சிறப்புச் செய்திகள்

விக்கிரகங்கள் அழிப்பு – மனித உரிமை ஆணைக்குழுவில் நிர்வாகத்தினர் முறைப்பாடு!

வவுனியா நெடுங்கேணி வெடுக்குநாறிமலையில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த விக்கிரகங்கள் உடைத்தழிக்கப்பட்டமைக்கு எதிராக ஆலய நிர்வாகத்தினரால் வவுனியா பிராந்திய மனித உரிமை ஆணைக்குழுவில் நேற்று (திங்கட்கிழமை) முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது. முறைப்பாட்டை வழங்கிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வெடுக்குநாறி ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தின் செயலாளர் து. ...

மேலும்..

யாழ் பல்கலையில் சுவிஸ் மற்றும் பிரான்ஸ் நாடுகளின் பாடல்கள் ஒன்றிணைந்த இசை நிகழ்வு

இலங்கை மற்றும் மாலைதீவுகளிற்கான சுவிட்சர்லாந்து தூதரகம் மற்றும் சர்வதே அமைப்பான la Francophonie இன் அனுசரணையுடன் , சுவிஸ் மற்றும் பிரான்ஸ் நாடுகளின் பாடல்கள் ஒன்றிணைந்த இசை நிகழ்வு. யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் ஞாயிற்றுக்கிழமை (26) நடைபெற்றது. இந் நிகழ்வானது Francophonie ...

மேலும்..

சீனாவின் செயற்பாடுகள் குறித்து அமெரிக்கா கவலை : வெள்ளை மாளிகை

சீனாவின் செயற்பாடுகள் பல சந்தரப்பங்களில் கவலையடைய செய்கின்றன. குறிப்பாக தென் சீனக் கடலில் அதன் ஆக்கிரமிப்பு நடத்தைகளினால் அமெரிக்கா குறிப்பிடத்தக்க கவலைகளைக் கொண்டுள்ளதாக வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு சபையின் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவித்துள்ளார். சீனா தவறான கடல் உரிமைகோரல்களைப் ...

மேலும்..

வெளிநாட்டு வேலைக்காக தனிப்பட்ட ரீதியில் செல்வோர் இணையத்தளம் மூலம் பதிவு செய்ய சந்தர்ப்பம்

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக தனிப்பட்ட ரீதியில் செல்வோர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் இணையத்தளம் மூலம் பதிவு செய்ய சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. முதல் தடவையாக அல்லது பதிவுகளை புதுப்பிக்க இந்த இணையத்தளத்தை பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. www.slbfe.lk எனும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் இணையத்தளத்தில் Online ...

மேலும்..

பேரினவாத நடவடிக்கைகளை உடன் நிறுத்துங்கள் – மனோ வலியுறுத்து

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பேரினவாத நடவடிக்கைகளை உடன் நிறுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார். வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய சிலைகள் உடைக்கப்பட்டு, வீசப்பட்டுள்ள நிலையில் அதற்கு கண்டனம் தெரிவித்து டுவிட்டரில் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார். தொல்பொருள் திணைக்களம், தொல்பொருளை பாதுகாப்பது ...

மேலும்..

எலிக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

எலிக்காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. ஒரு வருடத்தில் ஆயிரத்து 400 எலிக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவின் சமூக மருத்துவ நிபுணர் துஷானி தாபரே தெரிவித்துள்ளார். வயல், சதுப்பு நிலங்கள், வண்டல் நிலங்கள் மற்றும் சுரங்கங்களில் பணிபுரிபவர்கள் ...

மேலும்..

கிளிநொச்சி மாவட்ட தமிழ் சங்கத்தின் 30 ஆண்டு நிறைவு விழா!

கிளிநொச்சி மாவட்ட தமிழ்ச்சங்கத்தின் 30 ஆவது ஆண்டு நிறைவு விழாவும், பரிசளிப்பு நிகழ்வும் இடம்பெற்றது. மேற்படி நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை தமிழ்ச்சங்க மண்டபத்தில் இடம்பெற்றது. மங்கள விளக்கேற்றலுடம் ஆரம்பமான இந்த நிகழ்வில், தமிழ்த்தாய்க்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து தமிழை வளர்க்க அருந்தொண்டாற்றிய ...

