சிறப்புச் செய்திகள்

மன்னார் நகர சபையை மாநகர சபையாக தரமுயர்த்தும் விவகாரம் – பிரதமருக்கு செல்வம் அடைக்கலநாதன் எம்.பி.அவசர கடிதம்

மன்னார் நகர சபையை மாநகர சபையாக தரம் உயர்த்துவது தொடர்பில்  வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்,பிரதமர் தினேஷ் குணவர்தனவிற்கு இன்று (03) திங்கட்கிழமை அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில், மன்னார் நகர சபையை மாநகர ...

மேலும்..

இலங்கையில் 16 பேரை காப்பாற்றி தன்னுயிரை தியாகம் செய்த இளைஞன்

எல்ல நீர்வீழ்ச்சியில் 16 வெளிநாட்டவர்களை காப்பாற்றிய இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். கித்துல்கல பிரதேசத்தை சேர்ந்த 38 வயதுடைய அமில மதுசாங்க என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சுற்றுலா பயணிகள் நீர்வீழ்ச்சியில் இருந்து இறங்குவதற்காக முயற்சித்த போது இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. அருவியில் திடீரென வெள்ளம் பெருக்கெடுத்ததால் ...

மேலும்..

28 கோடி ரூபா பெறுமதியான தங்கம் கடத்திய 4 பேர் விமான நிலையத்தில் கைது

சுமார் 28 கோடி ரூபா பெறுமதியான தங்கம் கடத்திய நான்கு பேர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். விமான நிலையப் பாதுகாப்புப் பிரிவினரும், சுங்கப் பிரிவினரும் இணைந்து இந்த சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர். சுங்கத் தீர்வையற்ற வர்த்தக நிலையமொன்றின் ...

மேலும்..

எதிர்க்கட்சிக் குழுவொன்று ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க தீர்மானம்: அனுரகுமார

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று எதிர்வரும் காலங்களில் ஜனாதிபதியுடன் இணைந்து கொள்ள எதிர்பார்க்கப்படுவதாகத் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். கொலன்னாவையில் இடம்பெற்ற பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவித்த அவர் - ஐக்கிய ...

மேலும்..

எழுத்தாளர் கவிச் சுடர் சிவரமணியின் ‘நவீன சீதை’ சிறுகதைநூல் அறிமுகம்!

எழுத்தாளர் கவிச்சுடர் சிவரமணியின் 'நவீன சீதை' என்ற சிறுகதை நூல் அறிமுக விழா கடந்த சனிக்கிழமை 'யாழ் களரி' அரங்கில் மாலை 4.30 மணியளவில் கலைக்குரல் ஜோர்ஜ் ஜெஸ்ரின் தலைமையில் நடைபெற்றது. இதன்போது, பண்பலை வேந்தன் முகுந்தன் சுந்தரலிங்கம் அறிமுக உரையை நிகழ்த்தினார். ...

மேலும்..

பாலியல் – இனப்பெருக்க ஆரோக்கியம் தொடர்பில் மாணவர்களுக்கு பாடப் புத்தகம்: ரோகினி குமாரி அறிவுறுத்தல்!

பாடசாலை மாணவர்களுக்கான பாலியல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியம் தொடர்பான பாடப்புத்தகங்களைத் தயாரிப்பதற்காக, கல்வி அமைச்சுடன் இணைந்து விசேட குழுவொன்றை நியமிக்குமாறு சிறுவர்களுக்கான நாடாளுமன்ற குழாத்தின் தலைவி ரோகினி குமாரி விஜேரத்ன அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். கடந்த வாரம் நடைபெற்ற சிறுவர்களுக்கான நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் ...

மேலும்..

தீர்வை வழங்கினால் பரீட்ச‍ை விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கையை உடனடியாக ஆரம்பிப்போம் – பல்கலைக்கழக பேராசிரியர்களின் சங்க சம்மேளனம்

கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கை தாமதமாவதன் பொறுப்பை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும். எமது கோரிக்கைகளுக்கு அரசாங்கம் முறையான தீர்வொன்றை வழங்குமாக இருந்தால் விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கையை உடனடியாக ஆரம்பிப்போம் என பல்கலைக்கழக பேராசிரியர்களின் சங்க சம்மேளனத்தின் தலைவர் ...

மேலும்..

