சிறப்புச் செய்திகள்

பொருளாதார மீட்சிக்காக ஜனாதிபதி, அரசாங்கம் மேற்கொண்டுள்ள செயற்றிட்டங்களை வரவேற்கிறோம் – சார்ல்ஸ் நிர்மலநாதன்

பொருளாதார மீட்சிக்காக ஜனாதிபதி மற்றும் அதிகாரிகள் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களை வரவேற்கிறோம். சிறந்த திட்டங்களை முழுமையாக வரவேற்போம். இலங்கை, இந்திய மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணுமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்திக்கொள்கிறோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் ...

மேலும்..

கேகாலை சிறைச்சாலையிலிருந்து தப்பியோடிய கைதி துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழப்பு!

கேகாலை விளக்கமறியல் சிறைச்சாலையிலிருந்து தப்பிச் சென்றார் எனக் கூறப்படும் கைதி ஒருவர் இன்று (புதன்கிழமை) அதிகாலை 2.45 மணியளவில் சிறைச்சாலை அதிகாரியால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்து கேகாலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார் எனக் கேகாலை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். ...

மேலும்..

கஸ்டப்பட்டுவந்த மக்களை தூக்கி நிமிர்த்துதற்கு எந்த முடிவினையும் எடுப்பேன்- சந்திரகாந்தன்

வரலாற்றில் மிகவும் கஸ்டப்பட்டுவந்த மக்களை தூக்கி நிமிர்த்துதற்கு எந்த நேரத்திலும் எந்த முடிவினையும் எடுக்ககூடியவன் நான்.அதனால்தான் இவ்வளவு பிரச்சினைக்கும் மத்தியிலும் அரசாங்கத்துடன் நிற்கின்றேன்.அரசாங்கம் எனக்கு தந்துள்ள பதவினையும் அதிகாரத்தினையும் பயன்படுத்தாமல்செல்வேன் என நினைத்தீர்கள் என்றால் அது உங்களது பிழையான கணிப்பாகத்தான் இருக்கும் ...

மேலும்..

வவுனியா வைத்தியசாலையில் சுகாதார தொழிற்சங்கத்தினர் பணிபகிஷ்கரிப்பு

சுகாதாரத் தொழிற்சங்கத்தின் ஒருநாள் அடையாள பணிபகிஸ்கரிப்பு வவுனியாவில் இன்று (08) முன்னெடுக்கப்பட்டது. சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் இரத்து செய்யப்பட்டுள்ள விடயங்களை அடிப்படையாக கொண்டு நாடளாவிய ரீதியில் குறித்த அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டத்திற்கு வவுனியாவிலும் ஆதரவு வழங்கப்பட்டதுடன், தொழிற்சங்கத்தினை சார்ந்த உறுப்பினர்கள் சுகவீன ...

மேலும்..

கடந்த மாதம் கண்டி பொலிஸ் வலயத்தில் போதைப் பொருள் தொடர்பாக மொத்தம் 1845 வழக்குகள் பதிவு – மத்திய பிராந்திய பிரதி பொலிஸ்மா அதிபர்

கடந்த மாதம் கண்டி பொலிஸ் வலயத்தில் போதைப் பொருள் தொடர்பாக மொத்தம் 1845 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய பிராந்திய பிரதி பொலிஸ்மா அதிபர் தெரிவித்தார். கண்டி செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் பாதுகாப்பு தொடர்பாக அவர் கருத்து வெளியிடும் போதே ...

மேலும்..

யாழ். வைத்தியசாலை சுகாதார ஊழியர்கள் சுகயீன விடுப்பில்!!

யாழ்.போதனா வைத்தியசாலைச் சுகாதார ஊழியர்கள் சுகயீன விடுப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று காலை 6.00 மணி முதல் நாளை காலை 6.00 அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பல அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நாடு தழுவிய ரீதியில் போராட்டங்கள் இடம்பெற்றுவரும் நிலையில், சுகாதார ஊழியர்கள் இந்த ...

மேலும்..

நோன்பு காலத்தை முன்னிட்டு பேரீச்சம்பழ இறக்குமதி வரி கிலோ கிராம் ஒன்றுக்கு ஒரு ரூபாவாக குறைப்பு!

பேரீச்சம்பழ இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த விசேட வரியை கிலோகிராம் ஒன்றுக்கு 200 ரூபாவிலிருந்து 1 ரூபாவாக குறைத்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவு பிறப்பித்துள்ளார். முஸ்லிம்களின் நோன்பு காலத்தை முன்னிட்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகள், நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள், தன்னார்வ அமைப்புகள் , நலன் ...

மேலும்..

கல்முனைப் பிரச்சினை என்ன என்ற தெளிவான விளக்கத்தை பாராளுமன்றில் இன்னும் வழங்கவில்லை : வை.எல்.எஸ். ஹமீட்

முழுமையான பிரதேச செயலகமாக உள்ள கல்முனை நகரை கூறுபோட்டு அதன் பிரதான பாதியை கல்முனை வடக்கு என்று அழைக்கப்படுகின்ற பாண்டிருப்பு - சேனைக்குடியிருப்புக்காக கோரப்படுகின்ற பிரதேச செயலகத்தோடு இணைக்க கோருவதையே முஸ்லிம்கள் எதிர்க்கிறார்கள் என்ற விவரத்தை நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனின் ...

