சிறப்புச் செய்திகள்

பணவீக்கம் குறித்த புதிய கணிப்பு வெளியானது!

ஒக்டோபர் மாதத்திற்குள் பணவீக்கம் 4-6 சதவீதமாக குறைவடையும் என எதிர்பார்ப்பதாக மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். தற்போதைய நிலவரங்களைக் கருத்தில் கொண்டு, பணவீக்கம் முன்னறிவிக்கப்பட்டதை விட வேகமாக குறைய வாய்ப்புள்ளதாக நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு இறுதிக்குள் பணவீக்க விகிதத்தை ...

மேலும்..

மின்சார வாகனங்களை இறக்குமதி செய்யும் வேலைத்திட்டம் ஆரம்பம்!

வெளிநாட்டு ஊழியர்களுக்கு வரிச்சலுகையுடன் கூடிய மின்சார வாகனங்களை இறக்குமதி செய்யும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட வாகனங்களை விடுவிக்கும் பணியை சுங்கத்துறை ஏற்கனவே ஆரம்பித்துள்ள நிலையில், நேற்று (வியாழக்கிழமை) முதல் வெளிநாட்டு ஊழியர்களுக்கு வரிச்சலுகையுடன் கூடிய மின்சார வாகனங்களை இறக்குமதி செய்யும் வேலைத்திட்டம் ...

மேலும்..

தட்டுப்பாடாக உள்ள மருந்துகளை வழங்கத்தயார் – சஜித்!

வைத்தியசாலைகளில் தட்டுப்பாடாக உள்ள மருந்துகளின் பட்டியல் இருப்பின் அவற்றை வழங்குவதற்கு தயார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். பல அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும், புற்றுநோய், இதய நோய், உயர் இரத்த ...

மேலும்..

தங்கத்தின் விலையில் பாரிய வீழ்ச்சி!

இலங்கையில் தங்கத்தின் விலையில் பாரிய வீழ்ச்சி கண்டுள்ளது. பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளால் அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி உயர்வடைந்து வருகின்ற நிலையில், இந்த விலை மாற்றம் ஏற்பட்டுள்ளது. இலங்கையில் இம்மாத தொடக்கத்தில் 184,000 ரூபாவாக இருந்த 24 கரட் தங்கத்தின் விலை ...

மேலும்..

யாழ். சுழிபுரம் பகுதியில் 64 கிலோ கஞ்சா மீட்பு!

யாழ்.எழுதுமட்டுவாள் மற்றும் சுழிபுரம் பகுதிகளில் சுமாா் 64 கிலோ கஞ்சா நேற்றைய தினம் மீட்கப்பட்டிருக்கின்றது. கொடிகாமம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து நேற்று பிற்பகல் 4.30 மணியளவில் மோட்டாா் சைக்கிள் ஒன்றை சோதனையிட்டனா். குறித்த கஞ்சா மீட்கப்பட்டிருக்கின்றது. இதனை அடுத்து சந்தேக நபர் தப்பி ...

மேலும்..

வாக்குச் சீட்டுகளை விரைவில் வழங்க முடியும் என நம்பிக்கை!

தபால் மூல வாக்களிப்புக்கான வாக்குச் சீட்டுகளை ஐந்து நாட்களுக்குள்ளும் ஏனைய வாக்குச் சீட்டுகளை இருபது முதல் இருபத்தைந்து நாட்களுக்குள்ளும் விநியோகிக்க முடியும் என அரச அச்சகம் தெரிவித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அச்சிடுவதற்குத் தேவையான நிதியை நிதியமைச்சின் செயலாளரிடம் இருந்து பெற்றுக் கொள்ளுமாறு ...

மேலும்..

நாமலுக்கும் சமலுக்கும் புதிய பதவிகள்: நன்றி தெரிவித்து நாமல் டுவீட்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களான, நாமல் ராஜபக்ஷ மற்றும் சமல் ராஜபக்ஷ ஆகியோருக்கு புதிய பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இதன்படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, நாடாளுமன்றத்தின் சர்வதேச உறவுகள் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ‘புதிய ...

மேலும்..

மன்னாரில் ஒரு தொகுதி ‘டைனமைட்’ வெடி பொருளுடன் இருவர் கைது!

மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பள்ளிமுனை கடற்கரை பகுதியில் வைத்து ஒரு தொகுதி ‘டைனமைட்’ வெடிபொருட்களுடன் 2 சந்தேக நபர்கள் நேற்று (வியாழக்கிழமை) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர். மன்னார் மாவட்ட குற்றத்தடுப்பு  பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பிரகாரம்  மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் ...

