சிறப்புச் செய்திகள்

வெளிநாட்டுப் பணிக்கு அனுப்புவதாகக் கூறி இலட்சக்கணக்கில் பணமோசடி செய்த இலங்கை நபர் தப்பியோட்டம்!

இலங்கையிலிருந்து வெளிநாட்டுப் பணிக்கு அனுப்புவதாகக் கூறி 23 பேரிடம் லட்சக்கணக்கில் பணத்தைப் பெற்றுக் கொண்டு தமிழகத்துக்கு அகதியாகத் தப்பிச்சென்ற இலங்கை நபரிடம் பணத்தைக் கொடுத்து ஏமாந்தவர்களில் ஒருவர் ராமநாதபுரம் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். திருகோணமலை – வெருகல் பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் ...

மேலும்..

கல்முனை மாநகர நிதி மோசடிக்கெதிராக ஆர்ப்பாட்டம்

பாறுக் ஷிஹான் தேசிய மக்கள் சக்தியின் கல்முனை செயற்பாட்டாளர்களினால் கல்முனை மாநகர சபையில் வரிப்பண மோசடியுடன் தொடர்புடையவர்களை இனங்கண்டு சட்டத்தின் முன் நிறுத்தக்கோரி ஆர்ப்பாட்டம் திங்கட்கிழமை (13) மாலை  கல்முனை பஸ்தரிப்பு நிலையத்துக்கு அருகாமையில்   இடம்பெற்றது. கல்முனை மாநகரசபையில் இடம் பெற்ற நிதி மோசடி ...

மேலும்..

வைத்தியரான தனது மனைவியை கத்தியால் குத்திய ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர்!

கொழும்பு சொய்ஸா வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவர் கணவரால் கத்தியால் குத்தப்பட்டு பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக கம்பஹா நுங்கமுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர். படுகாயமடைந்த வைத்தியர் ராகம போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். வைத்தியரை கத்தியால் வெட்டி காயப்படுத்திய கணவர் கம்பஹா ...

மேலும்..

சாய்ந்தமருது கடற்கரையில் மண்ணில் புதையுண்ட நிலையில் மிதிவெடி மீட்பு

கடற்கரைப் பகுதியில் மண்ணில் புதையுண்ட நிலையில் மிதிவெடி ஒன்று இனங்காணப்பட்டுள்ளது. குறித்த மிதிவெடி இனங்காணப்பட்ட நிலையில் அது தொடர்பாக அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. சாய்ந்தமருது பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரைப்பகுதில் இன்று (14) காலை இனங்காணப்பட்ட குறித்த மிதிவெடி பழையதா அல்லது ...

மேலும்..

இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்துக்கு 10 வழிகாட்டல் பரிந்துரைகள் – கோப் குழு

இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்துக்கு 10 வழிகாட்டல் பரிந்துரைகளை கோப் குழு முன்வைத்துள்ளது. 2021 ஆம் ஆண்டுக்கான கூட்டுத்தானத்தின் அறிக்கை இதுவரை நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்காமல் இருப்பது நாடாளுமன்றத்தைப் புறக்கணிக்கும் ஒரு செயற்பாடாகக் கருதப்படும். ஆகவே காலதாமதமாகியுள்ள சகல அறிக்கைகளையும் ஒரு மாத காலத்துக்குள் ...

மேலும்..

கைவிடப்பட்ட சிசுக்களை பொறுப்பேற்பதற்கான நிலையத்தை ஸ்தாபிக்கும் அமைச்சரவை பத்திரம் விரைவில் – தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை

குழந்தை பெற்றுக் கொள்ளும் பெற்றோர் அதனை தம்மால் வளர்க்க முடியாது என்ற நிலைமை ஏற்படும் போது குழந்தைகளைக் கைவிட்டுச் செல்கின்றனர். எனவே இவ்வாறான குழந்தைகளைப் பொறுப்பேற்பதற்காக 'கைவிடப்பட்ட சிசுக்களை பொறுப்பேற்பதற்கான நிலையம்' என்பதை ஸ்தாபிப்பதற்காக யோசனை விரைவில் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படும் என தேசிய ...

மேலும்..

சிறப்புரிமை மீறல் தொடர்பான பிரச்சினையை இரத்துச் செய்யுங்கள் – வீரசுமன வீரசிங்க

உயர்நீதிமன்றம் பிறப்பித்த இடைக்காலத் தடையுத்தரவால் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது என ஆளும் தரப்பினர் முன்வைத்த சிறப்புரிமை மீறல் தொடர்பான பிரச்சினையை இரத்துச் செய்யுமாறு சபாநாயகரிடம் கூட்டாக வலியுறுத்தவுள்ளோம் என நாடாளுமன்ற உறுப்பினர் வீரசுமன வீரசிங்க தெரிவித்தார். சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் ...

மேலும்..

சர்வதேச நாணய நிதியத்தின் நிதி உதவியை தடுக்கும் சதித்திட்டமே தொழிற்சங்கங்களின் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் – ஐ,தே.க. தேசிய சேவை சங்கம்

சர்வதேச நாணய நிதியத்தின் நிதி உதவியை தடுப்பதற்கான சதித்திட்டமே தொழிற்சங்கங்களின் பணி பகிஷ்கரிப்பு போராட்டம். சாதாரண தொழிற்சங்கங்கள் இதில் சிக்கிக்கொள்ளக் கூடாது. அத்துடன் தொழிற்சங்களின் சாதாரண பிரச்சினைகளுக்கு தீர்வுகாண தேசிய சேவை சங்கம் எப்போதும் தயாராகவே இருக்கிறது என ஐக்கிய தேசிய கட்சி ...

