சிறப்புச் செய்திகள்

பெருமளவான தொலைக்காட்சிப் பெட்டிகள்- குளிரூட்டிகள் சுங்கத்துறையினரால் பறிமுதல்!

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட பெருமளவான தொலைக்காட்சிப் பெட்டிகள் மற்றும் குளிரூட்டிகளை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் எனக் கூறி இந்த பொருட்கள் இந்நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக, இலங்கை சுங்க மத்திய சரக்கு ஆய்வுப் பிரிவின் அதிகாரிகள் ...

மேலும்..

மட்டக்களப்பில் சடா முடியுடன் மீட்கப்பட்ட முன்னாள் போராளி!

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளில் ஒருவர், நடு காட்டில் இருந்து சடா முடியுடன் மீடக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மட்டக்களப்பு மாவட்டம் பட்டிப்பளைப் பிரதேசத்துக்கு உட்பட்ட தாந்தாமலைக் காட்டுப் பகுயிலிருந்து முன்னாள் போராளி ஒருவர் நேற்று (புதன்கிழமை) மீட்கப்பட்டு வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். கடந்த 4 வருடங்களாக குடும்பத்தினரால் கைவிடப்பட்ட, முன்னாள் போராளியான மனநலம் குன்றிய பாலா என்பவர் தாந்தாமலைப் பகுதியில் அமைந்துள்ள றெட்பாணா எனும் கிராமத்திற்கு அப்பாலுள்ள காட்டுப்பகுதியில் தூர்ந்துபோன கொட்டகை ஒன்றில் வசித்து வந்துள்ளார். இச்சம்பவம் தொடர்யில் தற்போது தகவலறிந்த ஜனநாயகப் போராளிகள் கட்சியினர், மற்றும் அவரது சக முன்னாள் போராளிகளும் அவரை அணுகியுள்ளனர். இவர்களைக் கண்டதும் பாலா கட்டுப் பகுதிக்குள் மறைந்து விடுவார். பின்னர் அவரை தொடர்ந்து இரவு பகலாக அவதானிந்துவந்துள்ளனர். பின்னர் அவரது உறவினர்கள், மற்றும் அப்பகுதி கிராம சேவைகர் ஆகியோரது உதவியுடன் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் உதவியுடன், உரிய இடத்திற்கே நோய்காவு வண்டி வரவழைக்கப்பட்டு அதில் சிகிச்கைகளுக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இதுவரை காலமும் காட்டிலுள்ள பழங்களை உண்டு கொண்டு,சுகாதார சீர்கேடான முறையில் அவர் வாழ்ந்து வந்துள்ளார்.

மேலும்..

பல்கலைக்கழக வளாகத்திற்குள் பொலிஸார் பிரவேசித்தமை தொடர்பில் நடவடிக்கை!

பல்கலைக்கழக வளாகத்திற்குள் பொலிஸார் பிரவேசித்தமை தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு உள்நாட்டு அலுவல்கள் அமைச்சரிடம் கோரியுள்ளதாக, கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக வளாகத்திற்குள் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பிரவேசித்தமை தொடர்பில், இன்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றில் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன எழுப்பிய ...

மேலும்..

திருகோணமலையில் பழைய கழிவு பொருட்களை கொண்டு பல இயந்திரங்கள் கண்டுபிடிப்பு

திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் 99 ஆம் கட்டை மீரா நகர் பகுதியில் பழைய இரும்பு கழிவு பொருள்களைக் கொண்டு ஒருவர் பல இயந்திரங்களை உருவாக்கியுள்ளார். தம்பலகாமம் 99 ஆம் கட்டை மீரா நகர் பகுதியைச் சேர்ந்த ஏ.பி . அன்வர் என்பவரே இவ்வாறு ...

மேலும்..

சர்வதேச வான்பரப்பில் பெண் விமானிகளுடன் பறந்த இலங்கை விமானம்

மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களை கௌரவிக்கும் முகமாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் சிறப்பு சேவையொன்றை வழங்கியுள்ளது. அந்த வகையில், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் புதன்கிழமை பெண் ஊழியர்களைக் கொண்ட விமான சேவையொன்றை முன்னெடுத்துள்ளது. இந்த விமான சேவை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து திருச்சி வரை ...

மேலும்..

தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ஏற்கமாட்டேன் என ஜனக ரத்நாயக்க தெரிவிப்பு

எந்தவொரு அரசியல் கட்சியிலிருந்தும் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ஏற்கமாட்டேன் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அமைச்சர் காஞ்சன விஜசேகரவின் இது தொடர்பான இன்றைய அறிக்கையானது, இலங்கையின் ஒரு பொதுவான அரசியல்வாதிக்கு சிறந்த உதாரணம் ...

மேலும்..

