சிறப்புச் செய்திகள்

அமெரிக்காவின் புலனாய்வு தகவல்களே விடுதலைப்புலிகளை தோற்கடிப்பதற்கு உதவின – அவர்களின் ஒன்பது ஆயுதக்கப்பல்கள் அழிக்கப்பட்டமைக்கும் அதுவே காரணம் – அலி சப்ரி

திருகோணாமலையில் இராணுவதளமொன்றை ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளிற்காகவே சமீபத்தில் அமெரிக்காவின் உயர் மட்ட குழுவினர் இலங்கைக்கு விஜயம மேற்கொண்டனர் என தெரிவிக்கப்படுவதை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி நிராகரித்துள்ளார். இது முழுமையான முட்டாள்தனம் என பேட்டியொன்றில் அவர் தெரிவித்துள்ளார். நாங்கள் எங்கும் எவரும் இராணுவதளங்களை அமைப்பதற்கு அனுமதிக்கப்போவதில்லை ...

மேலும்..

வவுனியாவில் சீனிப்பாணியை தேன் என கூறி விற்பனை செய்த நபர் கைது

வவுனியாவில் சீனிப்பாணியை காய்ச்சி, அதனை தேன் என்று கூறி விற்பனை செய்த நபரை சுகாதார பிரிவினர் சுற்றிவளைத்துப் பிடித்ததோடு, அவரிடமிருந்து 41 லீற்றர் சீனிப்பாணியை கைப்பற்றியுள்ளனர். தேன் என சீனிப்பாணியை நபரொருவர் விற்பனை செய்வதாக வவுனியா சுகாதார பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், ...

மேலும்..

புத்தளத்தில் காட்டு யானை தாக்கி வயோதிபர் உயிரிழப்பு

புத்தளம் - கருவலகஸ்வெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரஜவிகம பிரதேசத்தில் நேற்று முன்தினம் (3) இரவு 8.30 மணியளவில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். கருவலகஸ்வெவ ரஜவிகம பகுதியைச் சேர்ந்த 61 வயதுடைய அதிகார முதியவன்சேலாகே உக்கு பண்டா என்பவரே உயிரிழந்துள்ளார். இந்நிலையில் உயிரிழந்தவரது ...

மேலும்..

அரச ஊழியர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவினால் நிவாரணம் வழங்க முடியாத நிலை!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட அரச ஊழியர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவினால் நிவாரணம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமால் புஞ்சிஹேவா இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். தேர்தல் சட்ட விதிகளுக்கு அமைவாக, தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுவதற்காக அரச ...

மேலும்..

நாடாளுமன்றத்தில் பால் மற்றும் முட்டைக்கு தட்டுப்பாடு!

நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான உணவறையில் பால் மற்றும் முட்டைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாடாளுமன்றத்துக்கு உணவு விநியோகிக்கும் தரப்பினருக்கான கொடுப்பனவு வழங்கப்படாமையே இதற்கு காரணம் எனக் கூறப்படுகின்றது. இதேவேளை, மின்சாரம், எரிவாயு மற்றும் உணவுப் பொருட்களின் விலைகள் பாரியளவில் அதிகரித்துள்ளமையினால், நாடாளுமன்றத்தில் உணவுக்கான ...

மேலும்..

சிறுவர்களிடையே வைரஸ் நோய் நிலைமை அதிகரித்து வருவதாக எச்சரிக்கை!

நாட்டில் தற்போது சிறுவர்களிடையே வைரஸ் நோய் நிலைமை அதிகரித்து வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு ரிஜ்வே சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையில் பணிப்பாளர் வைத்திளர் ஜீ.விஜேசூரிய இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளார். தொண்டை வலி, காய்ச்சல் மற்றும் இருமல் என்பன இதற்காக நோய் அறிகுறிகள் எனவும் அவர் ...

மேலும்..

