சிறப்புச் செய்திகள்

நிர்மாணத் துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை விரைவில் தீர்ப்பது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் – சாகல ரத்நாயக்க

நாட்டின் நிதி நிலைமை சீரானதுடன், நிர்மாணத்துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு படிப்படியாக தீர்வுகள் வழங்கப்படும் என தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். நிர்மாணத்துறையை மேம்படுத்துவதற்கான வட்டி விகிதங்கள் மற்றும் வங்கி மீட்பு நடவடிக்கைகள் ...

மேலும்..

நல்லூர் பிரதேச நீர் வளங்கள் சார் களப்பயணம்

நல்லூர் பிரதேச நீர் வளங்கள் சார்  களப்பயணம் கடந்த சனிக்கிழமை (25) பேராசிரியர் எஸ். சிறீஸ்கந்தராஜா தலைமையில் இடம்பெற்றது. களப்பயணத்தின் போது அரியாலை நீர்நொச்சித் தாழ்வுக் குளம் , பூம்புகார் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையின் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருடனான நீர் ...

மேலும்..

மக்கள் பிரதிநிதிகள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு மூடிய அறையில் மேற்கொள்ளப்பட்ட எல்லை நிர்ணயம் மீள் பரிசீலனைக்குட்படுத்தப்பட வேண்டும் – சமத்துவக் கட்சி

எல்லை மீள்நிர்ணயம் தொடர்பான பிரேரணைகள் மாவட்டச் செயலர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவொன்றின் ஊடாக பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேற்குறிப்பிடப்பட்ட குழுக்களில் எவற்றிலும் மக்கள் அமைப்புகள், மக்கள் பிரதிநிதிகள், அல்லது பொதுமக்களை பிரதிநிதித்துவம் செய்யும் அரசியற் கட்சிகள் திட்டமிட்ட வகையில் புறக்கணிக்கப்பட்டு, தங்களின் எஜமானர்களை ...

மேலும்..

மாதகல் – மாரீசன் கூடலில் 150 கிலோ நிறையுடைய கஞ்சா மீட்பு !

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதகல் - மாரீசன் கூடல் பகுதியில் நேற்றிரவு 150 கிலோ எடையுடைய கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. கடற்படையினருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து இந்த கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன. எனினும் சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை. மீட்கப்பட்ட கஞ்சாப் பொதிகள் காங்கேசன்துறை கடற்படை ...

மேலும்..

கல்முனையில் உணவு பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு ஹோட்டல்கள் விசேட சோதனை

தேசிய உணவு பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் ஊடாக பல்வேறு வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ. ஆர் .எம் .அஸ்மி தலைமையிலான பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் உணவு ...

மேலும்..

தென்னாபிரிக்காவின் பிரதி உயர்ஸ்தானிகராகும் இந்திய உயர்ஸ்தானிகரக அரசியல் ஆலோசகர்!

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரகத்தின் அரசியல் ஆலோசகராகச் செயற்பட்ட பாணுபிரகாஷ் தென்னாபிரிக்காவுக்கான பிரதி உயர்ஸ்தானிகராக பதவி உயர்வு பெற்றுச் செல்லவுள்ளார். 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் இலங்கையின் இந்திய உயர்ஸ்தானிகரகத்தில் அரசியல் பிரிவு ஆலோசகராக பதவியேற்றுக் கொண்ட அவர் கடந்த மூன்று ...

மேலும்..

வடக்கு ஆளுனர் தனது பதவியை தக்கவைக்க தமிழர்மீதான இன அழிப்பிற்கு துணைபோகிறார்! செல்வராசா கஜேந்திரன் காட்டம்

வடக்கு ஆளுநர் ஜீவன் தியாகராஜா தனது ஆளுநர் பதவியைத் தக்க வைத்துக்கொள்வதற்காக பேரினவாதத்தின் தமிழர் மீதான திட்டமிட்ட இனவழிப்பிற்குத் துணைபோகிறார் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்.மாநகரசபையின் ஆளுகைக்கு உட்பட்ட நாவலர் கலாசார மண்டபம் வடக்கு மாகாண ஆளுரால் மத்திய ...

மேலும்..

