சிறப்புச் செய்திகள்

அக்கராயன் கரும்புத்தோட்ட காணிகள் குறித்து அமைச்சர் டக்ளஸ் தலைமையில் தீர்மானங்கள்!

கிளிநொச்சி, அக்கராயன் பகுதியில் இருக்கின்ற கரும்பு தோட்டக் காணிகளை பிரதேச மக்களுக்கும் நாட்டின் பொருளாதாரத்திற்கும் பயன்படும் வகையில்  பயன்படுத்துவதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே ...

மேலும்..

அக்கராயனில் 5 மாத கர்ப்பிணியான காதல் மனைவியை சுட்ட கணவர்! 

கிளிநொச்சி அக்கராயன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரித்தாஸ் குடியிருப்பு பகுதியில் தனது ஐந்து மாத கர்ப்பிணியான  காதலித்து திருமணம் செய்த மனைவியை இடியன் துப்பாக்கியால் சுட்டு அவரது கணவன் காயப்படுத்தியுள்ளார். இந்தச் சம்பவம் 11 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளதாக அக்கராயன்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன் ...

மேலும்..

இலங்கை – இந்திய பயணிகள் படகுச்சேவை: துறைமுக உட்கட்டமைப்பை விரிவுபடுத்துதல்! காங்கேசன்துறையில் கடற்படை தீவிரம்

இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையில் பயணிகள் படகு போக்குவரத்து சேவைக்காக கடற்படையினரின் பங்களிப்புடன் காங்கேசன்துறை துறைமுகத்தின் உட்கட்டமைப்பு நடவடிக்கைகளை விரிவுபடுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இலங்கை மற்றும் இந்தியாவுக்கிடையில் யாழ்ப்பாணம், காங்கேசன்துறை துறைமுகத்திலிருந்து இந்தியாவின் பாண்டிச்சேரி வரை பயணிகள் படகுச் சேவையை முன்னெடுப்பதற்கு அரசாங்கத்தால் ...

மேலும்..

ரயிலில் மோதுண்டு ஒருவர் பரிதாப பலி!

ரயிலில் மோதி 45 வயதுடைய நபரொருவர் பலியாகியுள்ளார் என சந்திவெளி பொலிஸார் தெரிவித்தனர். சந்திவெளி - ஜீவபுரம் பகுதியைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான கந்தசாமி வரதராசா எனும் 45 வயதுடைய நபரே ரயிலில் மோதுண்டு பலியாகியுள்ளார். கடற்தொழிலில் ஈடுபடும் இவர் மது போதைக்கு ...

மேலும்..

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை 2025 வரை ஒத்திவைக்கும் நிலை!  ரேஹண ஹெட்டியாராட்சி தெரிவிப்பு

நீதிமன்ற உத்தரவு ஒன்றை தவிர 2025 வரை உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இடம்பெறுவது தொடர்பாக நிச்சயமில்லாத நிலை இருந்து வருகிறது. தேர்தலை நடத்துவதற்கான எந்த முயற்சியையும் அரசாங்கம் எடுப்பதாகத் தெரியவில்லை என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி தெரிவித்தார். உள்ளூராட்சி மன்ற ...

மேலும்..

வறுமையில் உள்ள மக்களுக்கு ஜூனில் நலன்புரி கொடுப்பனவு!   சாகல ரத்நாயக்க நம்பிக்கை தெரிவிப்பு

வறுமையிலுள்ள மக்கள் மற்றும் மிகவும் பாதிக்கப்படக்கூடிய தரப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பாக அரசாங்கம் அக்கறை கொண்டுள்ளது. அதற்கமைய இவ்வாறான தரப்பினருக்கான நலன்புரி உதவித்தொகை செலுத்தும் முறைக்கான விதிமுறைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கப் பெற்றதன் பின்னர் ஜூன் முதலாம் திகதி முதல் பயனாளிகளுக்கான கொடுப்பனவுகள் வழங்கப்படும் ...

மேலும்..

உறுதியான தீர்மானங்களை அறிவித்தால் தேர்தலை ஓரிருமாதத்துக்குள் நடத்தலாம்!  நிமல் புஞ்சிஹேவா கூறுகிறார்

நிதி நெருக்கடியால் நாடாளுமன்ற தேர்தல், ஜனாதிபதி தேர்தல் ஆகியவற்றை நடத்த முடியாது என்ற நிலை தோற்றம் பெற்றால் ஜனநாயகம் பாரிய நெருக்கடிகளை எதிர்கொள்ளும். அது தவறான தீர்மானங்களுக்கு ஓர் எடுத்துக்காட்டாக அமையும். நிதி விடுவிப்பு தொடர்பாக அரசாங்கம் உறுதியான தீர்மானத்தை அறிவித்தால் உள்ளூராட்சி ...

மேலும்..

