சிறப்புச் செய்திகள்

நெருக்கடிகளிலிருந்து நாட்டை மீட்கும் இயலுமை பொதுஜன பெரமுனவிற்கு மாத்திரமே உள்ளது – சாகர காரியவசம்

நாட்டிலுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காணக் கூடிய இயலுமை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவத்திற்கு மாத்திரமே காணப்படுகிறது. இவ்விடயம் தொடர்பில் மக்கள் அறிவு பூர்வமாக சிந்தித்து செயற்பட வேண்டும் என்று பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். பத்தரமுல்லையிலுள்ள பொதுஜன ...

மேலும்..

உண்மையைக் கண்டறிவதற்கான புதிய பொறிமுறை நாடளாவிய ரீதியிலான கலந்துரையாடல்களின் அடிப்படையில் முன்னெடுக்கப்படவேண்டியது அவசியம் – சர்வதேச மன்னிப்புச்சபை வலியுறுத்தல்

காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் போன்ற உள்ளக நீதிப்பொறிமுறைகள் தற்போது அவசியமற்றவையாக மாறியிருப்பதுடன் அவை பாதிக்கப்பட்ட தரப்பினரின் நம்பிக்கையை இழந்திருக்கின்றன. எனவே பொறுப்புக்கூறல் சார்ந்த பொறிமுறைகளை அரசாங்கம் முழுமையாக அமுல்படுத்துவதுடன் உண்மையைக் கண்டறிவதற்கான புதிய பொறிமுறை, நாடளாவிய ரீதியிலான விரிவான கலந்துரையாடல்களின் அடிப்படையில் ஸ்தாபிக்கப்படவேண்டுமென ...

மேலும்..

இலங்கை தொடர்பில் சர்வதேச நாணயநிதியத்தின் தலைவர் முக்கிய அறிவிப்பு

இலங்கைக்கு நிதி உதவி வழங்குவதற்கான திட்டத்தினை எதிர்வரும் 20 ம் திகதி சர்வதேச நாணயநிதியத்தின் நிறைவேற்று பணிப்பாளர்களிடம் சமர்ப்பிக்கவுள்ளதாக சர்வதேச நாணயநிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா தெரிவித்துள்ளார். தீர்க்கமான கொள்கைமுடிவுகளை எடுத்து இந்தியா சீனா பாரிஸ் கிளப் உட்பட முக்கிய கடன் வழங்குநர்களின் ...

மேலும்..

திறைச்சேரியின் செயலாளர் சிறை செல்லநேரிடும் – நாடாளுமன்றில் எச்சரித்தார் சாணக்கியன்

இந்திய - இலங்கை மீனவர்களுக்கிடையில் மோதலை உருவாக்கும் வகையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் செயற்பாடுகள் காணப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று(செவ்வாய்கிழமை) நடைபெற்ற சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் கருத்து ...

மேலும்..

பெண்கள் நினைத்தால் இந்த சமூகத்தில் எத்தகைய மாற்றத்தையும் கொண்டுவர முடியும் – செந்தில் தொண்டமானின் மகளிர் தின வாழ்த்து

இந்நாட்டின் ஒவ்வொரு வளர்ச்சிக்கு முன்பும் பின்பும் பெண்கள் இருக்கிறார்கள். பன்முக திறமைகள் கொண்ட பெண்கள் இந்த சமுதாயத்தில் ‌உருவாக்கிய‌‌ மாற்றங்கள் அதிகம். பெண்களுக்கான சம உரிமை மற்றும் பொருளாதார சுதந்திரமே ஒரு சமூகத்தின் வெற்றியாக பார்க்கப்படுகிறது என்று தெரிவித்த இலங்கைத் தொழிலாளர் ...

மேலும்..

சுமந்திரனின் செருப்பை நக்கினார் சாணக்கியன்! திலீபனின் பேச்சால் சர்ச்சை

சுமந்திரனின் செருப்பை சாணக்கியன் நக்கினார் என நாடாளுமன்றத்தில் திலீபன் எம்.பி. பகிரங்கமாக தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(செவ்வாய்க்கிழமை) உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில் - சாணக்கியன் மூன்று மொழிகளிலும் நன்றாக பேசுகிறார். ஆனால் அவர் கலப்படமானவர். அப்படி இருந்துகொண்டு மற்றவர்களைப் பற்றி பேசுவது ...

மேலும்..

நெருக்கடியான சூழ்நிலையில் அக்கறையுடன் உதவும் நட்புநாடுகள் கிடைத்திருப்பது இலங்கையின் பாக்கியம் – அமைச்சர் அலி சப்ரி

மிகவும் நெருக்கடியான தருணத்தில் உள்ளபோது அக்கறையுடன் உதவும் நட்புநாடுகள் கிடைக்கப்பெற்றிருப்பது இலங்கையின் அதிஷ்டம் என்று குறிப்பிட்டுள்ள வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, தற்போதைய சூழ்நிலையில் அவசியமான அனைத்து உத்தரவாதங்களுடனும் முன்நோக்கிப் பயணிப்பது சிறந்ததாகும் என்றும் தெரிவித்துள்ளார். இலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் 2.9 ...

