சிறப்புச் செய்திகள்

சோழர்காலத்தில் கட்டப்பட்ட உருத்திரபுரீஸ்வரர் சிவாலயக் காணியிலும் தொல்பொருட்களாம் !!

கிளிநொச்சி உருத்திரபுரம் சிவன் ஆலயம் அமைந்துள்ள காணியில் தொல்பொருட்கள் இருப்பதாக தொல்லியல் திணைக்களம் அடையாளப்படுத்தியுள்ளது. இந்துக்களின் பொற்காலமாகக் கருதப்படும் சோழர்காலத்தில் முற்றுமுழுதாக திராவிடக் கட்டடக் கலைமரபை பின்பற்றி உருத்திரபுரீஸ்வரர் சிவாலயம் கட்டப்பட்டது. வரலாற்றுத் தொன்மையும், பழமையும் வாய்ந்த சிவாலயத்தை அபகரிப்பதற்கான முயற்சிகள் தொல்பொருளியல் திணைக்களத்தினரால் ...

மேலும்..

எக்ஸ்பிரஸ் பேர்ள் விபத்தினால் பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கு நான்காம் கட்ட நட்டஈடு!

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தில் பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கு நான்காம் கட்ட நட்டஈடாக சுமார் 160.5 கோடி ரூபாய்க்கான காசோலைகள்  வழங்கும் நிகழ்வு வியாழக்கிழமை (11) கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையிலும் கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த டி சில்வாவின் ...

மேலும்..

முச்சக்கர வண்டிகளை மின்சார முச்சக்கர வண்டிகளாக மாற்றும் முன்னோடி திட்டம்

பெட்ரோல் மூலமான முச்சக்கர வண்டிகளை மின்சார  முச்சக்கர வண்டிகளாக மாற்றுவதற்கான முன்னோடி திட்ட ஆரம்ப விழா, பொரலஸ்கமுவ- வேரஹேரவிலுள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் வியாழக்கிழமை (11) பிற்பகல் போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு ஐக்கிய நாடுகள் ...

மேலும்..

275,000 மெற்றிக்தொன் எரிபொருள் கசிந்திருந்தால் போர்ள் கப்பலால் பாரியவிளைவுகள் ஏற்பட்டிருக்கும்!  நாலக கொடஹேவா கருத்து

தீ விபத்துக்கு உள்ளான நியூ டைமன் கப்பலை நாட்டின் கடற்பரப்பில் வைத்திருப்பது அவதானத்துக்குரியது. தீ விபத்தால் ஏற்பட்ட செலவுகளை வைப்பிலிட்டதும் கப்பலை வெளியேற்றுமாறு அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எடுத்த தீர்மானம் சிறந்தது. துரதிஷ்டவசமாக கப்பலில் சேமிக்கப்பட்டிருந்த 275,000 மெற்றிக் தொன் எரிபொருள் ...

மேலும்..

மண்ணெண்ணெய் உடலில்பட்ட சாரைப்பாம்பு போன்று கலக்கமடைகின்றார் நீதி அமைச்சர்!   அஜித் மான்னப்பெரும  போட்டுத்தாக்கு

எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரத்தில் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ மண்ணெண்ணெய் உடலில் பட்ட சாரை பாம்பு போல் கலக்கமடைகிறார். அவரது செயற்பாடு பிரச்சினைக்குரியதாக  உள்ளது. நல்லாட்சி அரசாங்கத்தில் பிறிதொரு தரப்புடன் டீல் செய்ததால் அமைச்சு பதவியில் இருந்து நீக்கப்பட்டார். கப்பலின் பிரதிநிதிகள் இலங்கைக்கு ...

மேலும்..

சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்தை அரசு மீறியுள்ளது!  கிரியெல்ல குற்றச்சாட்டு

அரசாங்கம் சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாப்பதாக வழங்கிய வாக்குறுதியின் அடிப்படையிலேயே சர்வதேச நாணய நிதியம் நிதி உதவி வழங்கி இருக்கிறது. ஆனால் அரசாங்கம் தேர்தலை நடத்தாமல் நீதிமன்ற உத்தரவை மீறியதன் மூலம் நாணய நிதியத்தின் ஒப்பந்தத்தை மீறியுள்ளது என  எதிர்க்கட்யின் பிரதமகொறடா லக்ஷ்மன் ...

மேலும்..

வேட்பாளர்களான அரச ஊழியர்களின் பெருமளவு பிரச்சினைகளுக்குத் தீர்வு!  என்கிறாhர் பிரதமர் தினேஸ் குணவர்தன

வேட்பாளர்களான அரசாங்க ஊழியர்களின் சம்பளம் உள்ளிட்ட பெருமளவு பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது. எஞ்சிய சிறுசிறு பிரச்சினைகள் தொடர்பில் மீண்டும் தேர்தல் ஆணைக்குழுவுடன் பேச்சு நடத்தி தீர்வு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் தயாசிறி ஜயசேகர மற்றும் ...

மேலும்..