திறந்த பல்கலைக்கழகத்தில் கற்கை நெறிகளுக்கான கட்டணம் அதிகரிப்பு – மாணவர்கள் சங்கம் விசனம்

இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் கற்கை நெறிகளுக்கான கட்டணம் 55 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள இலங்கை திறந்த பல்கலைக்கழக மாணவர்கள் சங்கத் தலைவர் முஹம்மது றிபாத், இதற்கு உரிய தீர்வு வழங்கப்படாவிட்டால் வீதியில் இறங்கி போராடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இது ...

மேலும்..

அரச உத்தியோகத்தர்களின் கடன் கழிப்பனவை பிற்போடுங்கள் – இம்ரான் எம்.பி ஜனாதிபதியிடம் கோரிக்கை

அரச உத்தியோகத்தர்கள் பெற்ற கடனுக்கான ஏப்ரல் மாத கழிப்பனவை பிற்போட நடவடிக்கை எடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். ஏப்ரல் மாதம் சகல மக்களுக்குமான பண்டிகை மாதமாகும். இந்தப் பண்டிகைக் காலத்தில் அதிக செலவுகள் ஏற்படுவது இயல்பாகும். இந்நிலையில் ...

மேலும்..

ஜனநாயகத்தை பாதுகாக்க நாட்டு மக்கள் ஒன்றுதிரள வேண்டும் – முஜிபூர் ரஹ்மான்

அரசாங்கத்தின் சர்வாதிகார செயற்பாடுகளால் நாட்டு மக்களின் ஜனநாயக உரிமை கேலிக்கூத்தாக கப்பட்டுள்ளது. ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றுதிரள வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ...

மேலும்..

போராட்டத்தில் ஈடுபடும் சகலரும் பயங்கரவாதிகளாக அடையாளப்படுத்தப்படுவர் – ரஞ்சித் மத்தும பண்டார

அரசாங்கத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடும் சகலரையும் பயங்கரவாதிகளாக அடையாளப்படுத்தும் வகையில் உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை இயற்ற அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. அரசாங்கத்தின் நோக்கத்தை நீதிமன்றத்தின் ஊடாக முறியடிப்போம் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். உத்தேச ...

மேலும்..

பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபடவுள்ளவர்களே உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை விமர்சிக்கிறார்கள் – நீதியமைச்சர்

எதிர்காலத்தில் பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபடவுள்ளவர்களே உத்தேச பயங்கரவாத தடைச் சட்டமூலத்தைக் கடுமையாக விமர்சிக்கிறார்கள். மனித உரிமைகளுக்கு எதிரான ஏற்புகள் காணப்படுமாயின், நாட்டு மக்கள் எவரும் உயர் நீதிமன்றத்தை நாடலாம். சட்டத்தரணிகளின் ஒத்துழைப்பை பெற்றுக்கொடுப்போம் என நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசமைப்பு மறுசீரமைப்பு ...

மேலும்..

பளை பொலிஸ் பிரிவில் ஆண் ஒருவர் சடலமாக கண்டெடுப்பு !!

கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரிய பளை பகுதியில் இவ்வாறு ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பெரியபளையில் வசித்து வந்த கணபதிபிள்ளை முருகேசம்பிள்ளை என்பவர் நேற்றைய தினம் காணாமல் போயுள்ளார். இந்த நிலையில் இன்று (02) அருகில் உள்ள தோட்டக்காணி ஒன்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ள ...

மேலும்..

யாழில் அனுமதியின்றி நடத்தப்பட்ட சிறுவர் இல்லம் முற்றுகை : 13 சிறுவர்கள் மீட்பு

யாழ். இருபாலையில் அனுமதியின்றி நடத்தப்பட்ட சிறுவர் இல்லத்தை கோப்பாய் பொலிஸார் மற்றும் சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு திணைக்களம் இணைந்து முற்றுகையிட்டதில் 13 சிறுவர்கள் இன்று (2) முற்பகல் மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்ட சிறுவர்கள் மருத்துவ பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சட்ட மருத்துவ அதிகாரியிடம் ...

மேலும்..

கணினி குற்றங்களுக்கு திட்டமிடல் : 38 சீனப் பிரஜைகள் அளுத்கமவில் கைது!

கணினி குற்றங்களை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர் என்ற சந்தேகத்தின் பேரில் சீனப் பிரஜைகள் 38 பேர் நேற்று சனிக்கிழமை (1 ) கைது செய்யப்பட்டதாக அளுத்கம பொலிஸார் தெரிவித்தனர். நிதி மோசடி தொடர்பான கணினி குற்றங்களை மேற்கொள்ளும் நோக்கில் குறித்த சீனப் பிரஜைகள் தங்கியிருப்பதாக ...

மேலும்..