சிறப்புச் செய்திகள்

அரசமைப்புப் பேரவையில் சித்தார்த்தனை இணைக்க மறுப்பது தவறான சமிக்ஞையே! சஜித் எச்சரிக்கை

சித்தார்த்தனை அரசமைப்பு பேரவையில் இணைத்துக் கொள்ள மறுப்பது தவறான சமிக்ஞையை அனுப்பும் என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ எச்சரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார். தர்மலிங்கம் சித்தார்த்தனை அரசமைப்பு சபையில் இணைத்துக்கொள்ளுமாறு தமிழ்த் தேசியக் ...

மேலும்..

சதி செய்கின்றன எதிர்க்கட்சிகள்! பாலித குற்றச்சாட்டு

பிரச்சினைகள் அற்ற நாடாக இலங்கை கட்டியெழுப்பப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில், வெளிநாட்டு தூதுவர்கள் ஊடாக அதனை முறியடிப்பதற்கு எதிர்க்கட்சிகள் சதித்திட்டம் தீட்டுகின்றன. நாட்டை நேசிப்பதாகக் கூறுபவர்களாலேயே இவ்வாறான மோசமான நடவடிக்கைகள் முன்னெடுப்படுகின்றன என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே ...

மேலும்..

எவரது உரிமையையும் பறிக்கப்போவதில்லை – பிரதமர் தினேஷ்

எவரது உரிமையையும் பறிக்காமல் சட்டத்திற்கிணங்க உள்ளூராட்சித் தேர்தல் விவகாரத்தில் அரசாங்கம் செயற்படும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். சஜித் பிரேமதாச மற்றும் அநுரகுமார திஸாநாயக்க நேற்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பில் ...

மேலும்..

சீர்குலைக்கும் தலையீடுகளை நிறுத்துங்கள் – ஜனாதிபதியிடம் வலியுறுத்து

நீதிமன்றம் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் சுயாதீனத்தன்மையை சீர்குலைக்கும் வகையில் அதில் தலையீடுகளை மேற்கொள்ள வேண்டாம் என சிவில் சமூக மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும் உள்ளூராட்சித் தேர்தல்கள் தொடர்பாக உயர்நீதிமன்றம் வழங்கிய இடைக்காலத்தடை உத்தரவுக்கு மதிப்பளிக்குமாறும் அவர்கள் ஜனாதிபதி ரணில் ...

மேலும்..

விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ள மனுக்களை இடைநிறுத்த நாடாளுமன்றம் அவதானம் – பீரிஸ்

உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ள மனுக்களை இடைநிறுத்த நாடாளுமன்றம் அவதானம் செலுத்தியுள்ளது. நாடாளுமன்றத்தின் செயற்பாடுகளின் நீதிமன்றம் தலையிடயாத நிலையில் நீதிமன்றத்தின் செயற்பாடுகளில் முறையற்ற வகையில் தலையிடுவது குறித்து ஜி.எல்.பீரிஸ் அதிருப்தி வெளியிட்டுள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ...

மேலும்..

ஐ.எம்.எஃப்.இன் கடன் உதவியை எதிர்ப்பவர்கள் நாட்டின் எதிரிகள்: சம்பிக்க

சர்வதேச நாணய நிதியத்தின் (ஐ.எம்.எஃப்) இலங்கைக்கான கடன் உதவியை யாரும் எதிர்ப்பதாக இருந்தால் அவர்கள் நாட்டின் எதிரிகள் என எதிர்க்கட்சியின் சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினரான சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கை தொடர்பாக ஜனாதிபதியின் நாடாளுமன்ற உரை ...

மேலும்..

பரிசோதனைகளுக்கு அதிகக் கட்டணம் அறவிட்ட தனியார் வைத்தியசாலைகளுக்கு அபராதம்!

டெங்கு பரிசோதனை மற்றும் முழுமையான இரத்த பரிசோதனைக்கு கட்டுப்பாட்டு கட்டணத்தை விட அதிகமாக அறிவிட்ட 08 தனியார் வைத்தியசாலைகள் மற்றும் ஆய்வுக்கூடங்களுக்கு 55 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. புதுக்கடை, நுகேகொடை நீதவான் நீதிமன்றங்களில் நுகர்வோர் விவகார அதிகார சபை தாக்கல் செய்த ...

மேலும்..

கச்சதீவில் புத்தர் சிலை – இரகசியமான முறையில் பௌத்தமயமாக்கல் முன்னெடுக்கப்படுவதாக விசனம்!

கச்சதீவில் கடற்படையினரால் பாரிய பௌத்த விகாரையொன்று கட்டப்பட்டு, இரகசியமான முறையில் பௌத்தமயமாக்கல் முன்னெடுக்கப்பட்டுள்ளமை தற்போது பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது. கச்சதீவு இலங்கை – இந்திய பக்தர்கள் வருடம் தோறும் ஒன்று கூடி அந்தோனியாரை வழிபட்டு செல்லும் ஒரு புனித பூமியாக காணப்படுகின்றது. இந்த நிலையில், தங்போது அங்கு ...

