சிறப்புச் செய்திகள்

இராணுவம் மற்றும் பொலிஸ் புலனாய்வு பிரிவினர் வியாபாரிகளை மிரட்டுகின்றனர்! செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. குற்றச்சாட்டு

இராணுவ மற்றும் பொலிஸ் புலனாய்வுத் துறையினர் வியாபாரிகளை மிரட்டுகின்றனர் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ரெலோ அமைப்பின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு நீதிபதிக்கு நீதி கேட்டு இடம்பெறவுள்ள ஹர்த்தால் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு ...

மேலும்..

வடக்கு, கிழக்கு மாத்திரமல்ல முழு நாட்டையும் மீட்க பழைய பகைமைகளை மறந்து வாருங்கள்! எல்லே குணவங்ச தேரர் அழைப்பு

நாம் வழங்கிய அதிகாரத்தை கைம்மாற்றியுள்ளனர். இழந்த சுதந்திரத்தை பெற்றுக் கொள்வதற்காக மீண்டும் போராட வேண்டியுள்ளது. வடக்கு, கிழக்கு மாத்திரமல்ல. முழு நாட்டையும் மீட்பதற்கு வாருங்கள். பழைய பகைகளை மறந்து இரண்டாவது சுதந்திர போராட்டத்துக்காக அனைவரும் இணைய வேண்டும் என எல்லே குணவங்ச தேரர் ...

மேலும்..

இலங்கைத் தமிழர்’ என வலியுறுத்தும் சுற்று நிரூபம் எமது இன அடையாளத்தை அழிக்கும் செயற்பாடே!  அமைச்சர் ஜீவன் அதிருப்தி

இந்திய வம்சாவளி தமிழ் மக்களை 'இலங்கைத் தமிழர்' என அடையாளப்படுத்துவதற்கு முற்படுவதானது எமது மக்களின் இன அடையாளத்தை அழித்தொழிக்கும் செயற்பாட்டு முயற்சியாகும். எனவே, பதிவாளர் நாயகத்தால் வெளியிடப்பட்டுள்ள சுற்று நிரூபத்தையும் அவரது இச்செயற்பாட்டையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ...

மேலும்..

மதுபானசாலை அமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

நோர்வூட் பிரதேச சபைக்குட்பட்ட டிக்கோயா, சலங்கந்தை  - ஒட்டரி  பிரிவில் மதுபானசாலை அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டமும், பேரணியும் முன்னெடுக்கப்பட்டது. ஆன்மீக தலைவர்கள், இளைஞர்கள், ஊர் மக்கள் இணைந்தே இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தனர். மதுபானசாலைக்கான அனுமதியை இரத்து செய், வேண்டாம், வேண்டாம் மதுபானசாலை வேண்டாம் ...

மேலும்..

8 மாதங்களில் 21 முச்சக்கரவண்டிகளைத் திருடி விற்று பெண்களுடன் உல்லாசமாக இருந்தவர் தெமட்டகொடையில் கைது

கொழும்பில் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் முச்சக்கரவண்டிகளைத் திருடி பேஸ்புக் ஊடாக மிகக்குறைந்த விலைக்கு விற்பனை செய்து அதன் மூலம் கிடைக்கும் பணத்தை பெண்களுடன் செலவிட்ட ஒருவரைக் கைது செய்துள்ளதாக தெமட்டகொடை பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேக நபர் 8 மாதங்களில் சுமார் ...

மேலும்..

நுகேகொடையில் விபத்தை ஏற்படுத்திய பஸ்ஸின் சாரதி, நடத்துநர் தப்பியோட்டம்!

நுகேகொடையில் பஸ் ஒன்றும் ஜீப் ஒன்றும் மோதிக்கொண்ட சம்பவம் இன்று (19) காலை இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் சிலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஹோமாகமவிலிருந்து கோட்டை நோக்கி பயணித்த பஸ் ஒன்று மற்றுமொரு பஸ்ஸை முந்திச் செல்ல முற்பட்டபோது முன்னால் வந்த ஜீப் வண்டியுடன் ...

மேலும்..

இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்புரிமை தொடர்பான வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு!

இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்துச் செய்வதற்கான உத்தரவை பிறப்பிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான தீர்ப்பை அறிவிப்பதை எதிர்வரும் 31ஆம் திகதி வரை ஒத்திவைக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி நிஸங்க ...

மேலும்..