இலங்கை ரூபாய் ஆண்டு இறுதியில் டொலருக்கு நிகரான பெறுமதி இழக்கும் : பிட்ச் பொருளாதார தர மதிப்பீடு

சர்வதேச நாணய நிதியத்தின் பிணையெடுப்பின் நம்பிக்கைக்கு மத்தியில் தற்போது சிறந்த செயற்பாட்டு நாணயமாக மாறியுள்ள இலங்கையின் ரூபாய் 2023 ஆம் ஆண்டின் இறுதியில் டொலருக்கு நிகரான பெறுமதியில் ஐந்தில் ஒரு பங்கை இழக்கக்கூடும் என பிட்ச் பொருளாதார தர மதிப்பீடு தெரிவித்துள்ளது. 2023 ...

மேலும்..

ஒரு லட்சத்து 71 ஆயிரம் ரூபாவிற்கு மேல் சம்பளம் பெறுகின்றனர் துறைமுக அதிகாரசபை பணியாளர்;! அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அதிரடி தகவல்

இலங்கை துறைமுக அதிகாரசபையின் பணியாளர்கள் ஒரு லட்சத்து 71 ஆயிரம் ரூபாவிற்கு மேல் சம்பளம் பெற்றுக்கொள்கின்றனர் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். துறைமுக அதிகாரசபையின் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை தொடர்பாகக் கருத்து வெளியிடும் போதே அவர் இந்த ...

மேலும்..

நியூசிலாந்திற்கு தப்பி செல்ல முயற்சித்த 6 இலங்கையர்கள் கைது

தமிழ்நாட்டில் உள்ள 3 அகதி முகாம்களில் தங்கியிருந்த ஆறு இலங்கையர்கள் நியுஸிலாந்திற்கு தப்பி செல்ல முயற்சித்த நிலையில் இந்திய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த 6 பேரும் நியூஸிலாந்திற்கு ஒரு படகு வழியாக தப்பி செல்ல முயன்றனர் என இந்திய ஊடகங்கள் செய்தி ...

மேலும்..

இலங்கை இளைஞர் யுவதிகளுக்கு இத்தாலியில் வேலைவாய்ப்பு

இலங்கை பணியாளர்களை இத்தாலியில் தொழில் வாய்ப்புகளுக்காக இணைத்து கொள்வதற்காக எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளன. இணையத்தளம் ஊடாக இதற்கான விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளன என வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இதன்படி, 87 ஆயிரத்து 702 தொழிலுக்கான வேலை வாய்ப்புகளுக்கு ...

மேலும்..

நாவிதன்வெளி பிரதேச மக்களுக்கு குடிநீர் வசதியை பெற்றுக்கொடுப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுத்த அமைச்சர் ஜீவன் தொண்டமான்

தமது கோரிக்கையை ஏற்று, குடிநீர் வசதியை பெற்றுக்கொடுப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுத்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானுக்கு அம்பாறை மாவட்டம், நாவிதன்வெளி பிரதேச செயலாளர் பிரிவில் வாழும் மக்கள் நன்றிகளை ...

மேலும்..

இந்தியாவில் சட்டவிரோத அமைப்புக்களின் பட்டியலில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பை நீக்கவேண்டும்: உருத்ரகுமாரன்

இந்தியாவில் சட்டவிரோத அமைப்புக்களின் பட்டியலில் இருந்து தமிழீழ விடுதலைப்புலிகளின் அமைப்பை நீக்கவேண்டும் என கோரி மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதானி உருத்ரகுமாரன், இது தொடர்பிலான விண்ணப்ப கடிதத்தை இந்திய உள்துறை அமைச்சுக்கு அனுப்பியுள்ளார். இந்தக் கடிதம் கடந்த ...

மேலும்..

நவீன கைத்துப்பாக்கியுடன் சொத்தி உபாலியின் உறவினரான இளைஞர் பொரளையில் கைது!

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட நவீன கைத்துப்பாக்கியுடன் பாதாள உலகக் குழுவின் உறுப்பினர் என கூறப்படும் இளைஞர் ஒருவர்கைதுசெய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது. சந்தேக நபர் வெலிக்கடை சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஷிரந்த கயான் (சொத்தி உபாலியின் மகன்) என்பவரின் உறவினர் என ...

மேலும்..

வங்குரோத்து நிலைக்கு பொதுஜன பெரமுன பொறுப்புக்கூற வேண்டும் -கபீர் ஹசீம்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவால் தான் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும் என பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் வெட்கம் மற்றும் பயம் இல்லாமல் கருத்துரைக்கிறார். நாடு வங்குரோத்து நிலை அடைவதற்கு பொதுஜன பெரமுன பொறுப்புக் கூற வேண்டும் என ஐக்கிய ...

மேலும்..

சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தத்தை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பியுங்கள் – ஹர்ஷ டி சில்வா அரசாங்கத்திடம் வலியுறுத்தல்

சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்தை நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்காமல், நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளும் இறுதி தீர்மானத்தை எடுக்கும் பொறுப்பை நாடாளுமன்றத்துக்கு வழங்க முடியாது, ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள நிபந்தனைகளைத் தெரிந்துகொள்ளும் உரிமை நாட்டு மக்களுக்கு உண்டு, ஆகவே, ஒப்பந்தம் கைச்சாத்திட முன்னர் அறிக்கையை அரசாங்கம் நாடாளுமன்றத்துக்கு ...

மேலும்..