சிறப்புச் செய்திகள்

வடபகுதி தீவுகளை கையகப்படுத்தும் நோக்கில் தீவக அதிகார சபை : தடுக்காவிட்டால் மோசமான விளைவுகள் ஏற்படும் – தமிழ் தேசிய பண்பாட்டு பேரவை எச்சரிக்கை

வடக்கில் உள்ள தீவுகளை இலக்கு வைத்து உருவாக்கப்படவுள்ள தீவக அதிகார சபையை தடுத்து நிறுத்தாவிட்டால் பல மோசமான பின் விளைவுகளை வடபகுதி மக்கள் எதிர்நோக்க வேண்டி வரும் என தமிழ் தேசிய பண்பாட்டு பேரவையின் தலைமை ஒருங்கிணைப்பாளர் எஸ்.நிஷாந்தன் எச்சரிக்கை விடுத்தார். யாழ். ...

மேலும்..

இந்த புத்தாண்டில் அனைவருக்கும் ஆறுதல் தருகின்ற சூழல் உருவாக்கியுள்ளது – புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி!

இந்த புத்தாண்டில் அனைவருக்கும் ஆறுதல் தருகின்ற சூழல் உருவாக்கியுள்ளது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “சூரியன்  மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு  பெயர்ச்சி அடைவதைத்  ...

மேலும்..

பாதுகாப்பு இல்லத்தில் மேலும் 76 இலங்கை பணிப்பெண்கள் தஞ்சமடைந்துள்ளனர்!

ஓமானில் உள்ள பாதுகாப்பு இல்லத்தில் மேலும் 76 இலங்கை பணிப்பெண்கள் தஞ்சமடைந்துள்ளனர். வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடகப்பேச்சாளரும், பிரதி பொது முகாமையாளருமான காமினி செனரத் யாப்பா இதனைத் தெரிவித்துள்ளார். தடுத்து வைக்கப்பட்டவர்களில் 36 பேர் சுற்றுலா விசாவில் ஓமானுக்கு சென்று பணிபுரிந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, ...

மேலும்..

தமிழ், சிங்கள புத்தாண்டு தேசத்தின் மாபெரும் கலாசார விழாவாகும் – புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் பிரதமர்!

ஒரே சுபநேரத்தில், தனித்துவமான பல்வேறு பாரம்பரியங்களை மரபுரிமையாகக் கொண்ட தினமாக சிங்கள – தமிழ் சித்திரைப் புத்தாண்டு திகழ்வதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் வெளியிடப்பட்டுள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “இம்முறை ...

மேலும்..

இருள் சூழ்ந்த யுகம் நீங்கி, வளமான புத்தாண்டு மலரட்டும் – புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் எதிர்கட்சித்தலைவர்!

வளமான மற்றும் ஒளிமயமான எதிர்காலத்துக்காக உறுதியுடன் அணிதிரள்வதற்கான வலிமையைப் பெற பிரார்த்திப்பதுடன் இருள் சூழ்ந்த யுகம் நீங்கி வளமான புத்தாண்டு மலரட்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் வெளியிடப்பட்டுள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியிலேயே இந்த விடயம் ...

மேலும்..

சகலரும் சமனென்ற மகிழ்காலம் நிலவட்டும் – புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் டக்ளஸ்!

பிறக்கும் சித்திரை புத்தாண்டின் வரவில் சகல இன மத சமூக மக்களும் சமனென்ற மகிழ் காலம் நீடித்து நிலவட்டும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். வெளியிடப்பட்டுள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியிலேயே இந்த ...

மேலும்..

எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து – ஒரு தரப்பினர் கையூட்டல் பெற்றுள்ளதாக தகவல்!

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் விபத்துக்குள்ளான எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து தொடர்பாக இலங்கைக்கு பெருந்தொகை நட்டஈடு கிடைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. குறித்த நட்டஈடு தொடர்பாக தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கும் கலந்துரையாடல்களில் பங்குகொண்ட குறித்த தரப்பொன்று 250 மில்லியன் அமெரிக்க டொலர்களை கையூட்டாக பெற்றுள்ளதாக தகவல்கள் ...

மேலும்..

சோகங்களை தீர்க்கும் வருடமாக சோபகிருது வருடம் அமையட்டும்! கலாநிதி ஆறு.திருமுருகன் பிரார்த்தகை

அன்பர்கள் அனைவருக்கும் சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்கள் உரித்தாகுக. சோபகிருது வருடம் எங்கள் சோகங்களை தீர்க்கும் வருடமாக அமைய வேண்டும் என அனைவரும் பிரார்த்திப்போம். - இவ்வாறு தனது புத்தாண்டு பிரார்த்தனை செய்தியில் தெரிவித்துள்ளார் துர்க்காதேவி தேவஸ்தானம் சிவபூமி அறக்கட்டளை ஆகியவற்றின் தலைவரும் அகில ...

