சிறப்புச் செய்திகள்

தொழிற்சங்க கோரிக்கைகள் பேச்சுவார்த்தைக்கு ஜனாதிபதி வாய்ப்பளிக்க வேண்டும் – மைத்திரிபால சிறிசேன

கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் சேவையாளர்கள் மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட வேண்டும். தொழிற்சங்கத்தினர் முன்வைத்துள்ள கோரிக்கைகள் தொடர்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபட ஜனாதிபதி வாய்ப்பு வழங்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ...

மேலும்..

சித்திரைப் புத்தாண்டை நாட்டு மக்கள் மிகவும் சந்தோசமாக கொண்டாடலாம் – நளின் பெர்னாண்டோ

நாட்டு மக்கள் தமிழ் - சிங்கள புத்தாண்டை இம்முறை சந்தோசமாக கொண்டாடலாம். காலி முகத்திடலில் கொண்டாட வேண்டிய தேவையில்லை. அத்தியாவசிய பொருளகளின் விலை குறைப்பு தொடர்பில் ஒன்றிணைந்த கண்காணிப்பு நடவடிக்கைகளை நாடளாவிய ரீதியில் முன்னெடுப்போம் என வர்த்தக துறை மற்றும் உணவு பாதுகாப்பு ...

மேலும்..

மலையக மக்களை தேசிய நீரோட்டத்தில் இணைத்து நிவாரணங்களை வழங்க திட்டம் இருந்தால் எமது ஆதரவு – வடிவேல் சுரேஷ்

மலையக மக்களை தேசிய நீரோட்டத்தில் இணைப்பதற்கு முறையான சட்டத்தை ஏற்படுத்த வேண்டும். மலையக மக்களுக்கு நிவாரணங்களை வழங்கி நல்ல திட்டங்களை அரசாங்கம் முன்னெடுக்குமாக இருந்தால் எமது பூரண ஆதரவை அரசாங்கத்துக்கு வழங்கத் தயாராக இருக்கின்றோம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற ...

மேலும்..

உள்ளூராட்சி மன்ற எல்லை நிர்ணய அறிக்கை இனங்களுக்கிடையில் பிரச்சினையை ஏற்படுத்தும் அபாயம் – மரிக்கார்

உள்ளூராட்சி மன்ற எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையை வர்த்தமானிப்படுத்த முன்னர் அதுதொடர்பில் மீளாய்வு செய்ய மீளாய்வு குழு அமைப்போம். அதற்காக அனைத்து கட்சிகளுக்கும் அழைப்புவிடுப்போம் என உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாணசபைகள் இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புர தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர் ...

மேலும்..

இடைக்கால ஜனாதிபதி தெரிவு வாக்குச்சீட்டுக்கள் அழிக்கப்பட்டன – சபாநாயகர்

முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ பதவி விலகியதை தொடர்ந்து நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற இடைக்கால ஜனாதிபதி தெரிவுக்கான இரகசிய வாக்கெடுப்பின் போது அளிக்கப்பட்ட வாக்குச்சீட்டுக்கள் சட்டத்தின் பிரகாரம் நாடாளுமன்ற செயலாளர் நாயகத்தால் அழிக்கப்பட்டுள்ளன என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சபைக்கு அறிவித்தார். நாடாளுமன்றத்தில் ...

மேலும்..

கிளிநொச்சியில் 98 ஏக்கர் காணியை தனியாருக்கு வழங்க நில அளவீடு : பொதுமக்கள் எதிர்ப்பு

கிளிநொச்சி பூநகரி கௌதாரி முனை பகுதியில் 98 ஏக்கர் காணியை தனியார் நிறுவனம் ஒன்றுக்கு வழங்கும் நோக்கில் நில அளவீடு மேற்கொள்வதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து அளவீட்டுப் பணிகள் கைவிடப்பட்டுள்ளன. கிளிநொச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கௌதாரி முனை கிராம அலுவலர் ...

மேலும்..

அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்துவோம் – லக்ஷ்மன் கிரியெல்ல

சட்டத்தின் ஆதிக்கத்தை மீறி செயற்படும் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்துவோம். அத்துடன் எதிர்க்கட்சியின் ஆலோசனைகளை மதிக்காமல் செயற்பட்டதாலே நாடு வங்குரோத்து நிலைக்கு செல்ல காரணமாகும் என எதிர்க்கட்சியின் பிரதமகொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற இறக்குமதி மற்றும் ...

மேலும்..

நிதியமைச்சின் செயலரின் செயற்பாட்டால் பாராளுமன்றின் அதிகாரம் சவாலுக்குட்படுத்தப்பட்டுள்ளது – மத்தும பண்டார

நிதியமைச்சின் செயலரின் தன்னிச்சையான செயற்பாட்டால் நாடாளுமன்றத்தின் அதிகாரம் சவாலுக்குட்படுத்தப்பட்டுள்ளதால், எனது நாடாளுமன்ற சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது. ஆகவே அவருக்கு எதிராக சிறப்புரிமை மீறல் முறைப்பாட்டை முன்வைப்பதாக குறிப்பிட்டு ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார சிறப்புரிமை மீறல் முறைப்பாட்டை சபையில் முன்வைத்தார். நாடாளுமன்றத்தில் ...

