சிறப்புச் செய்திகள்

ஜப்பானில் பரிதாபகரமாக பலியான இலங்கை மாணவி!

ஜப்பானில் தடுப்புக் காவலில் உயிரிழந்த இலங்கைப் பெண்ணின் மரணம் தொடர்பில் ஜப்பான் அரசாங்கம் நேற்று (சனிக்கிழமை) விளக்கமளித்துள்ளது. ஜப்பானில் உள்ள தடுப்பு முகாமில் உரிய சிகிச்சை அளிக்காமல் உயிரிழந்த விஷ்மா சந்தமாலியின் மரணம் தொடர்பான சிசிரிவி காட்சிகள் மாற்றியமைக்கப்பட்டு அனுமதியின்றி ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டதாக ...

மேலும்..

ஒழுக்கமும் சட்டமும் இல்லாமல் நாட்டை கட்டியெழுப்ப முடியாது! ரவி கருணாநாயக்க ‘அட்வைஸ்’ 

ஒழுக்கமும் சட்டமும் இன்றி ஒரு நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது என முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். நாட்டை மீளக் கட்டியெழுப்புவதற்கான இறுதி சந்தர்ப்பம் இதுவெனவும், எனவே மக்கள் இந்த நேரத்தில் மிகவும் புத்திசாலித்தனமாகவும், பொறுப்புடனும் செயற்பட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். நாட்டைக் ...

மேலும்..

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு யார் காரணம் என்பதை அறிய விரும்புகின்றேன்- சகோதரர்களை இழந்த பிரிட்டிஷ் பிரஜை

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் தனது இரு சகோதரர்களை இழந்த பிரிட்டிஷ் பிரஜையொருவர் தான் இந்த சம்பவத்துக்கு யார் உண்மையில் காரணம் என்பதை அறிய விரும்புவதாக தெரிவித்துள்ளார். தனக்கும் தனது குடும்பத்துக்கும்; ஒருபோதும் விடைகள் கிடைக்காது என தெரிவித்துள்ள டேவிட் லின்சே சங்கிரி லா ...

மேலும்..

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை எதிர்த்தால் தற்போதைய பயங்கரவாத தடைச்சட்டமே தொடர்ந்து நீடிக்கும் நிலையேற்படும் – நீதியமைச்சர்

பயங்கரவாதத்தடைச்சட்டத்துக்குப் பதிலாகவே பயங்கரவாத எதிர்ப்புச்சட்டத்தைக் கொண்டுவருகின்றோம். அவ்வாறிருக்கையில் இப்புதிய சட்டம் வேண்டாம் என்றுகூறி எதிர்ப்பு வெளியிட்டால், ஏற்கனவே நடைமுறையில் உள்ள பயங்கரவாதத்தடைச்சட்டம் தொடர்ந்து அமுலில் இருக்கும் நிலையேற்படும் என்று நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அரசாங்கத்தினால் அண்மையில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள உத்தேச பயங்கரவாத ...

மேலும்..

கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் நபர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் – மரிக்கார்

கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் நபர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவிடம் கோரிக்கை விடுக்கின்றோம். கட்சியிலிருந்து செல்பவர்கள் தாராளமாக செல்லலாம். நாம் நிச்சயம் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைப்போம் என ஐக்கிய மக்கள் சக்தியின் ...

மேலும்..

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் ‘சிறைச்சாலை நூலகம்’ திறப்பு

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் கைதிகளின் பாவனைக்கென நூலகமொன்று அமைக்கப்பட்டு, அந்நூலகம் இன்று சனிக்கிழமை (8) காலை 9.30 மணியளவில் திறந்துவைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் சி.சிறீசற்குணராஜாவால் இந்நூலகத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு நடந்தேறியது. யாழ். பல்கலைக்கழகத்தின் முன்னாள் நூலகர் ஸ்ரீகாந்தலக்ஷ்மி அருளானந்தம் சிவநேசன் குடும்பத்தினரால் சம்பிரதாயபூர்வமாக  யாழ்ப்பாணம் ...

மேலும்..

முன்னாள் பிரதமர் மஹிந்த – சீன தூதுவருக்கிடையில் சிந்திப்பு

சீனா மற்றும் இலங்கைக்கிடையிலான பாரம்பரிய நட்பை வலுப்படுத்தல் மற்றும் பல்வேறு துறைசார் பரிமாற்றங்கள் குறித்து முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இலங்கைக்கான சீனத்தூதுவர் கீ சென் ஹொங் ஆகியோருக்கிடையிலான சந்திப்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. தமிழ் - சிங்கள சித்தரைப் புத்தாண்டு வாழ்த்துக்களுடன் ...

