சிறப்புச் செய்திகள்

புதிய பயங்கரவாதத் தடைச் சட்டம் அபாயகரமானது மக்கள் எழுச்சி மூலம் அதனை நாம் தோற்கடிப்போம்!  சுரேந்திரன் குருசுவாமி அழைப்பு

புதிதாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட மூலம் மிகவும் அபாயகரமாக உள்ள நிலையில் மக்கள் எழுச்சி மூலம் தோற்கடிக்க வேண்டும் என ரெலோ ஊடகப் பேச்சாளர் குருசுவாமி சுரேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் ...

மேலும்..

உலகின் சிறந்த ஆறு இளம் விஞ்ஞானிகளில் ஒருவராக தெரிவுசெய்யப்பட்ட இலங்கையர்! 

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை நோயெதிர்ப்பு மற்றும் உயிரியல் துறையின் பணிப்பாளர் பேராசிரியர் சந்திம ஜீவந்தர, உலகின் சிறந்த ஆறு இளம் விஞ்ஞானிகளில் (நோய் எதிர்ப்பு நிபுணர்கள்) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த ஆறு இளம் விஞ்ஞானிகளில் ஐவர் பிரித்தானிய பிரஜைகள் என்பதுடன் அவர்களில் இலங்கை ...

மேலும்..

பொதுஜன பெரமுன அரசியல் ரீதியில் பாரிய பின்னடைவை எதிர்கொள்ளும்!  வாசுதேவ ஆரூடம்

ஐக்கிய மக்கள் சக்தியின் பெரும்பாலான உறுப்பினர்களை இணைத்துக் கொண்டு அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்ல ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திட்டமிட்டுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசியல் ரீதியில் பாரிய பின்னடைவை எதிர்க்கொள்ளும் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் ...

மேலும்..

வடமராட்சியில் மீண்டும் கடற்படை பாஸ் நடைமுறை?

யாழ்ப்பாணம் வடமராட்சி கடற்தொழிலாளர்கள் கடற்படையின் அனுமதி பெற்றே கடற்தொழிலுக்கு செல்ல வேண்டும் என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவித்துள்ளார். சுருக்கு வலை மீன் பிடி உள்ளிட்ட சட்டவிரோத தொழில்களை கட்டுப்படுத்தும் நோக்குடன் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக மேலும் தெரிவித்தார். யாழ்.மாவட்டத்தில் இடம்பெறும் குற்ற ...

மேலும்..

தொழிற்சங்க தலைவர்களுக்கு எதிரான வேட்டையை அரசு உடன் நிறுத்த வேண்டும் – டிலான் பெரேரா

தொழிற்சங்க தலைவர்களுக்கு எதிரான வேட்டையை அரசு உடன் நிறுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தேசிய வளத்தை காக்க போராடிய தொழிற்சங்க தலைவர்கள் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டமை ...

மேலும்..

பலாலியில் இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த ஆலயத்தின் விக்கிரகங்கள் சூறையாடப்பட்டுள்ளன!

பலாலியில் இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த பழமை வாய்ந்த இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தின் விக்கிரகங்கள் சூறையாடப்பட்டுள்ளன. பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தில் காணப்பட்ட விக்கிரகங்கள் இரண்டினை காணவில்லை என ஆலய பரிபாலன சபைத் தலைவர் பலாலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினைப் பதிவு செய்துள்ளார். அத்துடன் ...

மேலும்..

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு சாணக்கியன் உள்ளிட்ட குழுவினர் போராட்டம்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் சட்டவிரோதமாக காணிகளை அபகரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் உள்ளிட்ட கிராம மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து மாவட்ட செயலகத்திற்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். வாகனேரி வயலை குறி வைத்துள்ள பிள்ளையானுக்கும், பிரதேச ...

மேலும்..

பொது மக்களுக்கான சேவைகளை தடையின்றிவழங்க இராணுவம் தயார் அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் உறுதி

பொது மக்களுக்கு தேவையான சேவைகளை தொடர்ச்சியாக வழங்குவதற்காக அரசாங்கம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். மேலும் பொதுமக்களின் சேவைகளை சீர்குலைக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு தொழிற்சங்கங்களிடம் வேண்டுகோள் விடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்காலத்தில் ...

மேலும்..