மேலும்..

2030 இல் புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் 70% மின்சாரத்தை உற்பத்தி செய்வதே இலக்கு !!

2030 ஆம் ஆண்டளவில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் 70% மின்சாரத்தை உற்பத்தி செய்வதே இலக்கு என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட காலநிலை சுபீட்ச திட்டம் நாட்டின் காலநிலை ஸ்திரமின்மைக்கு மத்தியிலும் தொடர்ச்சியான வளர்ச்சியை காட்டுவதாக ...

மேலும்..

தேசபந்து தென்னகோனுக்கு எதிரான ரிட் மனு தள்ளுபடி

மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிரான ரிட் மனுவை நிராகரித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. கோட்டா கோகம போராட்ட காரர்கள் மீதான தாக்குதல் தொடர்பில் சந்தேகநபரான தேசபந்து தென்னகோனை கைது செய்து வாக்குமூலம் பதிவு ...

மேலும்..

கொழும்பு பேராயரின் மனுவை பரிசீலிக்க நீதிமன்றம் தீர்மானம் !!

கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தாக்கல் செய்த எழுத்தணை மனுவை பரிசீலனைக்கு எடுத்து கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது. மேன்முறையீட்டு ...

மேலும்..

நாட்டின் அனைத்து பிரச்சினைகளுக்கும் போராட்டமே காரணம் – நாமல்

நாட்டில் நிலவும் அனைத்து பொருளாதார மற்றும் சமூகப் பிரச்சினைகளுக்கும் போராட்டமே காரணம் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பேருவளையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மகளிர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். போராட்டப் பகுதியில் வழங்கப்பட்ட ...

மேலும்..

தந்தை செல்வாவின் 125ஆவது ஜனன தின நிகழ்வு யாழில்!

செல்வநாயகம் நினைவு அறக்கட்டளையின் ஏற்பாட்டில் தந்தை செல்வாவின் 125 ஆவது பிறந்த தின நிகழ்வு மார்ச் 31 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு தந்தை செல்வா கலையரங்கத்தில் நடைபெறவுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் சி.பத்மநாதன் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் ...

மேலும்..

தரம் 5 புலமைப் பரிசில் மதிப்பளித்தல் நிகழ்வு!

மீசாலை வீரசிங்கம் ஆரம்ப வித்தியாலயத்தின் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு மதிப்பளிக்கும் நிகழ்வு பாடசாலைக் கேட்போர் கூடத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ,டம்பெற்றது. வித்தியாலய முதல்வர் க.,ளங்கோவன் தலைமையில் ,டம்பெற்ற நிகழ்வில், யாழ்.பல்கலைக்கழக கல்வியியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் ஆனந்தமயில் ...

மேலும்..

வெடுக்கு நாறிமலை சிவலிங்கம் இடித்தழிப்பு தமிழ் எம்.பிக்கள் கண்டுக்காதமை வேதனை! மக்கள் பிரச்சினையை நேரில் அறிந்து சரவணபவன் குமுறல்

வடக்கில் அண்மைக்காலமாக தொடரும் திட்டமிட்ட பௌத்தமயமாக்கலின் தொடர்ச்சியான செயற்பாடே வெடுக்குநாறிமலை சிவலிங்கம் இடித்தழிப்பாகும். இங்குள்ள பிரச்சினைகளை தாம் ஆதரித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கண்டுகொள்வதில்லை என்று மக்கள் குற்றஞ்சாட்டினர் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவித்தார். கடந்த ...

மேலும்..

ஹயஸ் மரத்துடன் மோதியது சாரதி பலி; மிருசுவிலில் சம்பவம்!

ஹயஸ் வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்து மரத்துடன் மோதுண்டதில் சாரதி சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் யாழ். தென்மராட்சி மிருசுவில் ஏ 9 வீதியில் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 2.30 மணியளவில் இடம்பெற்றது. சம்பவத்தில் விசுவமடு மேற்கைச் சேர்ந்த 27 வயதுடைய குமாரசாமி கஜீபரன் ...

மேலும்..