சிறப்புச் செய்திகள்

ஜனாதிபதி தேர்தலை நடத்தும் அதிகாரம் ரணிலுக்கு கிடையாது – உதய கம்மன்பில

பதவி காலம் முடிவடைவதற்கு முன்னர் ஜனாதிபதி தேர்தலை நடத்தும் அதிகாரம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு கிடையாது. ஏனெனில் அவர் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தலைவர் அல்ல,பொதுத்தேர்தலில் இழந்த மக்கள் செல்வாக்கை ஜனாதிபதி தேர்தல் ஊடாக ஒருபோதும் பெற முடியாது என பாராளுமன்ற ...

மேலும்..

மதுவரி திணைக்களத்தின் இவ்வாண்டுக்கான வருமானம் 35 வீதத்தால் குறைவடையக்கூடும் – மதுவரி திணைக்களம்

மதுவரி திணைக்களத்தின் 2023 ஆம் ஆண்டுக்கான வருமானம் 35 வீதத்தால் குறைவடையக்கூடும் என மதுவரி திணைக்கள ஊடகப் பேச்சாளர் கபில குமாரசிங்க தெரிவித்தார். 2022 ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களின் வருமானத்தை 2023 ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களுடன் ஒப்பிடுகையில் ...

மேலும்..

பல்கலைக்கழக கல்விச் செயற்பாடுகள் கேள்விக்குறியாகியுள்ளன – லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன

பல்வேறு நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள முயற்சிக்கும் அரசியல் கட்சிகள், குழுக்களின் போராட்டங்கள் மற்றும் தொழிற்சங்க நடவடிக்கைகள் காரணமாக பல்கலைக்கழகங்களின் கல்வி செயற்பாடுகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என முன்னாள் அமைச்சர் ...

மேலும்..

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போட ஜனாதிபதியை வலியுறுத்தவில்லை – பொதுஜன பெரமுன

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடுமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதியிடம் வலியுறுத்தவில்லை. தேர்தலை விரைவாக நடத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளோம். உள்ளூராட்சி மன்றங்கள் அரச அதிகாரிகளால் நிர்வகிக்கப்படுவது ஜனநாயகத்துக்கு முரணானது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன ...

மேலும்..

விஜேதாச, அலிசப்ரி இன்று தென் ஆபிரிக்கா விஜயம்

நாட்டு மக்கள் மத்தியில் அமைதியையும், நல்லிணக்கத்தையும் உறுதிப்படுத்தும் நோக்கில் ஸ்தாபிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள உண்மைகளைக் கண்டறிவதற்கான ஆணைக்குழுவின் செயற்பாடுகளை எவ்வாறு வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்வது என்பது தொடர்பாகத் தென்னாபிரிக அரசாங்கத்திடமிருந்து அனுபவப்பகிர்வைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய இந்தக் காரணியை இலக்காகக் கொண்டு நீதி ...

மேலும்..

புதிய நகர்ப்புற அபிவிருத்தி திட்டங்கள் குறித்து அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தல் !

நகர அபிவிருத்தி அதிகார சபையின் புதிய அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து உள்ளூராட்சி நிறுவனங்களின் அதிகாரிகளுக்கு அறிவிக்கத் தொடங்கியுள்ளதாக நகர அபிவிருத்தி, வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. காணிகளை அபிவிருத்தி செய்தல், கட்டட நிர்மாணம் மற்றும் மாற்றியமைத்தல், இணக்கச் சான்றிதழ் வழங்குதல் உள்ளிட்ட விதிமுறைகள் தொடர்பாக ...

மேலும்..

எரிபொருள், மின்சாரக் கட்டணத்தை குறையுங்கள் – சம்பிக்க

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளதால் எரிபொருள் மற்றும் மின் கட்டணங்களை கணிசமான விகிதத்தில் குறைக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். இலங்கை மின்சார சபையும் இலங்கை பெற்றோலிய கூட்டு தாபனமும் தற்போது பாரிய இலாபத்தை ஈட்டுகின்றன ...

மேலும்..

மாத இறுதியில் இருந்து மாணவர்களுக்கு ‘ஸ்போக்கன் இங்கிலீஷ்’ – அமைச்சர்

ஆங்கில மொழியின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, அனைத்து தேசிய பாடசாலைகளிலும் 30 ஆம் திகதி முதல் தரம் ஒன்றிலிருந்து 'ஸ்போக்கன் இங்கிலீஷ்' கற்பிக்க கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளது. கொழும்பு பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இதனைத் ...

