சிறப்புச் செய்திகள்

கணிதப் போட்டியில் 11 நாடுகளுடன் போட்டியிட்டு சாதனை படைத்த 7 வயது மாணவி

கொழும்பு, சைவ மங்கையர் வித்தியாலயத்தில் தரம் இரண்டில் கல்வி கற்கும் மாணவி மகேஷ்வரன் விவிஷனா தனியார் கல்வி நிறுவனமொன்று ஏற்பாடு செய்திருந்த 11 நாடுகள் பங்கேற்ற கணிதப் போட்டியில் முதலிடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பு, சுகததாச உள்ளக அரங்கில் ...

மேலும்..

முதுமையில் உள்ள சம்பந்தன் எம்.பி.பதவியை துறக்க வேண்டும் – சுமந்திரன் பகிரங்க கோரிக்கை

இலங்கை தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவரும்,  திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் அவருடைய முதுமை காரணமாக செயற்பாட்டு அரசியலில் பங்களிப்புச் செய்யமுடியாதிருப்பதன் காரணமாக அவர் தனது பதவியைத் துறக்க வேண்டுமென அக்கட்சியின் பேச்சாளரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் பகிரங்கமாக ...

மேலும்..

மன்னார், சிலாவத்துறை மத்தியமகா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட புதிய இரு மாடிக் கட்டடம் திறப்பு!

மன்னார் சிலாவத்துறை மத்திய மகா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட 'குவைத் ஸகாத்'  நிறுவனத்தால் புதிய இரண்டு மாடிக் கட்டடத்தின் திறப்பு விழா திங்கட்கிழமை நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தலைமையில் நடைபெற்றது. கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தானின் ...

மேலும்..

மீண்டும் வரிசை யுகம் ஏற்படுமாம்! எச்சரிக்கிறார் ரங்கே பண்டார

மின்சார கட்டண அதிகரிப்பு மக்களுக்கு தாங்கிக்கொள்ள முடியாத சுமை என்பதை ஏற்றுக்கொள்கிறோம். என்றாலும் குறுகிய காலத்துக்காவது இதனை தாங்கிக்கொள்ளாவிட்டால்  மீண்டும்  வரிசை நிலைமைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ரங்கே பண்டார தெரிவித்தார். ஐக்கிய ...

மேலும்..

மட்டக்களப்பில் வெளிநாட்டு மோகத்தினால் 100 இற்கும் மேற்பட்ட இளைஞர்கள் நிர்க்கதி! சாணக்கியனிடம் அவர்கள் அடைக்கலம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 100 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வெளிநாடு மோகத்தால் பணத்தை இழந்துள்ளனர் எனக் குறிப்பிட்டு நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனிடம் முறைப்பாடு அளித்துள்ளனர். சுமார் 8 கோடி ரூபாவை போலி முகவர்களின் ஆசைகளை நம்பி இழந்துள்ளதாகவும் தற்போது நிர்க்கதிக்குள்ளான ...

மேலும்..

மூன்று புதிய தூதுவர்கள் ஜனாதிபதியிடம் தமது நற்சான்றிதழ்களை கையளித்தனர்

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள  இலங்கைக்கான மூன்று தூதுவர்கள் செவ்வாய்க்கிழமை முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் தமது நற்சான்றிதழ் பத்திரங்களை கையளித்தனர். சுவிற்ஸர்லாந்து, ஐரோப்பிய யூனியன் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு  இவ்வாறு புதிய தூதுவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இன்று நற்சான்றிதழ்கள் சமர்ப்பிக்கப்பட்ட தூதுவர்களின் பெயர்கள் ...

மேலும்..

சீனாவின் வியாபாரம் வடக்கிலும் ஆரம்பம்!

கடந்த சில காலமாக சீனாவின் உற்பத்திகளை இலங்கையின் தென் மற்றும் மேல் மாகாணங்களில் விற்பனை செய்வது மற்றும் வியாபாரங்களில் ஈடுபடுவது என ஆரம்பித்திருந்தனர். இந்நிலைமை, தற்போது வடக்கிலும் ஆரம்பித்துள்ளது. இந்த மாத ஆரம்பத்தில் யாழ்ப்பாணத்தில் சினோபெக் நிறுவனம் பெற்றோல் விநியோகத்தை ஆரம்பித்த நிலையில் ...

மேலும்..

பொலிஸாரால் மர நடுகை வேலைத்திட்டம் ஆரம்பம்!

இயற்கையை நேசித்து சமூக நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் நோக்கில் அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தமயந்த விஜயஸ்ரீ ஏற்பாட்டில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ்.ஜெயலத் தலைமையில் பொலிஸாரால் மர நடுகை வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. சுற்றுச்சூழல் பிரிவுப் பொறுப்பதிகாரி உப பொலிஸ் ...

