சிறப்புச் செய்திகள்

மானை வேட்டையாடி வாகனத்தில் கொண்டு சென்ற 3 பேர் கைது

ஹட்டன் - கொழும்பு பழைய வீதியில் மான் ஒன்றை வேட்டையாடி, அதனை உயிரற்ற நிலையில் வாகனத்தில் கொண்டு சென்ற மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். ஹட்டன் - கொழும்பு பழைய வீதியில் உள்ள ஸ்ரேதன் தோட்ட பகுதியில் மான் ஒன்றை  வேட்டையாடி ...

மேலும்..

பொருளாதாரத்தின் சகல துறைகளையும் டிஜிட்டல் மயப்படுத்துங்கள் – சர்வதேச வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் மரியா

நாட்டின் பொருளாதாரத்தின் சகல துறைகளும் டிஜிட்டல் மயப்படுத்தப்படுவதன் மூலமே அவற்றின் உலகளாவிய தரத்தை உறுதிசெய்யமுடியும் என்று சர்வதேச வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் மரியா பெர்னாண்டா கார்ஸா சுட்டிக்காட்டியுள்ளார். உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கடந்த புதன்கிழமை (18) இலங்கைக்கு வருகைதந்த சர்வதேச வர்த்தக சம்மேளனத்தின் ...

மேலும்..

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளரை நிறுத்த முடிவு தமிழரசு, விக்கி அணியுடன் விரைவில் பேச்சு: சுரேஷ் அறிவிப்பு

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் அரசியல்கட்சிகளின் சார்பில் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கு ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி கொள்கையளவில் இணக்கம் கண்டுள்ள நிலையில், அடுத்துவரும் நாள்களில் மாவை சேனாதிராஜா தலைமையிலான இலங்கைத் தமிழரசுக்கட்சி மற்றும் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி ...

மேலும்..

மின்சாரக்கட்டணத்தை செலவுகளுக்குப் பொருந்தும் வகையில் பேண வேண்டியது அவசியம் – சர்வதேச நாணய நிதியம்

மின்சாரக்கட்டணத்தை செலவுகளுக்குப் பொருந்தும் வகையில் பேண வேண்டியது அவசியமான விடயமாகுமென சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான தூதுக்குழுவின் பிரதித் தலைவர் கத்ஸ்யரினா ஸ்விரிட்சென்கா வலியுறுத்தியுள்ளார். வொஷிங்டனில் நடைபெற்ற நிகழ்நிலை கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், மின்சாரம் ...

மேலும்..

அரசாங்கத்திற்கு சொந்தமான 200 வர்த்தக நிறுவனங்கள் வருடாந்த அறிக்கைகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை – காமினி வலேபொட

அரசாங்கத்திற்கு சொந்தமான 200 வர்த்தக நிறுவனங்கள் மற்றும் ஏனைய வியாபார நிறுவனங்கள் கடந்த இரண்டு வருடங்களில் தமது வருடாந்த அறிக்கைகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லையென பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தை குறைப்பதற்கான துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் ...

மேலும்..

கிழக்கிலுள்ள சிங்களவர்கள் வெளியேற்றம்?

கிழக்கு மாகாணத்திலுள்ள பெரும்பான்மையினத்தவர்களை வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக உண்மைக்கு புறம்பான தகவல்கள் மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்படுவதாக கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் ...

மேலும்..

துப்பாக்கி சூட்டுக்குள்ளாகி உயிருக்கு போராடும் யானையைக் காவல் காக்கின்றது குட்டி யானை!

வெலிகந்தை பொலிஸ் பிரிவிலுள்ள மைத்திரிகம பிரதேசத்தில் யானை ஒன்று இனம் தெரியாதோரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த சம்பவம் வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. இந்நிலையில்,  பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் நிலையில் தாய் யானையை குட்டியானை அருகில் இருந்து காவல் காத்து ...

மேலும்..

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி மூடி மறைக்கப்படுமா எனச் சந்தேகம்! எழுகின்றது என்கிறார் துரைராசா ரவிகரன்

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி மூடி மறைக்கப்படுமா என்ற சந்தேகம் தற்போது எழுகின்றது என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார். கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி இடத்தை சனிக்கிழமை பிற்பகல் நேரில் சென்று பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு ...