பௌத்த தர்மத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை பௌத்தர்களே திருத்துதல்வேண்டும்! யாழ். இந்து சமயப் பேரவையின் தலைவர் கூறுகிறார்

  இலங்கை தீவில் தம்மை பௌத்தர்கள் என்று கூறிக்கொண்டு பௌத்த தர்மத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களை திருத்த உலகில் உள்ள பௌத்தர்கள் முன்வர வேண்டும். இவர்கள் திருந்தாவிட்டால் இந்த நாடு உருப்படாது என யாழ். இந்து சமயப் பேரவையின் தலைவர் ஈசான சிவ ...

மேலும்..

புதிய பயங்கரவாதத் தடைச்சட்டம் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்துகிறது! சந்திரிகா கருத்து

புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தை தோற்கடிக்க அனைவரும் முன்வரவேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க வேண்டுகோள் விடுத்துள்ளார். புதிய பயங்கரவாதத் தடைச்சட்டம் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்துகின்றது என கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வேண்டுகோள் விடுத்துள்ள அவர், இந்த சட்டமூலத்தை தோற்கடிக்க மக்கள் ஐக்கியப்படவேண்டும் ...

மேலும்..

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு மருந்துகள் அன்பளிப்புச் செய்யப்பட்டன!

நாட்டின் பொருளாதார நெருக்கடியால் சுகாதாரத்துறை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது அரச வைத்தியசாலைகளே தனிப்பட்ட கொடையாளர்களின் உதவியுடனே சாதாரண மக்களுக்கான மருத்துவசேவையைப் பெரிதும் ஆற்றுகின்றன. அந்தவகையில், தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் தேவை கருதி சுழிபுரம் மேற்கு, சுழிபுரத்தைச் சேர்ந்த சபாநாயகம் சிவகுமார் குடும்பத்தினர் தெல்லிப்பழை ...

மேலும்..

யாழ். மத்திய கல்லூரி நீச்சல் தடாகம் புனரமைப்பதற்கு டக்ளஸ் நடவடிக்கை!

யாழ். மத்திய கல்லூரியின் நீச்சல் தடாகத்தை புனரமைக்கத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கடற் தொழில் அமைச்சரும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமுமான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். மத்திய கல்லூரியில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற பாடசாலை மாணவர்களுக்கான இலவச ...

மேலும்..

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம்: சாரா ஜஸ்மின் உயிரிழப்பு! மரபணுபரிசோதனை மூலம் உறுதி

உயிர்த்தஞாயிறு தாக்குதல் சந்தேகநபர் சாரா ஜஸ்மின் (புலஸ்தினி மகேந்திரன் ) உயிரிழந்துள்ளமை மரபணுபரிசோதனை மூலம் உறுதியாகியுள்ளது என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. சாரா ஜஸ்மின் இந்தியாவிற்கு தப்பிச்சென்றிருக்கலாம் அல்லது சாய்ந்தமருது குண்டுவெடிப்பில் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகங்கள் எழுந்திருந்த நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. சாய்ந்தமருது ...

மேலும்..

ராகுல் காந்திக்கு கிடைத்த தண்டனை ஏற்பாடுகளை உள்ளடக்கிய சட்டம் இலங்கையிலும் வரவேண்டும்! சாகர காரியவசம் கூறுகின்றார்

இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்திக்கு கிடைத்த தண்டனை ஏற்பாடுகளை உள்ளடக்கியதாக ஊழல் ஒழிப்பு சட்டம் உருவாக்கப்பட வேண்டும். ராஜபக்ஷர்கள் தலைமையிலான அரசாங்கத்தில் ஊழல் ஒழிப்பு தொடர்பான சட்டம் உருவாக்கப்படுவதை அதிஷ்டமாகக் கருதுகிறோம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர ...

மேலும்..

எரிபொருள் விநியோகத்திற்கு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதிக்கு வரவேற்பு! தெரிவிக்கிறார் ஹர்ஷ டி சில்வா

நாட்டில் எரிபொருள் விநியோகத்தை முன்னெடுப்பதற்கு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதியளிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை வரவேற்கத்தக்கது. இது தொடர்பாக முற்போக்காக சிந்திக்க வேண்டும். இதன் மூலம் எரிபொருள் சந்தையில் போட்டி நிலைமை அதிகரிக்கும் போது , நுகர்வோருக்கு பல நன்மைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று ...

மேலும்..