சிறப்புச் செய்திகள்

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் நுரையீரல் பரிசோதனைப் பிரிவு திறப்பு!

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் நுரையீரல் மற்றும் ஆஸ்துமா தொடர்பான Lung function test ( Spirometer) சோதனைகளை மேற்கொள்வதற்கு உரிய பிரிவு இன்று (வெள்ளிக்கிழமை) திறந்துவைக்கப்பட்டது. இந்தத் தொகுதியை சுவாசநோய் சிரேஷ்ட வைத்தியநிபுணர், யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட சிரேஷ்ட விரிவுரையாளர் கௌரி ...

மேலும்..

பழம்பெரும் பயணிகள் தரிப்பிடத்தை இடித்தழித்த சாவகச்சேரி நகரசபை! 

சாவகச்சேரி நகரசபைக்குட்பட்ட மீசாலை சந்தியில் உள்ள 50 வருடங்களுக்கு மேற்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த பயணிகள் தரிப்பிடத்தை சாவகச்சேரி நகரசபை முற்றாக இடித்து அழித்துள்ளது. மீசாலை சந்தியில் பழைய ரயில் நிலையம் அமைந்திருந்த காலத்திலிருந்து தென்மராட்சி மக்களின் வாழ்வியலோடு ஒன்றித்திருந்த பயணிகள் தரிப்பிடமே சாவகச்சேரி ...

மேலும்..

போராட்டக்காரர்களுக்கு புனர்வாழ்வளிக்கத் தயார்! நீதி இராஜாங்க அமைச்சர்

  சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை நாடு என்ற ரீதியில் நிறைவேற்ற வேண்டும். பொருளாதார முன்னேற்றத்துக்கும், மக்களின் இயல்பு வாழ்க்கைக்கும் தடை ஏற்படுத்தும் வகையில் போராட்டங்களில் ஈடுபடுபவர்களுக்குத் தேவையாயின், புனர்வாழ்வளிக்கத் தயாராக உள்ளோம் என நீதி இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா ...

மேலும்..

சாரா ஜெஸ்மின் உயிரிழந்தார் எனக் கூறப்பட்டுள்ளமை உண்மைகளை முற்றாக மறைப்பதற்கான சதித் திட்டம்! முஜிபுர் ரஹ்மான் சாடல்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய பிரதான சாட்சியாகக் கருதப்படும் சாரா ஜெஸ்மின் எனப்படும் புலஸ்தினி மகேந்திரன் உயிரிழந்துவிட்டார் எனக் கூறப்பட்டுள்ளமை உண்மைகளை முற்றாக மறைப்பதற்கான சதித்திட்டமாகும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். மேலும், இந்த சதித்திட்டங்களுக்கு ...

மேலும்..

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை உயர்நீதிமன்றில் சவாலுக்குட்படுத்துவோம்! ஜி.எல்.பீரிஸ்

நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தை காட்டிலும் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள உத்தேச புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் அபாயகரமானது. ஜனநாயகம், மனித உரிமை ஆகிய அடிப்படை அம்சங்களுக்கு எதிரான விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. ஆகவே, பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை உயர் நீதிமன்றில் சவாலுக்குட்படுத்துவோம் என ...

மேலும்..

நீண்டகாலக் கொள்கை அடிப்படையில் அரச நிறுவனங்கள் மறுசீரமைக்கப்படும்! ரஞ்சித் பண்டார கூறுகிறார்

அரச சேவை தொடர்பில் நாட்டு மக்கள் மாறுபட்ட கருத்துக்களைக் குறிப்பிடுகிறார்கள். எதிர்காலத்துக்குப் பொருந்தும் வகையில் அரச சேவை நிச்சயம் மறுசீரமைக்கப்படும். காலம் காலமாக காணப்படும் குறைபாடுகளைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல முடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் ...

மேலும்..

ஊழல் ஒழிப்பு சட்டமூலத்தை மே மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க ஏற்பாடு! நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தகவல்

நாட்டின் அபிவிருத்திக்கு ஊழல் ஒழிப்பு சட்டம் பலம்மிக்கதாக இருக்கவேண்டும். அதன் பிரகாரம் சர்வதேசம் ஏற்றுக்கொள்ளும் வகையில் புதிய ஊழில் ஒழிப்பு சட்டமூலம் தயாரிக்கப்பட்டிருக்கிறது. எதிர்வரும் மே மாதமளவில் நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க எதிர்பார்க்கிறோம் . அத்துடன் இந்த சட்டமூலம் சர்வதேச நாணய நிதியத்தின் தேவைக்கு ...

மேலும்..

சாய்ந்தமருதில் 3 உணவகங்களுக்கு நீதிமன்றத்தால் தண்டப்பணம் விதிப்பு! 