மேலும்..

சர்வதேச நாணய நிதியம் தொடர்பில் எதிர்க்கட்சியினர் முன்வைக்கும் குற்றசாட்டுக்கள் அடிப்படையற்றவை – நிதி இராஜாங்க அமைச்சர்

பொருளாதார மீட்சிக்காக அரசாங்கம் எடுத்த தீர்மானங்கள் வெற்றிபெற்றதையிட்டு எதிர்தரப்பினர் கலக்கமடைந்துள்ளார்கள். சர்வதேச நாணய நிதியத்தை முன்னிலைப்படுத்தி எதிர்தரப்பினர் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை. குறுகிய அரசியல் நோக்கத்துக்காக செயற்படும் எதிர்தரப்பினரது நிலை கண்டு கவலையடைகிறோம் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் (செவ்வாய்க்கிழமை) ...

மேலும்..

கட்டுப்பணம் ஏற்கும் பொறுப்பிலிருந்து மாவட்ட செயலாளர்களை விலக்க வேண்டும் என அமைச்சரவை தீர்மானிக்கவில்லை – விஜித ஹேரத்

கட்டுப்பணம் ஏற்றல் பொறுப்பில் இருந்து மாவட்ட செயலாளர்களை விலக்க வேண்டும் என அமைச்சரவை தீர்மானிக்கவில்லை என பிரதமர் சபையில் பொய்யுரைத்துள்ளார். இந்த விடயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது, ஆகவே நாடாளுமன்ற சிறப்புரிமை குழு ஊடாக இந்த விடயம் தொடர்பில் அவதானம் செலுத்த ...

மேலும்..

இலங்கை வான் பரப்பை பயன்படுத்தும் வெளிநாட்டு விமானங்களுக்கான கட்டணங்கள் அதிகரிக்கப்படுகின்றன!

இலங்கையின் வான் பரப்பை பயன்படுத்தும் வெளிநாட்டு விமானங்கள் மூலம் வருடாந்த வருமானத்தை ஒரு கோடியே 20 லட்சம் அமெரிக்க டொலர்கள் வரை அதிகரிக்கும் வகையில் விமானப் போக்குவரத்து சேவைக் கட்டணத்தை அதிகரிக்க துறைமுகங்கள், கடற்படை மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு ...

மேலும்..

தெஹிவளை, கொட்டாஞ்சேனை பிரதேசங்களில் திருடப்பட்ட முச்சக்கரவண்டிகளுடன் ஐவர் கைது!

ஓட்டோ திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொரலஸ்கமுவ பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற ஓட்டோ திருட்டு தொடர்பில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் இவர்கள் கடந்த திங்கட்கிழமை இரவு கைது செய்யப்பட்டனர் எனப் பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ...

மேலும்..

முட்டை ஒன்றின் விலை 54 ரூபா முதல் 65 ரூபா வரை விற்பனையாவதாக குற்றச்சாட்டு!

நாட்டில் கட்டுப்பாட்டு விலைக்கு முட்டை விற்பனை செய்யப்படாததால் அதிக விலை கொடுத்து முட்டைகளை வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக நுகர்வோர்கள் தெரிவிக்கின்றனர். வெள்ளை முட்டை ஒன்று 44 ரூபாவுக்கும், சிவப்பு முட்டை 46 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், முட்டை விற்பனையாளர்கள் ...

மேலும்..

சர்வதேச நாணயநிதியத்தின் உதவியை பெறும் நிலையில் இலங்கை – ரொய்ட்டர்

இலங்கை சர்வதேச நாணயநிதியத்திடமிருந்து நிதிஉதவியை பெறும்நிலையில் உள்ளது சிரேஸ்ட அமைச்சர் ஒருவரை மேற்கோள்காட்டி ரொய்ட்டர் இதனை தெரிவித்துள்ளது. சீனாவிடமிருந்து கடன் மறுசீரமைப்பிற்கான ஆதரவு கிடைத்துள்ளது எனவும் ரொய்ட்டர் தெரிவித்துள்ளது.

மேலும்..

ஜூலை மாதத்துக்குள் பொதுமக்களுக்கு பஸ் கட்டணத்தில் நிவாரணம் – கெமுனு விஜேரத்ன

எதிர்வரும் ஜூலை மாதத்துக்குள் பொதுமக்களுக்கு பஸ் கட்டண நிவாரணத்தை வழங்க முடியும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். 'நான் கணக்குப் பார்த்தேன், 2023 ஆம் ஆண்டின் ...

மேலும்..

20 பேர் கொண்ட கடற்கொள்ளையர்களால் மீனவர்கள் தாக்கப்பட்டு 1,000 கிலோ மீன்கள் கொள்ளை!

வெலிகம, பத்தேவத்த மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற மீனவர்கள்மீது 20 பேர் கொண்ட கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியதுடன், மிரிஸ்ஸ கடலில் வைத்து அவர்களது 1,000 கிலோ மீன்களை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர் என வெலிகம பொலிஸார் தெரிவிக்கின்றனர். இரண்டு படகுகளில் வந்த கடற்கொள்ளையர் குழுவொன்றே ...

மேலும்..