சிறப்புச் செய்திகள்

அரசாங்கத்திடம் நிதி இல்லாவிடின் கட்டம் கட்டமாக தேர்தல்களை நடத்த முன் வர வேண்டும் – சி.வீ.கே.சிவஞானம்

அரசாங்கத்திடம் நிதி இல்லாவிடின் கட்டம் கட்டமாக தேர்தல்களை நடத்த முன் வர வேண்டும் என வடக்கு மாகாண சபையின் அவை தலைவர் சி.வீ.கே.சிவஞானம் கோரிக்கை விடுத்தார். யாழ்ப்பாணத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போது இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், உள்ளூராட்சி சபை ...

மேலும்..

யாழ். பொலிகண்டி கடற்கரையில் 84 கிலோ கிராம் கேரள கஞ்சா மீட்பு

யாழ்ப்பாணம் பொலிகண்டி கடற்கரையில் 84 கிலோ கிராம் கேரள கஞ்சா இன்றைய தினம் திங்கட்கிழமை (10) அதிகாலை கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது. இரகசிய தகவலின் பிரகாரம் அவ்விடத்திற்கு விரைந்த கடற்படையினர் கேரள கஞ்சாவை மீட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லையென கடற்படையினர் ...

மேலும்..

மனித உரிமைகள் என்றால் என்ன என்பதை அறிந்தவர்களை ஆணைக்குழுவிற்கு நியமிக்கவேண்டும் – மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர்

மனிதஉரிமைகள் என்றால் என்ன என்பதை புரிந்துகொண்டவர்களை மனித உரிமை ஆணைக்குழுவிற்கு நியமிக்கவேண்டும் எனஆணைக்குழுவின் தலைவர் ரோகிணி மாரசிங்க கருத்துவெளியிட்டுள்ளார். மனித உரிமைகள் குறித்து சிறிதளவும் அறிவில்லாதவர்களை இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழு உறுப்பினர்களாக நியமித்தமை நாட்டின் மனித உரிமை நிலவரத்திற்கு மேலும் பாதிப்பை ...

மேலும்..

ஓமானியரின் கட்டான ஆடைத்தொழிற்சாலைக்கு விசேட அதிரடிப்படை, பொலிஸார் பாதுகாப்பு!

குழு ஒன்றினால் தாக்கப்பட்ட ஓமானியருக்குச் சொந்தமான கட்டானயிலுள்ள ஆடைத் தொழிற்சாலைக்கு பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் மேற்பார்வையில் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக படல்கம பொலிஸார் தெரிவித்தனர். இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினரும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், ஆடைத்தொழிற்சாலையை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் ...

மேலும்..

ஊழல் ஒழிப்புச் சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் – சஜித்

பயங்கரவாத தடுப்புச் சட்டமூலத்தை அன்றி ஊழல் ஒழிப்பு சட்டமூலத்தையே அரசாங்கம் துரிதமாகக் கொண்டு வர வேண்டும். இதன்மூலம் பன்டோரா பத்திரங்கள் ஊடாக அம்பலப்படுத்தப்பட்ட ஊழல்வாதிகள் மற்றும் கடந்த காலங்களில் பல்வேறு ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்த முடியும் என எதிர்க்கட்சித் ...

மேலும்..

கோட்டாவை ஜனாதிபதியாக தெரிவு செய்தது தவறு – பவித்ரா

கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராகத் தெரிவுசெய்து அரசியல் ரீதியில் எடுத்த தவறான தீர்மானத்தை இடைக்கால ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்கவை தெரிவு செய்தோம். ஜனநாயகத்தை ஸ்திரப்படுத்துவதற்காகவே அரசியலுக்கு அப்பாற்பட்ட வகையில் தீர்மானம் எடுத்தோம் என வனஜீவராசிகள் பாதுகாப்பு அமைச்சர் பவித்ராதேவி வன்னியராட்சி தெரிவித்தார். கொலன்னாவ பகுதியில் ...

மேலும்..

மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவோம் – சரத் வீரசேகர

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தில் பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் தாக்கப்பட்டமை கவலைக்குரியது. மே 9 சம்பவத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பாதுகாப்பு தரப்பினர் குறைந்தபட்ச அதிகாரத்தை கூட பயன்படுத்தாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்கள் என முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர ...

மேலும்..

உயிரிழந்த நிலையில் காட்டுயானை மீட்பு

மட்டக்களப்பு மாவட்டம் படுவாங்கரைப் பிரதேசத்திற்குட்பட்ட தாந்தாமலைப் பகுதில் உயிரிழந்த நிலையில் காட்டுயானை ஒன்றின் உடல் மீட்கப்பட்டுள்ளதாக வன ஜீவராசிகள் பாதுகாப்பு சுற்றுவட்டார அதிகாரிகள் தெரிவித்தனர். தாந்தாமலைப் பகுயியில் அமைந்துள்ள றெட்பாணா வீட்டுத்திட்டம் அமைந்துள்ள நீர் நிலை ஒன்றில் காட்டுயானை ஒன்று வீழ்ந்து கிடப்பதாக ...

