சிறப்புச் செய்திகள்

அரச உத்தியோகத்தர்கள் குறுகிய காலத்திற்கு துயரங்களை சகித்துக் கொண்டேனும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் – பந்துல!

அரச உத்தியோகத்தர்கள் குறுகிய காலத்திற்கு துயரங்களை சகித்துக் கொண்டேனும் பொருளாதார முன்னேற்றத்துக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “நாணய ...

மேலும்..

பிரச்சினைகளை சபையில் எடுத்துரைக்கும் போது புலிகள் என குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது – சுமந்திரன் காட்டம்!

பிரச்சினைகளை சபையில் எடுத்துரைக்கும் போது புலிகள் என குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(செவ்வாய்க்கிழமை) வாய்மூல விடைக்கான வினாக்களுக்கான வேளையின் போது உரையாற்றிய இரா.சாணக்கியன், “மட்டக்களப்பு மாவட்டத்தில் எழுவான்கரை மற்றும் ...

மேலும்..

விபத்தில் சிக்கிய இளைஞனின் உடல் உறுப்புகள் தானம் ; 5 பேருக்கு வாழ்வளிக்கும் நெகிழ்ச்சிச் சம்பவம்

மட்டக்களப்பு சித்தாண்டியில் இடம்பெற்ற வீதி விபத்தில் உயிரிழந்த இளைஞனின் 5 உடல் உறுப்புக்கள்  தானம் செய்யப்பட்ட நெகிழ்ச்சிச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. வயல்வேலை முடித்து கிரான் பகுதியிலிருந்து சித்தாண்டியிலுள்ள தனது வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தபோது பிரதான வீதியில் கிரானுக்கும் சித்தாண்டிக்கும் இடைப்பட்ட ...

மேலும்..

திருகோணமலையில் தமிழ், முஸ்லிம் பகுதிகள் ஹர்த்தாலால் முடங்கின !

பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலம்,  சிங்களமயமாக்கலை எதிர்த்து வடக்கு, கிழக்கில் இன்று செவ்வாய்க்கிழமை (25) பூரண ஹர்த்தால் இடம் பெறுகின்றது. திருகோணமலை மாவட்டத்தில் தமிழ்,  முஸ்லிம் மக்கள் ஹர்த்தாலுக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் அந்தப் பகுதிகளில் அனைத்து துறைகளும் இன்று முடங்கியுள்ளன. திருகோணமலையில் தமிழ்,  ...

மேலும்..

ஹர்த்தாலால் முழுமையாக முடங்கியது மன்னார் !

வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் இன்று செவ்வாய்க்கிழமை (25) பொது நிர்வாக முடக்கல் போராட்டத்திற்கு தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து அழைப்பு விடுத்துள்ள நிலையில் மன்னார் மாவட்ட வர்த்தக சங்கங்கள், மற்றும் தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம், பொதுமக்கள் உட்பட அனைவரும் பூரண ...

மேலும்..

மட்டக்களப்பில் ஹர்த்தாலால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

பாராளுமன்றத்தில் கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்திற்கு எதிராகவும் பௌத்த மயமாக்கலை எதிர்த்தும் இன்றைய தினம் வடக்கு, கிழக்கில் கடையடைப்பு மற்றும் ஹர்த்தால்  முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த கடை அடைப்பு போராட்டத்திற்கு வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளதுடன் மட்டக்களப்பில் ...

மேலும்..

முல்லைத்தீவில் சேவையில் ஈடுபட்ட அரச பேருந்து மீது கல் வீச்சு

வடக்கு, கிழக்கு தழுவிய தாயக பிரதேசத்தில் அனைத்து வர்த்தக நிர்வாக சேவைகளை முடக்கி முழுமையான ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்திலும் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து அரச பேருந்துக்கள் சேவையில் ஈடுபட்டுள்ளன. முல்லைத்தீவு மாவட்ட ...

மேலும்..

கனடாவிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட அமெரிக்க ‘குஷ்’ கஞ்சா மீட்பு

கொழும்பு, பேலியகொடயிலுள்ள  களஞ்சியம் ஒன்றில்  பணிபுரியும் சுங்க அதிகாரிகள் குழுவொன்று 'குஷ்' என அழைக்கப்படும் அமெரிக்க கஞ்சாவை  இன்று (25) கைப்பற்றியுள்ளது. இந்தக் கஞ்சா இரண்டு மரப்பெட்டிகளில்  மறைத்து கனடாவிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்டதாக அந்த அதிகாரிகள் கூறினர். குறித்த மரப்பெட்டிகள் தொடர்பில் அதிகாரிகளுக்கு ஏற்பட்ட ...