கர்மவினை எனத் தெரிவித்து மக்கள் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள்மீது திட்டமிட்ட தாக்குதல்கள்!  நடவடிக்கை எடுக்க வேண்டும் என சஜித் கோரிக்கை

கடுவலையில் அப்பாவி ஒருவர்  மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் ஒட்டுமொத்த மக்கள் போராட்டங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களின் ஒரு கட்டமாகும். அதனால் அமைதியானமுறையில் போராட்டங்களில் கலந்துகொண்டவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் விசேட கூற்றொன்றை முன்வைத்து ...

மேலும்..

கனடாவின் ஒன்டாரியோவில் ஒருவாரத்துக்கு தமிழினப் படுகொலை அறிவூட்டல் பிரகடனம்! ( அந்த மாகாண எம்.பி. விஜய் தணிகாசலம் அறிவிப்பு

கனடாவின் ஒன்ராரியோ மாகாணத்தில் இன்று முதல் எதிர்வரும் ஒருவாரகாலம் 'தமிழினப்படுகொலை அறிவூட்டல் வாரமாக' பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இலங்கையில் இடம்பெற்ற தமிழினப்படுகொலை தொடர்பில் இக்காலப்பகுதியில் அறிந்துகொள்ளுமாறு கனடாவின் ஒன்ராரியோ மாகாண நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம் உலகமக்களிடம் வலியுறுத்தியுள்ளார். தமிழினப்படுகொலை அறிவூட்டல் வாரம் தொடர்பில் ...

மேலும்..

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஏற்பாட்டில் நல்லூரில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல்! 

யாழ்ப்பாணம்-  நல்லூரில் முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட மக்கள் நினைவாக கஞ்சி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. நல்லூரில் உள்ள தியாகதீபம் திலீபனின் நினைவுத் தூபி முன்பாக நேற்று (வியாழக்கிழமை) குறித்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணி தலைவி வாசுகி சுதாகரன் ...

மேலும்..

சுனாமி, யுத்தம், கொரோனா ஆகிய அழிவுகளிலும் நிதிமோசடி செய்தவர்கள் இன்றும் நாடாளுமன்றில்! அநுரகுமார காட்டம்

சுனாமி, யுத்தம், கொவிட் பெருந்தொற்று ஆகியவற்றின் ஊடாக ஏற்பட்ட அழிவுகளிலும் நிதி மோசடி செய்தவர்கள் இன்றும் நாடாளுமன்றத்தில்  அங்கம் வகிக்கிறார்கள். எங்கோ சென்ற கப்பலை நாட்டு அழைத்து, அழித்து கடலில் மூழ்கடித்து விட்டு தற்போது நட்டஈடு பெற்றுக்கொள்வதை அரசாங்கம் நியாயப்படுத்துகிறது. ஊழல் மோசடிகள் ...

மேலும்..

கிணற்றில் விழுந்து இளம்பெண் சாவு!

யாழ்ப்பாணம்- கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உரும்பிராய் பகுதியை சேர்ந்த இளம் குடும்பப்பெண் ஒருவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் கடந்த புதன்கிழமை பதிவாகியுள்ளது. சம்பவ தினத்திற்கு முதல்நாள் இரவு குறித்த பெண் நித்திரைக்கு சென்ற நிலையில் அடுத்தநாள் காலையில் குடும்பதினர் தேடியபோது வீட்டுக்கு ...

மேலும்..

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி சுவீடன் பயணம்: இந்தோ – பசுபிக் அமைச்சுமட்ட மாநாட்டில் பங்கேற்பு! 

இந்தோ - பசுபிக் பிராந்திய அமைச்சர்மட்ட மாநாட்டில் பங்கேற்பதற்காக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இன்று (வியாழக்கிழமை) சுவீடன் பயணமானார். இரண்டாவது இந்தோ - பசுபிக் அமைச்சர்மட்ட மாநாடு சுவீடனின் ஸ்ரொக்ஹோம் நகரில் சனிக்கிழமை நடைபெறவுள்ளது. ஐரோப்பிய வெளிவிவகார செயற்பாட்டுப்பிரிவுடன் இணைந்து சுவீடனால் ஏற்பாடு ...

மேலும்..

முள்ளிவாய்க்கால் கஞ்சி வவுனியாவில் வழங்கல்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு நேற்று (வியாழக்கிழமை) வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்துக்கு முன்பாக இடம்பெற்றது. தமிழர் தாயகம் எங்கும் பயணித்து முள்ளிவாய்க்கால் கஞ்சியைப் பரிமாறி தமிழ் மக்கள் இனவழிப்புக்கு உள்ளான வரலாற்றையும் , வலிகளையும் ...

மேலும்..

ஊடகவியலாளர்களின் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன! நீதிக்கான மையத்தின் ஏற்பாட்டில்

நூருல் ஹூதா உமர் நீதிக்கான மையத்தால் ஊடகவியலாளர்களின் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு மையத்தின் சாய்ந்தமருது காரியாலயத்தில் கடந்த புதன்கிழமை இடம்பெற்றது. சிலோன் மீடியா போரத்தின் தலைவர் கலாநிதி றியாத் ஏ.மஜீத் விடுத்த வேண்டுகோளை ஏற்று நீதிக்கான மையத்தால் இந்த கற்றல் ...

மேலும்..