சிறப்புச் செய்திகள்

மாபெரும் குருதிக்கொடை நிகழ்வு ஆலங்குளாயில் சனி நடைபெறும்!

தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் பழைய மாணவரும் புகழ்பூத்த விளையாட்டு வீரருமாகிய அமரர் க.சீஸ்கண்ணாவின் ஞாபகார்த்தமாக அவரது குடும்பத்தினரின் நிதி அனுசரணையில் மாபெரும் குருதிக்கொடை நிகழ்வு சண்டிலிப்பாய் ஆலங்குளாய் சனமூக நிலையத்தில் 11-03-2023 சனிக்கிழமை காலை 9 மணி முதல் நடைபெற உள்ளது. வடக்கின் ...

மேலும்..

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு களபாவோடை அம்மன் மருத்துவ உதவி!

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் சோயாளர்களின் நலன்கருதி ஏழாலை களபாவோடை அம்மனால் 5 லட்சம் ரூபா பெறுமதியாள அத்தியாவசிய மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக சுகாதாரத் துறைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. சாதாரண தர மக்கள், தனியார் மருத்துவ சேவைகளைப் பெறமுடியாத ...

மேலும்..

நீதிமன்றத்துக்கு அப்பாற்பட்ட வகையில் எவரும் செயற்பட முடியாது – டிலான் பெரேரா

உயர் நீதிமன்றத்தின் இடைக்கால தடை உத்தரவால் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது என்று குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அது முற்றிலும் தவறானது. ஜனநாயகத்துக்கு எதிரான அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை பிறப்பித்துள்ளது. நீதிமன்றத்துக்கு அப்பாற்பட்ட வகையில் எவரும் செயற்பட முடியாது என ...

மேலும்..

நீதித்துறை கட்டமைப்பின் மீது மேற்கொள்ளப்படும் பாரிய தாக்குதல் – அநுரகுமார திஸாநாயக்க

நாடாளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் தொலவத்தவின் ஊடாக சிறப்புரிமைக் கேள்வியொன்றை எழுப்பி , உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை கேள்விக்குள்ளாக்குவதற்கு முயற்சிக்கப்படுகிறது. இது அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்காக நீதித்துறை கட்டமைப்பின் மீது மேற்கொள்ளப்படும் பாரிய தாக்குதலாகும் என மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) ...

மேலும்..

நாட்டை கலவர பூமியாக்கி விடாதீர்கள் – சம்பிக ரணவக்க அரசாங்கத்திடம் கோரிக்கை

ஜனநாயக போராட்டங்களை வன்முறைகள் ஊடாக முடக்குவதற்கு அரசாங்கம் முயற்சிக்கக் கூடாது. அது 1971 ஆம் ஆண்டுகள் ஏற்பட்ட நூற்றுக்கணக்கான உயிர்களைக் காவு கொண்ட கலவரம் போன்ற சூழலை ஏற்படுத்தி விடும். அவ்வாறானதொரு நிலைமை நாட்டில் மீண்டும் ஏற்பட இடமளித்து விட வேண்டாம் ...

மேலும்..

மக்கள் ஆயுதங்களை கையிலெடுப்பர் – கம்மன்பில அரசாங்கத்துக்கு எச்சரிக்கை

அரசாங்கத்தின் மீது நாட்டு மக்கள் கடும் கோபத்தில் உள்ளார்கள் ஜனநாயக ரீதியில் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்த மக்களுக்கு இடமளிக்காவிட்டால் வாக்குச்சீட்டுக்கு பதிலாக மக்கள் ஆயுதத்தைக் கையில் எடுப்பார்கள் என்பதை ஜனாதிபதி உட்பட ஆளும் தரப்பினர் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என ...

மேலும்..

தேர்தல்கள் ஆணைக்குழுவினால் தன்னிச்சையாக செயற்பட முடியாது – சானக வகும்பர

சுயாதீன ஆணைக்குழு என்பதால் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தன்னிச்சையாக செயற்பட முடியாது. அரசாங்கத்துடன் எவ்வித பேச்சுகளையும் முன்னெடுக்காமல் அவர்கள் தீர்மானங்களை அறிவிக்கிறார்கள். ஏப்ரல் 25 தேர்தல் இடம்பெற்றாலும் தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களின் பதவிக் காலம் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 01 ...

மேலும்..

நீதிமன்ற உத்தரவை புறக்கணிக்கும் அரச அதிகாரிகள் சிறைசெல்ல நேரிடும் – எஸ்.எம்.மரிக்கார்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நிலையைக் கருத்திற்கொண்டு அரச அதிகாரிகள் உயர்நீதிமன்றத்தின் கட்டளைக்கு அமைய செயற்பட வேண்டும். நீதிமன்ற உத்தரவைப் புறக்கணித்து ஜனாதிபதியின் கட்டளைக்கு அமைய செயற்படும் அரச அதிகாரிகள் எதிர்காலத்தில் சிறைசெல்ல நேரிடும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ...