மேலும்..

தனது வீடு எரிக்கப்பட்டமை குறித்த விசாரணையில் தாமதம் – கவலையுடன் கடிதம் அனுப்பினார் பிரசன்ன!

கடந்த வருடம் மே மாதம் 9 ஆம் திகதி இடம்பெற்ற அமைதியின்மையின் போது உடுகம்பலையில் உள்ள தனது வீடு எரிக்கப்பட்டமை தொடர்பான முறைப்பாட்டை விசாரணை செய்வதில் தாமதம் ஏற்பட்டமை தொடர்பில் கவலை தெரிவித்து நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ...

மேலும்..

இரண்டு பிரதான நிறுவனங்களும் ஜனாதிபதியின் கட்டுப்பாட்டில் – சாகர

இலங்கையில் அதிகாரப் பரவலாக்கத்துக்காக ஸ்தாபிக்கப்பட்ட இரண்டு பிரதான நிறுவனங்களும் நேற்று முதல் மறைமுகமாக ஜனாதிபதியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. ஜனநாயகத்தை மதிக்கும் எவராலும் இந்த நிலைமை ஏற்றுக்கொள்ள முடியாதது என பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். பத்தரமுல்லயில் அமைந்துள்ள பொதுஜன ...

மேலும்..

மஹிந்த சிறிவர்தனவிற்கு 7 நாட்கள் அவகாசம் – பீரிஸ் எச்சரிக்கை

உள்ளூராட்சித் தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட பணத்தை 7 நாள்களுக்குள் திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வழங்க வேண்டும் என ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். அவ்வாறு வழங்காவிட்டால் அவருக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் உயர் நீதிமன்றத்தை நாடும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் ...

மேலும்..

அமெரிக்க விவசாயத் திணைக்களத்தின் புதிய உணவு உதவியை அறிவித்தார் அமெரிக்கத் தூதுவர் சங்

அமெரிக்க விவசாயத் திணைக்களத்தின் (USDA) வெளிநாட்டு விவசாய சேவையின் (FAS) “McGovern-Dole Food for Education Program” ஊடாக 770 மெட்ரிக் தொன் சத்தூட்டப்பட்ட அரிசி மற்றும் 100 மெட்ரிக் தொன் சத்தூட்டப்பட்ட தாவர எண்ணெய் என்பன அண்மையில் இலங்கையை வந்தடைந்ததாக ...

மேலும்..

இலங்கையின் உணவு பாதுகாப்பு நிலை – தற்போது எவ்வாறானதாக காணப்படுகின்றது?

இலங்கையின் பொருளாதார நிலையும் உணவு பாதுகாப்பும் தொடர்ந்தும் கரிசனைக்குரிய விடயமாக உள்ளது என உலக உணவு திட்டம் தெரிவித்துள்ளது. 2023 பெப்ரவரி மாதத்திற்கான உணவு பாதுகாப்பு நிலை குறித்த ஆய்வில் 32 வீதமான குடும்பங்கள் உணவு பாதுகாப்பின்மையை எதிர்கொள்வது தெரியவந்துள்ளதாக உலக உணவு ...

மேலும்..

விசாரணைக்குச் சென்ற பொலிஸார் மீது தாக்குதல் ; இரு பொலிஸார் படுகாயம் – மட்டக்களப்பில் சம்பவம்

விசாரணைக்குச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது நடாத்தப்பட்ட பாரிய தாக்குதல் சம்பவத்தில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் உட்பட இரு பொலிஸார் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஏ.எஸ்.ஏ.றஹீம் தெரிவித்தார். இச்சம்பவம் காத்தான்குடி ...

மேலும்..

பெண்ணொருவரிடம் நம்பிக்கை அடிப்படையில் பணம் கொடுத்து ஏமாந்த முதியவர் உயிர் மாய்ப்பு – யாழில் சம்பவம்

மகன் அனுப்பிய பணத்தினை நம்பிக்கை அடிப்படையில் பெண்ணொருவருக்கு கொடுத்து ஏமாந்த முதியவர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்துள்ளார். யாழ்ப்பாணம் புறநகர் பகுதியில் வசிக்கும் முதியவர் ஒருவருக்கு , வெளிநாட்டில் உள்ள மகன் கட்டம் கட்டமாக சுமார் ஒரு கோடி ரூபாய் பணத்தினை ...

மேலும்..