திருகோணமலையில் கவனயீர்ப்பு போராட்டம்

கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களில் தற்காலிக அமைய மற்றும் ஒப்பந்த அடிப்படையில் கடமையாற்றும் ஊழியர்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நிரந்தர நியமனம் கோரி கவனயீர்ப்பு போராட்டம் இடம் பெற்றது. குறித்த போராட்டம் இன்று புதன்கிழமை (18) காலை 10.00 மணிக்கு திருகோணமலை கிழக்கு மாகாண ...

மேலும்..

பன்றிக்கு வைத்த பொறியில் சிக்கிய பெண் தொழிலாளி!

  பன்றிக்கு வைக்கப்பட்ட பொறியில் சிக்கிய பெண் தொழிலாளி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். கந்தப்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பூப்பனை தோட்டத்தில் தேயிலை மலையில் பன்றிக்கு வைக்கப்பட்டிருந்த 'அக்குபட்டாஸ்' வெடித்து வயது பெண் தொழிலாளி ஒருவர் காயங்களுக்கு உள்ளான நிலையில் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். பூப்பனை தோட்ட ...

மேலும்..

யாழ். கீரிமலை ஜனாதிபதி மாளிகையை சூழவுள்ள ஆலயங்கள், மடாலயங்கள் என்பவை விடுவிக்க வேண்டும் – உமாச்சந்திரா பிரகாஸ்

யாழ்ப்பாணம் கீரிமலை ஜனாதிபதி மாளிகையை சூழவுள்ள ஆலயங்கள், மடாலயங்கள் என்பவை விடுவிக்கப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிசெயலாளர் உமாச்சந்திரா பிரகாஸ் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் நடைபெற்ற செவ்வாய்க்கிழமை (17) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், கடந்த ...

மேலும்..

இந்தோ-பசிபிக்கில் நீலப் பொருளாதாரத்தை உறுதிசெய்ய அமெரிக்கா உறுதிபூண்டுள்ளது – ஜூலி சங்

இந்தோ-பசிபிக் முழுவதும் இலங்கை மற்றும் பிற நாடுகளுக்கு வளமான நீலப் பொருளாதாரத்தை உறுதி செய்வதற்கு அமெரிக்கா உறுதிபூண்டுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்தார். கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம், மூலோபாய கற்கைகளுக்கான பிராந்திய மத்திய நிலையம் (RCSS) மற்றும் அமெரிக்க சமாதான ...

மேலும்..

தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க தமிழ் அரசியல் தலைவர்கள் ஜனாதிபதிக்கு ஒத்துழைக்க வேண்டும் – வியாழேந்திரன்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மிகவும் நெகிழ்வுத் தன்மையுடன் செயற்படக் கூடிய தலைவர் என்ற வகையில், தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு தமிழ் அரசியல் தலைவர்கள் ஜனாதிபதியின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வர்த்தக இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக ...

மேலும்..

திருகோணமலையில் தமிழ் மொழிக்குரிய அந்தஸ்து கிடைக்காமை குறித்து மிகவும் கவலையடைகின்றேன் – இம்ரான் எம்.பி

தமிழ்மொழி பேசுவோர் சுமார் 75 வீதம் வாழ்கின்ற திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் மொழிக்கு உரிய அந்தஸ்து வழங்கப்படாமை குறித்து மிகவும் கவலையடைகின்றேன் என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார். கடந்த செவ்வாய்க்கிழமை (17) இடம் பெற்ற திருகோணமலை மாவட்ட ...

மேலும்..

இஸ்ரேல் – பாலஸ்தீன் போர் எமது நாட்டில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் – சம்பிக்க ரணவக்க எச்சரிக்கை

இஸ்ரேல், பாலஸ்தீன் போரை விரைவாக முடிவுக்கு கொண்டுவர சர்வதேச சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் எதிர்வரும் காலங்களில் அரசியல், பொருளாதார ரீதியில் எமது நாட்டுக்கும் பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்க்கட்சி உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (17) ...

மேலும்..

வீட்டுப் பணிப்பெண்ணாகச் செல்பவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படவேண்டும்!

வெளிநாடுகளுக்கு வீட்டுப் பணிப்பெண்ணாகச்  செல்பவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படவேண்டுமெனவும், இதற்காக விசேட பிரிவொன்று ஆரம்பிக்கப்படவேண்டும் எனவும் அமைச்சர் ஜீவன் தொண்டமான், சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் கில்பர்ட் ஹூங்போயிடம் கோரிக்கை விடுத்துள்ளார். சர்வதேச தொழிற்சங்க மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜெனிவா சென்றுள்ள அமைச்சர் ஜீவன் ...

மேலும்..