மேலும்..

மீன்களின் இறக்குமதி தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் அதிரடித் தீர்மானம்!

இலங்கையில் அறுவடை செய்யப்படாத மீன்களையே இறக்குமதி செய்ய அனுமதித்துள்ளதாக கடற் தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்டத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ” இலங்கை கடற்றொழிலாளர்களுக்கு பாதிப்பு ...

மேலும்..

மன் ,விடத்தல் தீவு தூய ஜோசப்வாஸ் மகாவித்தியாலயத்தில் நவராத்திரியின் விஜய தசமி நாள் மிக சிறப்பாக நடைபெற்றது

மன்னார் மடு கல்வி வலயத்திற்க்குட்பட்ட மன் ,விடத்தல் தீவு தூய ஜோசப்வாஸ் மகாவித்தியாலயத்தில் நவராத்திரியின் விஜய தசமி நாள் மிக சிறப்பாக நடைபெற்றது இந் நிகழ்வின் பாடசாலையின் முதல்வர் கியூமர்பயஸ் அவர்களின் தலைமைநடைபெற்றது இந் நிகழ்வின் வரவேற்புரையினை இணை சைவ சமய ஆசிரியை வளர்மதி ஆற்றியதை தொடர்ந்து கலை நிகழ்வு நடை பெற்றது தொடர்ந்து நவராத்திரி தொடர்பான கருத்துரையினை தமிழ் பாட ஆசிரியர் ...

மேலும்..

போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்த அதிரடித் தீர்மானம்!

வெளிநாடுகளிலிருந்து போதைப்பொருட்கள் நாட்டிற்குள் கொண்டுவரப்படுவதைத் தடுப்பதற்காக ” போதைப்பொருள் தடுப்பு கட்டளை நிறுவனமொன்று” ஸ்தாபிக்கப்படுமென தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”கடற்படை, பொலிஸ் மற்றும் ஏனைய அரச நிறுவனங்களுடன் ...

மேலும்..

தபாலில் பறிமாறப்படும் போதைப்பொருள்?

கொழும்பு மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்திற்கு பொதைப்பொருள் பொதியை எடுத்து செல்வதற்காக வந்த இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இதன்போது பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கிசூடு நடத்தியதையடுத்து பதற்றமான சூழல் ஏற்பட்டது. கொழும்பு டி.ஆர்.விஜேவர்தன மாவத்தை மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்திற்கு பொதி ஒன்றை ...

மேலும்..

ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகள் பிறப்பு: தியாகி அறக்கொடை நிறுவுநர் நிதியுதவி!

ஒரே பிரசவத்தில்  ஆறு ஆண் பிள்ளைகளை பிரசவித்துள்ள கம்பஹா வியாங்கொடை பிரதேசத்தில் வசிக்கும் 37 வயதான மதுகீ லக்சிகா இசுறூ பெரோரா தம்பதியினருக்கு  நாட்டின் பொருளாதார நெருக்கடி மிக்க சூழ் நிலையை கருத்தில் கொண்டு குழந்தைகளுக்கான பராமரிப்பு நிதியுதவிகள் தியாகி அறக்கொடை ...

மேலும்..

காஸா மக்கள் முகங்கொடுத்துவரும் துயரங்கள் தொடர்பில் மததலைவர்களிடம் பலஸ்தீன தூதர் கண்ணீர் மல்க விவரிப்பு!

பலஸ்தீன மக்களுடனான தமது ஆதரவை வெளிப்படுத்தி கொழும்பிலுள்ள பலஸ்தீன தூதரகத்தில் ஒன்றுகூடிய பல்மதத்தலைவர்கள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களுக்கு நன்றி தெரிவித்த பலஸ்தீன தூதுவர் கலாநிதி சுஹைர் ஹம்தல்லா செயிட், காஸா மக்கள் முகங்கொடுத்துவரும் துயரங்கள் குறித்து அவர்களிடம் கண்ணீர்மல்க எடுத்துரைத்தார். ஹமாஸ் ...

மேலும்..

சுகாதாரத்துறையை மீட்டெடுக்க ஜனாதிபதிக்கு பொறுப்புள்ளதாம்! அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கூறுகிறது

சாதாரண மக்களுக்கு சுகாதார துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள்  தொடர்பில் தெளிவுப்படுத்த வேண்டும். சுகாதார துறையை மீட்டெடுக்க ஜனாதிபதிக்கு முக்கிய பொறுப்புள்ளது. கட்டாயமாக ஜனாதிபதியின் தலையீடு இதற்கு அவசியமாகும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித்த அலுத்கே தெரிவித்தார். சுகாதார ...

மேலும்..