மேலும்..

இலங்கையில் 6.3 மில்லியன் மக்களுக்கு கடுமையான உணவுப் பற்றாக்குறை!

இலங்கையில் 28 சதவீதம் அல்லது 6.3 மில்லியன் மக்கள் கடுமையான உணவுப் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. மேலும், 2022ஆம் ஆண்டில் குறைந்து வரும் உணவு உற்பத்தி மற்றும் பணவீக்கம் காரணமாக, இலங்கையின் ...

மேலும்..

சந்தர்ப்பவாத அரசியலை விடுத்து, நாட்டை மீட்க எதிரணிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் – ஜீவன்

ஜனநாயகம் எனக் கூறிக்கொண்டு, ஆட்சி கவிழ்ப்பு சூழ்ச்சியிலும் நாட்டை சீர்குலைக்கும் நோக்கிலும் முன்னெடுக்கப்படும் போராட்டங்களை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அவ்வாறான நடவடிக்கைகள் எமது நாட்டுக்கே பாதிப்பாக அமையும். எனவே, சந்தர்ப்பவாத அரசியலை விடுத்து, நாட்டை மீட்க எதிரணிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் ...

மேலும்..

காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத் தலைவி வவுனியாவில் கைது

தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தின் தலைவி காசிப்பிள்ளை ஜெயவனிதா நேற்று வியாழக்கிழமை (09.03) மாலை வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா ஏ9 வீதியில் உள்ள வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு முன்பாக 2210 ஆவது நாளாக காணாமல் ஆக்கப்பட்ட தமது ...

மேலும்..

பாதுகாப்பு அமைச்சின் இணையம் உட்பட இரு இணையத்தளங்களுக்குள் ஊடுருவல்! முக்கிய தகவல்கள் பறிபோயுள்ளனவாம்

அரசாங்கத்தின் இரண்டு இணையத்தளங்கள் ஹக்செய்யப்பட்டுள்ளன எனவும் மிக முக்கியமான தகவல்கள் பறிபோயுள்ளன எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை அரசாங்கத்தின் இரண்டு இணையத்தளங்கள் ஹக் செய்யப்பட்டு அதில் உள்ள மிகவும ;இரகசியமான தகவல்கள் ஹக்கர்கள் குழுவொன்றிடம் வழங்கப்பட்டுள்ளதாக சைபர் ஆபத்து தொடர்பான புலனாய்வு அமைப்பொன்று ...

மேலும்..

ரோகித ராஜபக்சவின் கடன் அட்டை மாயம் – அதனை பயன்படுத்தி மோசடி

மகிந்த ராஜபக்சவின் மகன் ரோகித ராஜபக்சவின் கடன் அட்டை காணாமல்போயுள்ளதாகவும் அதனை பயன்படுத்தி 400 அமெரிக்க டொலர் வரை மோசடி இடம்பெற்றுள்ளதாகவும் நாரஹன்பிட்டிய பொலிஸார் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளனர். நபர் ஒருவர் ரோகிதராஜபக்சவின் கடன் அட்டையை பயன்படுத்தி நான்கு பரிமாற்றங்களில் ஈடுபட்டுள்ளார் என பொலிஸார் ...

மேலும்..

வீதிப் போராட்டங்களால் ஆட்சியை மாற்ற முடியாது : நாட்டின் பொருளாதாரமே சீர் குலையும் – சாந்த பண்டார

நாட்டை கட்டியெழுப்புவதற்கான ஜனாதிபதியின் வேலைத்திட்டத்தில் சகல தரப்பினரும் இணைந்து கொள்ளவேண்டும். வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப நாட்டு மக்கள் உட்பட அனைவரும் ஒன்றுபட வேண்டும். வீதி போராட்டங்களால் ஆட்சியை மாற்ற முடியாது. மாறாக, நாட்டின் பொருளாதாரமே சீர் குலையும் என ஊடகத்துறை இராஜாங்க ...

மேலும்..

அஹிம்சைப் போராட்டத்தை பயங்கரவாத போராட்டமென சித்தரித்தால் தவறான பாதை தோற்றம் பெறும் – தமிழ் தேசிய கூட்டமைப்பு எச்சரிக்கை

அஹிம்சை வழி போராட்டத்தை பயங்கரவாதப் போராட்டம் என சித்திரித்தால் மாணவர்களின் போராட்டம் தவறான திசை நோக்கிச் செல்லும். ஜனநாயகப் போராட்டத்தை, பயங்கரவாதப் போராட்டம் என அரசாங்கம் சித்திரிப்பது முற்றிலும் தவறானது என ரெலோவின் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் ...

மேலும்..