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தில் மனித உரிமை மீறல்கள் உள்ளனவா? இல்லையா? என்பதை நீதிமன்றமே தீர்மானிக்கும்!  நீதி அமைச்சர் விஜயதாஸ கூறுகிறார்

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்தில் மனித உரிமைகளை மீறும் வகையிலான ஏற்பாடுகள் காணப்படுகின்றனவா இல்லையா என்பதை நீதிமன்றமே தீர்மானிக்கும். சட்ட மூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் அது தொடர்பாகத் தாக்கல் செய்யப்படும் மனுக்கள் மீதான பரிசீலனைகளின் அடிப்படையில் திருத்தங்களை செய்ய வேண்டியேற்படின் ...

மேலும்..

நாணய நிதிய இந்திய கலந்துரையாடல்களில் 90 வீதம் இலங்கைக்கான ஒத்துழைப்புகளே!  வலியுறுத்தப்பட்டன என்கிறார் அலி சப்ரி

சர்வதேச நாணய நிதியத்துடனான இந்திய கலந்துரையாடல்களில் 90 வீதமானவை இலங்கைக்கான ஒத்துழைப்புகளையே வலியுறுத்தி இருந்தன. பொருளாதார நெருக்கடிகளின் மீட்சியின் பெரும் பகுதிக்கு காரணமாக இருந்த டெல்லியின் அவசர உதவிகளை மறந்துவிட இயலாது என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். இந்திய உயர்ஸ்தானிகராலயம் ...

மேலும்..

யாழ். பல்கலையில் அன்னை பூபதி நினைவேந்தல் நிகழ்வு

இந்திய இராணுவத்துக்கு எதிராக இரண்டு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து மட்டக்களப்பில் உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்த தியாகி அன்னை பூபதியின், உண்ணாவிரத அறப் போராட்டத்தின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, உண்ணாநோன்பின் 25ஆம் நாளான நேற்று புதன்கிழமை, யாழ்ப்பாணப் பல்கலைக் ...

மேலும்..

யாழில் கருவாடு விற்பனையின் போது குறைபாடுகளை நிவர்த்தி செய்ய கால அவகாசம்

கருவாடு விற்பனை செய்யும் போது உள்ள குறைப்பாடுகளை நிவர்த்தி செய்வதற்கு கருவாட்டுக் கடை உரிமையாளர்களுக்கு யாழ்.மாநகர பொது சுகாதார பரிசோதகர்களால் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. குறித்த காலப் பகுதிக்குள் குறைகளை நிவர்த்தி செய்யாத உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கை ...

மேலும்..

அந்தமானில் 6 மாதங்களாக சிக்கித் தவிக்கும் கல்குடா மீனவர்கள் நால்வரையும் மீட்குமாறு கோரிக்கை

மட்டக்களப்பு - கல்குடா பிரதேசத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்தபோது படகில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக கடலில் தத்தளித்த நிலையில், அந்தமான் தீவில் தங்கி நின்று, ஆறு மாதங்களுக்கு மேலாகிவிட்டது. இன்னமும் இலங்கைக்கு திரும்ப முடியாமல் அத்தீவுக் கூட்டங்களில் ...

மேலும்..

சூரிய சக்தி சங்கம் போராட்டம் – மகஜரும் கையளிப்பு

லங்கா சூரிய சக்தி சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டமொன்று நேற்று (12) இலங்கை மின்சார சபை கல்முனை காரியாலய முன்றலில் இடம்பெற்றது. கல்முனை மின் பிராந்தியத்திலுள்ள சூரிய சக்தி மின்சார உற்பத்தியாளர்களாகிய தங்களுக்கு Roof top Solar உற்பத்தியாளர்களின் கொடுப்பனவுகள் ...

மேலும்..

கி/பூநகரி விக்னேஸ்வரா வித்தியாலய திறனாய்வுப் போட்டி இன்று நடந்தது!

கிளிநொச்சி பூநகரி விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் இல்ல மெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டி இன்று (புதன்கிழமை) பிற்பகல் ஒரு மணிக்கு கல்லூரி முதல்வர் லயன் கு.லெனின்குமார் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வுக்குப் பிரதம விருந்தினராக கல்வி இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்குமாரும், சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண ...

மேலும்..

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் நலன்புரி சங்கப் பராமரிப்பாளர் கொலை! நடந்தது என்ன?

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் நோயாளர் நலன்புரிச் சங்கத்தில் பராமரிப்பாளராகக் கடமையாற்றிய ஆனைக்கோட்டை கூழாவடியைச் சேர்ந்த மேரிதாசன் நாகசெல்வன் என்ற நலன்புரிச் சங்க நோயாளர் பராமரிப்பு சேவையின் பராமரிப்பாளர் தென்மராட்சியின் மீசாலை, புத்தூரில் கோரமாகக் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தக் கொலை தொடர்பில் நோயாளர் ...

மேலும்..