மேலும்..

செட்டிகுளத்தில் திடீரென வந்து அமர்ந்த புத்தர் சிலை

வவுனியா, செட்டிகுளத்தில் தமிழ் மக்கள் வாழும் பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் திடீரென புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. செட்டிகுளம் - மன்னார் வீதியில், செட்டிகுளம் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட பழைய புகையிரத நிலையம் முன்பாக வீதியோரத்தில் சீமெந்து கற்களை அடுக்கி சுமார் ...

மேலும்..

வெடுக்குநாறி ஆதி சிவன் கோவிலில் சிலைகள் மீண்டும் நிறுவப்படும் – எவருடைய அனுமதியும் தேவை இல்லை என்கிறார் அமைச்சர் டக்ளஸ்

வெடுக்குநாறி ஆதி சிவன் கோவில் பிரச்சினையில் நடந்திருப்பது தவறு. அது யார் செய்திருந்தாலும் தவறு. மீண்டும் வெடுக்குநாறி ஆதி சிவன் கோவிலில் சிலை நிறுவப்படும். அதற்கு ஆளுநருடையதோ பிரதமருடைய அனுமதியோ பெறவேண்டிய அவசியம் இல்லை என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். மட்டக்களப்பு ...

மேலும்..

புத்தளம் களப்பு பகுதியில் உயிருடன் கரையொதிங்கிய டொல்பின்

புத்தளம் களபுப் பகுதியில் டொல்பின் ஒன்று நேற்று (ஞாயிற்றுக்கிழமை)அதிகாலை உயிருடன் கரையொதிங்கியது. இதன்போது குறித்த பகுதி மீனவர்கள் டொல்பின் ஒன்று உயிருடன் கரையொதிங்கியுள்ளது என வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியுள்ளனர். இதனையடுத்து குறித்த பகுதிக்கு இலந்தையடி வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் சென்று குறித்த ...

மேலும்..

தகவல் அறியும் உரிமையை அரசு முடக்க முயல்வது ஜனநாயகத்துக்கு விரோதமானது – பிரதான எதிர்க்கட்சி சாடல்

சமூகப் பாதுகாப்புச் சட்டத்தின் மூலம் நாட்டு மக்களுக்கு தகவல் அறியும் உரிமையை அரசு முடக்க முயல்வது ஜனநாயகத்துக்கு விரோதமானதும் நாட்டின் அரசமைப்பிற்கும் எதிரானதுமாகும். அத்துடன் இந்தச் சட்ட மூலத்தின் மூலம் அரசாங்கத்துக்கு எதிரான மக்கள் போராட்டத்தை நசுக்கவும், தமக்கு எதிராகப் போராடும் ...

மேலும்..

அமைச்சரவையை விஸ்தரிப்பதற்காகவா ? சர்வதேச நாணய நிதியம் நிதி வழங்கியது – நாலக கொடஹேவா

பொருளாதாரப் பாதிப்புக்கு மத்தியில் அமைச்சரவையை விஸ்தரிப்பதற்காகவா சர்வதேச நாணய நிதியம் முதல் தவணை நிதி தொகையை வழங்கியுள்ளது. பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காணும் உண்மை நோக்கம் அரசாங்கத்துக்கு கிடையாது என நாடாளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவா தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் ...

மேலும்..

திருமலை – கொழும்பு ரயிலால் மோதுண்டு 2 யானைகள் பலி; ரயில் தடம் புரண்டது!

திருகோணமலையிலிருந்து கொழும்பு நோக்கி நேற்று (8) பயணித்த இரவு தபால் ரயிலால் ஹபரணை பகுதியில் இரண்டு காட்டு யானைகள் மோதப்பட்டு, அவை உயிரிழந்துள்ளன என ஹபரணை பொலிஸார் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக குறித்த ரயில் தடம் புரண்டுள்ளது. இருப்பினும்  பயணிகள் எவருக்கும் காயம் ஏற்படவில்லை ...

மேலும்..

வீதியில் நின்ற 10 வாகனங்கள் மற்றும் வீடொன்றின் மீது மோதிய கிரேன்; 4 பேர் படுகாயம் : கல்எலியவில் சம்பவம்!

பஸ்யால – மீரிகம வீதியின் கல்எலிய நகரில் நிறுத்தப்பட்டிருந்த 10 வாகனங்களோடு கிரேன் ஒன்று மோதியதுடன், அது மதில் மற்றும் கதவுகளை உடைத்துக்கொண்டு சென்று  வீடொன்றின் மீதும் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த சம்பவத்தில் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர் எனவும் கூறப்படுகிறது. பஸ்யாலயிலிருந்து மீரிகம நோக்கி பயணித்த  ...

மேலும்..