மேலும்..

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டால் ஜி.எஸ்.பி. பிளஸ் வரி சலுகையை இழக்க நேரிடும் – ஐக்கிய மக்கள் சக்தி

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டால் ஜி.எஸ்.பி. பிளஸ் வரி சலுகையை மீண்டும் இழக்க நேரிடும். அவ்வாறானதொரு நிலைமை ஏற்பட்டால் பல இலட்சக்கணக்கானோர் தொழிலை இழக்க நேரிடும். எனவே அரசாங்கம் இதனை உடனடியாக மீளப் பெற வேண்டும் என்று ஐக்கிய ...

மேலும்..

பதவி எப்போது பறிபோகும் என்ற அச்சத்தில் பிரதமர் தினேஷ் : எதிர்க்கட்சி தலைவராகும் கற்பனையில் நாமல் – மரிக்கார்

மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்கும் முயற்சியில் அவரது விசுவாசிகள் ஈடுபட்டுள்ளமையால் பதவி எப்போது பறிபோகும் என்ற அச்சத்தில் பிரதமர் தினேஷ் குணவர்தன காணப்படுகிறார். மறுபுறம் நாமல் ராஜபக்ஷ கடந்த காலத்தை மறந்து எதிர்காலத்தில் தானே எதிர்க்கட்சி தலைவர் என்ற கற்பனையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார் என ...

மேலும்..

நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் நாட்டுக்கு சாதகமானதாக மாற்றப்பட வேண்டும் – சஜித்

சர்வதேச நாணய நிதியத்துடனான இணக்கப்பாடு என்ற போர்வையில் தேசிய சொத்துக்களை தனியார் துறையினருக்கு தாரை வார்க்கும் சூது விளையாட்டுக்கு ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவளிக்காது. எனவே, நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் நாட்டுக்கும் மக்களுக்கும் சாதகமானதாக மாற்றப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் ...

மேலும்..

அரசியல் இலாபத்துக்காகவே ராஜபக்ஷர்கள் திருடர்களாக சித்தரிக்கப்படுகிறார்கள் – நாமல் கவலை

நல்லாட்சி அரசாங்கத்தினால் வீழ்ச்சி நிலைக்கு தள்ளப்பட்ட பொருளாதாரத்தையே 2019 ஆம் ஆண்டு பொறுப்பேற்றோம். அரசியல் இலாபத்துக்காகவே ராஜபக்ஷர்கள் திருடர்களாக சித்தரிக்கப்படுகிறார்கள். மோசடி செய்யப்பட்ட அரச நிதியை அரசுடமையாக்க முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ...

மேலும்..

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் நிறுவனத்துக்கு எதிராக இலங்கை நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யலாம் – பீரிஸ்

எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தினால் கடல் வளங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு நட்டஈடு பெற்றுக்கொள்வதற்காக கப்பல் நிறுவனத்துக்கு எதிராக இலங்கை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய முடியும். சிங்கப்பூர் நாட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து சம்பத்தை முழுமையாக மூடி மறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறதா ...

மேலும்..

எதிர்க்கட்சிகளை பலவீனப்படுத்தவே தேசிய அரசாங்கம் – நாலக கொடஹேவா

அரசாங்கத்திடம் சாதாரண பெரும்பான்மை உள்ளது. ஆகவே, தேசிய அரசாங்கம் அமைக்க வேண்டிய தேவை கிடையாது. எதிர்க்கட்சிகளை பலவீனப்படுத்தவே தேசிய அரசாங்கம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது என நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் சுதந்திர மக்கள் சபையின் உறுப்பினர் நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள ...

மேலும்..

நெல் விவசாயிகளுக்கு உரக் கொள்வனவுக்காக நிதி மானியம் – அமைச்சர் மஹிந்த அமரவீர

நெற்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு உரத்தைக் கொள்வனவு செய்வதற்கான நிதி மானியம் வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். விவசாயிகளின் உற்பத்தி செலவினைக் குறைப்பதற்காகவே இந்த நிதி மானியம் வழங்கப்படவுள்ளது. அதற்கமைய ஒரு ஹெக்டயரில் நெற் செய்கையை ...

மேலும்..