மேலும்..

ஜோசப் முகாம் சித்திரவதைகளுடன் தொடர்புடைய மேஜர் ஜெனரல் குலதுங்கவை ஐ.நா மீளாய்வுக்குழுக்கூட்டத்தில் பங்கேற்பதைத் தடுத்து நிறுத்துங்கள்- இனப்படுகொலையைத் தடுத்தல் மற்றும் வழக்குத்தொடர்தலுக்கான சர்வதேச நிலையம்

ஐ.நா. மனித உரிமைகள் மீளாய்வுக்குழுவின் கூட்டத்தில் இலங்கை சார்பில் நிகழ்நிலை முறைமையின் ஊடாகப் பங்கேற்றிருக்கும் அரச பிரதிநிதிகள் குழுவில் அங்கம்வகிக்கும் மேஜர் ஜெனரல் ஜீவக ருவன் குலதுங்க ஜோசப் முகாம் சித்திரவதைகள் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டவராவார். எனவே, அவரது பங்கேற்பை நிறுத்துவதுடன், அதன்மூலம் கடந்தகால, ...

மேலும்..

ஜோசப் முகாம் சித்திரவதைகள் தொடர்பில் மேஜர் ஜெனரல் குலதுங்கவிடம் கேள்வி எழுப்புங்கள் – ஐ.நா மனித உரிமைகள் மீளாய்வுக்குழுவிடம் பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர் வலியுறுத்தல்

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் குலதுங்கவிடம் ஜோசப் முகாமில் அவரது வகிபாகம் என்னவென்பது தொடர்பாகக் கேள்வி எழுப்பப்படவேண்டும் என்று பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழர்களுக்கான அனைத்துக்கட்சி நாடாளுமன்றக்குழுவின் தலைவருமான எலியற் கொல்பேர்ன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ...

மேலும்..

கண்ணீர்ப் புகைக்குண்டு தாக்குதலிலேயே பாதுகாப்பு உத்தியோகத்தர் உயிரிழந்தார்? புத்திக பத்திரன சந்தேகம்!

பொலிஸாரின் கண்ணீர்ப் புகைக்குண்டு தாக்குதலிலேயே கொழும்பு பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்தார் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று (வியாழக்கிழமை) உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். கடந்த செவ்வாய்கிழமை பல்கலைக்கழக ...

மேலும்..

மட்டு. மாநகரசபைக்குட்பட்ட பகுதியில் கனடாவிலிருந்து இரண்டு திட்டங்களுக்கு முதலீடு!

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதியில் கனடாவிலிருந்து இரண்டு திட்டங்களுக்கு முதலீடுகள் செய்யப்பட்டுள்ளதுடன் ஒரு திட்டம் சுமார் 10 கோடி ரூபா முதலீடு செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாநகரசபையின் அமர்வு நேற்று (வியாழக்கிழமை) மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் ஆரம்பமானதுடன் ...

மேலும்..

பொது பாதுகாப்பு அமைச்சருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு!

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸூற்கு அழைப்பு விடுத்துள்ளது. இதன்படி, எதிர்வரும் 13ஆம் திகதி திங்கட்கிழமை அவர் ஆணைக்குழுவின் முன் ஆஜராகுமாறு கோரப்பட்டுள்ளது. கடந்த 7ஆம் மற்றும் 8ஆம் திகதிகளில் இடம்பெற்ற போராட்டங்களை கட்டுப்படுத்துவதற்கு பொலிஸார் எவ்வாறு செயற்பட்டார்கள் ...

மேலும்..

உள்ளூராட்சிதேர்தலை நடத்தவேண்டும் – பௌத்த சாசன செயலணி ஜனாதிபதிக்கு கடிதம்

தேசிய மற்றும் இராஜதந்திர ஸ்திரதன்மைக்காக உள்ளூராட்சி தேர்தலை ஜனாதிபதி உடனடியாக நடத்தவேண்டும் என பௌத்தசாசன செயலணி வேண்டுகோள் விடுத்துள்ளது. ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் பௌத்தசாசன செயலணி இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது. அமைச்சர்கள் எண்ணிக்கையை 15ஆக மட்டுப்படுத்தவேண்டும் இராஜாங்க அமைச்சர்களை நீக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள ...

மேலும்..

“நிம்மதியாக வீடுகளில் தூங்கி பல மாதங்கள் ஆகின்றன” – அம்பாறையில் யானை அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்ட மக்கள்

நிம்மதியாக வீடுகளில் தூங்கி பல மாதங்கள் ஆகின்றன. வீதிகளில் இறங்கி போராடுவதை தவிர இனி வேறு வழியில்லை என அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கண்ணகி கிராமம், கவாடப்பிட்டி, புளியம்பத்தை, மகாசக்திபுரம் உள்ளிட்ட கிராமங்களில் வாழும் மக்கள் ...

மேலும்..