இலாபமடைகின்ற அரச நிறுவனங்களை தனியார்மயப்படுத்துவதன் பின்னணி என்ன? சரித ஹேரத் கேள்வி

அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதாகக் குறிப்பிட்டுக் கொண்டு இலாபமடையும் அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்துவதன் பின்னணி என்ன? அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் வழிமுறை நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும். தன்னிச்சையான முறையில் அரச நிறுவனங்களை தனியார்மயப்படுத்தினால் பாரிய விளைவுகளை அரசாங்கம் எதிர்கொள்ள நேரிடும் என நாடாளுமன்ற ...

மேலும்..

நட்டமடைந்த அரச நிறுவனங்களை மறுசீரமைக்காமல் இருக்க முடியாது! தாரக பாலசூரிய கருத்து

பொருளாதார மீட்சிக்கான பாதையை மாத்திரம் சர்வதேச நாணய நிதியம் காண்பித்துள்ளது, தற்போது இலாபமடைவதற்காக காலம் காலமாக நட்டமடைந்த அரச நிறுவனங்களை மறுசீரமைக்காமல் இருக்க முடியாது. தெரிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் நிச்சயம் மறுசீரமைக்கப்படும் என வெளிவிவகாரத்துறை இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன ...

மேலும்..

நாட்டின் தற்போதைய வங்குரோத்து நிலைக்கு அரச அதிகாரிகளும் பொறுப்புக்கூற வேண்டும்! சம்பிக்க கூறுகிறார்

நாடு வங்குரோத்து நிலை அடைந்தமைக்கு அரசியல்வாதிகளை போல் அரச அதிகாரிகளும் பொறுப்புக் கூற வேண்டும். கோட்டாபய ராஜபக்ஷ, மஹிந்த ராஜபக்ஷ, பஷில் ராஜபக்ஷ ஆகியோரின் நிதி,பொருளாதாரம் தொடர்பான அறிவின்மையை வியத்மக என்று குறிப்பிட்டுக் கொள்ளும் தரப்பினர் தமக்கு சாதகமாகப் பயன்படுத்தி 55 ...

மேலும்..

வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தை அழித்தவர்களுக்கு தக்க தண்டனை வழங்குங்கள் – அகில இலங்கை இந்துமாமன்றம் அரசாங்கத்திடம் வலியுறுத்தல்

வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் அழிக்கப்பட்டமை தொடர்பில் கடும் கண்டனத்தை வெளிப்படுத்தியிருக்கும் அகில இலங்கை இந்துமாமன்றம், இத்தகைய மிலேச்சத்தனமான செயற்பாட்டுடன் தொடர்புடையவர்களுக்குத் தக்க தண்டனை வழங்குமாறும் அந்த ஆலயத்தை அதே இடத்தில் மீண்டும் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது. வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் ...

மேலும்..

சர்வதேச நாணய நிதிய கடன் என்பது பயங்கரமானது – அனுர தரப்பு!

சர்வதேச நாணய நிதிய கடன் என்பது பயங்கரமானது என ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர் - சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கிடைத்த கடனை சிலர் புதையல் கிடைத்துவிட்டதுபோல கருதுகின்றனர். சர்வதேச நாணய நிதிய கடன் என்பது ...

மேலும்..

மாபெரும் போராட்டத்திற்கு மாவை சேனாதிராஜா அழைப்பு !

வவுனியாவில் நாளை மறுதினம் இடம்பெறும் மாபெரும் போராட்டத்திற்கு கட்சி பேதம் பாராது அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா அழைப்பு விடுத்தார். யாழ்ப்பாணம் மார்ட்டின் வீதியிலுள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடாத்திய ஊடகவியலாளர் ...

மேலும்..

வெடுக்குநாறிமலை அராஜகம்: விசாரணைக்கு ரணில் பணிப்பு! மாவையின் கடிதத்துக்கு ரணில் நடவடிக்கை

வவுனியா வடக்கு, வெடுக்குநாறி மலையிலுள்ள ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் இடித்தழிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுக்குமாறும், ஆலயத்தை மீள அமைத்துக் கொடுப்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்குமாறும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார் என்று இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் ...

மேலும்..

ஆதிலிங்கேஸ்வரர் மாயமான பின்னணியில் அரசாங்கம் – வி.மணிவண்ணன் குற்றச்சாட்டு !

வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் சேதமாக்கப்பட்ட சம்பவத்தில் அரசாங்கத்தின் பின்னணி இருப்பதாக யாழ்ப்பாண மாநகர சபையின் முன்னாள் முதல்வர் வி.மணிவண்ணன் குற்றம் சாட்டியுள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார். இந்த செயற்பாட்டின் ...

மேலும்..