சாய்ந்தமருதில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற மற்றும் பழுதடைந்த உணவுகள் கைப்பற்றப்பட்டுள்ளதை தொடர்ந்து, 3 உணவகங்களுக்கு நீதிமன்றத்தால் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது. உணவுப் பாதுகாப்பு மற்றும் சுத்தமான உணவை பொது மக்களுக்கு உறுதிப்படுத்தல் என்ற நோக்கில் தேசிய ரீதியாக அனுஷ்டிக்கப்பட்டு வரும் 'தேசிய உணவுப் பாதுகாப்பு' ...

மேலும்..

கச்சதீவில் நிறுவப்பட்டுள்ள புத்தர்சிலையை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுங்கள்! தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்

கச்சதீவில் புத்தர்சிலையொன்று நிறுவப்பட்டமையைக் கடுமையாகக் கண்டித்திருக்கும் இந்திய மக்களவை உறுப்பினர் தொல்.திருமாவளவன், அந்த புத்தர்சிலையை அகற்றுவதற்கும் அந்தப் பகுதியில் மதரீதியான ஒருமைப்பாட்டை நிலைநாட்டுவதற்கும் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு இந்திய அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார். சில வாரங்களுக்கு முன்னர் கச்சதீவில் புத்தர்சிலையொன்று வைக்கப்பட்ட விவகாரம் தமிழ்மக்கள் ...

மேலும்..

இலகு ரயில் சேவை மீண்டும் ஆரம்பம் குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை!   ஜப்பான் தூதுவர் கூறுகிறார்

கொழும்பு - மாலபே இடையிலான இலகு ரயில் சேவைத்திட்டத்தை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் ஹிடேகி மிசுகோஷி தெரிவித்துள்ளார். இலங்கை மோட்டார் வர்த்தக சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலகு ரயில் திட்டம் ...

மேலும்..

கிளிநொச்சி மாவட்ட காணி பயன்பாட்டு திட்டமிடல் குழு நேற்றுக் கூடி ஆராய்வு! 

கிளிநொச்சி  மாவட்ட காணிப் பயன்பாட்டு திட்டமிடல் குழுக் கூட்டத்தில் வனவளத்திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களங்களின் எல்லையிடப்பட்ட பகுதிகளில் விடுவிக்கபட வேண்டிய காணிகள் தொடர்பான விடயங்கள் திணைக்கள அதிகாரிகளுடன் ஆராயப்பட்டன. கிளிநொச்சி மாவட்டத்தின் நடப்பாண்டுக்கான முதலாவது காணிப்பயன்பாட்டு திட்டமிடல் குழுக் கூட்டம் கிளிநொச்சி மாவட்ட ...

மேலும்..

மஹிந்தவின் கருத்துக்கு அரசுக்குள் எவ்வித மதிப்பும் தற்போது கிடையாது!  அடித்துக்கூறுகின்றார் டிலான் பெரேரா

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கருத்துக்கு அரசாங்கத்திற்குள் எவ்வித மதிப்பும் தற்போது கிடையாது. பொதுஜன பெரமுனவில் இருந்து விலகிய நாங்கள் இனியொருபோதும் பொதுஜன பெரமுனவுடன் ஒன்றிணையப் போவதில்லை என்பதை உறுதியாகக் குறிப்பிட்டுக் கொள்கிறேன் என நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார். சுதந்திர மக்கள் ...

மேலும்..

இலாபமடையும் அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்த இடமளிக்கோம்!  சந்திம வீரக்கொடி திட்டவட்டம்

நட்டமடையும் அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் நடவடிக்கைகள் வெளிப்படைத்தன்மையாகக் காணப்பட வேண்டும். இலாபமடையும் அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்த இடமளிக்கப் போவதில்லை. நீதிமன்றத்தை நாடுவோம் என நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார். காலி பகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் ...

மேலும்..

அம்பாறை – நிந்தவூரில் இராணுவ முகாமை அகற்றுவதற்கான நடவடிக்கை முன்னெடுப்பு! 

அம்பாறை - நிந்தவூரில் அமைந்துள்ள இராணுவ முகாமினை அகற்றுவதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதனடிப்படையில் பிரதேச சபையின் பழைய கட்டடத்தில் அமைந்திருக்கின்ற இராணுவ முகாமை அகற்றுவதன் ஓர் அங்கமாக அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் எஸ்.எல்.ஏ.கமல் நெத்மினி அம்பாறை மாவட்ட அரசாங்க ...

மேலும்..

யாழ். மாணவர்களிடம் மன்னிப்புகோரிய டக்ளஸ்!

யாழ். மத்திய கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வுக்கு 10 நிமிடங்கள் தாமதித்து வந்தமைக்காக கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா  மாணவர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார். யாழ். மத்திய கல்லூரி தந்தை செல்வா அரங்கில் மத்திய கல்லூரி மாணவர்களுக்கான இலவச சீருடை மற்றும் பாடநூல் வழங்கும் நிகழ்வுக்கு ...

மேலும்..