சிறப்புச் செய்திகள்

இனவாதம் என்ற மனநோயால் ஆட்சியாளர்கள் பாதிப்பு இவ்வாறானவர்களால் நாட்டை கட்டியெழுப்ப முடியாது!   கஜேந்திரன் எம்.பி. சாட்டை

ஆட்சியாளர்கள் இனவாதம் என்ற மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இவ்வாறானவர்களால் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது. இனவாத மன நோய்க்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தமிழர் தேசம் அங்கீகரிக்கப்பட வேண்டும். ஒற்றையாட்சி முறையை நீக்கி சமஷ்டியை அமுல்படுத்தி  ஒரு தேசம், இறைமை, சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்தும் சமஷ்டி ...

மேலும்..

தமிழர்களின் இனப்பிரச்சினைக்கு உரிய தீர்வை வழங்கினால் வடக்கு – கிழக்கை பொருளாதார கேந்திர மையமாக்குவோம்! சாணக்கியன் அரசுக்கு சவால்

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பால் பொருளாதார நெருக்கடிக்கு நிலையான தீர்வு காண முடியாது. நாட்டில் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்குத் தீர்வு வழங்கினால் புலம்பெயர்ந்து வாழும் தமிர்களின் முதலீடுகளை பெற்றுக்கொள்ள முடியும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை பொருளாதார கேந்திர மையமாக எம்மால் மாற்றியமைக்க முடியும். ...

மேலும்..

கடன் மறுசீரமைப்பை முறையாக மேற்கொண்டால் 14 பில்லியன் டொலர்கள் நிவாரணமாக பெறலாம்!   அலி சப்ரி கூறுகிறார்

நெருக்கடி நிலையில் இருந்து மீள்வதற்காக சர்வதேச நாணய நிதியம் சில வழிகாட்டல்களையே எமக்கு வழங்கியுள்ளது அதனை பின்பற்றுவதும் கைவிடுவதும் எமது கைகளிலேயே தங்கியுள்ளது. என்றாலும் கடன் மறுசீரமைப்பை முறையாக மேற்கொண்டால் அதன் மூலம் நாட்டுக்கு 14 பில்லியன் அமெரிக்க டொலர்களை நிவாரணமாகப் பெற்றுக்கொள்ள ...

மேலும்..

தமிழர்களுக்கு யாழ்ப்பாணத்தில் அமெரிக்கத் தூதரகம் தேவை!   காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கோரிக்கை

யாழ்ப்பாணத்தில் அமெரிக்கத் தூதரகக் கிளையைத் திறக்குமாறு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தை இந்நாளில் வேண்டுகிறோம் என தாயகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்தனர். வவுனியாவில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் சிவராமின் நினைவு தினம் நேற்று (வெள்ளிக்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டதன் பின்னர் ...

மேலும்..

மட்டக்களப்பில் மண் அகழ்வு அனுமதிப்பத்திரத்தை வழங்கக்கோரி கொடும்பாவி எரித்து ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கனிப் பொருள் அகழ்வு அனுமதிப் பத்திரங்களை வழங்கக்கோரி எங்களையும் வாழ விடுங்கள் என்னும் தொனிப்பொருளில் கனிமம் அகழ்வு அனுமதிப்பத்திர உரிமையாளர் சங்கம் 15 கோரிக்கைகளை முன்வைத்து வெள்ளிக்கிழமை (28)  கல்லடியுள்ள புவிசரிதவியல் அளவை மற்றும் சுரங்க  ...

மேலும்..

பல்கலைக்கழக மாணவ ஒன்றிய தலைவர்களான கெலும் மற்றும் டில்ஷானை விடுவிக்குமாறு கோரி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

பொலிஸாரால்  கைது செய்யப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவ ஒன்றிய தலைவர்களான கெலும் மற்றும் டில்ஷான் ஆகியோரை விடுவிக்கக்கோரியும் , ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தை கண்டித்தும் களனி பல்கலைக்கழக முன்றலில் களனி பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றில் வெள்ளிக்கிழமை (28) ஈடுபட்டனர்.

மேலும்..

பேர்ள் விவகாரத்தில் மக்களுக்கு உண்மையை பகிரங்கப்படுத்த தெரிவுக்குழுவை ஸ்தாபிக்குக! நீதியமைச்சர் விஜயதாஸ வலியுறுத்து

எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தால் ஏற்பட்ட பாதிப்புக்கு நட்ட ஈடு பெற்றுக்கொள்ள வழக்கு தாக்கல் செய்வதை தடுக்க பலம் வாய்ந்த தரப்பினர் தொடர்ந்து பாரிய முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். நாட்டு மக்களுக்கு உண்மையைப் பகிரங்கப்படுத்த வேண்டும். நியூ டைமன், எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரம் ...

மேலும்..

