சிறப்புச் செய்திகள்

வாழ்க்கைச் செலவு உயர்வால் மக்கள் மோசமாக பாதிப்படைவு! ஜனாதிபதியுடன் பேசவுள்ளார் மஹிந்த

நாட்டு மக்கள் பொருளாதார பாதிப்பு, வாழ்க்கைச் செலவு உயர்வு ஆகிய நெருக்கடிகளால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்நிலைமை மாற்றியமைக்கப்பட வேண்டும். ஜனாதிபதியுடன் இந்த வாரம் இடம்பெறவுள்ள பேச்சின் போது விசேட கவனம் செலுத்துவோம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். இரத்தினபுரி – ...

மேலும்..

விஜயின் லியோ பார்க்கச் சென்றவர்களுக்கு மட்டக்களப்பில் வாள் வெட்டுத் தாக்குதல்!

மட்டக்களப்பு - செங்கலடி திரையரங்கில் வெள்ளிக்கிழமை வாள் வெட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. விஜய் நடித்து வெளியான லியோ படம் பார்க்கச் சென்ற குழுக்களுக்கிடையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இரு இளைஞர் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட முரண்பாடு கைகலப்பாக மாறி அது வாள் வெட்டில் முடிந்துள்ளது. இந்த சம்பவத்தில் ...

மேலும்..

ஆதிவாசிகள் நயினாதீவில்!

மஹியங்கனையில் வசித்துவரும் ஆதிவாசிகள் முதல் தடவையாக யாழ்ப்பாணத்திற்கு, சனிக்கிழமை விஜயம் மேற்கொண்ட நிலையில், ஞாயிற்றுக்கிழமை நயினாதீவு நாக விகாரைக்கு சென்றிருந்தனர். ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னிலஅத்தோ தலைமையிலான சுமார் 100 இற்கும் மேற்பட்ட ஆதிவாசிகள் குழுவினரே யாழிற்கு விஜயம் செய்துள்ளதுடன் இவர்கள் யாழின் ...

மேலும்..

மின்சார சபை நட்டத்தில் இயங்குவதற்கு முறையற்ற முகாமைத்துவமே காரணமாம்! கடுமையாகச் சாடுகிறார் வே.இராதாகிருஷ்ணன்

மின்சார கட்டண அதிகரிப்பு நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் கொண்ட மக்களுக்கு மேலும் பாரிய சுமையாக அமைந்துள்ளதாகவும் முறையற்ற முகாமைத்துவமே மின்சார சபை நட்டத்துடன் இயங்குவதற்கு காரணம் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மின்சார கட்டண அதிகரிப்பு உள்ளிட்ட விடயங்கள் குறித்து ...

மேலும்..

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை பெயரில் சேகரித்த நிதி முழுமையாக தெல்லிப்பழைக்கே! லயன்ஸ் கழக ஆளுநர் அவையில் இறுதி முடிவு

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு என சர்வதேச லயன்ஸ் கழகத்தால் வழங்கப்பட்ட ஒரு கோடியே 40 லட்சம் ரூபாவும் வைத்தியசாலையின் பெயரைப் பயன்படுத்தி உள்ளூரில் சேகரிக்கப்பட்ட 52 லட்சம் ரூபாவும் முழுமையாக வட்டியுடன் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கே வழங்குவது என இறுதிசெய்யப்பட்டது. சர்வதேச லயன்ஸ் ...

மேலும்..

பெருமளவு கசிப்பு மற்றும் கோடாவுடன் யாழ். பலாலியில் சந்தேகநபர் கைது!

யாழ்ப்பாணம், பலாலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மயிலிட்டி பகுதியில் 120 லீற்றர் கசிப்பு மற்றும் 800 லீற்றர் கோடாவுடன் 37 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். காங்கேசன்துறை மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பிரிவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது கைது செய்யப்பட்ட ...

மேலும்..

மட்டு. வவுணதீவில் கடந்த வாரம் 10 வீடுகள் யானைகளால் சேதம்! இரா.துரைரட்ணம் தகவல்

மட்டக்களப்பு - மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவில் கடந்த ஒரு வாரத்தில் யானைகளின் தாக்குதலால் 10 வீடுகள் உடைத்துள்ளதுடன் 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட தென்னை மரங்கள் அழிக்கப்பட்டுள்ளதுடன் தினந்தினம் யானைகளின் மீதுள்ள அச்சத்தால், மக்கள் குடிமனைகளில் இருந்து வெளியேறும் ...

மேலும்..