மேலும்..

தொற்றா நோய் தொடர்பான மருத்துவ முகாமிற்காக உலக வங்கியிடமிருந்து 65 மில்லியன் டொலர் – சுகாதார மேம்பாட்டு பணியகம்

ஆணைமடு பிரதேசத்தை அண்மித்த பகுதிகளில் வசிக்கும் 9,000 மக்களுக்கு தொற்றா நோய் தொடர்பான விசேட மருத்துவ முகாம் எதிர்வரும் 24 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. அதற்கமைய ஆரம்ப சுகாதார சேவைகளுக்காக இவ்வாண்டு உலக வங்கியிடமிருந்து 65 மில்லியன் டொலர் கிடைக்கப் பெறவுள்ளதாக சுகாதார ...

மேலும்..

ஜனாதிபதித் தேர்தலை வெகுவிரைவில் நடத்த ஒத்துழைப்பு வழங்குவோம் – எஸ்.எம்.சந்திரசேன

உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்துவதால் ஆட்சிமாற்றம் ஏற்படாது. ஜனாதிபதி தேர்தல் அல்லது பொதுத்தேர்தலை நடத்தினால் சிறந்த மாற்றம் ஏற்படும். ஜனாதிபதித் தேர்தலை வெகுவிரைவாக நடத்த முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம். சவால்களை வெற்றிக்கொள்ளக் கூடியவரை ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறக்குவோம் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்தார். சமகால ...

மேலும்..

அத்தியாவசிய மருந்துகளின் விலைகளை குறைக்க எதிர்பார்ப்பு – அமைச்சர் கெஹெலிய

சுகாதாரத்துறை தொடர்பில் வெளியாகும் செய்திகள் சில அடிப்படையற்றவையாகும். நாட்டின் பிரதான நிலை ஊடகங்கள் என்ற வகையில் சுகாதாரத்துறை தொடர்பில் பொய்யான செய்திகளை வெளியிட்டுள்ளமை எமக்குக் கவலையளிக்கிறது. மேலும் முதல் காலாண்டுக்குள் அத்தியாவசிய மருந்துப் பொருள்களின் விலைகளை குறைக்க எதிர்பார்த்துள்ளோம் என சுகாதாரத்துறை அமைச்சர் ...

மேலும்..

தேர்தல் நடவடிக்கைகளுக்கு எரிபொருள் விநியோகிக்க முடியாது – காஞ்சன விஜேசேகர

தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள தேர்தல் ஆணைக்குழுவுக்கும், வேட்பாளர்களுக்கும் எரிபொருளை விநியோகிக்க முடியாது. மேலதிகமாக எரிபொருளை இறக்குமதி செய்வதற்கான நிதியை திரட்டிக் கொண்டு எரிபொருளை இறக்குமதி செய்ய குறைந்தது மூன்று அல்லது ஆறு மாதங்களேனும் செல்லும். ஆகவே விரைவாக எரிபொருள் விநியோகிக்க முடியாது என ...

மேலும்..

இலங்கை மின்சார சபையை 9 கட்டங்களாக வேறுபடுத்த அரசாங்கம் முயற்சி – மின்சாரத்துறை சேவை சங்கம்

இலங்கை மின்சார சபையை 09 கட்டங்களாக பிரித்து,வெளிநாட்டு நிறுவனங்களுக்கு உரித்துரிமையை வழங்கும் முயற்சிகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. மறுசீரமைப்பு தொடர்பில் மின்சாரத்துறை அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறிப்பிடும் விடயங்கள் மீது நம்பிக்கை கொள்ள முடியாது என மின்சாரத்துறை ஒன்றிணைந்த சேவை சங்கத்தின் தலைவர் ரஞ்சன் ...

மேலும்..

இலங்கைக்கு அமெரிக்கா தொடர்ந்தும் ஒத்துழைப்புக்களை வழங்கும் – அமெரிக்க தூதுவர்

இலங்கையுடனான 75 ஆண்டு கால இராஜதந்திர நட்புறவை தொடர்ந்தும் பேணுவதே எமது எதிர்பார்ப்பாகும். சகல நெருக்கடிகளிலிருந்தும் மீள்வதற்கு உலக உணவுத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு வழிகளினூடாக இலங்கைக்கு அமெரிக்கா தொடர்ந்தும் அதன் ஒத்துழைப்புக்களை வழங்கும் என்று அமெரிக்க தூதுவர் ஜூலி சங் ...

மேலும்..

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் நோயாளர் வசதிகருதி மற்றுமொரு சேவை!

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவுக்கு வருகின்ற நோயாளர்கள் பலமணிநேரங்கள் வைத்தியசாலையில் காத்திருக்கின்றனர் என்ற வேதனையை வைத்தியசாலை நிர்வாகத்திடம் பலர் முறையிட்டுள்ளனர். இது தொடர்பாக வைத்தியசாலையின் திட்டமிடல் பிரிவு, தரம் பேணும் பிரிவு, வைத்திய அத்தியட்சகர், வைத்திய நிபுணர்கள், வெளிநோயாளர் பிரிவு மருத்துவ ...

மேலும்..