சர்வதேச நாணய நிதியத்தினது அனைத்து நிபந்தனைகளையும் நடைமுறைப்படுத்தோம்!  சுசில் பிரேம ஜயந்த அடித்துக் கூறுகின்றார்

எந்த வங்கிகளிலும் எந்த நாட்டிலும் கைம்மாற்று முறையிலாவது கடன் பெற முடியாத ஒரு நிலையிலேயே சர்வதேச நாணய நிதியம் எமக்குக் கை கொடுத்தது. சர்வதேச நிதியத்தின் அத்தனை நிபந்தனைகளையும் அரசாங்கம் நடைமுறைப்படுத்துவதில்லை எனினும் நடைமுறைப்படுத்த வேண்டியவற்றை  சட்டத்தைக் கொண்டு வந்து  அரசு நடைமுறைப்படுத்தும் ...

மேலும்..

வசந்த கரணாகொடவிற்கு எதிரான அமெரிக்க தடைக்கு ரஸ்யா அதிருப்தி! 

இலங்கை உட்பட இறைமையுள்ள எந்த நாட்டின் உள்விவகாரங்களிலும் தலையிடுவதை  ஏற்றுக்கொள்ள முடியாது என இலங்கைக்கான ரஸ்ய தூதுவர் தெரிவித்துள்ளார். மேற்குலக நாடுகள் தங்கள் பிரச்சினைகள் தொடர்பாக கவனம் செலுத்தவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். நாங்கள் மேற்குலகில் மனித உரிமை மீறல்கள் தொடர்பாகப் பேசுகின்றோம், அவர்களுக்கு ...

மேலும்..

இரசாயன உரத்தடை விவகாரம்: கோட்டா என்னை மிரட்டினாராம்! முன்னாள் அமைச்சர் சந்திரசேன இப்ப இப்படிக் கூறுகிறார்

இரசாயன உரத்தடைக்கு எதிராகக் கருத்து தெரிவித்தால் என்னை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கிவிடுவேன் என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எச்சரித்தார் என முன்னாள் அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார். செய்தியாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்துள்ள அவர், இரசாயன உரங்களுக்கு  தடைவிதிக்கும் அரசாங்கத்தின் தீர்மானம் நாட்டின் ...

மேலும்..

ஜனாதிபதியின் பிரதானி யாழில்! 

ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்னாயக்க மற்றும் இலங்கை இராணுவத் தளபதி விக்கும் லியனகே உள்ளிட்டோர் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு நேற்று (வெள்ளிக்கிழமை) விஐயம் செய்தனர். 2022ஃ2023 ஆம் ஆண்டின் காலபோக  அரசின் நெல் கொள்வனவு ...

மேலும்..

சட்டவிரோத நடவடிக்கைகளை தடுப்பதற்கு விசேட வாகனங்கள் 

கடற்கரையோரங்களை அண்டியதாக இடம்பெறும் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுப்பதற்காக தயாரிக்கப்பட்ட விசேட வாகனங்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பார்வையிட்டுள்ளார். கடற்கரையோரங்களை அண்டியதாக இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகள், பயங்கரவாத நடவடிக்கைகள் மற்றும் பல்வேறு ஆட்கடத்தல்களை தடுப்பதற்காக ஐடியல் மோட்டார் நிறுவனத்தால் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 3 விசேட ...

மேலும்..

சில தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களுக்கு போதையூட்டக்கூடிய வகையில் செயற்படுகின்றார்கள்!  டக்ளஸ் தேவானந்தா சாடல்

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் மக்களுக்கு போதையூட்டக்கூடிய வகையில் கருத்துக்களை வெளியிடுகின்றனர் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இன்று (வெள்ளிக்கிழமை) வேலனை பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற பெரும் போகத்தில் அரசாங்கத்தின் நெல் கொள்வனவு நிகழ்ச்சித் திட்டம் மற்றும் இராணுவத்தின் மேலதிக பங்களிப்புடன் ...

மேலும்..

பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்க ஜனாதிபதி பணிப்புரை! 

விவசாயத்துறையை நவீனமயப்படுத்துவதற்கான முயற்சிகளை அரசாங்கம் அர்ப்பணிப்புடன் மேற்கொண்டு வருகின்ற நிலையில் பெருந்தோட்ட மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வுகளை வழங்க வேண்டியது அவசியம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். பெருந்தோட்ட மறுசீரமைப்பு குழுவுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்ற சந்திப்பொன்றிலேயே ...

மேலும்..

கொரிய நாட்டு வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கையை அதிகரிக்க ஏற்பாடு! அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவிப்பு 

கொரிய நாட்டில் வருட‍மொன்றுக்கு கி‍டைக்கப்பெறும் வேலைவாய்ப்புக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், தற்போது கிடைக்கப்பெறும் 6,500 வேலைவாய்ப்பு எண்ணிக்கையை 8,000 ஆக அதிகரிப்பதற்கான தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார். கொரிய நாட்டு மனிதவள திணைக்களத்தின் பணிப்பாளர் ...

மேலும்..