மேலும்..

வருடாந்த வனவிலங்கு புகைப்படக் கண்காட்சி!

வருடாந்த வனவிலங்குகளை புகைப்படம் எடுத்தல் மற்றும் வனவிலங்கு கலை கண்காட்சி இடம்பெற்றது. இலங்கையின் இளம் விலங்கியல் நிபுணர்கள்  சங்கத்தால் குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சனிக்கிழமை ஆரம்பமான குறித்த கண்காட்சி ஞாயிற்றுக்கிழமையும் இடம்பெற்றது. தேசிய அருங்காட்சியகத்தில் இடம்பெறும் இந்தக் கண்காட்சியை காலை 9 மணி முதல் ...

மேலும்..

உயிரிழந்த நிலையில் கரையொதுங்கிய சுறா முல்லைத்தீவு கடற்கரையில்

முல்லைத்தீவு - அளம்பில் கடற்கரையில் உயிரிழந்த நிலையில் சுறா ஒன்று சனிக்கிழமை கரையொதுங்கியுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவு அளம்பில் கடற்கரையில் 15 அடி நீளமுடைய சுறா ஒன்றே இவ்வாறு உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இலங்கை கடற்கரையில் தொடர்ச்சியாக கடல்வாழ் உயிரினங்கள் இறந்த நிலையில் ...

மேலும்..

அடுத்த ஆண்டும் ரணில் ஜனாதிபதியாக வேண்டும் ரவி கருணாநாயக்க தெரிவிப்பு

ஜக்கிய தேசிய கட்சியின் விசேட பொது மாநாடு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் அந்தக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. புதிய உலகை எதிர்கொண்டு எதிர்கால சந்ததியினருக்காக நாட்டை உருவாக்குவோம் என்ற தொனிப் பொருளின் கீழ் குறித்த மாநாடு ...

மேலும்..

அரசாங்கத்திடம் நிலையானதொரு பொருளாதாரக் கொள்கையில்லை! சிறிதரன் எம்.பி. குற்றச்சாட்டு

இலங்கை அரசாங்கத்திடம் நிலையான பொருளாதாரக் கொள்கையில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் குற்றம் சுமத்தியுள்ளார். தர்மபுரத்திலுள்ள பாடசாலையொன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன் மக்கள் தற்போது பாரிய பொருளாதார நெருக்கடியை ...

மேலும்..

மலையக மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக ஐ.நாவிடம் விளக்கம்

மலையக மக்கள் எதிர்நோக்கியுள்ள உரிமை ரீதியான பிரச்சினைகள், பெருந்தோட்ட நிறுவனங்களின் அடக்குமுறைகள், உழைப்பு சுரண்டல்கள் மற்றும் மலையக மக்களுக்காக முன்னெடுக்கப்பட்டுவரும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான், ...

மேலும்..

இஸ்ரேல், பாலஸ்தீன் மோதல் இலங்கைக்கும் பொருளாதார ரீதியில் பாதிப்பு ஏற்படுத்தலாம் நாமல் ராஜபக்ஷ

காஸாவில் ஏற்பட்டுள்ள நிலைமை இலங்கைக்கும் பொருளாதார ரீதியில் பாதிப்புகளை ஏற்படுத்தும் அதனால் இது தொடர்பில் பாராளுமன்றமும், அரசாங்கமும் கவனம் செலுத்த வேண்டும் என நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (20) நடைபெற்ற இஸ்ரேல் - பலஸ்தீன மோதல் தொடர்பான சபை ...

மேலும்..

பயங்கரதவாதம் என்ற பெயரில் கஸாவில் இனப்படுகொலையே இடம்பெறுகிறது – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

இலங்கையில் இருந்து காஸாவில் போர் நிறுத்தத்தை கோருவது ஆச்சரியமாக இருக்கின்றது பயங்காரதவாதம் என்ற பெயரில் இனப் படுகொலைகளே அங்கு நடக்கின்றன என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (20) நடைபெற்ற இஸ்ரேல் - ...

மேலும்..