மேலும்..

ஓமானில் இலங்கை பெண்கள் பாலியல் நோக்கங்களிற்காக ஏலத்தில் விடப்பட்ட விவகாரம் – ஐ. நா. விசாரணைகளை ஆரம்பித்துள்ளது

ஓமானில் இலங்கை பெண்கள் பாலியல் தொழிலாளர்களாக ஏலத்தில் விடப்பட்ட சம்பவம் குறித்து ஐநா விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. அடிமைத்தனத்தின் தற்போதைய வடிவங்கள் தொடர்பிலான ஐநாவின் விசேட அறிக்கையாளர் டொமொயோ ஒபக்கட்டா மூலம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இது தொடர்பில் ...

மேலும்..

திருத்தப்பணிகள் இடம்பெறும் குமுதினிப் படகை பார்வையிட்டார் சிறிதரன்

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பகுதியில் திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் குமுதினி படகினை பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் சென்று  பார்வையிட்டுள்ளார். நெடுந்தீவுக்கான பயணிகள் போக்கு வரத்துச் சேவையில் ஈடுபட்டு வந்த குமுதினிப் படகு பழுதடைந்த நிலையில் கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக  மாவிலித்துறையில் தரித்திருந்ததுடன் ...

மேலும்..

நுவரெலியா நகரில் 4 மாடிகளுக்கு மேல் கட்டடங்களை நிர்மாணிக்கத் தடை!

நுவரெலியா நகரில் நான்கு மாடிகளுக்கு மேல் கட்டடங்களை நிர்மாணிப்பதை தடை செய்யும் அமைச்சரவை பத்திரத்தை தயாரிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். உயரமான கட்டிடங்கள் நிர்மாணிக்கப்படுவதால் நகரத்தின் அழகு கெட்டுவிடும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அமைச்சரவை பத்திரத்தை உடனடியாக சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதியின் ...

மேலும்..

கன்டர் ரக வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்து இரு கடைகளை மோதி விபத்து : யாழில் சம்பவம்

யாழ்ப்பாணம் ஆவரங்கால் பகுதியில் இன்று (13) அதிகாலை வேகக்கட்டுப்பாட்டை இழந்த கன்டர் ரக வாகனம் இரண்டு கடைகளை மோதித் தள்ளியது. யாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித்துறை நோக்கி அதிகாலை இறைச்சி கோழிகளை ஏற்றியவாறு பயணித்த வாகனத்தின் முன்பக்க டயர் திடீரென காற்று போனதால் வாகனம் கட்டுப்பாட்டை ...

மேலும்..

இலங்கை தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படும் – வொஷிங்டனில் உறுதியளித்தார் இராஜாங்க அமைச்சர்

பொருளாதார நெருக்கடியின் போது இலங்கைக்கு ஆதரவளிக்க முன்வந்தமைக்காக சர்வதேச நாணய நித்தியத்திற்கு நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க நன்றி தெரிவித்துள்ளார். கடன் நிலைத்தன்மையை அடைவதற்கும் பொருளாதார ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதற்கும் சீர்திருத்த நிகழ்ச்சி நிரலை தொடர்ந்து அமுல்படுத்துவோம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். வொஷிங்டனில் சர்வதேச நாணய ...

மேலும்..

பட்டாசு வெடிக்கும் போது ஏற்படும் விபத்துகள் குறித்து அவதானமாக செயற்படுமாறு வலியுறுத்து!

பண்டிகைக் காலங்களில் பட்டாசு வெடிக்கும் போது ஏற்படும் விபத்துகள் குறித்து அவதானமாக செயற்படுமாறு மருத்துவர்கள் பொதுமக்களிடம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர். புத்தாண்டு காலப்பகுதியில் பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் விபத்துகள் அதிகரிக்கலாம் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். சிறுவர்கள் பட்டாசு வெடித்தல் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட அனுமதிக்கும் போது ...

மேலும்..

துருக்கியில் நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலங்கை அரசாங்கத்தினால் நன்கொடை!

அண்மையில் துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலங்கை அரசாங்கத்தினால் 4.6 தொன் ஆடைகள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. இலங்கைக்கான துருக்கி தூதுவர் ரக்கிபே டெமெட் செகெர்சியோக்லுவிடம் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி குறித்த நன்கொடையை கையளித்துள்ளார். அத்துடன் இரு நாடுகளுக்கும் இடையிலான ஆழமான உறவுகளை எடுத்துரைத்த ...

மேலும்..