யாழ்.மாவட்டத்தினைச் சேர்ந்த 6 வீர, வீராங்கனைகள் உலக பாடசாலைகள் சதுரங்கப் போட்டியில் விளையாடுவதற்கு தகுதி

யாழ்.மாவட்டத்தினைச் சேர்ந்த 6 வீர, வீராங்கனைகள் கிரீஸில் நடைபெறவுள்ள உலக பாடசாலைகள் சதுரங்கப் போட்டியில் விளையாடுவதற்கு தகுதி பெற்றுள்ளனர். இந்த ஆண்டுக்கான உலக பாடசாலைகள் சதுரங்கப் போட்டி கிரீஸில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் இலங்கை சார்பாக விளையாட தகுதியுடைய வீர, வீராங்கனைகளைத் தெரிவு செய்வதற்கான ...

மேலும்..

ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைக்க வேண்டும் – ஓமல்பே சோபித தேரர்!

அரசியலமைப்பினால் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைக்க வேண்டும் என கலாநிதி ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார். பெலியத்த பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்

மேலும்..

தேர்தல் அவசியம் என கூறுபவர்கள் நாட்டை சீர்குலைக்க முயற்சிக்கின்றனர் – ரோஹித அபேகுணவர்தன

இந்தத் தருணத்தில் தேர்தல் அவசியம் எனக் கூறுபவர்கள் ஸ்திரத்தன்மை அடைந்து வரும் நாட்டை சீர்குலைக்க முயற்சிக்கின்றனர் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். களுத்துறை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே ...

மேலும்..

மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த அதிபர் கைது

பலாங்கொட பின்னவல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சந்தேகநபர் வீட்டிற்கு அருகில் வசிக்கும் 11 வயது சிறுமியை பாலியல் ...

மேலும்..

தமிழர் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட பிரதேசசபை உறுப்பினர்

மன்னார் - மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட ஆத்திமோட்டை பகுதியில் அரசாங்கத்துக்குச் சொந்தமான காணியில் பாரிய அளவு காடுகள் அழிக்கப்பட்டு அனுமதி இன்றி மணல் அகழ்வு இடம் பெற்றுள்ளதாக குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் கிராம மக்களின் முறைப்பாட்டை தொடர்ந்து மாந்தை ...

மேலும்..

கிழக்கு மாகாணத்தின் விவசாயத்துறையினை முன்னேற்றும் அரசாங்கத்தின் திட்டம்

பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் கிழக்கு மாகாணத்தின் விவசாயத்துறையை முன்னேற்றும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக நீர்பாசனத்துறை இராஜாங்க அமைச்சர் ஷசீந்திர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த ஆண்டு முன்னெடுக்கப்படவுள்ள விவசாய அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் ...

மேலும்..

மார்ச் 20 ஆம் திகதிக்கு முன்னர் தேர்தல் நடத்தப்பட வேண்டும்: சுமந்திரன் தெரிவிப்பு

மார்ச் 20 ஆம் திகதிக்கு முன்னர் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். தேர்தலுக்கான ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என திறைசேரி மற்றும் அரச அச்சக கூட்டுத்தாபனத்துக்கு எதிராக தேர்தல்கள் ஆணைக்குழு முறைப்பாடு ...

மேலும்..

விவசாய இரசாயனங்களின் தடை காரணமாக 24 ஆயிரம் கோடி ரூபா நட்டம்

உரம் உள்ளிட்ட விவசாய இரசாயனங்களின் தடை காரணமாக கடந்த வருடம் 24 ஆயிரம் கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளியல் விஞ்ஞான பிரிவு முன்னெடுத்த ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. உர இறக்குமதி இடைநிறுத்தப்பட்டதன் காரணமாக கடந்த வருடத்தின் பெரும்போகத்தில், நெல் உற்பத்தி ...

மேலும்..

எரிபொருள் விற்பனையினால் பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு கிடைத்துள்ள பெருந்தொகை வருமானம்

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தால் விற்பனை செய்யப்பட்ட பெற்ரோல் மற்றும் டீசல் எரிபொருளின் மூலம் கிடைக்கப்பெற்ற இலாபம் மேலும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பெப்ரவரி 2023 இல் எரிபொருள் இறக்குமதி விலையின் ...

மேலும்..