மன்னாரில் ஜனாதிபதி தலைமையில் தேசிய மீலாதுன் நபி விழா ஆரம்பம்!  அனுமதி மறுக்கப்பட்ட பிராந்திய ஊடகவியலாளர்கள்

மன்னாரில் ஞாயிற்றுக்கிழமை காலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஆரம்பமான தேசிய மீலாதுன் நபி விழாவில் கலந்துகொள்ள பிராந்திய ஊடகவியலாளர்களுக்கும், மாவட்ட செயலக ஊடக அலுவலருக்கும் அனுமதி வழங்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இந்த வருடத்துக்கான தேசிய மீலாதுன் நபி விழாவை இம்முறை மன்னார் ...

மேலும்..

வாழைச்சேனை பிரதேச சபை ஊழியர்மீது தாக்குதல்; தாக்கியவரைக் கைது செய்யுமாறுகோரிப் போராட்டம்!

கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபை ஊழியர் மீது ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது 32 வயதுடைய பிரதேச சபை திண்மக்கழிவு அகற்றும் ஊழியரே தாக்கப்பட்டுள்ளார். மாவடிச்சேனை எம்.பி.சீ.எஸ். வீதியில் குறித்த நபர் திண்மக்கழிவு அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த நிலையில், அந்த வீதியிலுள்ள வர்த்தக ...

மேலும்..

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் ‘யாழ் கானம்’ நிகழ்ச்சியில் இந்திய இராணுவத்தினரால் கொல்லப்பட்டவர்களுக்கு மெளன அஞ்சலி

யாழ்ப்பாணம், முற்றவெளி மைதானத்தில் ‍நேற்று சனிக்கிழமை (21) நடைபெற்ற தென்னிந்திய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் 'யாழ் கானம்' இசை நிகழ்ச்சியின் முதல் அம்சமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இந்திய இராணுவத்தினரால் கொல்லப்பட்டவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இந்திய இராணுவத்தினரால் நடத்தப்பட்ட ...

மேலும்..

பாகிஸ்தான் சித் மாநிலத்துக்கு வருகை தருமாறு கிழக்கு மாகாண ஆளுநர் செந்திலுக்கு அழைப்பு!

  ஐக்கிய நாடுகள் சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளின் அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் இலங்கையிலிருந்து பாகிஸ்தானிற்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள கிழக்கு மாகாண ஆளுநரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமானுக்கும் ...

மேலும்..

மட்டக்களப்பு – கூளாவடியில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த சைக்கிள் திருட்டு : சி.சி.ரி.வியில் சிக்கிய நபர்

மட்டக்களப்பு பொலிஸ் தலைமையக பிரிவிலுள்ள கூளாவடி பிரதேசத்தில் வீடு ஒன்றின் முன்னாள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மவுன்டன் ரக சைக்கிள் ஒன்றை நேற்று சனிக்கிழமை (21) திருடிச் சென்ற நபர் தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் தமக்கு அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர். நேற்று ...

மேலும்..

தேர்தல் சீர்திருத்தங்கள் அவசியம் ; அதனை விட மாகாண சபை உள்ளூராட்சி தேர்தல்கள் அவசியம் – மகிந்த தேசப்பிரிய

அரசாங்கத்தின் உத்தேச தேர்தல் சீர்திருத்தங்களை வரவேற்றுள்ள  முன்னாள் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய எனினும் முன்னர் கைவிடப்பட்டுள்ள தேர்தல்களை நடத்தவேண்டும் என தெரிவித்துள்ளார். தேர்தல் சட்டங்களில் பாரிய மாற்றங்களை மேற்கொள்வதற்கு ஜனாதிபதி ஒன்பது பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளமை குறித்து கருத்து தெரிவித்துள்ள ...

மேலும்..

போதைப்பொருளை ஒழிக்க தகவல் கொடுங்கள் ; இரகசியம் பேணப்படும்! – புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி

போதைப்பொருளை ஒழிக்க தகவல்களை தாருங்கள்; இரகசியம் பேணப்படும் என புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஹெரத் தெரிவித்தார். கிராமங்களிலுள்ள மக்களின் பிரச்சினைகளை வெளிக்கொண்டுவரும் முகமாக ஜனசபா அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று (21) புதுக்குடியிருப்பு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு ...

மேலும்..

வடக்கு, கிழக்கு விவகாரத்தில் ஜனாதிபதி ஒருதலைப்பட்சமாக செயற்படுகிறார் – கிழக்கு முன்னாள் ஆளுநர் யஹம்பத்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் விவகாரத்தில் ஜனாதிபதி ஒருதலைப்பட்சமாக செயற்படுகிறார். சிங்களவர்களுக்கு ஒரு சட்டம், தமிழர்களுக்கு ஒரு சட்டம் அமுல்படுத்தப்படுகிறது. திம்புலாகல பகுதியில் உள்ள சிங்களவர்களை வெளியேற்ற ஒருபோதும் இடமளிக்க முடியாது என கிழக்கு மாகாண ...

மேலும்..