய யாழ்.மாநகர சபை பொது சுகாதார பிரிவினரால் , சீல் வைக்கப்பட்டுள்ளது. குறித்த கடையில் வியாழக்கிழமை வாங்கிய கொத்து ரொட்டியினுள் பழுதடைந்த இறைச்சி காணப்பட்டதாக நபர் ஒருவர் பொது சுகாதாரப் ...

மேலும்..

ஏ.எவ்.பி. இலங்கை புகைப்பட ஊடகவியலாளருக்கு மனித உரிமைகள் ஊடகவியலில் சர்வதேச விருது!

2023 ஆம் ஆண்டுக்கான மனித உரிமைகள் ஊடகவியல் விருதினை ஏ.எவ்.பி. இன் இலங்கையின் கொழும்பு புகைப்பட ஊடகவியலாளர் ஒருவர் வென்றுள்ளார். நியூயோர்க்கை தளமாகக் கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகம், அரிசோனா மாநில பல்கலைக்கழகம் மற்றும் வணிக ஊடகவியலுக்கான ரெனோல்ட்ஸ் மையம் ஆகியவற்றால் ஏற்பாடு ...

மேலும்..

கல்முனை வலய கோட்டமட்ட விளையாட்டுப் போட்டிகள் மசூர் மௌலானா விளையாட்டு மைதானத்தில் ஆரம்பம்!

நூருல் ஹூதா உமர், ஏ.எல்.எம்.ஷினாஸ் கல்முனை கல்வி வலயத்துக்குட்பட்ட கல்முனை கோட்ட மட்ட பாடசாலைகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டி நிகழ்ச்சிகள் கல்முனை வலயக்கல்வி அலுவலக உதவிக்கல்வி பணிப்பாளரும், கல்முனை கோட்டக்கல்விப் பணிப்பாளருமான ஏ.பி.பாத்திமா நஸ்மியா சனூஸ் தலைமையில் மருதமுனை மசூர் மௌலானா விளையாட்டு ...

மேலும்..

எல்பின்’ ஆற்றுநீரில் இரசாயனக் கலவை உரிய நடவடிக்கை மேற்கொள்ளுங்கள்!  அரவிந்தகுமார் வேண்டுகோள்

'எல்பின் ஆற்றுநீர் இரசாயன கலவைக்கு உட்பட்டிருப்பதானது நுவரெலியா மாவட்டத்துக்கும் அங்குவாழ் மக்களுக்கும் பாரிய ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால் மிக விரைவாகவே இந்த விடயத்தில் தலையீடு செய்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் நுவரெலியாமாவட்ட அரச அதிபரை ...

மேலும்..

காலி முகத்திடல் போராட்ட கள தாக்குதல்தாரிகள் ஜனாதிபதி ரணிலின் தலைமையின்கீழ் உள்ளனராம்!   சுமந்திரன் சாடல்

காலி முகத்திடல் ஜனநாயக போராட்டத்தை வன்முறையாக மாற்றியமைத்த தரப்பினர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் உள்ளார்கள். முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷர்களின் ஆதரவாளர்கள் தான் அமைதி வழி போராட்டத்தின் மீது தாக்குதல் நடத்தினார்கள். ஆகவே, போராட்டத்தை தற்போது விமர்சிப்பது பயனற்றது என தமிழ்த் ...

மேலும்..

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் விபத்தின் பாதிப்பை முழுநாடும் என்றாவது ஒருநாள் எதிர்கொள்ளும்!  உதய கம்மன்பில எச்சரிக்கை

சட்டமா அதிபர் திணைக்களம் மக்களின் வரிப்பணத்தில் இயங்குகிறது. ஆகவே சட்டமா அதிபர் திணைக்களத்தின் செயற்பாடுகளை மக்கள் கேள்வி கேட்க முடியும். எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தால் கடல் வளங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை முழு நாடும் என்றாவது எதிர்கொள்ளும் என நாடாளுமன்ற உறுப்பினர் ...

மேலும்..

சோழர்காலத்தில் கட்டப்பட்ட உருத்திரபுரீஸ்வரர் சிவனாலயக் காணியிலும் தொல்பொருள்களாம்! 

கிளிநொச்சி உருத்திரபுரம் சிவன் ஆலயம் அமைந்துள்ள காணியில் தொல்பொருள்கள் இருப்பதாக தொல்லியல் திணைக்களம் அடையாளப்படுத்தியுள்ளது. இந்துக்களின் பொற்காலமாகக் கருதப்படும் சோழர்காலத்தில் முற்றுமுழுதாக திராவிடக் கட்டடக் கலைமரபை பின்பற்றி உருத்திரபுரீஸ்வரர் சிவாலயம் கட்டப்பட்டது. வரலாற்றுத் தொன்மையும், பழைமையும் வாய்ந்த சிவாலயத்தை அபகரிப்பதற்கான முயற்சிகள் தொல்பொருளியல் திணைக்களத்தினரால் ...

மேலும்..

திருகோணமலை சிவன் கோவிலுக்கு முன்பாக முள்ளிவாய்க்கால் கஞ்சி! 

இறுதி யுத்தத்தில் உயிர் நீத்த உறவுகளை நினைவு கூரும் முகமாக நேற்று திருகோணமலை சிவன் கோவிலுக்கு முன்பாக முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறப்பட்டது. இறுதி யுத்தத்தின் போது, மக்களை பட்டினியில் இருந்து காப்பதற்காக, சில தன்னார்வ அமைப்புகள், தங்களிடம் இருந்த அரிசியைப் பங்கிட்டு முள்ளிவாய்க்கால் ...

மேலும்..

சர்வதேச தாதியர் தின நிகழ்வு கிளிநொச்சியில் இடம்பெற்றது!

சர்வதேச தாதியர் தின நிகழ்வுகள் கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது, மேற்படி நிகழ்வு வெள்ளிக்கிழமை)காலை கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை மண்டபத்தில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் கிளிநொச்சி வைத்தியசாலையின் தாதியர்கள் வைத்தியர்கள், என பலரும் கலந்து கொண்டதுடன், சர்வதேச தாதியர் தின நிகழ்வு சிறப்பான முறையில் ஏற்பாடு ...

மேலும்..

மக்களை வேண்டும் என்றே ஏழைகளாக்கியுள்ளது அரசு!  கபீர் ஹாசிம் குற்றச்சாட்டு

பொதுஜன பெரமுன கடந்த காலங்களில் மக்களை வேண்டுமென்றே ஏழைகளாக்கியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் குற்றம் சாட்டியுள்ளார். நலன்புரி கொடுப்பனவுகள் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே கபீர் ஹாசிம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 2019 ஆம் ஆண்டில் 11 வீதமாக ...

மேலும்..

சர்வதேச நாணய நிதியத்துடன் நெருக்கமாக செயற்படவேண்டும்!   நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் கருத்து

சர்வதேச நாணய நிதியத்துடன் நெருக்கமாக செயற்படுவதன் மூலம் தற்போதுள்ள ஒப்பந்தங்களை மேலும் வலுப்படுத்த முடியும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு நாட்டிற்கு விஜயம் செய்துள்ளமை அதற்கான சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது என ...

மேலும்..

சம்பிக்கவுக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத்தடை நீக்கம

நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத்தடையை நீக்கி கொழும்பு மேல் நீதிமன்றம் நவெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி, தனது கட்சிக்காரர் தனது மகளைப் பார்ப்பதற்காக கனடா செல்ல விரும்புகிறார் என நீதிமன்றத்தில் தெரிவித்தார். 2016ஆம் ஆண்டு ...

மேலும்..