மேலும்..

யாழ். இருபாலை சிறுவர் இல்லத்தில் 80 வயதான போதகரால் சிறுமிகள் துஷ்பிரயோகம் ; விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

யாழ்ப்பாணம் இருபாலை பகுதியில் சட்டவிரோதமான முறையில் இயங்கிய சிறுவர் இல்லத்தில் தங்கியிருந்த சிறுமிகள் 80 வயதான தலைமை போதகரால் பாலியல் துஸ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்பட்டனர் என விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. இருபாலை பகுதியில் சபை ஒன்றால் சட்டவிரோதமான முறையில் நடத்தி செல்லப்பட்ட சிறுவர் இல்லத்தில் ...

மேலும்..

பொலிஸாருக்கு லஞ்சம் கொடுத்து ஆடு கடத்த முயன்றவர் மாட்டினார்! சாவகச்சேரியில் சம்பவம்

சாவகச்சேரியில் பொலிஸாருக்கு லஞ்சம் கொடுத்து ஆடு கடத்த முயன்றவர் கைது செய்யப்பட்டுள்ளார் என யாழ்ப்பாணம் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபரின் வழிகாட்டுதலின் கீழ் யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து வெளியிடங்களுக்கு செல்லும் வாகனங்கள் சோதனையிடும் நடவடிக்கை ...

மேலும்..

ஈஸ்டர் தாக்குதல் போன்ற சம்பவங்களுக்கு இடமில்லை – ஜனாதிபதி

ஈஸ்டர் தாக்குதல் போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் இடம்பெறாத வகையில் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அர்ப்பணிப்புடன் இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். எந்தவொரு செல்வாக்கும் இன்றி தாக்குதல் தொடர்பாக சுயாதீனமாகவும் பக்கச்சார்பற்றதாகவும் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார். இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதற்கு ...

மேலும்..

எமது கொள்கைக்கு இணக்கமானவரை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிப்போம் – பொதுஜன பெரமுன

கட்சி மட்டத்தில் சகல தரப்பினருடன் கலந்தாலோசித்து எமது கொள்கைக்கு இணக்கமானவரை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிப்போம். 2024 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் எவ்வித பேச்சுகளும் உத்தியோகபூர்வமாக இடம்பெறவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். ஸ்ரீலங்கா ...

மேலும்..

பொருத்தமற்ற விடயங்கள் காணப்பட்டால் மேன்முறையீடு செய்வோம் – மைத்திரி

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்தில் உள்ள விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்து, அதில் நாட்டுக்கு பொருத்தமற்ற விடயங்கள் காணப்பட்டால், அதற்கான திருத்தங்களை மேன்முறையீடு செய்ய தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மே தினக் கூட்டம் ...

மேலும்..

சம்மாந்துறையில் மதஸ்தலம் ஒன்றின் நிர்வாகத் தெரிவில் கைகலப்பு : ஒருவர் பலி!

சம்மாந்துறை பிரதேசத்தில் 65 வயதான மலையடி கிராமம் 4 கிராம சேவையாளர் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் மதஸ்தலம் ஒன்றின் நிர்வாக தெரிவில் ஏற்பட்ட கைகலப்பு காரணமாக நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை அளவில் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சம்மாந்துறை பள்ளிவாசல் ஒன்றின் ...

மேலும்..

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்தை நிறைவேற்றும் முயற்சிகளை அரசாங்கம் கைவிடவில்லை – காவிந்த

எதிர்க்கட்சிகள் , சிவில் சமூக அமைப்புக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் எதிர்ப்புக்களால் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்தை அரசாங்கம் சற்று ஒத்தி வைத்துள்ளதே தவிர , அதனை நிறைவேற்றும் முயற்சிகளைக் கைவிடவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ...

மேலும்..

இலங்கையில் வாழும் இந்துக்களுக்கு நீதி கோரி டெல்லியில் போராட்டம்!

இலங்கையில் வாழும் இந்துக்களுக்கு நீதி கோரி டெல்லியில் இந்துக்கள் அமைப்பினரால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் உள்ள கோவில்களை இடிப்பதற்கும், இந்துக்களுக்கு தீங்கு விளைவிப்பதற்கும் எதிர்ப்;பு தெரிவித்தே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. பழமையான வரலாற்று மற்றும் மத முக்கியத்துவம் வாய்ந்த இந்து கோவில்களை இடித்து, இந்து ...

மேலும்..