மேலும்..

பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக ஜனாதிபதி ரணில் களமிறக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு தவறல்ல – பந்துல

ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை களமிறக்குவது தொடர்பில் உத்தியோகபூர்வமாகத் தீர்மானிக்கப்படவில்லை. எனினும் நாட்டின் நன்மையைக் கருத்திற் கொண்டு அவ்வாறானதொரு எதிர்பார்ப்பைக் கொண்டிருத்தல் தவறல்ல என்று அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார். பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக ...

மேலும்..

சிவ தோஷம் – குல நாசம் : நாடு நாசத்தை நோக்கி செல்லும் – சிறிதரன் கடும் சாடல்

இனவாதத்தின் உச்சம் தமிழர்களின் மத உரிமைகளையும் விட்டு வைக்கவில்லை.சிவ தோஷம்-குல நாசம் என்ற வாக்குக்கு அதிக பலம் உள்ளது, சிவன் மீது கை வைக்கப்பட்டுள்ளது. ஆகவே இந்த நாடு நாசத்தை நோக்கி செல்லும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் ...

மேலும்..

வடக்கு கிழக்கை முழுமையாக முடக்குவோம் – அரசாங்கத்திற்கு கடும் எச்சரிக்கை விடுத்தார் இரா.சாணக்கியன் !!

தொல்பொருள் திணைக்களத்தினை கொண்டு அரசாங்கம் முன்னெடுத்துவரும் இனவாத செயற்பாடுகளை நிறுத்தாவிட்டால் வடக்கு கிழக்கை முடக்குவோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் எச்சரித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று செவ்வாய்க்கிழமை உரையாற்றிய அவர் குறுந்தூர்மலை, வெடுக்குநாறி மற்றும் திருகோணமலையில் தொல்பொருட்களை பாதுக்கப்பதாக கூறி ...

மேலும்..

காசல்ரீ மற்றும் மவுஸ்ஸாக்கலை ஆகிய நீர்தேக்க பகுதிகளில் மழை வேண்டி சர்வமத வழிபாடுகள்!

காசல்ரீ மற்றும் மவுஸ்ஸாக்கலை ஆகிய நீர்தேக்க பகுதிகளில் மழை வேண்டி சர்வமத தலைவர்கள் மத வழிபாடுகளை நடத்தினர். பிரதானமாக தேசிய மின் உற்பத்திக்கான நீரை வழங்கும் காசல்ரீ மற்றும் மவுஸ்ஸாக்கலை ஆகிய நீர்த்தேக்கங்களில் மழை பொழிய வேண்டி மஸ்கெலியா பிரதேச சர்வமதத் தலைவர்கள் பல ...

மேலும்..

கட்புல அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழக பீடாதிபதியாக பேராசிரியர் சுனில் ஆரியரத்ன நியமனம்

கட்புல அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழகத்தின் பீடாதிபதியாக பேராசிரியர் சுனில் ஆரியரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். 1985 ஆம் ஆண்டு 07 இலக்கச் சட்டத்தின் திருத்தம் செய்யப்பட்ட 1978 ஆம் ஆண்டு 16 ஆம் இலக்க பல்கலைக்கழகச் சட்டத்தின் 32 வது உறுப்புரைக்கமைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் ...

மேலும்..

கல்முனை மாநகர எல்லைக்குள் மாட்டிறைச்சிக்கு கட்டுப்பாட்டு விலை

கல்முனை மாநகர சபை எல்லையினுள் புனித ரமழான் நோன்பு காலத்தை முன்னிட்டு, மாட்டிறைச்சியை கட்டுப்பாட்டு விலையில் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் திங்கட்கிழமை (03) இறைச்சிக் கடை உரிமையாளர்களுடன் நடாத்தப்பட்ட கலந்துரையாடலின்போது  இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி செவ்வாய்க்கிழமை (04) தொடக்கம் ...

மேலும்..

எதிர்க்கட்சிக்குள் குழப்பங்களை ஏற்படுத்தவே அரசாங்கம் முன்னுரிமையளிக்கிறது – திஸ்ஸ அத்தநாயக்க

சர்வதேச நாணய நிதியத்துக்குச் சென்றுள்ளமையால் எமது வெளிநாட்டு கடன் 53 சதவீதத்திலிருந்து 55 சதவீதமாக உயர்வடைந்துள்ளது. இது பட்டாசு கொளுத்தி கொண்டாட வேண்டிய விடயமல்ல. இவ்வாறான பிரச்சினைகளிலிருந்து நாட்டை மீட்பதை விடுத்து அரசாங்கம் கட்சிகளுக்குள் குழப்பங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது என ஐக்கிய மக்கள் ...

மேலும்..