மேலும்..

இலங்கையில் பெண்களை இலக்குவைத்து சைபர் துன்புறுத்தல்கள் ; பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் கவலை

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பது தொடர்பாக கரிசனை வெளியாகியுள்ளது. பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பது தொடர்பாகக் கவலை வெளியிட்டுள்ளது. டிஜிற்றல் தளங்களில் பாலின வன்முறைகளைக் கையாள்வதற்கு பயனுள்ள மற்றும் திறமையான முறைப்பாட்டு பொறிமுறைகள் அவசியம் ...

மேலும்..

இலங்கையில் கடுமையான பாதுகாப்புச் சட்டங்கள் முடிவுக்குக்கொண்டுவர ஐ.நா. சபை வலியுறுத்து! மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டேர்க் இடித்துரைப்பு

இலங்கையில் கடுமையான பாதுகாப்புச் சட்டங்களை முடிவுக்கு கொண்டு வருமாறு ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது. நாட்டில் பலவீனமான கடன் மற்றும் பொருளாதார நெருக்கடி, இலங்கையில் அடிப்படை பொருளாதார மற்றும் சமூக உரிமைகளுக்கான மக்களின் அணுகலை கடுமையாக கட்டுப்படுத்தியுள்ளதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ...

மேலும்..

பாதிக்கப்பட்டவர்களுக்கு விசேட சலுகை! இலங்கை மத்திய வங்கியின் புதிய அறிவிப்பு

இலங்கையில் பொருளாதார நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்காக விசேட சலுகை வழிமுறைகள் தொடர்பில் மத்திய வங்கி அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி தற்போதைய பேரண்டப் பொருளாதார நிலைமைகளால் பாதிக்கப்பட்ட சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளுக்கும் தனிப்பட்டவர்களுக்குமான சலுகை வழிமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட கடன் பெறுநர்களுக்காக நீடிக்கப்பட்ட மீள்கொடுப்பனவுக் ...

மேலும்..

முழுமையாக மாற்றமடையவுள்ள இலங்கை – பொருளியல் நிபுணர்கள் மகிழ்ச்சி

சர்வதேச நாணய நிதியத்தின் நிதி வசதி மூலம் இலங்கைக்குப் பல கதவுகள் திறக்கப்படும் என பொருளாதார ஆய்வாளர் தனநாத் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் நிதி வசதியை எவ்வாறு பெறுவது என்பது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே பொருளாதார ஆய்வாளர் தனநாத் ...

மேலும்..

பொய் கூறி தேர்தல் ஆணைக்குழுவுடனான சந்திப்பை நிதி அமைச்சின் செயலாளர் தவிர்த்துள்ளார் – சஜித் சபையில் குற்றச்சாட்டு

நிதி அமைச்சின் செயலாளர் தேசிய பாதுகாப்பு பேரவை கூட்டத்தில் கலந்துகொள்ளவேண்டும் என தெரிவித்திருப்பது, தேர்தல் ஆணைக்குழுவுடன் கலந்துரையாடுவதை தடுப்பதற்காகும். ஜனாதிபதி சபையில் இருக்கும் போது எவ்வாறு தேசிய பாதுகாப்பு பேரவை இடம்பெற முடியும் என கேட்கிறோம் என எதிக்கட்சித் தலைவர் சஜித் ...

மேலும்..

இலங்கை -இந்திய மீனவர்களுக்கு இடையில் முரண்பாடுகளை தீவிரப்படுத்தும் வகையில் கடற்றொழில் அமைச்சரின் செயற்பாடு – சாணக்கியன் இராசமாணிக்கம்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மீனவர்களுக்கும், இந்திய மீனவர்களுக்கும் இடையில் முரண்பாடுகளை தீவிரப்படுத்தும் வகையில் கடற்றொழில் அமைச்சர் டக்லஸ் தேவானந்தா அரசாங்கத்தின் கைகூலியாக செயற்படுகிறார்கள். யாழ் மாவட்ட மக்கள் இவ்வாறானவர்களை இனிவரும் காலங்களில் தெரிவு செய்யக் கூடாது என தமிழ் தேசிய ...

மேலும்..

நெருக்கடிகளிலிருந்து நாட்டை மீட்கும் இயலுமை பொதுஜன பெரமுனவிற்கு மாத்திரமே உள்ளது – சாகர காரியவசம்

நாட்டிலுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காணக் கூடிய இயலுமை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவத்திற்கு மாத்திரமே காணப்படுகிறது. இவ்விடயம் தொடர்பில் மக்கள் அறிவு பூர்வமாக சிந்தித்து செயற்பட வேண்டும் என்று பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். பத்தரமுல்லையிலுள்ள பொதுஜன ...

மேலும்..