மேலும்..

வாசல் கவிதை சஞ்சிகை திருமலையில் வெளியீடு!

வாசல் வாசகர் வட்டத்தின் வெளியீடான வாசல் கவிதை சஞ்சிகை கடந்த வியாழக்கிழமை திருகோணமலை நகராட்சி மன்ற பொது நூலக கேட்போர் கூடத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டது. இந்நிகழ்வு, வாசல் வாசகர் வட்டத்தின் தலைவர் ஊடகவியலாளர் அரசரெத்தினம் அச்சுதனின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்விற்கு, ஆசியுரையை திருகோணமலை ஸ்ரீபத்திரகாளி ...

மேலும்..

பச்சிலைப்பள்ளி குடிநீர் விநியோக திட்டம் விரைந்து முன்னெடுக்க நடவடிக்கைகள்! சிறீதரன் எம்.பிக்கு ஜீவன் உறுதியளிப்பு

கிளிநொச்சி மாவட்டம், பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் தடைப்பட்டுள்ள குடிநீர் விநியோகத் திட்டத்தை விரைந்து முன்னெடுக்க நடவடிக்கை எடுப்பதாக, நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்மைப்பு வசதிகள் அமைச்சர் ஜீவன் தொண்டமான், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனிடம் உறுதியளித்துள்ளார். கடந்த 2023.03.22 ஆம் திகதி, புதன்கிழமை, ...

மேலும்..

சாலிய பீரிஸின் அலுவலகம் முன்பாக மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டம் குறித்து சட்டத்தரணிகள் சங்கம் கடும் கண்டனம்

ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸின் அலுவலகத்துக்கு முன்பாக இன்று வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது. இலங்கையைச்சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரனான 'ஹரக் கட்டா' என்று அறியப்படும் நதுன் சிந்தக்க சார்பில் ஆஜரானமைக்கு எதிர்ப்புத்தெரிவித்து இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதுகுறித்து ...

மேலும்..

தமிழர்களின் உரிமைகளை பறிப்பதில் அரசாங்கம் விசேட கவனம் – சிறிதரன்

தமிழர்களின் உரிமைகளை எவ்வாறு பறிக்கலாம் என்பது தொடர்பாக அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது. பிற இனங்களையும், அவர்களின் உரிமைகளையும் அழிக்கும் கொள்கையில் இருந்து அரசாங்கம் முதலில் வெளிவர வேண்டும். அதனை விடுத்து செயற்பட்டால் உலகில் உள்ள சொத்துக்கள் அனைத்தையும் கொண்டு வந்தாலும் ...

மேலும்..

புதுக்கடை நீதிமன்ற வளாகம் முன்பாக சட்டத்தரணிகள் மகா சபையினர் கவனயீர்ப்புப் போராட்டம்

நீதிமன்ற சுயாதீனத்தன்மை மீதான இடையூறுகள் மற்றும் அழுத்தங்களுக்கு எதிர்ப்புத்தெரிவித்து இன்று வெள்ளிக்கிழமை புதுக்கடை நீதிமன்ற வளாகம் முன்பாக சட்டத்தரணிகள் மகா சபையினால் கவனயீர்ப்புப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மேலும்..

இந்தியாவிலிருந்து கடத்திவரப்பட்ட 633 கிலோவுக்கும் அதிகமான பீடி இலைகளுடன் ஐவர் கைது

சிலாபம் கரையோரக் கடற்படையினர்  இன்று (24) அதிகாலை சிலாபம் இரணைவில பிரதேசத்தில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, போக்குவரத்துக்கு தயாராகி நின்ற லொறியொன்றினை சோதன க்குற்படுத்தியுள்ளனர். இதன்போது சூட்சுமமான முறையில் மறித்து வைத்திருந்த 633 கிலோ 650 கிராம் பீடி இலைகள் ...

மேலும்..

இலங்கை ரூபாவின் பெறுமதி உயர்வு

இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ச்சியாக அதிகரித்துவரும் நிலையில், இன்று வெள்ளிக்கிழமை அமெரிக்க டொலர் ஒன்றுக்கு நிகரான ரூபாவின் கொள்வனவுப்பெறுமதி 314.74 ரூபாவாகவும், விற்பனைப்பெறுமதி 331.37 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. நாடு முகங்கொடுத்திருக்கும் பொருளாதார நெருக்கடியின் விளைவாக ஏற்பட்ட பணவீக்க அதிகரிப்பினால் கடந்த காலங்களில் டொலருக்கு ...

மேலும்..